மறந்துபோன நினைவுகளும்
துறந்துபோன உணர்வுகளும்
கறந்துவைத்த பசும்பாலாய்
நுரைபொங்கி நிற்கிறது
சிறையுண்ட எனதுளத்தில்!!
எந்தன் நிலையெண்ணி
சிந்தையைச் சுரண்டும் நான்
முந்தைய நாட்களுக்குள்
முகம்புதைத்துப் போகிறேன்
முடிவிலியின் அச்சத்தில்!!
கற்பனை சித்திரங்களுக்கு
தூரிகை சமைக்கையில்
கற்பூர வில்லைகளாய்
காற்றில் கரைந்துபோயின
நிகழ்கால முயற்சிகள்!!
தன்னிலையில் நிறைவுறாது
தன்னிலையில் நிறைவுறாது
முன்னிலையின் தன்மையை
எந்நாளும் சிந்தித்தே
இந்நாளின் தண்மைதனை
வெந்நீராய் மாற்றுவதேன்?!!
ஒப்பிட்டு பார்த்தே
உமிழ்நீர் விழுங்குகிறேன்
முன்னவரின் திறமைகண்டு
ஒவ்வாமை நோயால்
ஓரடி பின்வைக்கிறேன்!!
உள்ளங்கை நெல்லியின்
சுவையுணர தவறிட்டு
எட்டாக் கனிக்காக
முட்டு தேய நடக்கிறோம்
சற்றும் சளைக்காமல்!!
கரும்பென்று நினைத்து
இரும்பைக் கடிக்க இயலுமா?
விழிவிரித்த பாதையில்
விரிசல் இல்லா முயற்சியுடன்
வீறுநடை போடுவோம்!!
திண்டின்மீது ஏறிவிட்டு
குன்றின்மீது ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!
அரிதான பிறப்பிதனின்
நெடுந்தூர பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்!!
அன்பன்
மகேந்திரன்
39 comments:
கரும்பென்று நினைத்து
இரும்பைக் கடிக்க இயலுமா?//
அருமையான வரிகள் புலவரே...மிகவும் ரசித்தேன்...!
// கரும்பென்று நினைத்து
இரும்பைக் கடிக்க இயலுமா//
இயலாதுதான் எனினும்
இரும்பே தன் உள்ளமாக
இனிதே தன் சொல்லாக
இயல்பே தன் வழியாக
இன்றே நீ துவங்கிவிடு
இனியதோர் பயணத்தை.
என்றுமே உனக்கில்லை
ஏக்கங்கள் . தூரப்போம்.
ஏற்றங்கள் தேடிவர
ஏணி உனக்குத் தேவையில்லை.
ஐயம் வேண்டாம்.
ஐங்கரன் உன் துணையிருக்க
"குறுஞ்செயலா" !! இல்லை இல்லை
குகைக்குள்ளே நீ இருக்கலாகா.
குன்று மேல் நின்றிருக்கும்
குமரேசக் கடவுள் சொல்வான்.
உனக்குள் ஒரு சக்தி
"உண்டென்று சொல்"
உன்னால் ஒரு கவிதையல்ல
காவியமே உருவாகும்
காலம் வந்துவிட்டது.
எழு. எடு
எழுதுகோலை.
சுப்பு தாத்தா.
arumai!
arumai sako...!
கற்பனை சித்திரங்களுக்கு
தூரிகை சமைக்கையில்
கற்பூர வில்லைகளாய்
காற்றில் கரைந்துபோயின
நிகழ்கால முயற்சிகள்!!
முயற்சிகளே கவிதையாய் ..அருமை . பாராட்டுக்கள்..
Nalla irrukku
என்னவொரு தன்னம்பிக்கை வரிகள்...
அழகாய்...
அருமையாய்...
வாழ்த்துக்கள்...
//திண்டின்மீது ஏறிவிட்டு
குன்றின்மீது ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!//
ஆம்.
மிக சிறப்பாக சொல்லியிருக்கீங்க.
நல்ல கவிதை பகிர்வு.
வசந்தமண்டப வாயில் திறந்து வாசனை உணர்ந்து வந்தேனிங்கு...
அழாகான, அருமையான கருத்தை நிறைத்த கவிவாசனையை நுகர்ந்தேன்... களித்தேன்...
வாழ்த்துக்கள் மகி!
பிறந்திட்ட நம் பிறப்பின் பெரும்பயன் என்னவென்று
சிறப்பான கவிசொல்லி சிந்திக்க வைத்தாய் தோழா
பொறுப்பாக உணரும்வகை புகன்றிட்ட உன் கருத்து
விருப்பாக ஏற்றிட்டால் வெகுநன்மை உண்டாமே...
அரிதான பிறப்பிதனின்
நெடுந்தூர பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்!! ///
உண்மைதான் அண்ணா! நம் அனைவரது வாழ்க்கையும் இப்போது இப்படித்தான் செல்கிறது!
உணர்வோடு வாழ்வது மட்டுமன்றி அவற்றை அடக்கி வாழ்வதும் வாழ்க்கை என்றாகிவிட்டது!
அருமையான கவிதை அண்ணா இது!!!
நகக்கீறல் இடைவெளியில் நன் சரித்திரம் படைத்திடுவோம் - மயக்கிவிட்டது மகேன் உங்கள் வரிகள்! மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கச் செய்ய வல்ல இதுவன்றோ கவிதை! சூபர்ப்!
அரிதான பிறப்பிதனின்
நெடுந்தூர பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்!!
அண்ணா வணக்கம் தங்கள் மற்றும் அண்ணி குழந்தைகள் அம்மாவின் நலன் அறிய ஆவல் அண்ணா.
உற்சாகம் தரும் வரிகள் நன்றி அண்ணா.
திண்டின்மீது ஏறிவிட்டு
குன்றின்மீது ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!
//
வணக்கம் அண்ணா .. நலமாக இருப்பிர்கள் என்று .நம்புகிறேன் ..
மெய் மறக்க வைத்த வரிகள் .பிரயோகம் ..
என் அன்பு வாழ்த்துக்கள் ..
நன்றிகளுடன் தம்பி அரசன்
அருமையான கருத்து.
வாழ்த்துக்கள்.
கவி வரிகள் அருமை!///திண்டின்மீது ஏறிவிட்டு
குன்றின்மீது ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!///பாரதி பாடல் விடுதலை எழுச்சி விதைத்தது.உங்கள் கவியும் பேசும்!!!!
முட்டி மோதச்செய்து நம்பிக்கையை விதைக்கும் அருமை வரிகள் !
உவமைகள் ஒவ்வொன்றும் அருமை மகி!
கற்பனை சித்திரங்களுக்கு
தூரிகை சமைக்கையில்
கற்பூர வில்லைகளாய்
காற்றில் கரைந்துபோயின
நிகழ்கால முயற்சிகள்!
பாடம் படிக்கவேண்டிய அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..
மறந்துபோன நினைவுகளும்
துறந்துபோன உணர்வுகளும்
கறந்துவைத்த பசும்பாலாய்
நுரைபொங்கி நிற்கிறது
சிறையுண்ட எனதுளத்தில்!!
ஆரம்ப வரிகளில் தொடங்கி அனைத்தும் அபயம்யென கண்டவர்க்கு உபயம் அளிப்பான் அருளன் ......
நல்லதொரு கவிதை தந்தீர் பாவலரே....
''..பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்..''
மிக நல்ல கருத்துடை வரிகள். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இனிய வணக்கம் நண்பர் மனோ..
அழகான கருத்துக்கு நன்றிகள் பல..
இனிய வணக்கம் சுப்பு தாத்தா அவர்களே,
மனம் இனித்தது உங்களின் கவிக் கருத்து கண்டு...
சிந்தையில் நம்பிக்கையை ஆழப் பதித்துவிட்டு செல்லும்
கவியை மிக அழகாக சொல்லி இருக்கீங்க..
சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...
இனிய வணக்கம் நண்பர் சீனி,
தங்களின் மேலான கருத்துக்கு
அன்பான நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி,
அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் ராஜேஷ்பாபு,
அழகான கருத்துக்கு..
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்..
அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும்..
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி ராம்வி
அழகான கருத்துக்கு என்
மனம் நிறைந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி இளமதி,
தேனான கவிக்கருத்தால்..
எம் உள்ளமதை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள்..
மனமார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் தம்பி மணி,
மேலான கருத்து உரைத்தீர்கள்...
அன்பான நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் பாலகணேஷ்,
அருமையான கருத்துக்கு
மனம் கனிந்த நன்றிகள்...
இனிய வணக்கம் தங்கை சசி,
நலமா?
இங்கு யாவரும் நலமே...
அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் தம்பி அரசன்,
நலம் நலமே...
உங்களிடம் நான் நாடுவதும் அதுவே,
அழகான கருத்துக்கு
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்,
அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் யோகா ஐயா...
முண்டாசுக் கவிஞனை என்னுடன் ஒப்பிடமை
உள்ளார்ந்த மகிழ்ச்சியே...
அவரின் சிறு பொறியாக நான் இருந்தாலே
எனக்கு மகிழ்ச்சி ஐயா..
அன்பான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரர் நேசன்,
அழகான கருத்துக்கு
அன்பான நன்றிகள்...
இனிய வணக்கம் புலவர் பெருந்தகையே,
உங்களின் ஆசிகளுடன் தொடர்கிறேன்...
அன்பான நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி...
உங்களின் அன்பான கருத்துக்கு
மனம் நிறைந்த நன்றிகள்...
இனிய வணக்கம் கவிஞர் தினேஷ்குமார்,
இனிமையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் வேதாம்மா,
அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும்
என் அன்பார்ந்த நன்றிகள்...
Post a Comment