புவியின் கோணங்கள்
பலவாறு இருந்தாலும்!
பயணிக்கும் வாழ்க்கையின்
பாதையின் தடங்கள்
பழுதின்றி செல்வது
எதுவான எதுவதில்??!!
உறவுகளின் சூழலில்
உணர்ச்சிகளின் பிடியில்!
உரசல்கள் தவிர்த்திட்டு
உள்ளதை உள்ளபடி
உசிதமாய் ஆக்குவது
எதுவான எதுவது??!!
சாதகங்கள் ஏதுமில்லா
சம்பவங்கள் நடக்கையில்!
சதுரங்க கட்டத்தில்
சவமாய் நிற்கையிலே!
சமாளிக்க கற்றுவிக்கும்
உணர்வற்ற உணர்வது!!!
புரிதல்கள் மாறுகையில்
புரிசமர் தவிர்த்திட!
புத்தியின் அடிவேரில்
பூஞ்சையாய் பூத்ததோர்
பூடகமாய் உரைத்திட்ட
பொய்யான பொய்யது!!!
அடங்காத ஆவலில்
ஆழ்மனது இரகசியத்தை!
அவையோர் முன் மொழிகையில்
அவிழ்த்துவிட்ட மொழிகளெல்லாம்!
அட்சரம் பிசகாத
உண்மையற்ற உண்மையது!!!
வருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையி ல்
வாழ்வுதனில் உண்டாகும்
சலிப்பான சலிப்பது!!!
பிரிதலின் நிமித்தம்
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!!
நெஞ்சுக்குள் புதைத்துவைத்த
நஞ்சற்ற நட்பது!
நமத்துப்போன காரணத்தால்
நொடிந்து போகையில்
நாழிகைப் பொழுதுக்காய்
விலகலற்ற விலகலது!!!
மரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!
ஏற்றுக்கொள்ள இயலாத
மறுப்பற்ற மறுப்பது!!!
பேச்சற்ற பேச்சு!
நடையற்ற நடை!
இனிமையற்ற இனிமை!
கசப்பற்ற கசப்பு!
வெறுப்பற்ற வெறுப்பு!
பொருளற்ற பொருள்!
இத்தனையும் கடந்து
வாழ்வினிக்க முயன்றிடும்
செய்கையின் தூண்டுதல்
எதுவான எதுவதில்??!!
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!
அன்பன்
மகேந்திரன்
91 comments:
குறிப்பிட்ட வரியை சுட்டிக் காட்ட முடியவில்லை..அனைத்தும் அருமை..வாழ்த்துகள்..
கவிஞர் மதுமதி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் மகேன். பிரமாதம்! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மிகச் சரியான கேள்விகள்
அதற்கு மிகச் சரியான பதில்
படைப்பு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம4
வருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில்
வாழ்வுதனில் உண்டாகும்
சலிப்பான சலிப்பது!!!//
மகேந்திரன் வர வர தூள கிளப்பிட்டு வாறாருய்யா வாழ்த்துக்கள்...!!!
அருமையான வரிகள் அர்த்தம் நிறைந்தது
பிரிதலின் நிமித்தம்
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!
மவுன மொழி
மனதைத் தொட்டது நண்பரே
த.ம 6
வாழ்க்கையின் அனுபவத்தை கசக்கி பிழிந்து கொட்டி தீர்த்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஆழ்ந்த அனுபவத்தில் கண்டெடுத்த முத்துக்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
Arumai. Azhagu Kavithai. Puththandu Vaalthukkal!
TM 7.
அழகாகச் சொன்னீர்கள் நண்பா..
அதிலும்..
வருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில்
வாழ்வுதனில் உண்டாகும்
சலிப்பான சலிப்பது!!!
என்னும் வரிகள் அருமையிலும் அருமை..
//வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன் //
ஆமாம் அய்யா! பிறகு அத்தனையும் நன்மையே! மனசை கொள்ளை கொண்ட கவிதை நன்று.
வாழ்க்கை சுழற்சியில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை கவிதையில் அழகாய் வடிவமைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!! !!!!
இதில் எது 'அது'வென எப்படி சொல்வது ? 'அது' எதுவென என்று வேண்டுமானால் சொல்லி விடுகிறேன்...'அது' இது தான் 'அருமை' !!
:))
நானும் கொஞ்சம் டிரை பண்ணி பார்த்தேன்...ம்ஹூம் சுத்தமா வரல.
எல்லாம் அருமையாக இருக்கின்றன என்பதை தான் இப்படி கஷ்டப்பட்டு சொல்றேன். :)
ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகின்றன...
வாழ்த்துக்கள் சகோ.
வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
எதுவான எது என்று எம் எண்ணத் தேடலுக்குள் ஒவ்வோர் விடயங்களையும் கவிதையூடாக தந்திருக்கிறீங்களே..
கொஞ்சம் புரிந்திருக்கிறது, கவிதையில் எனக்கு கொஞ்சம் புரியவில்லை அண்ணா,
என் புரிதல் தவறுக்கு மன்னிக்கவும்,.
வாழ்வியலை ஆழச் சிந்திப்பதால் வரும் வரிகள்.அத்தனையும் அற்புதம்.என்னால் இன்னும் முடியவில்லை இப்படிச் சிந்திக்க.புதிய வருடம் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள் மகேந்திரன் !
நின்று நிதானித்து படித்து பின்னர் யோசிக்கத் தூண்டும் வரிகள் நிறைந்த கவிதை!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அருமை.
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!
எல்லா வரிகளுமே நல்லா இருக்கு.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....எல்லா வரிகளும் அருமை! தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
"நம் வாழ்வு பூரண சந்தோஷமான,திருப்தியானதுமாக அமைவதென்பது நம் எண்ணத்திலேயே உள்ளது" என்ற வாழ்க்கைத் தத்துவத்தை மிக மிக அருமையாகசொல்கிறது கவிதை.நன்றிகளும் வாழ்த்துக்களும்.
''..வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!..''
நல்ல பதில்.நீண்ட கவிதை. இனிய புத்தாண்டு வாழ்த்தகள்.
வேதா. இலங்காதிலகம்.
”மரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!”
>>>>>>>>>
வாழ்க்கை யதார்தத்தினை உணர்த்தும் வரிகள்..நன்றி மாப்ள!
.அனைத்தும் அருமை..வாழ்த்துகள்.
எப்படி முடிகிறது இப்படி எழுத....
எதுவான எதுவோ
எல்லாமுமான பலவாகி போகிறது...
பிடித்திருந்தது. நன்றி
அன்புநிறை நண்பர் மதுமதி,
கவியியற்றிய பேறுபெற்றேன் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
கரு சுமந்து அது ஈன்ற பின்
கிடைத்த மகிழ்ச்சி கிட்டியது நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்கள் கருத்தால் மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் மனோ,
என்மீது கொண்ட தங்களின் நம்பிக்கைக்கும்
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
ஆம் நண்பரே பிரிதலின் நிமித்தம் வரும்
மௌனம் ஓராயிரம் கதை பேசும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,
பிரசவித்த முத்துக்களை நன்றென்று பாராட்டிய
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே,
கவியியற்றிய பேறுபெற்றேன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
கவியியற்றிய பேறுபெற்றேன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தோழி மும்தாஜ்,
சுழற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறைகளும்
அதன் நிர்பந்தத்தில் நாம் கடைபிடிக்கும் குணங்களும்
எத்தனை எத்தனை!!!
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கௌசல்யா,
தங்களின் கருத்துரையால் பிரசவித்த இக்கவி
பெருமையுற்றது சகோதரி.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ நிரூபன்,
புரிதல்கள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
நீங்கள் கேள்விகள் கேட்டால் பதில் கூற
தயாராக இருக்கிறேன்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
உங்கள் கவிதைகள் கண்டு நான் அதிசயித்திருக்கிறேன்.
எனக்கு உங்களின் வடிவம் வராது...
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
கவியியற்றிய பேறுபெற்றேன் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
சரியாகச் சொன்னீர்கள், விளையும் சந்தர்பங்களில்
நம் நிலையை எண்ணியபொழுது விளைந்த இக்கவிக்கு
சரியான கருத்துரைத்தீர்கள்.
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனைத்து வரிகளும் அச்சில் ஏற்ற வேண்டிய வரிகள் .. அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணே ..
அனைத்தும் அடிக்கோடிட வேண்டிய வரிகள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய கவிதை போல பொங்கட்டும் மகிழ்ச்சி.
அசைப் போட்டு கொண்டு இருக்கிறேன்
நெருப்புகளைக் கொட்டி வைத்து பொறுப்பாய் சமைத்தக் கவிதை
முத்தாய்ப்பாய்...
"வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!"
அருமை கவிஞரே! அருமை...
எல்லா வாழ்த்தையும் எல்லாரும் சொல்லிட்டுப்போயிருக்காங்களே...
நான் தனியாக என்ன சொல்வது ?
எதுவாக எதுவது?
வாழ்வின் பல்வேறு நிலைகளில்
நாம் எடுக்கும் அவதாரங்களே :)
அருமை தோழரே...தொடருங்கள் வாழ்த்துகள் :)
- தோழமையுடன்,
அனு . . .
அண்ணா கலக்கலா இருக்கு கவிதை....
ஹும்.... கவிதை தாயின் செல்லப்பிள்ளை நீங்கள் :)
அண்ணா உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் மாப்பிள..!
இவ்வளவு பேர் சொன்னபிறகு நான் என்னத்தை புதுசா சொல்ல? அருமையான கவிதை வாழ்த்துக்கள்!!
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அரசன்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரிஷபன்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தமிழ்விரும்பி ஐயா,
கவியியற்றிய பேறுபெற்றேன் தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தோழி அனு,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை தம்பி துஷி,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை காட்டான் மாமா,
கவியியற்றிய பேறுபெற்றேன்
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அருமையான கவிதை
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா
இன்று :
பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்
மரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!
ஏற்றுக்கொள்ள இயலாத
மறுப்பற்ற மறுப்பது!!!
>>>
மரணம் மறுப்பதற்கில்லை என்பதை சொல்லிடும் வரிகள் அழகு.
வருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில்
வாழ்வுதனில் உண்டாகும்
சலிப்பான சலிப்பது!!!
மிகவும் அருமை அண்ணா.
பிரிதலின் நிமித்தம்
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!!//
மனிதத்திற்கு உண்மையில் பிடிக்காத சங்கதி இந்த பிரிதல் பிரிதல்தான் ஊடகூட சிலவேளை இன்பம் தரும் ஆனால் வேண்டியவர்களின் பிரிதல் எப்போதும் இன்பத்தை உண்டாக்குவதில்லை சிறந்த ஆக்கம் பாராட்டுகள் ...
வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் அருமையான கவிதை அண்ணா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ
அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தங்கை சசிகலா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி மாலதி,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ மகான்.தமேஷ்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!
வாழ்க பல்லாண்டு!
வாசித்து முடிக்கையில் எழும் எண்ணம் விசித்திரமாயுள்ளது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை இன்னுமொருமுறை திரும்பிப்பார்க்கத் தோன்றுகிறது. உணர்வுக்கலவைகளின் பிடியில் மனம். அனுபவம் சுமந்த எழுத்துக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.
கவிதை மிக அருமை நண்பரே! தங்களுக்கு எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
அன்புடன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி கீதா,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் கவிப்பிரியன்,
இனிய கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Happy New Year Boss!
படங்களேகவிதைகளாகவும்,கவிதைகளே படங்களாகவும் விரிகிற பதிவு.ந்ன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
2012 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அருமையான கருத்துகள் நிறைந்த சொல்லாடல்கள் அண்ணா..
தங்களுக்கும் உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடுமப்த்துக்கும் சொல்லிக்குறேன். மகிழ்ச்சி மட்டுமே உங்கள் குடும்பத்துக்கு உரித்தாக வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோதரரே
எதுவான எதுவது
அருமை.
என் அதுவான அது
உங்கள்
இதுவான இதுக்கு.
நெஞ்சுக்குள் புதைத்துவைத்த
நஞ்சற்ற நட்பது!
நமத்துப்போன காரணத்தால்
நொடிந்து போகையில்
நாழிகைப் பொழுதுக்காய்
விலகலற்ற விலகலது!!!
இந்த வரிகள் ரொம்பவும் பிடிச்சிருந்தது.
ஒரு முறைக்கு இரு முறை படித்த பின்னரே பொருளுணர்ந்து கொண்டேன்.
குழப்பும் விடயங்களினின்று தெளிவு பெற்ற "எதுவான எது?" நன்றாகவே இருக்கிறது.
அன்புநிறை நண்பர் சீனுவாசன்.கு,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் விமலன்,
இனிய கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி மலிக்கா,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ நுண்மதி,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment