மலரினின்று உறிஞ்சிய
மது உண்ட மயக்கத்தில்!
ரீங்கார இசையோடு
சிறுவட்டமிட்டு சுற்றிவரும்
சில்வண்டு பூச்சிகள் யாம்!!
எலும்பொடு சதைகளை
பின்னிப் பிணைத்து!
நரம்பு நதிகளை
தோல் கொண்டு சுற்றிய
உடலின் உணர்ச்சியல்ல யாம்!!
உள்ளங்கை அளவே
உருப்பெற்று இருந்தாலும்!
ஓயாத உழைப்பினால்
உயிர்சுமந்து நிற்கும்
இதயத்தின் உணர்ச்சி யாம்!!
இன்று பிறந்து இன்றே அழியும்
விட்டில் பூச்சல்ல
முன்னிலை படர்க்கையும்
புன்சிரிப்பால் அகமகிழும்
ஈதலின் இன்னுருவே யாம்!!
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!
யாம் இங்கே யாரென்ற
வினாக்களை கேட்கின்றேன்?
எமையிங்கே பன்மையாய்
ஏற்றத்தோடு விளம்பி நிற்கும்
யாமோ அன்பு எனும் பண்பே!!
அகிலத்தின் புறப்பரப்பில்
மானுடப் பெருங்குலத்தோர்!
மாட்சிமை குணத்தோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவதோ
அன்பெனும் எம்மாலே!!
திரிசடையோன் சிவனுக்கு
புரி இணையாய் எமையிங்கே!
தருவித்து அழகாய்
மந்திரம் சொன்னதோர்
புலவன் வாழ்ந்ததும் இங்கன்றோ!!
அனைத்தினையும் பூட்டி
பாதுகாக்க தாழுண்டு!
எமையிங்கு பூட்டி
அடைத்திட ஓர் தாழில்லை என
உரைத்ததும் இங்கன்றோ!!
மெல்லிய பொருளுக்கு
உவமைக் கருவாய்
மலரதனை சொல்வதுண்டு!
இப்புவியில் எம்குணமோ
மலரினும் மெல்லியதாய்!!
மெல்லிய தன்மையாம்
எமைக்கருவில் ஏற்றிடுக!
புவனத்தின் கறையெல்லாம்
எமைக்கொண்டு கழுவிடுக!
பண்புள்ள மானுடராய்
அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்வீர்!!
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!
அன்பன்
மகேந்திரன்
52 comments:
அகிலத்தின் புறப்பரப்பில்
மானுடப் பெருங்குலத்தோர்!
மாட்சிமை குணத்தோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவதோ
அன்பெனும் எம்மாலே!!
இந்த வரிகள் அருமை
ஆதலின் ...
இன்றே அன்பு செய்வீர்...//
இக்கணமே செய்வீர்...
மற்றுமோர் அக் மார்க் படைப்பு...
ரசித்தேன் சகோதரா...
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!
>>
அன்பினால் அடைய முடியாதது ஏதுமில்லை. அதனால் தூய அன்போடு மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம். பகிர்வுக்கு நன்றி அண்ணா.
மலரினும் மெல்லிய......!!!
>>
தலைப்பை பார்த்து நான் ஏதோ காதல் கவிதைன்னு நினைச்சு வந்தேன். என்னை ஏமாத்திட்டிங்க சகோ.
ஒற்றைப்பூவின் அன்புப் பாடம்.அழ்கு.உணர்வோடு ஊறியிருந்தாலே தவிர படித்துப் படியாது அன்பு !
// அகிலத்தின் புறப்பரப்பில்
மானுடப் பெருங்குலத்தோர்!
மாட்சிமை குணத்தோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவதோ
அன்பெனும் எம்மாலே!!//
அன்புடையார் என்பும் உரியர்
பிறர்க்கு-குறள் தரும் நெறி!- அதன்வழிப் பாடல் ! அழகு!
புலவர் சா இராமாநுசம்
//பண்புள்ள மானுடராய்
அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்வீர்!!
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!//
அருமையான அழகான் தீர்வைச் சொல்லிவிட்டீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் vgk
அழகு அண்ணே!
நீங்க விளக்கிய -
அன்பு!
அருமையான செந்தமிழ் கவிதை ..!
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!
அன்பால் நிறைந்த
அருமையான கவிதை..
பாராட்டுக்கள்..
புவனத்தின் கறையெல்லாம்
எமைக்கொண்டு கழுவிடுக!//எனை கவர்ந்த வரிகள் அன்பரே
அன்பென்ற மழையிலே
இதயங்கள் மகிழவே
கவிதை ஒன்று மலர்ந்ததே!
நன்று! வாழ்த்துகள்!
அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்/வீர்!!
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!//
வணக்கம் அண்ணா நான் நலம் ...
தங்கள் நலமறிய ஆவல்
சுப்பரா இருக்கு அண்ணா கவிதை
அண்ணா பயணம் சிறப்பாய் அமைய நல் வாழ்த்துக்கள்
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!...
அன்பால் நிறைத்து அகிலத்தை வளை என்றீர் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
மலரினும் மெல்லியது அன்பு!!
அருமை!
அருமையான கருத்துள்ள கவிதை மகேந்திரன் ஐயா.
அன்பால் செய்யலாம் யாவற்றையும்..அழகிய கவிதை மாப்ள!
ரசித்து படித்தேன்.. படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
மலரினும் மெல்லிது அன்பு. அருமை மகேந்திரன்.
மலரினும் மெல்லிய
"அன்பு ''
ம்ம்ம் .....
அருமை தோழரே
அழகான அன்பு !
அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் முதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களின் வலைச்சரப் பணிக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இன்னுமொரு தருணம் காதல் கவிதைகளை
பதிவிடுகிறேன் சகோதரி...
அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர்ப் பெருந்தகையே,
தங்களின் குறள் இனிமைக் கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் சீனி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
வரலாற்று சுவடுகளாய் வசந்த மண்டபத்தில் நுழைந்த
அன்பு நண்பருக்கு என் அன்பார்ந்த வரவேற்புகள்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புத் தங்கை கலை,
நலம் நலமே...
மிக்க நன்றி கலை.
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனசாட்சி,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சத்ரியன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? தாழற்ற சாளரம் வழித் தென்றலாய்த் தவழ்ந்து மனம் வருடும் வரிகள். அன்பின் தன்மையை அறியாதவரும் அறிந்திடுக, இக்கவியின் திண்மையால். பிரமாதம். பாராட்டுகள் மகேந்திரன்.
இந்தியப் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் அழகான உற்சாகமூட்டும் கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல சகோதரி..
anbu patriya kavithai arumai
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!///அன்பொன்றே ஆதாரமெனில் அகிலமே அழகாகும் . அருமை அண்ணா .
அன்பின் பெருமையை அழகாய் மலருலும் மெல்லிய உறவாக்கி மாலையிட்ட கவிதை மிகவும் ரசித்தேன்.
ஒரு மிகச் சிறந்த வினாவோடு தொடக்கி ச்சின்ன விளக்கம் தந்து விரிவான விவாதத்துடன் கருத்துக் களமாடி உள்ளீர் பாராட்டுகள்
//அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்வீர்!!//
சிறப்பான வரிகள்
மெல்லிய பொருளுக்கு
உவமைக் கருவாய்
மலரதனை சொல்வதுண்டு!
இப்புவியில் எம்குணமோ
மலரினும் மெல்லியதாய்!!
///
உண்மைதான்.. வழமைபோலவே அசத்திட்டீங்க அண்ணா.. ரசித்தேன். வாழ்த்துக்கள்.
அன்பால் அகம் நிறைக்கும் கவிதை!
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!"
அன்பின் வலிமையை ,மகத்துவத்தை நன்றாக எடுத்துரைக்கிறது உங்கள் கவிதை.வாழ்த்துக்க
அன்பிற்கும் உண்டோ அழைக்கும் தாழ். அதனால் அன்பு செய்வோம் நீங்கள் சொல்வது போல் அன்பு செய்வோம்.. ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடும் பேரு வெள்ளம் இவ் அன்பு . இதை தடுக்கத்தான் யாரால் முடியும் .
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க????
கவிதை செமையா இருக்கு....
அன்பு அது ஒன்றே போதுமே உலகை ஆழ :))))
Post a Comment