Powered By Blogger

Wednesday 16 January 2013

நிழற்படக் கவிதைகள்.....!!!

வணக்கம் தோழமைகளே...
முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....


பனிக்குமிழ்  நெஞ்சம்!!


தொட்டுத் தொடர்ந்துவரும்
பட்டுப்போன முகமூடிகள்
சிறுகட்டத்தில் மோதிநிற்கும்
திமில்நிறை எறுதுகளாய்!!
மோதலுக்குப் பின்வரும்
விளைவுகளை நினைத்து
தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர் விழுங்கினேன்
தனிச்சிமிழாம் என் நெஞ்சம்
பனிக்குமிழாய் சிதறிடுமோ??!!!




எழில் வண்ண நினைவுகள்!!


விழியலர்ந்த வேளையிலே
குழம்பிய ஓடையில்
தளும்பிய அலைகளினூடே
பளிங்குக் கனவுகளை!!
குலுங்கிய விருட்சத்தினின்று
விழுந்த இலைகொண்டு
நெகிழும் ஒடமாக்கினேன்!
விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!



அன்பன்
மகேந்திரன்

29 comments:

Anonymous said...

இலை ஓடை - அழகுக் கற்பனை !

அருணா செல்வம் said...

நண்பரே... தயவுசெய்து கவிதைகளைத்
திரும்பவும் படித்தின் கீழே பெரிய எழுத்தில் பதியுங்கள்.

(உங்கள் கவிதைகளை ஆவலாகப் படிக்க ஓடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே...!)

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...
விரைவாய் வந்து அழகாய் கருத்திட்ட உங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Seeni said...

vaarthai !

varinthu katti kondulleerkal.!

aruamai sako!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்,
இதோ உடனே மாற்றிவிட்டேன்...
தங்களின் உடன் வரவுக்கும் அழகிய கருத்து
பங்களிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சீனி,
இரசித்து அழகிய இனிய கருத்து கொடுத்த
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

உணவு உலகம் said...

ரசிக்கும் கவிதை பூக்களின் தொகுப்பு. மீண்டும் படி(தி)த்தாலும், உள்ளம் கொள்ளை கொள்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....//

படங்களுடன் கவிதை இன்னும் இளமையாக இருக்கிறது புலவரே, வாழ்த்துக்கள்....

Easy (EZ) Editorial Calendar said...

படங்களும் அதன் கவிதைகளும் மிக மிக அருமையாக இருக்கிறது....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் அழகு. கவிதை சிறப்பு. ரசித்து மகிழ்ந்தேன்.

அம்பாளடியாள் said...


முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....!

வாழ்த்துக்கள் சகோ. அருமையான கற்பனைக்கு மேலும் இம் முயற்சி
சிறப்பாக உள்ளது மேலும் சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள்.....

இளமதி said...

மோதலுக்குப் பின்வரும் விளைவுகளை நினைத்து பனிக்குமிழ் நெஞ்சமதின் உணர்வை அழகாக கவிதையால் படம்பிடித்து, மோதும் எருதுகளுடன் அழகுற அமைத்துள்ளீர்கள்...

மோதும் எருதுகள் பயமுறுத்தினாலும் அதை வைத்தே அருமையாக கவி படைத்திருக்கின்றீர்கள். நல்ல கற்பனை.

எழில் வண்ண நினைவுகள்..அழகிய கனவு. அற்புதக் காட்சி...
பச்சிலை ஓடத்தில் பசுமையான இனிய நினைவுகள் அற்புதம்.
எனக்கும் பசுமையான நினைவுகள் இதைப் பார்த்ததும்...:)

அழகிய காட்சிகளும் கானமும்...நல்ல கற்பனை. மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரரே!

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு கவிதைகளிலும் உங்கள் கற்பனை சிறப்பு நண்பரே... தொடரட்டும் புகைப்படக் கவிதைகள்.

ezhil said...

எதிர் நோக்கும் பிரச்சனைகளை எதிர்த்திட துணியும் நெஞ்சம் தொடரும் விளைவிற்காய் ஒதுங்குகிறதோ? என் புரிதல் சரியா கவிஞரே......

அருணா செல்வம் said...

இரண்டு கவிதைகளும் அருமை...
ஆனால் நிறைய யோசிக்கத் துாண்டியது.

நன்றி கவிஞரே!

அருணா செல்வம் said...

t:m: 4

kowsy said...

இரு கவிதைகளும் இதயத்தைத் தொட்டன . வரிகளில் நிழற்படம் உங்கள் நினைவுகளைப் படம் பிடித்துக் காட்டின . சிறப்புத்தான்

ஹேமா said...

இடைக்கிடை இப்படியும் தொடரலாம் மகி.எனக்கும் பிடிச்சிருக்கு.அழகு !

முற்றும் அறிந்த அதிரா said...

மகேந்திரன் அண்ணன்.... நீல் ஆம்ஸ் ஸ்ரோங் முதன் முதலில் நிலாவில் காலடி வச்ச பீலிங்ஸ்ஸோடு:)) வசந்த மண்டபத்தில் கால் பதிக்கிறேன்ன்ன்..

மிக அழகாக இருக்கு வசந்த மண்டபம்.. கவிதையும் அதுக்கேற்ப படங்களும் சூப்பர்... வாழ்த்துக்கள்.

Anonymous said...

நலமா சகோதரரே...?

இரு செல்வங்களும் நலமா?

புதிய குவளை...அதே தேன்...திகட்ட திகட்ட...

மறுபடி சந்திக்கலாம்...

Unknown said...



புது முயற்சி ! பொலிவு பெற வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
கற்பனையின் ஆழமும்
மொழிப் பாண்டித்தியமும் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!

வியப்பாய நோக்கவைத்த
வீறுகொண்ட வரிகள்..

Anonymous said...

mika nanru leaf boat very fine.
Words super.
Eniya vaalththu..


Vetha.Elangathilakam.

கவியாழி said...

ஆரம்பமே அசத்தலாய் உள்ளது தொடருங்கள்.வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

இரு கவிதைகளும் அருமை அழகாய் உணர்வுகளை கொட்டியிருக்கின்றன பாவலரே.......

Angel said...

அழகிய கவிதைகள் ..எழில் வண்ண நினைவுகள் மிகவும் அருமை

Haiku charles said...

Arumai..
Nandraga ullathu..
Pidichirukku.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


அறிமுகம்செய்தவர்-காவிகவி


பார்வையிட முகவரி-வலைச்சரம்


அறிமுகத்திகதி-23.07.2014

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

Post a Comment