Powered By Blogger

Wednesday 25 July 2012

நித்தமும் ஓர் பாடம்!!!







நித்தமும் ஓர் பாடம்  
நெஞ்சுக்குள்ளே விளையுது
சாட்டையில்லா பம்பரமாய்
தலைகீழாய் சுத்துது!!
 
னுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!
 

 


ருபக்கம் குழியென்று
மண்போட்டு நிறைச்சபின்னே
திரும்பி பார்த்தாக்க
மறுபக்கம் குழியாச்சி!!
 
டைதிறந்த வெள்ளமென
அறிவு நல்லா இருந்தாலும்
அடிவருடிக்குத்தான் இப்போ
நினைச்சதெல்லாம் நடக்குது!!

றைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!
 
 


விலைவாசி கிடுகிடுன்னு
ஏற்றத்திலே நிக்குது
களவு திருடுயெல்லாம்
கண்ணாமூச்சி ஆடுது!!
 
வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!



அன்பன்
மகேந்திரன்  

55 comments:

Prem S said...

//கறைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!//

உண்மை தான் அன்பரே

Admin said...

கறைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!'

சரியா சொன்னீங்க தோழரே..

Admin said...

பிடித்தது வாக்கிட்டேன்..

ஆத்மா said...

கடைசி பராவில் பல கோடி உண்மை சார்.......

Athisaya said...

அனுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!

இது மிகவே பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள் சொந்தமே!இதில் ஏதோ ஈர்ப்பு.

ஹேமா said...

ஒருபக்கம் குழி நிரவித் திரும்ப மறுப்பக்கம் குழி.அடிவருடிகளுக்குத்தான் வாழ்வு.ம்ம்....சிலநேரம் வாழ்வு அதிஷ்டம் நோக்கித்தான் மகி !

தனிமரம் said...

நாட்டு நடப்பை பார்த்து வெதும்பும் சாமானிய நேர்மையாளனின் மனக்குமுறல் சொல்லும் கவிதை! இப்போது எல்லாம் கால மாற்றம் போல ஊர் காசில் ஏப்பம் விடும் நிலமை!!ம்ம்

Anonymous said...

''...நித்தமும் ஓர் பாடம்
நெஞ்சுக்குள்ளே விளையுது...''
வாழ்நாள் முழுவதுமே பாடம் தானே படிக்கிறோம். ஆனால் வாசியுள்ளவனுக்குத் தானே அதிஷ்டம் அடிக்கிறது. நல்ல வாழ்வுப் பாடம் சொல்லப்பட்டது. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

MARI The Great said...

///வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!///////

அருமையான வரிகள் தல! கலக்கல்! (TM )

அம்பாளடியாள் said...

நித்தமும் ஓர் பாடம்
நெஞ்சுக்குள்ளே விளையுது
சாட்டையில்லா பம்பரமாய்
தலைகீழாய் சுத்துது!!

அனுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!

என்ன ஒரு சிந்தனை ஊற்று!!!......

கறைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!

முற்றிலும் உண்மை முத்தான
கவிதை வரிகளுக்கு என் மனம்
கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
சகோதரரே .

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று நாட்டில் நடக்கும் உண்மையை அழகாக கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள்.

நன்றி. (த.ம. 7)

நெற்கொழுதாசன் said...

வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டசொன்ன தேசத்திலிருந்து ................வாழ்த்துக்கள் காலமாற்றம் சொன்ன கவிதை .

Subramanian said...

எதிர்வினை, யார்?.. எப்படி கொடுப்பது?.. என்பதில்தான் சிக்கல்கள்..

Yaathoramani.blogspot.com said...

வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!/

மிகச் சரி
எதிர்வினைகள் அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

எந்த வரிய பாராட்டரதுன்னு தெரியல்லே கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

கறைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!
-இந்த நாலு வரிகளே மனசில அறையுது. மொத்த வரிகளும் அருமை, உண்மை. சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை..

சிவா said...

நாட்டு நடப்பை நச்சென்று உணர்த்துகின்றது, வாழ்த்துக்கள்

ராஜி said...

கறைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!
>>>>
னிதர்சன உண்மையை முகத்திலறைந்த மாதிரி சொல்லுது உங்க கவி வரிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஏறும் விலைவாசிகள் என்றும் இறங்குவது இல்லை...!

உங்கள் வருத்தம் புரிகிறது புலவரே...!

கவி அழகன் said...

Valthukkal

செய்தாலி said...

உண்மை

Unknown said...

ஒருபக்கம் குழியென்று
மண்போட்டு நிறைச்சபின்னே
திரும்பி பார்த்தாக்க
மறுபக்கம் குழியாச்சி!!

என்னமே ஏதோ உனக்கு றொம்ப பொருத்தம்...

அழகான கவி...

அருணா செல்வம் said...

நித்தமும் ஓர் பாடம்
நெஞ்சுக்குள்ளே விளையுது
சாட்டையில்லா பம்பரமாய்
தலைகீழாய் சுத்துது!!

அனுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!

அருமைங்க.
ஒவ்வொரு வரியும் கவிஞர்களின் நிராசையைச் சுட்டுகிறது.
வாழ்த்துக்கள் நண்பரே.

ஓர் பாடம் என்று வராது. ஒரு பாடம் என்று தான் வருமென்று நினைக்கிறேன். சரியா என்று பாருங்கள் நண்பரே.

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் புரிகிறது நண்பரே...

நல்ல கவிதை....

Anonymous said...

எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!
//
நலமா சகோதரரே..?

புதுக்கதை இனி தொடரும் கதை போல...

அழகு..

அழகு..ஆதங்கம்...முடிவு எல்லாமே ஒரே படைப்பில்...

Seeni said...

azhakiya kavithai!

padangal eppudi edukkureenga arumai!

இராஜராஜேஸ்வரி said...

எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!

புது வித கதை !

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புத் தங்கை அதிசயா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
அதிர்ஷ்டம் சில சமயங்களில் தன் பணியை செவ்வனே செய்யும்...
உழைப்பையும் மீறி..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
பார்த்து பார்த்து வெம்பிய புலம்பல் தான் இது..
காலமாற்றம் தான்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
எத்தனையோ பாடம் கற்கிறோம்..
கற்பிக்கப்பட்ட பாடங்களை கணக்கெடுத்தால்
கணக்கினில் அடங்காது..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரலாற்றுச் சுவடுகள்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

வருக வருக நண்பர் நெற்கொழுவான்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
அந்த தேவனின் வாக்கு இன்றையா காலகட்டத்தில் சற்று புறந்தள்ளியே
நிற்கிறது..
அடிக்கடி கொடுத்தால் தான் அடுத்த பணியே நடக்கும் போல உள்ளது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,
நமக்கு நாமே நாம் செய்யும் செயலுக்கே
முடியும் வரை எதிர்செயல் கொடுத்தால் தான்
முடியும் நிலை உருவாகி உள்ளதே..
அதைத்தான் இங்கே குறிப்பிட்டேன்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அமைதிச் சாரல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
உண்மை உண்மை..
ஏறியது இறங்காததால் வந்தது தான்
இந்தக் கவிதை... ( கோபம் கூட)
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கவியழகன்,
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை எஸ்தர் சபி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இங்கே "ஒரு" என்று தான் வரவேண்டும்..
"ஓர்" என்ற சொல் உயிரெழுத்துக்கு முன்னர் தான் வரவேண்டும்..
திருத்தி விடுகிறேன்...
நன்றிகள் பல நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

நலமே சகோதரரே, தங்களிடம் நாடுவதும் அதுவே...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,

இணையத்தில் தான் நண்பரே

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

Post a Comment