Powered By Blogger

Friday 13 May 2011

ஆலோலம் பாடும் கிளி !!










தன்னானே நானேனன்னே
தன நன்னே நானேனன்னே
தன்னானே நானேனன்னே
தன நன்னே நானேனன்னே!

ஆலோலம் பாடும் கிளி
ஆவாரம் பூச்சூடி
ஆத்தங்கர மரத்தில்தான்
அமர்ந்திருக்கும் சின்னக்கிளி!

பஞ்சவர்ணக் கிளி
பவளமல்லி பூச்சூடி
புன்னைவன தோப்புலதான்
பவுசுகாட்டி நிக்குதடி!

செல்லமொழி பேசும் கிளி
செவ்வரளி பூச்சூடி
செவ்வாழ தோட்டத்துல
செம்மாந்து நிக்குதடி!

கொஞ்சி கொஞ்சி பேசும் கிளி
குண்டுமல்லி பூச்சூடி
கொய்யாத் தோப்புலதான்
குலவையிட்டு பாடுதடி!

கோவைப்பழம் தின்னுபுட்டு
குதுகலமா திரிந்த கிளி
கூண்டுலதான் கிடக்கிறியே
குத்தம் செஞ்சதார் கிளியே!

கூனி குறுகாதே
குத்தம் நீயும் செய்யவில்ல
எந்தாயி மீனாட்சி
காத்திடுவா கலங்காத!

ஏ மக்கா! செல்ல மக்கா!
எங்க ஊரு தங்க மக்கா!
யாரிந்த பாவம்  செஞ்சா
மனம் தெறந்து சொல்லு மக்கா!

பாங்கான பச்ச கிளி
பாவம் என்ன செஞ்சுதைய்யா
பறக்கட்டும் வண்ண கிளி
கூண்டிலிட வேணாய்யா!!


அன்பன்

மகேந்திரன்

11 comments:

Anonymous said...

அண்ணாச்சி
கலக்கிபுட்டிக
சும்மா!
வார்த்தைக படிக்க
நல்ல இருக்குதுங்க

மேலும் எதிர்பார்க்குறோம்

தமிழ்தேவன்

மகேந்திரன் said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.
நிச்சயம் முயற்சிக்கிறேன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//கோவைப்பழம் தின்னுபுட்டு
குதுகலமா திரிந்த கிளி
கூண்டுலதான் கிடக்கிறியே
குத்தம் செஞ்சதார் கிளியே!

கூனி குறுகாதே
குத்தம் நீயும் செய்யவில்ல
எந்தாயி மீனாட்சி
காத்திடுவா கலங்காத!//

வணக்கம் மகேந்திரன் .. நன்றாக இருக்கிறது.

ஆனால்..
இன்னும் கருத்தாழத்தோடு சொல்லலாமே ?

( பின்குறிப்பு - எங்களுக்கு கவிதையெல்லாம் வராது ஆமா சொல்லிப்புட்டேன் )

ஏன்னா சொல்றது ஈஸி.. சிந்திக்கிறது கஷ்டமில்லையா ?

இருந்தாலும் தங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

நன்றி
http://sivaayasivaa.blogspot.com/

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே

தங்களின் ஊக்கமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.
நிச்சயம் அடுத்தடுத்த படைப்புகளில் தர முயற்ச்சிக்கிறேன்.

அன்பன்
மகேந்திரன்

Anonymous said...

கலக்றீங்க மகேன்....மிக மகிழ்ச்சி ....தொடரட்டும்!
வாழ்த்துக்கள் ....

kunthavai said...

மன்னிக்கவும்...அது என்னுடைய கருத்து தான்..

- அனு.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு
வருக வருக
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
கூண்டிலிருக்கும் கிளிக்கு விடுதலை கொடுங்கள்.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

வணக்கம் ஐயா
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

DailyQuotes said...

வலைச்சரம் மூலமாக தங்கள் தளத்தில் இணைந்தேன். அருமை. வாழ்த்துக்கள்.

எனது தளமும் உங்கள் பார்வைக்கு http://nellaibaskar.blogspot.com/

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

Post a Comment