Powered By Blogger

Wednesday, 8 May 2013

ஆழிப்பேரலை அமைதி!!!







மைதியான ஆழ்கடல் 
ஆழிப்பேரலை கண்டதுபோல் 
அவதானித்து விழித்தேன்! 
அமைதியின் தன்மையது 
ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!


விடையற்றுப் போன 
வினாக்கணை ஒன்றினை 
வீதிவழி எடுத்துச்சென்றேன்!
விதிவழி கடந்துசென்ற 
விந்தைமிகு காட்சி காண!!
 
 
 
 
ர மணற்தடம் நோக்கி 
ஈருருளி வேகம் கொண்டேன்! 
ஈவுகள் தேடியவன் 
ஈடற்ற விடைகள் கண்டு 
ஈர்க்கப்பட்டு நின்றேன்!! 


கரந்தத்தேன் குடித்த
மதுவுண்ட வண்டது போல் 
மயங்கிப்போய் நின்றேன்!
மடக்கைகள் பலகொண்ட
மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!
 
 
 
 
கப்பட்ட தூண்டிலதை 
ஆலிங்கனம் செய்வித்து 
அகத்தினில் கறைபடிந்த 
அரூபப் பொழுதுகளை 
அகழ்ந்து நோக்கினேன்!!


தூளியின் வெப்பம் கடந்து 
துள்ளி எழுந்த காலம் முதல்
தூற்றிவிட்டுப் போன பருவங்களை  
தூர்த்து துளாவினேன் 
துர்குணங்களின் ஆதிக்கமே!!
 
 
 
 
னக்கான தகுதியை 
தரணி புகழ்கையில் 
தகுதியாகு பெற்றவனென 
தற்பெருமை கொண்டிருந்தேன் 
தகைவாய் இன்றுவரை!!

செம்மாந்த உறைவிடத்தில் 
செருக்கின் சுவடுகளால் 
செதுக்கிய சிலையான பின்னே
செயப்படு பொருளுக்கெல்லாம் 
செந்தீமை விளைவித்தேன்!!
 
 
 
பெரும்பணம் சேர்த்து 
பெட்டக கொட்டிலிலே 
பெட்டியில் பூட்டி வைத்து - உடல் 
பெருக்கம் கொண்ட நான் 
பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!


குடல்கொண்ட மேனியெல்லாம் 
குருதி நிறம் ஒன்றல்லவென 
குடையுறை வேந்தன்போல் 
குணத்தில் சாதி கொண்டு 
குற்றம் புரிந்திருந்தேன்!!
 
 
 
 
நிறைகர்வம் கொண்டிருந்தேன் 
நிகரில்லா அகங்காரத்தால் 
நிகழ்காலப் புகழுக்காக - பிறரை 
நிந்தை செய்வித்து 
நிதானம் இழந்திருந்தேன்!!

வனா அவன்?
இங்கனம் வளர்ந்திட்டானா?
இவனிலும் குறைந்தவனா - நானென 
இதனினும் மேற்படியடைய 
இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!
 
 
 
 
சோலையான ஆழ்மனம் 
சோகையாய் மாறியதேன்?
சோடனையாய் நான்கொண்ட 
சோடை போன குணங்கள் தானோ 
சோதித்துப் பார்க்கிறது??!!!


மைதியான எனதுளத்தில் 
ஆழ கல் பாய்ந்ததால் 
அகச்சுழற்சி விட்டுப்போன 
ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு 
அமைதி கொள்வதெப்போது??!!!
 



அன்பன் 
மகேந்திரன் 

 
 
 
 
 
 

44 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுயநலம்..., பேராசை..., ..., ..., துர்குணங்களின் ஆதிக்கம் என்னவெல்லாம் செய்கிறது...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புயலுக்கு பின் எப்போதும் அமைதியே....



விரைவில் அமைதியை நோக்கும் தங்கள் மனம்

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் நன்று.....

விரைவில் அமைதி உண்டாகும்.....

MANO நாஞ்சில் மனோ said...

துர்குணங்கள் மனிதனை விட்டு மாறவேண்டும்....

MANO நாஞ்சில் மனோ said...

கடல் கொந்தளிப்பா இருக்கோ வெளியே....

கப்பலில் வேலை பார்க்கும் நண்பன் அடிக்கடி சொல்லுவான், கடல் அமைதியாக இருந்தால் நாங்களும் அமைதியாக இருப்போம், கடல் கொந்தளிக்கும் போதுதான் வாழ்க்கை இத்தியாதிகள் பற்றி நினைத்து எங்கள் மனசும் தவியாக தவிக்கும் என்று சொல்வான் அது உண்மைதான் போல, உங்கள் எழுத்தில் அதை உணர்வது போல எனக்கு படுகிறது புலவரே....!

கீதமஞ்சரி said...

ஆழ்மனத்தை அரித்தெடுக்கும் அற்பகுணங்களை இன்னின்னவென்று அறிந்ததோடல்லாமல் அத்தனையையும் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபின் அவற்றை அடிமனத்தினின்று அகற்றுவதா கடினம்? முயன்றால் முடியாதது உண்டோ?

தற்பெருமை, செருக்கு, ஈகைமறுப்பு, சாதிவெறி, மமதை, பொறாமை போன்ற இழிகுணங்களால் மனித இயல்புகள் மறக்கடிக்கப்பட்டு நல்லெண்ணம் சிதைக்கப்பட்டு சஞ்சலத்தோடே போராடும் பெரும்பான்மை வாழ்வைப் படம்பிடித்துக்காட்டும் அற்புதமான கவிதைக்குப் பாராட்டுகள் மகேந்திரன்.

மறந்துபோன மற்றும் அதிகம் புழங்கப்படாத பல அரிய தமிழ்ச்சொற்களை இங்கு பயன்படுத்தி அறியாதோரையும் அறியச் செய்யும் தங்கள் சேவைக்கு மற்றுமொருப் பாராட்டு. தொடரட்டும் இன்கவியாக்கங்கள்.

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
முழுமைக்கு முன் நிகழும்
வெடிப்புகள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என
உணரச் செய்த கவிதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha/ma 4

தனிமரம் said...

இறுமாப்பும் இந்த தலைக்கனமும் இந்த ஆழிப்பேரலையின் பின் அழிந்து போய் அமைதிகானும் என்பதே நிஜம் சொல்லும் தடங்கள்.அருமைக்கவிதை அதர்கேற்ற காட்சிப்படங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கவிதை அதற்கேற்றப் படங்கள்.

வெற்றிவேல் said...

மோனை வசப்பட அழகாக கூறியுள்ளீர்கள்...

அழகு கவிதை, அதற்கேற்ற படங்கள்...

கவியாழி said...

தூற்றிவிட்டுப் போன பருவங்களை
தூர்த்து துளாவினேன்
துர்குணங்களின் ஆதிக்கமே!!//
அத்தனையும் அருமை

இராஜ முகுந்தன் said...

கலக்கமதெல்லாம் கடிதினில் அகலும்,
கருத்தினை சிதறாது காத்து
கலைந்திடும் மனதை கடிவாளமிடுதலே
கலைக்கோயில் காக்க உயிர்ப்பே..

kowsy said...

ஆழ்மன உழைச்சலை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். உள்ளம் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டியிருக்கின்றது. ஆனால் எது தவறு என்று ஆழ்மனம் புரிந்து கொண்டால் தவறுகள் நடப்பதில்லை. அழகான கவிதை வாழ்த்துகள்

கதம்ப உணர்வுகள் said...

தன்னை சுயம் அறிதல்… தன் அகம் அறிந்து தன் தவறுகளை களைய முற்படுதல்…. மனிதன் எப்போதும் எதையோ நோக்கி பாய்ந்துக்கொண்டே தான் இருக்கிறான். போகும்போது தன் தடங்களை தன் சுவடுகளை தான் செய்த நல்லவைகளை சரித்திரமாக்கிவிட்டு செல்கிறான்…


பணம் பணம் என்று ஒருபுறம் ஓடிக்கொண்டு… சம்பாதிப்பதில் சிறிது தான தர்மம் செய்து தன் குடும்பம் தழைப்பது போல ஏழைகளின் நிலையையும் கருத்தில் கொண்டு கொஞ்சம் அவர்களுக்கும் உதவி…


மனிதனுள் நல்லவை மறைந்து குரூரங்களும் கோபமும் பொறாமையும் எப்போது உள்நுழைகிறது என்பதை அறியாமலேயே நாட்கள் வேகமாக கடத்திக்கொண்டு இருக்கிறோம்.. ஏதாவது வேலை நடந்திட லஞ்சம் கொடுத்தாவது வேலைகள் வெற்றிகளாக்கிக்கொள்ள முயல்கிறோம்…


இப்படி ஒவ்வொன்றாய் சிறிய சிறிய தவறுகள் எல்லாம் பூதாகரமாகி நம்மை நிம்மதியின்றி தூங்கவும் விடாமல் இருக்கவும் விடாமல் மனம் தட்டி எழுப்பும்போது நமக்குள் இருக்கும் மனசாட்சி நம்மை கேள்வி கேட்க எழும் நிலை தான் இந்த அற்புதமான கவிதை உருவான விதம்…


நல் விதையை விதைக்கும்போது பயிரும் அமோக விளைச்சல் தருகிறது…
பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லவை கற்றுக்கொடுத்து ஒழுக்கம் போதித்து கல்விக்கற்றுக்கொடுத்து நல்ல நிலைக்கு ஆளாக்கி விடுகின்றனர் தன் பொறுப்பு தீர்ந்தது என…. அப்படி வளரும் குழந்தைகள் நல்லவராகவே தன் வாழ்நாளை கழிக்கும்போது ஒரு அற்புதமான சந்ததி அவனில் இருந்து உருவாகும் வாய்ப்பு பெறுகிறது.. மனிதன் அங்கு தவறும்போது அவன் சந்ததினியருக்கும் இந்த அவப்பெயர் போய் சேருகிறது…. குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோரின் வளர்ப்பை குறைகூறுவர்…


இந்த கவிதை சொல்லும் அற்புதமான விஷயம் தன் தவறுகளை கண்டுபிடித்து சீர்தூக்கி களைந்து நெருப்பிலிட்ட பொன்னாய் புடம் போட்டு பிரகாசிக்க உதவும் சுய பரிசோதனையின் முயற்சி இந்த அசத்தலான கவிதை வரிகளுக்கு என் நிறைந்த நன்றிகள் மகி…. வாசிப்போர் கண்டிப்பாக தன்னை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள முனைவர் என்பது உறுதி…. அன்பு வாழ்த்துகள் மகி் அற்புதமான கவிதைக்கு..

vetha (kovaikkavi) said...

மிக ஆழ்ந்த கருத்துடை கவிதை புரிந்தும் புரியாமலும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப்பக்கம் வருகிறேன்.. அருமையான கவிதை அண்ணா... வாழ்த்துக்கள்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

குட்டிக் குட்டிக் கற்கள் கொண்டு அழகிய ஒரு மாளிகையை உருவாக்குவதுபோல குட்டிக் குட்டிப் பந்தியில் ஒரு அழகிய விஷயத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறீங்க.... ரொம்ப அருமையாக சிம்பிளாக இருக்கு கவிதை. சிம்பிள் எனச் சொன்னது, படிக்க இலகுவாக இருக்கு என்பதை.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

காகம் திட்டி மாடு சாவதில்லை. அதுபோல ஆழிப்பெருங்கடலில் ஒரு கல் விழுந்து அதன் அமைதியை நிரந்தரமாகக் குலைத்திட முடியாது... கல்லால் ஏற்படும் குழப்பமெல்லாம், கடலுக்கு ஒரு சொற்ப நேரம்தானே...

மாதேவி said...

உள்ளத்தில் ஆர்பரிக்கும் ஆழிபேரலை அமைதி கொள்ளட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

அமைதியான எனதுளத்தில்
ஆழ கல் பாய்ந்ததால்
அகச்சுழற்சி விட்டுப்போன
ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு
அமைதி கொள்வதெப்போது??!!!


ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரிக்கும் கவிதை..!

kupps said...

நமது அமைதியின்மைக்கும் குழப்பத்திற்கும் காரணம் நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மில் காலப்போக்கில் புகுந்துவிட்ட தீய எண்ணங்களே.குறைந்த பட்சம் அவற்றால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற சுய உணர்வு நம்மிடம் இருந்தால் தான் நாம் எளிதில் அதனில் இருந்து விடுபடலாம்.உண்மையில் இவ்வுலகில் அந்த உணர்வு இல்லாமலேயே தான் பலர் உள்ளனர் என்பதே கசப்பான உண்மை.இதனால் மனித சமூகமே பாதிக்கப்படுகிறது.கவிஞரின் இந்த அற்புதமான
கவிதை நம்மைப்பற்றி சுய பரிசோதனை செய்ய உதவும் கருவி என்றால் அது மிகை அல்ல.வாழ்த்துக்கள் கவிஞரே.

Dino LA said...

அருமை....

பார்வதி இராமச்சந்திரன். said...

தங்கள் வலைப்பூவுக்கு வரும் பொன் வாய்ப்பைத் தந்த வல்லமைக்கு நன்றி. மனதின் ஆழம் தொடும் அருமையான கவிதைகளைப் படித்து வருகிறேன். கவிப்புதையல் தங்களது வலைப்பூ. என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Unknown said...

த்த்துவக் கருத்துகளோடு தமிழும் தவழ்கிறது!மகி!

வல்லிசிம்ஹன் said...

தீதும் நன்றும் பிறர்தர வாரா. எல்லாம் நாம் செய்த வினைக்கேற்ற பலனே கிடைக்கும் என்ற உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மிக நல்லதொரு பகிர்வு. நன்றி மகேந்திரன்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
எப்போதும் நாம் விடையற்றதாய் நாம்
நமக்குள்ளே வினவிக்கொண்டிருக்கும் வினாக்கள் தான்
ஆனால் விடைகளும் நமக்குள்ளே உண்டு...
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சௌந்தர்.....
தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்.......
தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் மனோ.........
உண்மையே நீங்கள் சொன்னது...
ஆழ்கடல் வாசம் கொஞ்சம் அதீதமாய்
உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.
வாரத்துக்கு ஐந்து நாட்கள் கடல் கொந்தளிப்பகத்தான்
இருக்கும் இங்கே..
பழகிப்போச்சி நண்பரே...

தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி..
மண்ணுக்குள் பல்லாண்டுகள் புதைந்துபோன
கரிம பொருட்கள் கார்பனாய் உருமாறி..
அது வெட்டி எடுக்கப்பட்டு வைரமாக நாம்
ஜொலிக்க வைப்பதில்லையா..
அதுபோலவே நம்முடைய துர்குணங்களை
நாமே ஆராய்ந்து நமக்கான இலக்கை
நன்முறையில் அடைந்தேற வேண்டும்..

உங்கள் கருத்துரை எனக்கு ஊக்கமளிக்கிறது சகோதரி..
ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா..
சரியான விளக்கம் கொடுத்தீர்கள்...
நான் இவ்வளவு நீளம் எழுதியதை..
சுருங்கச் சொல்லிய உங்கள் கருத்துரை
நெஞ்சை நிறைக்கிறது..
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
உண்மையே உண்மையே..
தனென்ற ஆணவம் நம்மை
மண்ணுக்குள் புதைத்துவிடும்...
புதையும் முன் நம்மை நாம் திருத்திக்கொள்தல் நலம்..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அருமையான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..
தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

வருக வருக இரவின் புன்னகையே..
வசந்தமண்டபம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கவியாழி ஐயா..
தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...
மனம் குளிர்கிறது உங்களின் வெண்பா வழி
கருத்து கண்டு..
கவி புனைந்த நேரத்தை விட..மேலானது
உங்கள் கருத்து கண்ட மகிழ்ச்சி ..
மனமார்ந்த நன்றிகள் ..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திர கௌரி..
ஆழ்மனம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் வேளையில்
நாம் தவறவிடும் நம் மாண்புகள் சீர்படுத்தப் படவேண்டும்..
என அழகான கருத்துரைத்த உங்களுக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி மஞ்சுபாஷிணி ..
ஆகா.. மனம் குளிர்ந்து..
எவ்வளவு அற்புதமான கருத்துரை உங்களுடையது..
சிந்தையில் ஊறிய எண்ணங்களை கருவாக்கி
விரல்வழி மொழிந்த படைப்புக்கு ஊக்கமளிக்கும்
ஏகாந்தமான கருத்துரை..
எழுத்துக்களை அப்படியே உள்வாங்கி
உள்ளம் சொல்ல நினைத்ததை அப்படியே
கருத்தாக்கி என் விழிகளுக்கு விருந்து படைத்தீர்கள்...
==
கவியாக்கிய பொழுதினும் நாம் இப்போது
உங்கள் கருத்தினால் உள்ளம் பூரிக்கிறேன்..
ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துரை ..
சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரி..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வேதாம்மா...
தங்களின் மேன்மையான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

வாங்க வாங்க சகோதரர் அமல்ராஜ்..
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களைக் காண்கிறேன்..
அற்புதமான கவிஞர் நீங்கள்..
உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாக மருந்து...
என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை அதிரா...
உங்கள் கருத்தினை நான் வழிமொழிகிறேன்...
பரந்த பெருங்கடலில் சிறு கல் வீழ்ந்து குழப்பிடாது..
அதுபோல நம் உணர்வுகளை கட்டுப்படுத்தி
சிறுகல்லாக்க வேண்டும்..
அதுவே பெரும் பாறையாக மாறிவிட்டால்...
குழப்பம் நிச்சயமே...
ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

வருக வருக சகோதரி மாதேவி..
வசந்தமண்டபம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

வெற்றிவேல் said...

அழகான கவிதை!!!

சிறப்பு அண்ணா... முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்... வாழ்த்துகள்...

Post a Comment