Powered By Blogger

Saturday, 14 April 2012

விசைகொண்டு வாழ்ந்திடு!!!







சுழியத்தின் நிலைவிடுத்து
சூனியப் பக்கங்களின்
சுருக்கென்ற கருவறுத்து!
சூரியக் கதிர்களின்
சூட்சும வினைவேகத்தை
சூதனமாய் கொண்டிட
விசையொன்றை வளர்த்திடு!!
 

 


ருப்பு நிலையினின்று
தயக்கத்தை சிரமறுத்து
இயக்கம் கொடுத்திடவும்!
காலமாறுதலுக்கு ஒப்ப
தடைகளை தகர்த்தெறிந்து
நடப்பு வேகத்தை
துரிதமாக்க துல்லியமாய்
விசையொன்றை வளர்த்திடு!!
 
 
விசைகளிலே இசைவாய்
என்மனதை ஆட்கொண்ட
விசைகளின் வித்தகன்
மையநோக்கு விசையே!
மையத்தை கருவாயக்கொண்டு
வட்டப்பாதையில் சுற்றிவரும்
தொகுவிசைகளின் தொகுப்பே
மையநோக்கு விசையாம்!!
 
 
கூழ்மங்களின் குழைவை
குடுவையில் இட்டுவைத்து
இடமிருந்து வலமாய்
விசைகொண்டு சுற்றினால்
கூழ்மத்தின் திடப்பொருளை
படிமமாக்கி விட்டு
திரவத்தை மேல்நோக்கி
நீந்தச்செய்து பிரித்து தருதலே
மையநோக்கி விசையாம்!!
 
 
சுவின் பால்தனை
தயிராக உருமாற்றி
தயிரினின்று வெண்ணெயும்
எடுத்திடலாம் என
மத்துகொண்டு கடைந்திட்டு
மையநோக்கு விசையின்
பெருமையின் தன்மையை  
அன்றே உரைத்திட்டார்
நமக்குமுன் வாழ்ந்தோரே!!
 
 
னிதர்கள் மட்டுமல்ல
நிலைநீர்த் தடங்களில்
நீந்தி வாழ்ந்த அன்னமும்
அழகாய் உரைத்திட்டதே!
அலகின் நுனியை  
பாலின் மேற்பரப்பில்
தொடுவாற்போல் தொட்டுவைத்து
இடமிருந்து வலமாய்
சுழற்சியால் சுற்றவைத்து
பாலினின்று தண்ணீரை
பிரித்து எடுத்ததெல்லாம்
மையநோக்கு விசையாலே!!
 
 
விழிப்போடு நீ வாழ்ந்திட
புவனமிதில் சான்றோர்கள்  
விரித்துவைத்த பக்கங்கள்
ஏராளம்!! ஏராளம்!!
மலர்ப்பாதம் அடியெடு!
கருவிழி அகலவிரி!
சிதிலமான உன்னறிவை
குவியலாய் கூட்டிவைத்து
மையநோக்கு விசைகொண்டு
மையத்தில் சேர்த்துவை!!
 
 
 
நோக்கத்தை விளைபொருளாக்க
முயற்சியை தாதுப்பொருளாக்கு!
செயல்வினைகளின் வேகத்தை
ஊக்குவிக்கும் வினையூக்கியாய்
மையநோக்கு விசைகொள்!
கொண்ட இலக்கினில்
விழியின் குவியத்தை வைத்து
வீறுகொண்டு நடைபோடு!
நிலமிசை புகழ்பெற
விசைகொண்டு வாழ்ந்திடு!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

58 comments:

கூடல் பாலா said...

அருமையான அறிவியல் கவிதை ...கடைசி வரிகள் நச்!

rajamelaiyur said...

//விசைகளிலே இசைவாய்
என்மனதை ஆட்கொண்ட
விசைகளின் வித்தகன்
மையநோக்கு விசையே!
மையத்தை கருவாயக்கொண்டு
வட்டப்பாதையில் சுற்றிவரும்
தொகுவிசைகளின் தொகுப்பே
மையநோக்கு விசையாம்!//

அருமையான வரிகள்

rajamelaiyur said...

இன்று
உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

பால கணேஷ் said...

எக்ஸ்‌ட்ரார்டினரி மகேன்! அறிவியலை கவிதையில் அழகுறச் சொன்னதும் சரி... முன்னோர்களின் பெருமையையும் மறக்காமல் சொன்னதும் சரி... மனதைக் கொள்ளை கொண்டது. இரண்டு முறை ரசித்து, ருசித்துப் படித்தேன். பிரமாதம்! தொடரட்டும் உங்களின் நற்கவிதைகள்!

குறையொன்றுமில்லை. said...

பசுவின் பால்தனை
தயிராக உருமாற்றி
தயிரினின்று வெண்ணெயும்
எடுத்திடலாம் என
மத்துகொண்டு கடைந்திட்டு
மையநோக்கு விசையின்
பெருமையின் தன்மையை
அன்றே உரைத்திட்டார்
நமக்குமுன் வாழ்ந்தோரே!

எஸ் நல்ல வரிகள்.

கவி அழகன் said...

Supper valthukal

Unknown said...

முத்திரைக் கவிதை!

நன்கு அனுபவித்து வரைந்ததை
ரசித்து ருசித்திட்டேன்!

தனிமரம் said...

விசையைப்பற்றிய ஆழமான விபரிப்புடன் அழகு தமிழில் அன்னம் சொல்லிய விசைநோக்கி வியந்து போனேன்.வாழ்த்துக்கள் அண்ணா!

Seeni said...

எப்படி அய்யா!
நல்ல நல்ல எழுத்துகளை-
இணைத்து பூக்களை-
நூலை கொண்டு கோர்ப்பது போல்
கோர்க்குறீங்க!

அருமை
-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பசுவின் பால்தனை
தயிராக உருமாற்றி
தயிரினின்று வெண்ணெயும்
எடுத்திடலாம் என
மத்துகொண்டு கடைந்திட்டு
மையநோக்கு விசையின்
பெருமையின் தன்மையை
அன்றே உரைத்திட்டார்
நமக்குமுன் வாழ்ந்தோரே!!//

மையநோக்கு விசையுள்ள
அழகான் இந்த வரிகளுக்கு
என் அன்பான பாராட்டுக்கள்.

துரைடேனியல் said...

கவிதையில் அறிவியல். அழகு. முன்னோர்கள் நம்மை விட நிச்சயமாய் புத்திசாலிகள்தான். அருமையான பதிவு.

அம்பலத்தார் said...

நோக்கத்தை விளைபொருளாக்க
முயற்சியை தாதுப்பொருளாக்கு!
செயல்வினைகளின் வேகத்தை
ஊக்குவிக்கும் வினையூக்கியாய்
மையநோக்கு விசைகொள்!
கொண்ட இலக்கினில்
விழியின் குவியத்தை வைத்து
வீறுகொண்டு நடைபோடு!
நிலமிசை புகழ்பெற
விசைகொண்டு வாழ்ந்திடு!!//

என் மனம் கவர்ந்த வரிகள் இவை

ஹேமா said...

விசைச்சுழற்சியையும் வாழ்க்கைச்சுழற்சியையும் சமப்படுத்திக்காட்டி விஞ்ஞானக் கவிதையென்று சொல்ல வைத்துவிட்டீர்கள் மகி.அற்புதம் !

குடிமகன் said...

மைய நோக்கு விசையின்- அருமை பெருமைகள் கவிதைவடிவில் பிரமாதம் மகி!!

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமை மகேந்திரன்....

வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமை மகேந்திரன்....

வாழ்த்துகள்.

Unknown said...

சூப்பர் வரிகள்

இன்றைய பதிவு
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்

Unknown said...

மைய விசையை தமிழின் மைய
விசையாக்கி கவிதையின் மைய
விசையாகவும் ஆக்கி அருமையான
கவி படைத்தீர் மகி!

சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் said...

மிக மிக அருமை ! நன்றி !

kupps said...

வாழ்க்கை தத்துவத்தை அறிவியலின் துணைகொண்டு விளக்கும் உங்கள் தமிழ்க்கவிதை வரிகள் அருமை நண்பரே!

நிரஞ்சனா said...

Seniors எல்லாரும் விதவிதமா பாராட்டிட்டாங்க. நான் என்னன்னு சொல்றது..? கழுத்தை நீட்டுங்க மகி அண்ணா... இந்த மா‌லையை வாங்கிக்கங்க...! Okay! இன்னும் நல்ல நல்ல கவிதை நிறையத் தாங்க!

முத்தரசு said...

அறிவு.... அறிவியல் சார்ந்த அறிவு/மரபு கவிதை.

படைப்பாளிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் விரைந்த வருகைக்கும் அழகிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
அறிவியலின் கோட்பாடுகள் வரைவிப்பதற்கு முன்பே
நம்மவர்கள் அதனை பயன்பாட்டில் வைத்திருந்தனர்
என்பதற்கு மிகுந்த உதாரணங்கள் இருக்கின்றன..
அவைகளுள் ஒன்று தான் இது...
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கும் அழகிய
கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் யதன் ராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் ரசிக்கும் படியான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
உவமையுடன் அழகாக கருத்துரைத்தமைக்கு
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
ஆம் நண்பரே.. அதில் சந்தேகமே இல்லை..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
தங்களின் மனம் கவர்ந்த வரிகளை சுட்டிக்காட்டி
என் மனம் குளிர வைத்த கருத்துரைத்தமைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
இதைவிட எனக்கு என்ன பாராட்டு வேண்டும் சகோதரி.
மனம் குளிர கருத்துரைத்தமைக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குடிமகன்,
வியந்து பாராட்டி கருத்துரைத்தமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வைறை சதீஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் கருத்துக்களால் எனக்கு
விசை கொடுத்து ஊக்குவிக்கும் தங்கள் மனதுக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் அழகிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை நிரஞ்சனா,
வசந்தமண்டபம் தங்களை சிவப்புக் கம்பளம்
விரித்து வரவேற்கிறது...
கவிகண்டு அழகிய பரிசாய் மாலை அணிவித்தமைக்கு
என் அன்பார்ந்த நன்றிகள் சகோதரி...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனசாட்சி,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சசிகலா said...

படிமமாக்கி விட்டு
திரவத்தை மேல்நோக்கி
நீந்தச்செய்து பிரித்து தருதலே
மையநோக்கி விசையாம்!!//
வார்த்தைப் பிரவாகம் மிகவும் அருமை அண்ணா . முன்னோர்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டு புதுமை என்கிறோம் .

Rathnavel Natarajan said...

அருமை.
உங்களிடம் தமிழ் கொஞ்சுகிறது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

அறிவியல் நுட்பங்களையும் சொல்லும் விதத்தில் சொன்னால் ஆறியாத மனங்களும் அழகாய்ப் புரிந்துகொள்ளுமே. கூடவே அற்புதமான எடுத்துக்காட்டுகளும், எற்றப் படங்களும் கூடுதல் சிறப்பு. மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.

Prem S said...

அறிவியலையும் அழகு தமிழில் கவிதையாய் எடுத்துரைக்க உங்களுக்கு இயல்பாக வருகிறது அருமை அன்பரே

Anonymous said...

Nice one bro...Nicely penned...

மாலதி said...

மாறுப்பட்ட கோணத்தில் மக்களுக்கான புதிய செய்திகளுடன் பாராட்டுகள் தொடர்க....

அருணா செல்வம் said...

எல்லோருடையக் கண்விசையும்
உங்கள் கவிதை மேல்தான் உள்ளது
மகேந்திரன் அவர்களே!
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

அறிவியல் நற்றமிழ்க்கவிதையாக!நன்று.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
இன்றைய அறிவியல் செய்திகள்
ஏடு ஏறும் முன்னரே நம்ம முன்னோர்கள்
அதை செயல் வடிவில் வைத்திருந்தார்கள்
என்பதற்கு சான்றுகள் பல உண்டு..

தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் ஆசீர்வாத வாழ்த்துக்கும்
தொடர் ஆதரவிற்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
இயந்திரங்களோடு பழகிப் பழகி
சொல்லாடல்களும் இயந்திரமாய் போனது எனக்கு.
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் வாழ்த்துக்கு இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் கருத்தால் பரப்பு இழுவிசை கொண்டு
இன்புற்றேன்..
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

Post a Comment