போட்டுவைத்த பந்தலிலே
பரவிவந்த மல்லிகையோ?!
குமிழ்ந்திருக்கும் சூல்பையில்
முகிழ்ந்திருக்கும் செந்தேனோ?!
செம்மரமிருக்கும் திசையெல்லாம்
மணமணக்கும் மரகதமோ?!!
அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
வாடைக்காற்றாய் செவிவழி நுழைந்து
இதையத்தை குளிர வைத்தாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிரம் முதல் பாதம் வரை
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!!
அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
வாடைக்காற்றாய் செவிவழி நுழைந்து
இதையத்தை குளிர வைத்தாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிரம் முதல் பாதம் வரை
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!!
இருக்கும் இரு பாலினத்தில்
இரும்பு வலிமை நானெனவும்
மென்மையாம் நீயெனவும்
கள்ளமொழி பேசிவரும்
மனிதமெனும் குலமதில்
மங்காத ஒளியாய்
நானும் ஒரு பாலென
நங்கை நீ அவதரித்தாய்!!
மொட்டாக இருக்கையிலே
இரும்பு வலிமை நானெனவும்
மென்மையாம் நீயெனவும்
கள்ளமொழி பேசிவரும்
மனிதமெனும் குலமதில்
மங்காத ஒளியாய்
நானும் ஒரு பாலென
நங்கை நீ அவதரித்தாய்!!
மொட்டாக இருக்கையிலே
சிட்டாக சிறகடித்து
பட்டுப் பூச்சிபோல்
பறந்துவந்த நாள்விட்டு!
அலர்ந்த மலராகி
நேர்கொண்ட பார்வையுடன்
கூர்கொண்ட விழியாலே
பார்போற்ற வளர்ந்தவளே!!
பெண்மையைப் போற்றும்
பெருமக்கள் கூட்டத்தில்
நெகிழ்ந்திருந்த நீயோ!
தான் பிறந்த வழியையும்
தாயிடம் அமுதுண்ட இடத்தையும்
பிறபெண்களிடம் காணவிளையும்
காமப்பிசாசுக் கூட்டத்தில்
கவளமாகிப் போனாயோ?!!
பெண்ணென்றால் என்னவென்று
புவனம் அறிய வை! - உன்னைப்
போகப்பொருளாய் நினைப்போரை
பொறியில் தட்டி வை! - உன்மேல்
களியாட்டம் ஆடவரும்
காமக்குப்பைகளை சாம்பலாக்கிவிடு!!
பெருமக்கள் கூட்டத்தில்
நெகிழ்ந்திருந்த நீயோ!
தான் பிறந்த வழியையும்
தாயிடம் அமுதுண்ட இடத்தையும்
பிறபெண்களிடம் காணவிளையும்
காமப்பிசாசுக் கூட்டத்தில்
கவளமாகிப் போனாயோ?!!
பெண்ணென்றால் என்னவென்று
புவனம் அறிய வை! - உன்னைப்
போகப்பொருளாய் நினைப்போரை
பொறியில் தட்டி வை! - உன்மேல்
களியாட்டம் ஆடவரும்
காமக்குப்பைகளை சாம்பலாக்கிவிடு!!
சித்திரப் பாவை என்பதினால் - வெறும்
உத்தரமாய் இருக்காதே!
மென்பால் நீயென்று - உனைத்
தன்பால் கவர்ந்து
உடற்பசி தீர்க்கவரும் கடைநிலை மனிதர்களை
முடமாக்கிப் போட்டுவிடு!!
துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்று கைகொண்டு
தூசிதும்பை தட்டிடுவோம்!
வெளிப்புறப் பேச்சில்
பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்திவரும்
கழிசடை குப்பைகளை
களைந்து எறிந்திடுவோம்!!
உத்தரமாய் இருக்காதே!
மென்பால் நீயென்று - உனைத்
தன்பால் கவர்ந்து
உடற்பசி தீர்க்கவரும் கடைநிலை மனிதர்களை
முடமாக்கிப் போட்டுவிடு!!
துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்று கைகொண்டு
தூசிதும்பை தட்டிடுவோம்!
வெளிப்புறப் பேச்சில்
பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்திவரும்
கழிசடை குப்பைகளை
களைந்து எறிந்திடுவோம்!!
அன்பன்
மகேந்திரன்
மகேந்திரன்
20 comments:
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
சட்டத்தின் மேலும்..நியாயதர்மங்கள் மேலும் பயம் விட்டுப்போன கூட்டம் ஒன்று கிளம்பியுள்ளது..நாடெங்கும் ! அதை வெட்டி வீழ்த்தாமல் பெண்ணினத்தை குறை சொல்லுவது ஆண்களாகிய நமக்கு பெரும் இழுக்கு!
// துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்று கைகொண்டு
தூசிதும்பை தட்டிடுவோம்!
வெளிப்புறப் பேச்சில்
பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்திவரும்
கழிசடை குப்பைகளை
களைந்து எறிந்திடுவோம்!!//
நல்ல சவுக்கடி மகி! உடன் சமுதாயம் ஆற்ற வேண்டிய அரும்பணி!
கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
காமப் பார்வையில் தப்ப இயலாது
கொல்கின்ற அவலங்கள்.
மனித நேயம் மறித்துப்போகிறது.
மனம் நொந்து போனதால் வந்த கவிதை. அருமை.
எப்போதுதான் திருந்தப் போகிறது சில மிருகங்கள்.ஆணினத்துக்கு அவப்பெயரைத் தேடித் தரும் காமுகர்களை ஆண்கள்தான் எதிர்த்துப் போராடவேண்டும்.
காமப்பிசாசின் கொடிய தூசை துடைப்பம் கொண்டு தூசி தட்டுவோம் திருந்த வழி செய்து.கவிதை அருமையான மொழிநடையில் சமூக அவலத்தை சாடி இருக்கின்றது.
துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்று கைகொண்டு
தூசிதும்பை தட்டிடுவோம்!
அவலம் சாடி அருமை போற்றும் சிறப்பான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அதே ஆண்கள் உலகில்தான் நீங்களும் மகி.பாதம் தொட்டு வணங்குகிறேன் !
//பெண்ணென்றால் என்னவென்று
புவனம் அறிய வை! - உன்னைப்
போகப்பொருளாய் நினைப்போரை
பொறியில் தட்டி வை! - உன்மேல்
களியாட்டம் ஆடவரும்
காமக்குப்பைகளை சாம்பலாக்கிவிடு!!//
ம்ம்.பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நிச்சயம் ஜெயிக்கும் காலம் தொலைவிலில்லை.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
அருமையான சவுக்கடி.
பெண்ணினத்திற்காக நீங்கள் எழுதிய சிறப்பான இந்தக்கவிதைக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது மகேந்திரன்.
வணங்கி வாழ்த்துகிறேன்.
ஏனோ இதை வாசிக்க மனது சோர்கிறது.
எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும் நிலையை.
நன்றி பதிவிற்கு.
வேதா. இலங்காதிலகம்.
சித்திரப் பாவை என்பதினால் - வெறும்
உத்தரமாய் இருக்காதே!
மென்பால் நீயென்று - உனைத்
தன்பால் கவர்ந்து
உடற்பசி தீர்க்கவரும் கடைநிலை மனிதர்களை
முடமாக்கிப் போட்டுவிடு!!
இக் காலதிற்கேற்ற சிறந்த கவிதை மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ !....
semaiyaana varikal sako...
மகேன்... இதே உணர்வுகள் தான் எனக்குள்ளும். அழகான வீரியமிக்க வரிகளில் கவிதையாகச் சொல்லத்தான் எனக்குத் தெரியவில்லை. மிகமிக ரசித்துப் படித்தேன். மிகமிகத் தேவையான ஆழமான கருத்து உங்கள் கவிதையில். பிரமிப்புடன் வாழ்த்துகிறேன் உங்களை...
மிக அருமையான கவிதை!
உள்ளே வரலாமா..நான் இளமதி.
வசந்தமண்டபத்தின் வனப்பில் வார்த்தை இழந்துபோனேன்..
சகோதராரே.. உங்கள் வசந்தமண்டபத்தில் எத்தனை அறிஞர்கள் உங்களுடன்...
விழித்த கண்களுடன் வியந்துபோய் நிற்கின்றேன்
தமிழ்மேல் உள்ள பற்றினால் தயக்கமின்றி நுளைந்திட்டேன்
அருகதை இல்லை எனக்கிங்கு ஆயினும் ஓரமாய் இருந்து
உவகை கொள்ள எண்ணுகிறேன்
தடை இல்லைத்தானே... தங்கள் அனுமதி வேண்டுகிறேன்..
பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்திவரும்
கழிசடை குப்பைகளை
களைந்து எறிந்திடுவோம்!!/
/சரியாகச் சொன்னீர்கள்
காலச் சூழலுக்கேற்ற தீர்வுடன் கூடிய அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma.12
பெரும்பான்மையோரின் எண்ணத்தை அழகிய கவிதை வடிவில் கொடுத்த கவிஞருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Post a Comment