முகில் பூக்கள்!!!
வேரில் நீரற்று
இலைகள் உதிர்த்து
தலைகுனிந்த நேரமதில்!
மண்மீதில் என்நிலையை
மீட்டுக் கொடுத்திடவே
என்னுயிருள் நீரூற்றி
முகில் பூக்களாய் வந்தாயோ!!!
துளிப்பொறி ஈன்றிடு!!!
மூட்டியது யாரென்று
மிரட்டிப் பார்த்தேன்
பதிலொன்றும் கிடைக்கவில்லை!
முழுதும் எரிந்து
மூர்ச்சையாகிப் போகும் முன்
துளிப்பொறி ஈன்றிடு!
சுமந்து சென்று
சூட்சுமத்தின் விதையாக்குகிறேன்!!!
அன்பன்
மகேந்திரன்
30 comments:
இலையுதிர் காலத்தில்
அரிதாய் மலர்ந்தவை இந்த -
முகில் பூக்கள்!
அருமை...
வாழ்த்துக்கள்...
மூட்டியது யாரென்று
மிரட்டிப் பார்த்தேன்
பதிலொன்றும் கிடைக்கவில்லை!//
கவிதையிலும் மிரட்டல் ,அசத்தல் புலவரே...!
அருமை .வாழ்த்துக்கள்
நல்ல கவிகள் அண்ணா
கவிதைகள் இரண்டும்
தேன் கனிகள்
மனம் தொட்ட கவிதைகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நிலத்தில் நீரற்றாலும்
நீவாழ நானுண்டென்று
நீர்தர வந்த மேகமும்
தீண்டியவனை மூட்டிட
தீப்பொறி ஈன்றிடவேண்டும்
தீக்கும் ஈரமுண்டென்று
விந்தைதரும் கவிதந்த
சிந்தனைச் சிற்பிதான்
வியக்கின்றேன்!
வாழ்த்துகின்றேன்!!
அழகிய படங்களும் அசத்தலான கவிகளும்!
அற்புதம் சகோதரரே!
த ம 5
துளிப்பொறி மிக மிக அருமை.
நிறைய சிந்திக்க வைத்தது.
வாழ்த்துக்கள்.
கவிதை இரண்டும்
அருமை
துளிப்பொறியோ
மிக மிக
அருமை
நன்றி அய்யா
சித்திரக் கவிதைகள் ரசனைக்கு விருந்து! தொடரட்டும் நண்பரே...!
துளிப்பொறி ஈன்றிடு!
சுமந்து சென்று
சூட்சுமத்தின் விதையாக்குகிறேன்!!!
துளிப்பொறியாய் துளிர்த்த
கவிப்பொறிக்கு பாராட்டுக்கள்..!
துளிப்பொறி ஈன்றிடு படமும் வரிகளும் அருமை
சகோ !வாழ்த்துக்கள் மேலும் மேலும் தொடரட்டும் .
படம் வைத்துக் கற்பனை செய்வதும் கருத்தேடித்தரும் உத்தி அல்லவா கவிதைகள் எப்போதும் போல் சிறப்பு. வேரில் நீருண்டு மகேந்திரன் . ஆனால் உறைந்து உறங்கிப்போய் உள்ளன. தகவலுக்காக மட்டுமே .
அருமையான கவிதைகள்
அண்ணா மூர்ச்சையாகுமுன் துளிப்பொறி ஈன்றிடு.. அற்புதம் அண்ணா.
பொருளும் படமொடு பொருந்திய கவிதை!நன்று!
படங்களும் வரிகளும் மிகமிக நன்று .
ரசித்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
இரண்டு கவிதைகளும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன.
ஃஃஃஃமுழுதும் எரிந்து
மூர்ச்சையாகிப் போகும் முன்ஃஃஃ
இரு வார்த்தைக்குள் முழு ஆழமும் அடக்கம்
அருமை..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
இரண்டுமே அருமை. அதிலும் “முகில் பூக்கள்” சூப்பர் கற்பனை.
மிகவும் சிறப்பு வாய்ந்த இரண்டு கவிதைகளும் பாராட்டுக் குரியன அனல் கக்கும் வேளையில் குளிர்தரும் முகிலைப்படி கவர்ந்து இருக்கிறீர் வணக்கங்கள் ...
தீப்பொறி கவிதை சிந்திக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி சகோ!
அருமை.
வசந்த மண்டபத்தின் வாசலில் கூட
கவிதைகளின் வாசனை கண்டேன் ...
இருவியும் இதயம் தொட்டது
அருமை வாழ்த்துக்கள்
முகில் பூக்கள் கண்டு மனம் முகிழ்த்த கவிப்பாடல் கண்டு களிப்பு. மூட்டிய தீயினுள் சூட்சுமத்தின் வித்தை ஒளி(ந்)த்திருக்கும் ரகசியத்தை கவி அறிவித்த அதிசயம் கண்டு வியப்பு!பாராட்டுகள் மகேந்திரன்.
ada..
மூர்ச்சையாகிப் போகும் முன்
துளிப்பொறி ஈன்றிடு!
சுமந்து சென்று
சூட்சுமத்தின் விதையாக்குகிறேன்!!..........வணக்கம் சொந்தமே!மிக நீண்ட நாட்கனின் பின் வசந்த மண்டபம் வந்தமை மகிழ்ச்சி!
அருமையான வரிகள்...அருமை என்பதை விடஅழகான வார்த்தை இருந்ததால் தேடுகிறேன்.
வணக்கம் சகோதரா எனது முகநூல் கணக்கினுள் செல்ல முடியவில்லைச் சகோதரா .நீங்கள் எப்படியுள்ளீர்கள் மருமக்கள் மற்றும் வீட்டில் எல்லோரும் நலம் தானே ?......நாங்கள் நலம் அதுபோல் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆவலாயுள்ளோம் .
இரண்டும் அழகான கவிகள் அண்ணா...
முகில் பூக்கள் நல்ல கற்பனை...
Post a Comment