கோடி விண்மீன்கள்
கொட்டிக் கிடக்குது
குழந்தை உந்தன்
குவளை சிரிப்பினிலே!!
பளிச்சிடும் வைரமது
ஒளிந்து போனது
களிப்பான உந்தன்
பளிங்கு சிரிப்பினிலே!!
என்ன இங்கு கண்டாய்
ஏனிந்த சிரிப்புனக்கு?!
வயதில் பெரியோரின்
சிறுமதி கண்டாயோ?!!
சுத்தம் சுத்தமென
சத்தமாய் சொன்னவரே
அசுத்தம் செய்கையில்
சந்தநகை ஒலித்தாயோ??!!வானிலை அறிக்கைபோல
தலைவர்களின் வாக்குறுதிகள்
செயலற்றுப் போகையில்
இளநகை புரிந்தாயோ??!!
நம்மூர் தேக்கங்கள்
நீரற்று வற்றிப் போகையில்
அண்டைமாநிலம் வெள்ளம்கண்டு
அதிர்ந்து சிரித்தாயோ?!!
அறம்போற்றி வாழ்ந்திடென
அறிவுரை சொன்னோரே
அறநெறி தவறியதால்
அகநகை செய்தாயோ??!!
கண்ணாமூச்சி ஆடுகையில்
மின்சாரம் போனதால்
ஒளியத் தேவையில்லையென
களிநகை புரிந்தாயோ??!!
நிறைந்திருந்த விளைநிலம்
கட்டாந்தரை ஆனதால்
விளையாட வசதியென
உவகை கொண்டாயோ??!!
எதைக்கண்டு நகைத்தாய்
என் சிறுபுத்தியில் விளங்கவில்லை
தணலாய் தவிக்கிறேன்
உவகையின் உள்ளர்த்தம் புரியாது!!!
எது எப்படியோ போகட்டும்
இச்சிறு வாழ்வில் சிரிப்பு
கிட்டாத பெருவரமே
சிரித்துக்கொள் கண்மணி!!
கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!
என் சிறுபுத்தியில் விளங்கவில்லை
தணலாய் தவிக்கிறேன்
உவகையின் உள்ளர்த்தம் புரியாது!!!
எது எப்படியோ போகட்டும்
இச்சிறு வாழ்வில் சிரிப்பு
கிட்டாத பெருவரமே
சிரித்துக்கொள் கண்மணி!!
கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!
பதவிக்கும் பணத்துக்கும்
தாளாத மோகத்தோடு
தன்னிலை இழந்திருப்போம்
சிரிப்பை மறந்திருப்போம்!!
மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!
அன்பன்
மகேந்திரன்
தாளாத மோகத்தோடு
தன்னிலை இழந்திருப்போம்
சிரிப்பை மறந்திருப்போம்!!
மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!
அன்பன்
மகேந்திரன்
62 comments:
சிரிப்பிற்கோர் அர்த்தம்
சிந்தினை தூண்டும் அர்த்தம்
அருமையான சிந்தனை நண்பரே
கவிதை வடிவில் அருமை வரிகள்
வரும் காலம் சிரிப்பு வெரும் வார்த்தையாய் மாறிடுமா
சிந்தையிலே சேர்த்து வைக்க
சிரிப்பும் கானல் நீர் ஆகிடுமா
நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி
அநேகர் மனதில் .நன்றி பகிர்வுக்கு
அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்.
கள்ளம்கபடமற்ற இந்த குழந்தைகளின்
சிரிப்பில் எவ்வளவு அழகு பாருங்கள்.
காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களால்
இந்த அழகான சிரிப்பை திரும்ப பார்க்கும்
வாய்ப்பு கிடைக்குமா......
தங்களின் இனிய அழகிய
விரைந்தோடி வந்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அற்புதமான கவிதை.....
அருமையான பதிவு
நம்மிடம் இயலபாய் உள்ள நகைச்சுவை
உணர்வைக்கூட பிறர் தூண்டவேண்டும்
ஒரு நகைச்சுவை நிகழ்வோ அல்லது
ஒரு நடிகரோ வேண்டும் என் எண்ணுகிற
காலமாகிவிட்டது
அந்த அவலத்தைமிக அழகாகச் சொல்லிப் போகும்
உங்கள் படைப்பு மிக மிக அருமை
தொடர் வாழ்த்துக்கள்
அன்பு நண்பர் வேல்தர்மா
தங்களை வருகவருக என வரவேற்கிறேன்.
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் நண்பர் ரமணி,
இன்று தூண்டுதல் இல்லாமல் எதுவுமே விளைவதில்லை,
செயற்கை எதற்கும் வேண்டியதை இருக்கிறது.
குழந்தைகள் ஒரு சாதாரண நிகழ்வே, ஆயினும் சில சமயம்
அவர்களின் சிரிப்பிற்கு நமக்கு காரணம் புரியாது.
அதன் தூண்டுதலே இக்கவிதை.
தங்களின் மேன்மையான ஆழ்ந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
குழந்தையின் சிரிப்பில் பல விஷயங்களை கொண்டு வந்துவிட்டீர்கள் ....அருமை!
வணக்கம் நண்பரே!
மழலையின் சிரிப்பை ரசித்து அதற்கான காரணத்தை கேட்பதைப்போல் சமுதாயத்தில் நிகழும்
முரணான நிகழ்வுகளையும்,நெறி பிறழ்வுகளையும் வார்த்தைகளால் தோலுரித்து காட்டியுள்ளீர்கள்!
எதிர்கால நினைவுகளுக்கு சேர்த்து வைக்க சொல்லாதீர்கள், அவர்கள் என்றும் சிரித்துக் கொண்டே இருக்க புதிய உலகை படைக்க நாம் விதி செய்வோம்...
//மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!//
அழகான வரிகள்.வயதான பிறகு வாழ்க்கையின் அவலங்களை பார்த்து சிரிக்க முடியாது.குழந்தையாக இருக்கும் பொழுது கவலை இல்லாமல் சிரிக்கலாம்.
அருமையான கவிதை.
அன்புநிறை நண்பர் கூடல்பாலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் மேன்மையான ஆழ்ந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
வாழ்வின் முரண்களை சொல்லிவந்ததால் தான்
அவ்வாறு உரைக்க நேர்ந்தது ....
ஆயினும் நம் சந்ததிகள் சிரித்து மகிழ்ந்திருக்க
நாம் ஆவன செய்யவேண்டும் என்பதில்
மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேன்மையான ஆழ்ந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான சிந்தனையைத் தூண்டும் வருகளில் ஒரு அற்புதமான கவிதை இது..
வாழ்த்துக்கள்+பாராட்டுகள்.,
\\கண்ணாமூச்சி ஆடுகையில்
மின்சாரம் போனதால்
ஒளியத் தேவையில்லையென
களிநகை புரிந்தாயோ??!!
நிறைந்திருந்த விளைநிலம்
கட்டாந்தரை ஆனதால்
விளையாட வசதியென
உவகை கொண்டாயோ??!!//
இன்றைய சூழ்நிலையை மழலையின் நகையோடு
ஒப்புமை படுத்தி இருக்கும் விதம் அருமை
மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!
எனக்குப்பிடித்தவரிகள்
ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தது 200முறை சிரிக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்... அதுவே வளர்ந்த பிறகு 20முறை சிரிப்பது என்பதே அபூர்வமாக உள்ளதாம்...
சிரிப்பை தொலைத்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதம் அருமை... நண்பரே....
பாடல்களை போல படங்களும் அசத்தல் மக்கா கலக்குங்க கலக்குங்க...!!!
யாழும் குழலும் கூட தோற்றுவிடும் மழலை சிரிபபுக்கு முன்...
அழகிய கவிதை
மனதை பறிகொடுத்தேன்...
குழந்தைகளாகவே இருந்து விட்டால் பிரச்சினையேயில்லை!
அருமை!
மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!
அருமை
அருமை
அருமை
அருமை
அருமை
கவிதை அழகு
அதற்கான நிழற்படத் தேர்வு அதைவிட அழகு!!
அருமை அய்யா! மனம் விட்டு சிரிப்பது குழந்தையில்தான் முழுமையாக இருக்கிறது.மனதை நிறைத்த வரிகள்.
நல்ல கவிதை.... குழந்தையின் சிரிப்பில் எத்தனை மகிழ்ச்சி நமக்கு....
//
கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!//
காலமிதை தவறவிட்டால்... உண்மைதான். அருமையான பகிர்வு.
//கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!//
ரொம்பவும் சரியாச் சொன்னீங்க.
நாம கவலையற்று இருப்பது குழந்தைக்காலத்துல மட்டுந்தானே.
நல்ல கருத்தை கவிதையாய் தந்திருக்கிறீர்கள்.
இச்சிறு வாழ்வில் சிரிப்பு
கிட்டாத பெருவரமே
சிரித்துக்கொள் கண்மணி!!//
உண்மை தான் சிரிப்பு என்பது கிட்டாத பெருவரமாக மாறிக்கொண்டிருக்கிறது... நாட்டின் அவலங்களை கண்டு குழந்தைகள் சிரிப்பது போல் கவிதை அமைத்திருப்பது... அருமை நண்பா
கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!//
வடிவேலோ.. விவேக்கோ... எப்பொழுதாவது வந்து சிரிப்புமூட்டி விட்டு போகிறார்கள்... ஏற்கனவெ துரத்திபிடிக்கும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் அன்பரே!
கவிதை கலக்கல் நண்பா
வணக்கம் மாப்பிள
சிறுவர்களின் புன்சிரிப்பில் சமூக கருத்துக்களை சொல்லிச்செல்லும் உங்கள் கவிதையின் வீச்சு அபாரம்..
இதில் எனக்கு இந்த வரிகள்தான் பிடிக்கும்ன்னு சொல்லமுடியாது அத்தனையுமே அருமை வாழ்த்துக்கள்..
அன்புநிறை நண்பர் கருன்
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
நேசத் தோழி சகுந்தலா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜா MVS
தங்களின் மேன்மையான ஆழ்ந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் மேன்மையான ஆழ்ந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் அமைதிச்சாரல்,
தங்களை வருகவருக என வரவேற்கிறேன்.
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் வாழ்த்துக்கும்
ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும்
என் நெஞ்சிற்கினிய நன்றிகள்.
அன்புநிறை காட்டான் மாமா...
தங்களின் வாழ்த்துக்கும்
ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும்
என் நெஞ்சிற்கினிய நன்றிகள்.
மனம்விட்டு சிரித்துவிடு...நோய்விட்டு போய்விடும்...
படங்களும் பாடலும் சிந்தனையை தூண்டுகின்றன...மற்றுமோர் அழகான படைப்பு சகோதரா...
சிரிப்புக்கு விளக்கம் அளித்தார் கலைவாணர் நீங்களோ சிரிப்புக்குள்ளே உயரிய சிந்தனைகளை உலகியலுக்கு உகந்த சிந்தனைகளை
தூண்டிவிட்டுள்ளீர்கள் உங்கள் சிந்தனைக்கு ஈடில்லை, வளர்க உங்கள்சிந்தனை வாழ்த்தட்டும் தலை முறைகள்
வணக்கம் அண்ணே,
நலமா?
தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி?
சிரிப்பால் இந்த உலகை ஆளலாம் என்பதனை அருமையாகக் கவிதை மூலமும்,
சுந்தந்திரமான குழந்தைகளின் உணர்வு மூலமும் சொல்லியிருக்கிறீங்க.
அழகு கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
கடந்த பத்து நாட்களாக Dash Board இல் பதிவுகள் வரவில்லை. எனவே எல்லா பதிவுகளிலும் எனது மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி.
மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!//
சில இயல்புகளையே " பா " ஆக்கி சிறப்பான ஆக்கமா வழங்கும் உங்களுக்கு உளம் நிறைந்த பாராட்டுகள் .
அன்புநிறை நண்பர் கூடல்குணா
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது,
எப்பேர்பட்ட மகா கலைஞனுடன் என்னை உவமைப்
படுத்தி இருக்கிறீர்கள்.
உங்கள் கருத்தால் நான் பெருமையடைந்தேன்.
இனிய கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புநிறை நண்பர் நிரூபன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் தொடர்ந்த பேராதரவிற்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி மாலதி
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
குழந்தைகள் மட்டுமே சிரிக்கின்றன இப்போதெல்லாம்! சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தொலைத்து நாம் என்ன சாதிக்க போய்கொண்டு இருக்கிறோம் இவ்வுலகில்.சிந்திக்க வைக்கிறது உங்களின் அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநண்பர் உலக சினிமா ரசிகன்,
நிச்சயம் தங்கள் வலைத்தளம் வருகிறேன்.
Post a Comment