தன்னானே தனேனன்னே
தானானே தானேனன்னே
தன்னானே நானனன்னே - தன்ன நனனே
தானானே தானேனன்னே
தன்ன நனனே!!
தாமரைப்பூ பாதம் வைச்சு
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
தனியாகப் போறவளே - தங்க மயிலே
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
தனியாகப் போறவளே - தங்க மயிலே
தவியா நான் தவிச்சிருக்கேன்
பொன்னு மயிலே!!
பள்ளபட்டி பருத்திவேட்டி
பாங்காக கட்டிக்கிட்டு
வரப்புமேல நிற்பவரே - ஆசை மாமோய்
சித்த நேரம் பொருத்திருங்க
நேச மாமோய்!!
வைகாசி பொறந்திருச்சி
வாழையெல்லாம் விளைஞ்சிருச்சி
பரிசம் போட நாள்பார்த்து - தங்க மயிலே
பட்டெடுத்து நானும்வாரேன்
பொன்னு மயிலே!!
இங்க வைச்சி சொல்லுறியே
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
அந்தநாள பார்த்துத்தானே - ஆசை மாமோய்
என் உசிரு காத்திருக்கு
நேச மாமோய்!!
எங்காத்தா பேச்சியம்மா
உன்னப்பத்தி பேசயில!
மங்காத தங்கமின்னு - தங்க மயிலே
மனசார சொல்லுறாக
பொன்னு மயிலே!!
ஆனையூரு அங்காளம்மா
அருளாலே கிடைச்சதய்யா!
பாசமான மாமியாரு - ஆசை மாமோய்
பக்குவமா நடந்துக்குவேன்
நேச மாமோய்!!
கருவேல மரமிருக்கு
மரத்தின் கீழே நிழலிருக்கு!
நிழலிலத்தான் நானிருக்கேன் - தங்க மயிலே
நீச்சத் தண்ணி கொண்டுவாடி
பொன்னு மயிலே!!
நெசமாத்தான் சொல்லுறியா
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
வேலைவெட்டி முடிஞ்சுதாய்யா - ஆசை மாமோய்
வக்கனையா கூப்பிடுற
நேச மாமோய்!!
மழைதண்ணி ஏதுமில்ல
மடையெல்லாம் காய்ஞ்சி போச்சி!
போட்டவிதை அத்தனையும் - தங்க மயிலே
கருகுமணி ஆகிப்போச்சி
பொன்னு மயிலே!!
எவ்வுசிரு உருகுதய்யா
மனசெல்லாம் மருகுதய்யா!
நான் வரும் வேளையிலே - ஆசை மாமோய்
வெள்ளாமை வெளுத்துப்போச்சே
நேச மாமோய்!!
அப்படி நீ பேசாதடி
அத்தபெத்த அன்னக்கிளியே!
ஆறுபோகம் விளைஞ்சாலும் - தங்க மயிலே
உன்னைப்போல கிடைக்காதடி
பொன்னு மயிலே!!
களத்திலுள்ள நெல்லுமணி
கண்ணுக்கெட்டி காணவில்லை!
அடுத்த போகம் எதிர்பார்த்து - ஆசை மாமோய்
கண்ணுபூத்து காத்திருப்போம்
நேச மாமோய்!!
மழைதண்ணி பெஞ்சாக்கூட
மலைச்சி போச்சி நெஞ்சமெல்லாம்!
பேசாம விளைநிலத்த - தங்க மயிலே
கட்டம்கட்டி வித்திடலாம்
பொன்னு மயிலே!!
என்னசொல்லு சொல்லிபுட்ட
எவ்வுசிரே போச்சிதய்யா!
அந்த தப்பு செய்யாதய்யா - ஆசை மாமோய்
அறிஞ்சி விசம் குடிக்காதய்யா
நேச மாமோய்!!
எம்பொழைப்ப பார்த்துபுட்டு
ஏதாச்சும் சொல்லு புள்ள!
ஏறுபிடிச்சி நாளாச்சி - தங்க மயிலே
ஏக்கத்தில நானிருக்கேன்
பொன்னு மயிலே!!
நம்மைபோல ஆளுகலெல்லாம்
விளைநிலத்த வித்துபுட்டா!
வருங்கால சந்ததியெல்லாம் - ஆசை மாமோய்
வெறிச்சோடி போகுமய்யா
நேச மாமோய்!!
மண்ணளக்கும் மாரியாத்தா
மழையாகப் பொழிஞ்சிடுவா!
படியளக்கும் எஞ்சாமி - ஆசை மாமோய்
ஒடிஞ்சி நீயும் போகாதய்யா
நேச மாமோய்!!
சொன்னசொல்லு புரிஞ்சுதடி
சொக்கத்தங்க பூமயிலே!
பொன்விளையும் பூமியிதை - சொர்ணக் கிளியே
விலைநிலமா ஆக்கமாட்டேன்
வண்ணக் கிளியே!!
இந்தசொல்ல கேட்டதுமே
எம்மனசு குளுந்துபோச்சி!
கருவேல நிழலெதுக்கு - ஆசை மாமோய்
நிழல்போல மடியிருக்க
நேச மாமோய்!!
அன்பன்
மகேந்திரன்
42 comments:
நல்ல பதிவு செய்யப்பட்ட செய்திகோவை !
வீரம் செறிந்த மண்ணிலும் விவசாயம் வீணாகிவிட்டதே வருத்தமாய் உள்ளது உங்களைப்போல
அண்ணே அண்ணே
கவிதை பாடி
நிசமாலும் பல விஷயம்
சொல்லி போட்டிங்கள்
கும்புரோமுங்கோ....
எக்ஸலண்ட் மகேன். எளிய கிராமிய வாரத்தைகளில் உழுபவர்களின் சோகத்தையும், காதலர்களின் நேசத்தையும், கிராமிய மனிதர்களின் கலப்படமற்ற அன்பையும் என்ன அழகாய கவிதையில் வடித்திருக்கிறீர்கள். மிக ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பெரும் சுமையை எளிய வரிகளில் இறக்கி வைத்து இருக்கிறிர்கள் ..அண்ணே .
எந்த மனநிலையில் எழுதி இருப்பிர்கள் என்று .உணரமுடிகிறது ..
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
அந்த தங்கத்திடம் சொல்லுங்கள் ...
விவசாயம் செஞ்சு இனி மேடேற முடியாது ...
விவசாயம் செய்யனும்னு அவசியமும் கிடையாது .
விவசாயத்தைப் போல முட்டாள் தொழிலும் இல்லைன்னு ..
டவுனு பக்கம் போய் கடைகன்னி வெச்சு பொழச்சுக்கலாம்னு ..!
நன்று ..வாழ்த்துக்கள் !
சிறப்பான பகிர்வு. விளைநிலங்கள் எல்லாம் வீணாய்ப் போச்சுதே என்ற ஆதங்கம்.....
வார்த்தைகள் காட்சியாய் அருமையாய் விரியும்படியாக
அமைந்தத கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடுபத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
tha.ma 5
தன்னானே தனேனன்னே
தானானே தானேனன்னே......மெட்டுப்போட்டு பாட வைச்சுட்டீங்க மனசுக்குள்ளே..:)
உங்கள் கவி, என் மனத்தினுள் ஒலியும் ஒளியும் காட்சியாக விரிவடைந்தது.
அழகாக வார்த்தைகளால் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்..அருமை...
உங்களுக்கும் உங்கள் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
படங்களும் பாடலும் அருமை !
வித்தியாசமான பொங்கல் பாடல் !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
அருமையான கவிதைகள் , மற்றும் புகைப்படங்கள் பாராட்டுக்கள்
பாட்டோடு செய்தி சொன்ன பாங்கு அருமை .நாட்டுப் புறப் பாடல் கேட்பதற்கே இனிமை . பாடிக்கொண்டே படித்தேன். மாமாவை திருமணம் செய்தல் இங்கு சட்டப்படி குற்றம் இங்கு திருமணம் செய்ய முடியாது . காதல் தானே அது முடியும். பாடலுக்கு காட்சிப் படிவம் நிஜத்தைக் கொண்டுவந்தது . வரிகள் கூட படமாய் கண்முன்னே விரிகிறது.இனிய பொங்கல் வாழ்த்துகள்
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
வணக்கம்!
உசிரும் உருகுதய்யா
ஒம்பாட்டைப் படிச்சதனால்!
பசியும் பெருகுதய்யா
பைந்தமிழைக் குடித்ததனால்
இனிய வணக்கம் நண்பர் மணிவண்ணன்...
தங்களின் அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் ஆபீசர்.....
தங்களின் அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் கவிஞரே...
உண்மையே நீங்கள் கூறுவதும்...
தங்களின் அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன் ...
தங்களின் அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் கணேஷ்...
தங்களின் ஆழ்ந்த அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் சகோதரர் அரசன்..
தங்களின் ஆழ்ந்த அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி ராஜராஜேஸ்வரி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் நண்பர் ரமேஷ் வேங்கடபதி...
உங்கள் கருத்தில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது...
விவசாயம் இன்று நீங்கள் கூறும் நிலையில் தான்
உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்...
தங்களின் ஆழ்ந்த அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்...
தங்களின் ஆழ்ந்த அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் ரமணி ஐயா...
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் சகோதரி இளமதி..
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் நண்பர் விமல்...
வசந்த மண்டபம் தங்களை வருக வருக என வரவேற்கிறது...
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி சந்திர கௌரி..
இங்கு இன்னும் மாமனைக் கட்டிக்கொள்வதில் குழப்பமில்லை சகோதரி..
பாடலின் வடிவில் வியந்து பாராட்டிய
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
இனிய வணக்கம் கவிஞர் பாரதிதாசன் ஐயா ..
கவிக்கருத்தால் எம்மை குளிர்வித்த
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
பொங்கட்டும் புதுப் பொங்கல்...
அருமையான கிராமத்து கானம்...
மனத்திற்குள் கட்சியெல்லாம் வளர்ந்து
விரிந்து குளிர வைக்கிறது.
சூப்பர் பாடல் நண்பரே.
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
நெஞ்சை அள்ளும் அருமையான கிராமியப் பாடல்! அசத்திட்டிகங்க மகி! படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன
எனக்கு அறிவு போதாது உங்கள் கவிதைகளின் ஆழம் புரியிற அளவுக்கு.அவ்வளவு அருமை மகி.
என் அன்பான பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கு !
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம்
வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .
இனிய மண்வாசம் வீசும் பாட்டு
இனிய இணைய .பொங்கல் வாழ்த்துக்கள்
ஒன்றைப்போட்டால் பத்தாக மாற்றி விளைச்சல் தருகிற பூமி இது,இதை கருத்தில் கொள்ல வைத்த படங்களே இங்கு படைப்பாய் விரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
விவசாயத்தை இனி புகைப்படத்திலயும், இதுப்போல் கவிதை மற்றும் கதைகளில் படித்துதான் தெரிஞ்சுக்கனும் போல
நம்முடைய பரம்பரை விவசாயத்தை இம்மாதிரி கவிதைகளில்,படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்கக்கூடிய நிலையில் நாம் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்.கிராமிய நடையில் ஒரு எதார்த்தமான கிராமிய கவிதை.அதற்க்கேற்ற படங்களும் அருமை.வாழ்த்துக்கள்.
அடடா என்ன சுகமான கிராமீய பாடல் ...
தன்னானே தானன்ன்னே ...
இது போல படிச்சே ரொம்ப நாளாச்சி.
வசந்த மண்டபம் வலை திரு +மகேந்திரன் எழுதி இருக்காரு.
https://www.youtube.com/watch?v=yI7jxaiA0ZU
சுந்தரக்கவிதையிலே சொர்க்கமே இன்னா அப்படின்னு காட்டி இருக்காரு
subbu thatha.
www.subbuthatha.blogspot.in
திரு மகேந்திரனின் அழகு கவிதை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள்.
Post a Comment