Powered By Blogger

Saturday 21 May 2011

ஏலேலங்கும்மி ஏலேலோ!







ஏலேலங்கும்மி ஏலேலங்கும்மி
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
தரணியெல்லாம் பொன்விளைய
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பரணி பாய்ந்து ஓடுதம்மா!
ஏலேலங்கும்மி  ஏலேலோ!

ஆணை அங்கே குளிச்சேரும் 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அழகான பரணியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!

நெல்லைச்சீமை புகழ்மணக்க 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
நெளிஞ்சு அங்கே ஓடுதம்மா 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அழகழகா ராகம் போடும் 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
கலகலக்கும் பரணியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
சலசலக்கும் ஓசையிலே
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
சந்தம் போட்டு பாடுதம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
விண்போற்றும் பெருமையுடன்
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
வீரக்கதை பேசுதம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
ஓடிவந்த வேகமெல்லாம்
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
ஒளிஞ்சு எங்கே போனதம்மா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பொன்னான மண்ணம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
புடம்போட்ட தங்கமம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
நீ இருந்த நிலையென்ன

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உன்மேனி எல்லாம் குழியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
எந்த பாவி செஞ்சதுவோ

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
இடர்வந்து சேராதோ
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
கொஞ்சமேனும் யோசிங்கப்பா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உன் குலம் வாழ வேணுமப்பா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மங்காத மாணிக்கத்த
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மண்ணாக எண்ணாதப்பா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
இப்போதே எடுத்துப்புட்டா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உனக்கு ஒருதுளி நீரில்லை
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பொன்னுமக்கா! தங்கமக்கா!
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மண்ணெடுக்க வேண்டாமையா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அன்பன்
மகேந்திரன்

13 comments:

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மதுரை சரவணன் அவர்களே,

தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தோழர் மகேந்திரன்
அழகான கும்மி
கும்மிப் பாடல் நமது நாட்டுப்புற இசையின்
மகத்தான ஒன்று,
சொல்லவேண்டிய கருத்தை
கும்மி மூலம் இனிமையாக
வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

ஆயினும், இது தாமிரபரணிக்கு மட்டுமல்ல
எல்லா ஆறுகளுக்கும் உண்டானது.
அதிகப்படியான அளவுக்கு மண்ணை அள்ளும் போது
ஆறுகளின் தன்மை மாறிவிடுகிறது
என்பதை மனதில் கொண்டு
இனியாவது திருந்தினால் நன்று.

தமிழ்தேவன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மகேந்திரன்,

//ஓடிவந்த வேகமெல்லாம்
ஏலேலங்கும்மி ஏலேலோ!
ஒளிஞ்சு எங்கே போனதம்மா
ஏலேலங்கும்மி ஏலேலோ!//

இந்த வரிகளில் வருத்தம் மட்டுமல்ல கோபமும் தென்படுவதாகக் கருதுகிறேன்..

கத்தி முனையால் சாதிக்க முடியாததை - தங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களது ( கவிஞர்களது ) பேனா முனையாவது சாதிக்கட்டும்..

வாழ்த்துக்கள்..

akilan said...

உங்க கும்மிப்பாடலை கண்டவுடன்
என் கால்கள் ஆட ஆரம்பித்துவிட்டது
கைகள் தானாக கும்மிகொட்ட ஆரம்பித்துவிட்டது.
அதோடு நல்ல கருத்தையும் சொன்ன
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Sathish Kumar said...

//கொஞ்சமேனும் யோசிங்கப்பா
ஏலேலங்கும்மி ஏலேலோ!
உன் குலம் வாழ வேணுமப்பா
ஏலேலங்கும்மி ஏலேலோ!

மங்காத மாணிக்கத்த
ஏலேலங்கும்மி ஏலேலோ!
மண்ணாக எண்ணாதப்பா
ஏலேலங்கும்மி ஏலேலோ!//

அருமை மகேந்திரன்....!

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் தமிழ்தேவன் அவர்களே,
நீங்கள் சொன்னது போல் இந்த பிரச்சனை எல்லா
ஆறுகளுக்கும் உண்டானது.
நான் பரிச்சயப்பட்ட தாமிரபரணியை மட்டும் இங்கே
குறிப்பிட்டுள்ளேன், இது எல்லா ஆறுகளுக்கும் பொதுவானது.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே,
நாம் தடுக்கமுடியாத சில தவறுகளை காணும்போது
மனம் வெதும்புகிறது.
குறைந்தபட்சம் அதை எழுத்துக்களில் காண்பிக்கலாமே
என்ற ஆதங்கம்தான் மேலோங்குகிறது.

தங்களின் பொன்னான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன் அவர்களே,
நீங்கள் கூறியது உண்மைதான்
கும்மிப்பாடலை கேட்கும் போது அதன்
தாளநயம் நம்மையும் அறியாமல் நமை
ஆட்டுவிக்கும்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சதிஷ்குமார் அவர்களே,
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

kunthavai said...

நல்லதொரு சமூக சிந்தனை தோழரே !
இத்தகைய கவிதைகள் படிப்பவரை வெகு சுலபமாக சிந்திக்க வைக்கும்.. அந்த வகையில் இதுவும் ஒரு சமூக தொண்டே!

மனமார்ந்த வாழ்த்துக்கள் மகேன்.
- அனு.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு
நாட்டுப்புறப் பாடல்களில்
அனைவருக்கும் எளிதாக
சென்றடையும் வகையில் நிறைய
கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதன் வழிவகையில் என்னுடைய சிறிய
முயற்சி இது.
தொடர்ந்து முயல்கிறேன்.
தங்களின் உன்னதமான கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

நன்று ஆறுகளை பேணி காக்க வேண்டும்

Post a Comment