சும்மாடு கட்டிவந்து
சுகராகம் பாடிநின்றேன்!
சுக்கு மிளகென்ன
அத்தனையும் விற்றுவந்தேன்!!
அண்டிப் பிழைக்கவில்லை
அகங்காரம் பேசவில்லை!
அகிலத்தின் சாலையிலே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
ஏமாத்த தெரியவில்லை
எகத்தாளம் பேசவில்லை!
ஏறுவெயில் வேளையிலும்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
சூதுவாது தெரியாது
சூத்திரமும் தெரியாது!
சுத்தமான மனத்தோட
அத்தனையும் விற்றுவந்தேன்!!
பனியென்ன மழையென்ன
சூறாவளிக் காற்றென்ன!
சுத்திவந்து அடிச்சாலும்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
அரண்மனை கட்ட அல்ல
மதில்கோட்டை கட்ட அல்ல!
அன்றாட பிழைப்புக்கு
அத்தனையும் விற்றுவந்தேன்!!
தீண்டாமை பேசவில்லை
திருடித் திங்கவில்லை!
தெருவெல்லாம் அலைந்திங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!
ஊதாரியா திரியவில்லை!
ஊரூரா அலைந்திங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
அடுத்தவன் சேர்த்ததெல்லாம்
அபகரிக்க வரவில்லை!
அஞ்சுபத்து கிடைக்குமின்னு
அத்தனையும் விற்றுவந்தேன்!!
வீம்புல நான் திரிஞ்சா
வீடிங்கே தெருவுலதான்!
வேதனைய உள்ளடக்கி
அத்தனையும் விற்றுவந்தேன்!!
ஊழலின்னு சொல்வதெல்லாம்
சத்தியமா தெரியாது!
ஊனுருக தினமுமிங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
வீடிங்கே தெருவுலதான்!
வேதனைய உள்ளடக்கி
அத்தனையும் விற்றுவந்தேன்!!
ஊழலின்னு சொல்வதெல்லாம்
சத்தியமா தெரியாது!
ஊனுருக தினமுமிங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
சாதியெல்லாம் நான் பார்த்தா
சோறு வீட்டில் வேகாது!
மதம்பிடிச்சு நான் அலைஞ்சா
நிதமும் நானும் பட்டினிதான்!!
நாலுபேரு வாங்கினாத்தான்
என்பிழைப்பு நடக்குமிங்கே!
எனக்கிங்கே சாமியெல்லாம்
என்னிடத்தில் வாங்குவோரே!!
சோறு வீட்டில் வேகாது!
மதம்பிடிச்சு நான் அலைஞ்சா
நிதமும் நானும் பட்டினிதான்!!
நாலுபேரு வாங்கினாத்தான்
என்பிழைப்பு நடக்குமிங்கே!
எனக்கிங்கே சாமியெல்லாம்
என்னிடத்தில் வாங்குவோரே!!
நாட்டிலே நடப்பதெல்லாம்
எனக்கிங்கே செய்திதானே!
என்மனதில் இருப்பதெல்லாம்
வீட்டை பத்தி நினைப்புத்தானே!!
நான்பாடு பட்டாலும்
என்னோட போகவேணும்!
நான்பெத்த பிள்ளைகளோ
நல்லா படிக்க வேணும்!!
எனக்கிங்கே செய்திதானே!
என்மனதில் இருப்பதெல்லாம்
வீட்டை பத்தி நினைப்புத்தானே!!
நான்பாடு பட்டாலும்
என்னோட போகவேணும்!
நான்பெத்த பிள்ளைகளோ
நல்லா படிக்க வேணும்!!
அணுசக்தி என்றொன்று
காதிலே விழுந்ததே!
அது இன்று வந்தாலே
சந்ததிக்கு கேடென்று!!
படிப்பறிவு எனக்கில்லை
பட்டையம் வாங்கவில்லை!
பட்டதை சொல்லிடுறேன்
பாதகமா எண்ணாதீங்க!!
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!
அன்பன்
மகேந்திரன்
காதிலே விழுந்ததே!
அது இன்று வந்தாலே
சந்ததிக்கு கேடென்று!!
படிப்பறிவு எனக்கில்லை
பட்டையம் வாங்கவில்லை!
பட்டதை சொல்லிடுறேன்
பாதகமா எண்ணாதீங்க!!
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!
அன்பன்
மகேந்திரன்
67 comments:
த.ம.1
சாமானியனின் குரல் கவிதையாய் ஒலிக்கிறது.
அருமை.
அதிலும் பஞ்சு மிட்டாய் விற்கும் பீகார் சிறுவர்கள்... கொடுமையின் உச்சம்...
//
கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!//
உழைத்தால் உணவு உண்டு இந்த உலகில் என அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
எல்லா வரிகளும் அருமையே!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
/////கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!////
வியாபாரியிடம் மட்டுமல்ல வரியிலும் நேர்மை தெரிகிறது..
அருமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
// படிப்பறிவு எனக்கில்லை
பட்டையம் வாங்கவில்லை!
பட்டதை சொல்லிடுறேன்
பாதகமா எண்ணாதீங்க!!
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!//
முழு முட்டாளுக்கும்
புரியும் வரிகள்
ஆளும் அரசாங்கத்திற்கு
புரியாதா
அருமை சகோ!
படிப்பறிவு எனக்கில்லை
பட்டையம் வாங்கவில்லை!
பட்டதை சொல்லிடுறேன்
பாதகமா எண்ணாதீங்க!!
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!
முட்டாளுக்கும் புரியும்
வரிகள் அரசுக்குப் புரியுமா
அருமை சகோ!
புலவர் சா இராமாநுச
அருமை...அருமை...
நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்பதினை அழகாக உணர்த்தி இருக்கீங்க மகேந்திரன்.
//மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!//
அருமையான வரிகள்.
உண்மை உழைப்பை உணர்த்திய கவிதை ,அருமை நண்பா
ஓடோடி வந்து இனிய கருத்துரைத்தமைக்கு
மிக்க நன்றி சென்னைப்பித்தன் ஐயா .
கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், ...
இப்படி பலர்..
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி
நண்பர் சூர்யஜீவா
அன்புநிறை கோபாலகிருஷ்ணன் ஐயா
தங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ ம.தி.சுதா
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
புரியவேண்டும் புலவரே,
அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரி ராம்வி
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
அத்தனையும் விற்று வந்தேன்.... என்று சொல்லும் உங்கள் கவிதை வரிகள் மிக நன்று...
.
அணுசக்தி என்றொன்று
காதிலே விழுந்ததே!
அது இன்று வந்தாலே
சந்ததிக்கு கேடென்று!!//
முத்தாய்ப்பாய் நிகழ்கால பிரச்சினையை நெடுங்கால நிகழ்வுகளுடன் இணைத்தமை அருமை..சகோதரரே...
//சூதுவாது தெரியாது
சூத்திரமும் தெரியாது!
சுத்தமான மனத்தோட
அத்தனையும் விற்றுவந்தேன்!!//
எளிய மனிதர்களைப்பற்றிய அருமையான கவிதை.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் சண்முகவேல்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அருமை!!! அருமை!!! உழைப்பாளிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.
மாப்ள அருமையா விஷயத்த வரிகளில் கொண்டு வந்து இருக்கீங்க நன்றி!
மனசை நெகிழ வைக்கும் அருமையான கவிதை
அதற்கேற்ற படங்கள்
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்
மனப்பூர்வ வாழ்த்துக்கள்
நண்பா.. வறுமையில் இருந்தாலும் உண்மையா உழைத்து வாழ வேண்டுங்குற கோட்பாடுள்ள கவிதையில் அணு உலை சம்பந்தமாகவும் விழிப்புணர்வு புகுத்தியமைக்கு பாராட்டுக்கள் நண்பா
\\\மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!\\\ நல்லா கேட்டீங்க ...
பிடிங்க பூங்கொத்தை மகேந்திரன்.
அருமை.
வறுமையிலும் நேர்மைக்கு உதாரணம் இவங்க தான்!
வெள்ளந்தி மனிதர்களின் மனசாட்சியை வரிகளாக பதித்தது அருமை!
கடைசி வரிகள் மகுடத்தில் முத்து!
நாலுபேரு வாங்கினாத்தான்
என்பிழைப்பு நடக்குமிங்கே!
எனக்கிங்கே சாமியெல்லாம்
என்னிடத்தில் வாங்குவோரே!!//
செம கலக்கல் மகேந்திரன், உங்க பதிவுகளுக்கு காப்பி ரைட் வாங்கி வச்சுக்குங்க, இல்லைன்னா காப்பி பேஸ்ட் பண்ணமுடியாமல் லாக் பண்ணி வையுங்க, திருடனுங்க இருக்கிற இடம் இது ஜாக்கிரதை...!!!அம்புட்டு அழகா இருக்கு நாட்டுப்புற பாடல்...ரசிச்சு படிச்சேன் மனசு லேசானது...!!!
உழைப்பின் நேர்மையும், சமுகத்தின் அவலங்களையும், வருமையின் வலியையும், மிக நேர்த்தியாக எடுத்துரைக்கும் வரிகள்.... நண்பரே...
கவிதை மிக அருமை... நண்பரே...
வாழ்த்துகள்...
//
கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
//
அருமை
மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!//
!//இயல்பை (எதார்த்தம் )அழகாக படம் பிடித்து உள்ளமை மிகவும் பாராட்டுகளுக்கு உரியன நம் நாட்டில்தான் இன்னும் உழைப்பினை மதிப்பதில்லை மனிதனின் உழைப்பை என்று இந்த சமூகம் வணங்குகிறதோ அன்றே நம் நாடு செழிக்கும் இதை அழகாக பதிவு செய்தமை ... கூடங்கள சிக்கலையும் விட்டுவைகக்காமை .... இப்படி பாராட்டுகள் கூடுகிறது நன்றி .
நான்பாடு பட்டாலும்
என்னோட போகவேணும்!
நான்பெத்த பிள்ளைகளோ
நல்லா படிக்க வேணும்!!//
ஒவ்வொரு சகமனிதனின் எண்ணமும் அதுதான்
நிழற்படங்களை பார்க்கும்போது பேருந்து நிலையங்களில்
நாம் காணும் முகங்கள் நினைவுக்கு வருகிறது
அவர்களுடைய வாழ்வியலை எடுத்து இயம்புவதாக உள்ளது
அதனிடையே தற்போதுள்ள சமூகபிரச்சனையையும்
சாடி இருப்பது மிகவும் அருமை
கவிதை வரிகளை வாசிக்க வாசிக்க
நன்றாக உள்ளது
நிதர்சனமான வரிகள் பாஸ் ..(
////வீம்புல நான் திரிஞ்சா
வீடிங்கே தெருவுலதான்!
வேதனைய உள்ளடக்கி
அத்தனையும் விற்றுவந்தேன்!!///// இந்த மண்ணில் பிறந்த எத்தனையோ பேரின் நிலை ((
//கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!//
பலரின் நிலை
அன்றாடம் படும் பாடுகளின் நிலமைகளை மிக அருமையாக அழுத்தமாக சொல்லபட்டுள்ளது வரிகளில்..
அன்புநிறை நண்பர் குவைத் தமிழன்
தங்களை வசந்தமண்டபம் வரவேற்கிறது.
இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை விக்கி மாம்ஸ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், முகநூல் அறிமுகத்திற்கும்
அரிய வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் பாராட்டுக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் கூடல்பாலா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் சத்ரியன்
இனிய பூங்கொத்துக்கும்
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் கோகுல்
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காப்பி ரைட் போட்டு வைச்சிருக்கேன், காப்பி பேஸ்ட் செய்வதை எப்படி தடுப்பது னு
தெரியல நண்பரே. முயற்சி செய்றேன்.
அன்புநிறை நண்பர் ராஜா MVS
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புத்தோழி மாலதி
தங்களின் பாராட்டுக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புத்தோழி சகுந்தலா
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ கந்தசாமி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி மலிக்கா
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தோழர் மகேந்திரன் அவர்களே உழைபவரின் உண்மையான வலிகள் உமது கவிதையில் வடித்துள்ளீர்கள் ..அனைத்தும் அருமை வணக்கமும் வாழ்த்துக்களும்
உழைப்புக்கும் தொழிலுக்கும் எளிய நடையில் மரியாதை செய்கிறது உங்கள் கவிதை!
அன்பு சகோதரி யசோதா காந்த்
தங்களை வசந்தமண்டபம் வரவேற்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த மேன்மையான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்
தங்களை வசந்தமண்டபம் வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் அண்ணா,
தமது அன்றாட வாழ்க்கையினை ஓட்டுவதற்காக அன்போடு தம் வியாபாரத்தினை மேற்கொள்ளும் சாதாரண மக்களின் வஞ்சகமற்ற உள்ளத்து உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.
வணக்கம் நிரூபன்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மழலை குறித்த நல்ல பதிவு;ஆண் குழந்தை பற்றிய பதிவாய் இருக்கிறது
அன்புநிறை நண்பர் இரா.தெ.முத்து
தங்களை வசந்தமண்டபம் வரவேற்கிறது.
இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
/////கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!////
உண்மை அருமையாய் அந்த மனிதர்களை சொல்லி இருக்கீங்க அதுவும் படத்தோடு இலங்கையிலும் இந்தியாவிலும் இப்படியான மனிதர்கள் என் வாழ்வோடு வந்திருக்கிறார்கள் நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் இப்போ மனோவும் சொல்லி இருக்கிறார் உங்கள் பதிவுகளை கட்டாயம் காப்புரிமை செய்யுங்கோ பதிவுலகில் உங்களை போல் கிராமியங்களையும் அடித்தட்டு மனிதர்களையும் அலசுவோர் விரல் விட்டு எண்ணிவிடலாம்.. உங்கள் பதிவுகள் என்னை ஏதோ செய்கின்றது .. மனமாற வாழ்த்துகிறேன்.. வாழ்த்துக்கள்..
அன்புநிறை காட்டான் மாமா
இதுதான் என் கவிக்கு கிடைத்த
மாபெரும் விருது,
காப்புரிமை செய்துவிட்டேன் மாமா.
தங்களின் மேலான கருத்துக்கு நன்றிகள் பல...
அத்தனையும் அருமையான வரிகள்.சூது வாது அறியாத நேர்மையான உழைப்பாளியின் வாழ்க்கையை பேசும் வரிகள் நன்று நன்று நன்று.வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
மிகவும் சிறப்பான வரிகள்.. மனதில் பதிந்தன வார்த்தைகள்..
வரவேற்கிறோம்..
Post a Comment