Powered By Blogger

Thursday 27 October 2011

வில்லிசை வித்தையிலே!!




வெள்ளிக்கொம்பு நாயகனே

துள்ளியிங்கே வாருமய்யா!
தெள்ளுதமிழ் வார்த்தைகளை
அள்ளிவந்து தாருமய்யா!!

கந்தனுக்கு மூத்தவனை
சிந்தனையிலே தான் நிறுத்தி
தந்தனத்தோம் என்றுசொல்லி
வில்லெடுத்து பாடவந்தேன்!!



முன்னவரின் வாழ்க்கையிலே
சொல்லிச்சென்ற சேதியெல்லாம்
சின்னவன் நான் உங்கள்முன்னே
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மார்போடு ஒட்டியங்கே
போரிலே விளையாண்ட
பாருக்கு கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!
பனைமரக் கம்பெடுத்து 
கணையொன்னு  வடிவமைத்து 
புனைந்த ஏழடி நீளமது 
வில்கதிர் என்பதய்யா!!

வண்ணத்துணிகள் கட்டி
வெண்கலமணிகள் பூட்டி  
இணைத்து இசையமைக்க
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்கதிர் இணைத்திடவே
தோலால் நாணேற்றி
பல்சுவைக் கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மண்ணால் செய்வித்த
குடமேனும் கடமதையே
கதிரோடு சேர்த்துபூட்டி
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்லிணைத்த நாண்மீது
தட்டித்தட்டி இசையெழுப்ப
வெண்கலப் பரல்களிட்டு 
வீசுகோல் கொண்டுவந்தேன்!!

கன்றின் தோல்கொண்டு
பனங்கிழங்கு நார்சுற்றி
சிறப்பாக பாட்டிசைக்க
சித்துடுக்கை செய்துவந்தேன்!!
வாழைநார் வாங்கிவந்து 
வைக்கோலை சேர்த்துக்கட்டி 
குடம்வைத்து தானடிக்க 
பத்தியொன்னு கொண்டுவந்தேன்!!

பன்னிசை உருவேற்றி 
பாங்காக வில்லிசைக்க 
புவியில் சிறுவன் நான்
அண்ணாவி ஆகிவந்தேன்!!
ஐந்துபேர் சேர்ந்திங்கே
ராசமேளம் தானிசைத்து
வில்லிசை சிறந்திடவே  
ஐங்கரனை நினைத்தோமே!!

சிரசின் மேலோங்கி
கரங்கள் குவித்திங்கே
வந்தனம் செய்தோமே
காப்பிசை பாடிவந்தே!!
கருவிலே உருவாகி
தெருவிலே அலைந்தவனை
தருவித்து கையாண்ட
குருவிசை பாடிவந்தேன்!!

அலங்கார மேடையிலே
சான்றோர்கள் சபைமுன்னே
சந்தங்கள் பலபாடி
சரித்திரங்கள் கூறிவந்தோம்!!
ஆள்வோர்கள் அவைமுன்னே
ஆண்டவனை வேண்டியிங்கே
விவசாயி வேதனையை
வில்லெடுத்து பாடவந்தேன்!!


ஆழஆழ மண்ணுழுது - ஆமா மண்ணுழுது
விதைய நல்லா பரப்பி வந்தோம்!
நாத்தாக வளர்ந்த பின்னே - ஆமா பின்னே 
அதையெடுத்து பாவிவந்தோம்!!
ஆழஆழ கேணியிலே - ஆமா கேணியிலே 
கமலையிட்டு இறைத்துவந்தோம் 
பரந்திருந்த பாத்தியெல்லாம் - ஆமா பாத்தியெல்லாம் 
சீராக ஊற்றிவந்தோம்!!


பயிருக்கு இடையிலதான் - ஆமா இடையிலதான் 
களையெல்லாம் பறித்துவந்தோம்! 
பயிரெல்லாம் வளரையிலே - ஆமா வளரையிலே
பிள்ளைபோல காத்துவந்தோம்!!
ஆண்டுக்கொரு ரெண்டுபோகம் - ஆமா ரெண்டுபோகம்
அழகாக எடுத்துவந்தோம்!
விளைந்தபயிர் விற்கையிலே - ஆமா விற்கையிலே
குறைந்தவிலை போச்சுதய்யா!!


கண்ணுபோல காத்துவந்த - ஆமா காத்துவந்த
மணிபோன்ற நெல்களெல்லாம்
அடிமாட்டு விலைபோக - ஆமா விலைபோக
கண்ணீரை வார்த்துவந்தோம்!!
பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்
நான்விற்ற நெல்களெல்லாம்
மூன்றாக விலையாகி - ஆமா விலையாகி
சந்தையிலே வாங்கிவந்தோம்!!


சேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா
சாதமிங்கே உனக்கேதய்யா!
குருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை
உருக்குழைய செய்யாதய்யா!!
நானுமிங்கே மனிதனய்யா - ஆமா மனிதனய்யா
உன்னைப்போல வாழவேனும்!
நாஞ்செய்த வேலைக்கெல்லாம் - ஆமா வேலைக்கெல்லாம்
கூலிவந்தா போதுமய்யா!!


ஆண்டுவரும் பெரியோரே - ஆமா பெரியோரே
காதில்வாங்கி போட்டுக்குங்க!

உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!


நல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க 
நாடுயர செய்திடுங்க!
நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா 
விவசாயி வாழவேனும் 
ஆமா 
வாழவேனும்!!!!



அன்பன் 
மகேந்திரன் 

64 comments:

RAMA RAVI (RAMVI) said...

முதலில் பொம்மலாட்டம் அடுத்து வில்லுபாட்டு,அழிந்து வரும் கலைகளுக்கு உயிரூட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகேந்திரன்.

அருமையான பாடல்.வில்லு பனைமரக்கம்பில் செய்வார்களா? வில்லுப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களைப்பற்றி நல்ல தகவல்.

அன்புடன் மலிக்கா said...

ஆதங்கத்தை சேர்த்து அழிந்துவரும் கலைகளுக்கு
ஆறுதலாய் ஒருகவிதை..

சந்தம் சேர்ந்துவருகிறது வரிகளில்.வாழ்த்துகள் சகோ..

vetha (kovaikkavi) said...

அருமை...புலமை...சிறப்பு. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Yaathoramani.blogspot.com said...

நம் கலைகள் குறித்து மிக அழகாக
அறிமுகம் செய்து போகிறீர்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி,

இன்றளவும் கொஞ்சமேனும் சிறிய மாற்றங்களோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு களை இந்த வில்லிசை.
தென்மாவட்டங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.

வில்லிசை கேட்டு பழகினால் அவர்கள் பாடுவதும்
பின்பாட்டு கேட்பதும் தனி சுகம்.

வில் பனைமரக் கம்பில் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.
சிலர் மூங்கிலிலும் செய்கிறார்கள்.

தங்களின் அழகிய கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மலிக்கா
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

Sakunthala said...

\\கருவிலே உருவாகி
தெருவிலே அலைந்தவனை
தருவித்து கையாண்ட
குருவிசை பாடிவந்தேன்!!//
குருவணக்கம் அருமை
வில்லிசைக்கு தேவையான கருவிகள்
பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது
அதன்பின் வரும் பாடல்
வில்லிசைப் பாடல் போலவே பாடுவதற்கு
இனிமையாக உள்ளது
பாடலில் உழவனின் இன்றைய நிலையை
கூறியிருப்பது சிறப்பு
தங்களுடைய கவிதைகள் நாளுக்கு நாள்
மெருகேறிக் கொண்டே செல்கிறது
வாழ்த்துக்கள் தோழரே

Unknown said...

வில்லுப்பாட்டில் இருந்து புறப்பட்ட அம்புகள் நெஞ்சை தைக்கிறது நண்பா ..

கூடல் பாலா said...

விவசாயிகளின் வேதனை வில்லிசையாய்.....அருமை அண்ணாச்சி!

SURYAJEEVA said...

அருமை அருமை அருமை

சென்னை பித்தன் said...

காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உங்கள் வில்லுப்பாட்டு! நசிந்து வரும் கலைகள் பற்றிய நல்ல பதிவுகள் தரும் உங்களுக்கு நன்றி.

காந்தி பனங்கூர் said...

வில்லுப்பாட்டுப் பற்றிய கவி வரிகள் மிகவும் ரசிக்கும் படியா இருந்தது நண்பரே. வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

நன்றாக இருக்கிறது சகோ..
வாழ்த்துக்கள்.,

Kanchana Radhakrishnan said...

அருமை.

ராஜா MVS said...

விவசாயி உயர்ந்தால் அந்த நாடும் உயர்ந்துவிடும் என்பது முற்றிலும் உண்மை... நண்பரே...

மிக அருமையான கருத்தை தாங்கள் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்... வாழ்த்துகள்... நண்பரே...

மகேந்திரன் said...

அன்பிற்கினிய தோழி சகுந்தலா,

வில்லிசைக்கு பயன்படுத்தும் இசைக்கருவிகள் இன்னும் சிலவற்றை
நான் கூறவில்லை, செந்தட்டி, கதிர்முனைக்குப்பி, கட்டித் தாளம்
போன்றவைகளும் முக்கியமான கருவிகள்.

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு
வில்லிசை பாடியபின்
கிடைத்த வரவேற்பை இருந்தது
தங்கள் கருத்து.
நன்றிகள் பல நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநண்பர் கூடல்பாலா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநண்பர் சூர்யஜீவா

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

விவசாயிகளின் வேதனை ஊரெங்கும்
ஒழிக்க வேண்டும் ஐயா.

தங்களின் அருமையான கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள் சென்னைப்பித்தன் ஐயா.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

rajamelaiyur said...

அருமையான கலை .. அழியாமல் இருக்கு இன்னும் சிலர் இருப்பது மகிழ்ச்சி

rajamelaiyur said...

இன்று என் வலையில்

அரசியல்வாதி ஆவது அப்படி ?

Anonymous said...

தமிழ் இசைக்கலைகளுடன் கூடிய இனிய கவிதை படைத்தீர்கள் மகேந்திரன். வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் வரவர ஏதோ ஓர் விழிப்புணர்வை ஊட்டும் தகவலாக
அமைந்து வரும்விதம் அருமை !....பாராட்டுகள் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

shanmugavel said...

//உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!//

ஆமாம் அய்யா ! கலைகளைப் பற்றிய தங்களது கவிதைகள் மனதை நிறைக்கிறது.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஊர் ஞாபகம் வருது.கண்ணகி கதை சொல்லி அழுவார் அந்தக் கலைஞர்.உண்மையில் பிடித்து வைத்துக் கதை சொல்வதைவிட அதே கதையை வில்லுப்பாட்டில் நகைச்சுவையோடு சொல்லும்போது மனதில் படிகிறது.நீங்களும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் மகேந்திரன் !

Anonymous said...

இந்த வில்லுப்பாட்டு பிடித்திருக்கு சகோதரரே...

நம்மூர்ப்பக்கம் இந்த இசையையும் கொடுத்து கருவிக்கு பனையையும் கொடுப்பது பெருமைக்குரிய விசயமே...

படிக்கும் போது திருமதி விஜய லக்ஸ்மி நவ நீத கிருஷ்ணன் மூலம் அடுத்த அறையில் இரண்டு ஆண்டுகள் கேட்ட பாக்கியம்
மறக்க முடியவில்லை...

கலக்குங்கள்...

இராஜராஜேஸ்வரி said...

சேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா
சாதமிங்கே உனக்கேதய்யா!
குருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை
உருக்குழைய செய்யாதய்யா!!//

உயிரோட்டமுள்ள அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

மகேந்திரன் said...

அன்புநண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நடாசிவா
தங்களை வசந்தமண்டபம் வாச பன்னீர் தெளித்து வரவேற்கிறது.

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அதுவே என் எண்ணம் சகோதரி அம்பாளடியாள்

தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஆமாம் நண்பர் ரெவெரி
நீங்கள் சொல்வதுபோல தென்மாவட்டங்கள் தான்
வில்லிசையை போற்றி வளர்த்தன என்று
வரலாறு கூறுகிறது...
கலைவாணர், குலதெய்வம் ராஜகோபால் ஆவார்கள்
திருநெல்வேலி வந்து இக்கலையை படித்து சென்றார்களாம்...

தங்களின் அழகிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி

தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

Aathira mullai said...

நலிந்து வரும் க்லையான வில்லிசையை உங்கள் சொல்லிசையைக் கொண்டு பொலிவுறச் செய்துள்ளீர்கள் மகேந்திரன். ந்ன்றாக உள்ளது.

சாகம்பரி said...

//பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்
நான்விற்ற நெல்களெல்லாம்
மூன்றாக விலையாகி - ஆமா விலையாகி
சந்தையிலே வாங்கிவந்தோம்!!//
இடைத்தரகர்களின் வஞ்சம். விவசாயியை இன்னும் கலங்க வைக்கிறதே. நாட்டு நடப்பை சொல்லும் வில்லுப்பாட்டு தாளம் மாறாமல் அருமையாக வந்திருக்கிறது.

ஷைலஜா said...

வில்லுப்பாட்டு பதிவு வித்தியாசமாய் இருக்கிறது வில்லை அப்படி சபைல கொண்டுவந்து அந்த நிகழ்ச்சி செய்ய நல்ல பயிற்சி வேண்டும் உழைப்பு நிறைந்த கலை அது...காலத்தின் கோலம் எல்லாம் மெல்லமெல்ல மறைந்துவருகிறது.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆதிரா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மாய உலகம் said...

இந்த பதிவை பார்த்ததும்..சிறிய வயதில் நான் வில்லுபாட்டை மேடையில் பாடி நடித்தது ஞாபகத்திற்கு வருகிறது நண்பா...!

மாய உலகம் said...

வண்ணத்துணிகள் கட்டி
வெண்கலமணிகள் பூட்டி
இணைத்து இசையமைக்க
வில்லெடுத்து பாடவந்தேன்!!//

உங்களது ஒவ்வொரு கவிதையை பார்க்கும்பொழுதும்.. நமது கலாச்சார கலையினை ரசித்து வாழ்ந்து வளர்ந்திருக்கிறீர் நண்பரே! வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!


நல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க
நாடுயர செய்திடுங்க!
நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா
விவசாயி வாழவேனும்
ஆமா
வாழவேனும்!!!!//

உலகில் முதன்மையானவன் விவசாயிதான் அதை உணரும் காலம் வரும் நண்பா... விவசாயி வாழ்ந்தால் தான் அனைவரும் வாழ முடியும்.. மிக அருமையாக முடித்திருக்கீறீர்கள் நண்பா....

காட்டான் said...

மாலை வணக்கம் மாப்பிள..
அழிவின் விளிம்பில் இருக்கும் கலைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்துக்கு நான் தலை வணங்குகிறேன்...

தந்தன தோமென்று சொல்லியே வில்லினில் பாட வந்திடுவாய் கணபதியேன்னு பாடியதையும் எங்கள் ஊர் கிராமத்தையும் என்னை நினைக்கவைத்துவிட்டீங்கள்...

வாழ்த்துக்கள்..

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நலமா?
தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி?

உடல் நலக் குறைவினால் உடனே வர முடியலை.

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வில்லிசை பற்றி இக் காலச் சிறுசுகளும் அறிந்து கொள்ளும் ஒரு அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

காலத்தின் தடத்தில் அமிழ்ந்து போகும் கலாச்சாரக் கலையினை கவிதையில் தந்தது அழகு சேர்க்கிறது.

Unknown said...

நல்லா இருக்கு.. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

யசோதா காந்த் said...

கிராமத்து அம்மன் கோவில் திருவிழா கண்டு வந்த திருப்தி .. வாழ்த்துக்கள் சகோதரரே ..

Rathnavel Natarajan said...

அருமை.
வில்லுப்பாட்டை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநண்பர் ராஜேஷ்
பன்முக திறமை கொண்டவர் நீங்கள்,
தங்களின் கருத்துரை என்னை மேலும் வளர்க்கிறது.

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா...
சிறுவயதில் வில்லிசை பார்க்கும்போது,
அவர்கள் அருகில் சென்று நாமும் ஆமா என்று சொல்வோமா
என தோன்றும்
அப்படி ஒரு ஈர்ப்பு மிக்க கலை அது...
தங்களின் மேலான கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
தீபாவளி இந்த வருடம் இல்லை
குடும்பத்தை விட்டு பல்லாயிரம் மைல் தூரம் இருக்கிறேன்.

தங்களின் உடல்நிலையை பார்த்துக்கொள்ளவும்.
இந்த சூழ்நிலையிலும் தவறாது கருத்துரைக்கும்
தங்களின் பேராதரவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநண்பர் விக்கி மாம்ஸ்...


தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி யசோதாகாந்த்,
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் தொடர்ந்த பேராதரவிற்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

kupps said...

"உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!"
"நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா
விவசாயி வாழவேனும்"
நிதர்சனமான வரிகள்.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,


தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

yathavan64@gmail.com said...

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(S'inscrire à ce site
avec Google Friend Connect)

Post a Comment