Powered By Blogger

Sunday 25 December 2011

கண்ணாடிக் கனவுகள்!!!







கித்து நிற்கும் உள்ளத்தில் 
ததும்புது கனவுகள்!
தீர்ப்புநாள் எதிர்கொண்டே  
தீய்ந்துபோன கனவுகள்!!
 
டிகால் வந்திடுமோ 
வற்றித்தான் போய்விடுமோ?!!
வெதும்பிய மனமது
வேற்றுநிலை ஏகிடுமோ?!!
 
மூப்பெய்திப் போனாலும் 
முக்காலில் நடக்காது!
மெத்தப்படித்த பெற்றபிள்ளை 
மென்தோள் பற்றியங்கே!
மார்நிமிர்த்தி நடந்திடவே
மந்தகாச கனவு கண்டேன்!!
 
ழிநெடுக சாலையெல்லாம்
வாளிப்பாய் மின்னிடவே!
வரிசையாய் எறும்புபோல்
வாகனங்கள் சென்றிடவே!
விபத்துக்கள் ஏதுமில்லா 
வண்ணமிகு கனவு கண்டேன்!!
 

 


ட்டியலிட்டுச் சொல்ல
பலசரக்கு இல்லையென!
படர்ந்திருந்த சாதியெல்லாம்
பெண்ணென்றும் ஆணென்றும்
பகுத்து இருந்திடவே!
பேரின்பக் கனவு கண்டேன்!!
 
நெற்கதிர்கள் பெருத்துப்போய்
தன்சுமை தாங்காது!
தலைகுனிந்து நின்றிடவே
விதைத்து வைத்த உழவனவன்
ஊறிவந்த களிப்பதுவால்
தலைநிமிர்ந்து நின்றிட
தேன்கனவு கண்டேனே!!
 
நித்தமொரு சட்டம் 
நிமித்தமொரு விவாதம்!
நெறிபட மக்களவை - என்றும்
நன்முறையில் நடந்திட
நான் கனவு கண்டேனே!!
 
சாயம்போன ஆசைகளை
சாக்காடு போட்டுவிட்டு!
செழுமையாம் வெண்மனதால் 
சாணக்கிய மந்திரிகள் 
சீர்மேவ கனவு கண்டேன்!!
 
 
பிழையென்றால் என்னவென்று 
புரியாத மன்னவர்கள்!
பழுதில்லா தேர்கொண்டு 
பாராண்டு வந்திடவே 
பொற்கனவு கண்டேனே!!
 
மாநிலங்கள் ஒன்றாக
மாண்பாக கூட்டமைத்து!
பெருகிவரும் நதிநீரை
பொதுவென ஆக்கிவைத்து
பாரினிலே சிறந்ததெங்கள்
பாரதம் என்றுரைக்க
பவளக் கனவு கண்டேனே!!
 
ண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!
கண்ணெதிரே தவழ்கிறதே
கனவிங்கே மெய்ப்படுமோ?!!
கானல்நீராய் போய்விடுமோ?!!
கண்ணாடிக் குமிழியது
காற்றிழந்து போகாது
காலமெல்லாம் நிலைத்திடுமோ??!!

 
 
அன்பன்
மகேந்திரன் 

77 comments:

வெங்கட் நாகராஜ் said...

கனவு மெய்ப்பட்டால் நன்றாக இருக்கும் நண்பரே.....

shanmugavel said...

சாமான்ய குடிமக்களின் கனவுகளை அருமையான கவிதையாய் படைத்திருக்கிறீர்கள் மகேந்திரன்.அந்த நாளும் வந்திடாதோ?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

M.R said...

கண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!
கண்ணெதிரே தவழ்கிறதே
கனவிங்கே மெய்ப்படுமோ?!!
கானல்நீராய் போய்விடுமோ?!//

நிறைய நபர்களின் மனதில் தோன்றும் வார்த்தை இல்லை எண்ணம்

அருமை நண்பரே

மும்தாஜ் said...

அருமையான கனவுக் கவிதை..
நிறைவேறும் நன்னாள் என்னாளோ ???????

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் உடன்வரவுக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
வாராதோ அந்தப் பொன்னாள்,,
மருகும் இவ்வேளையில் இல்பொருளாகப் போய்விடுமோ....
எனினும் கனவு மெயம்பட முயற்சிப்போம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
அந்நாளை எதிர்நோக்கியே
கழுத்தெழும்பு தேய்ந்து போனது காலம்காலமாய்..
இனியேனும் வழிபிறக்குமோ..
பார்ப்போம் காலத்தின் கோலங்களை.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

சுதா SJ said...

உங்கள் கனவுகள் எல்லாமே பெறுமதி வாய்ந்தது. கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் பாஸ்

சுதா SJ said...

வழிநெடுக சாலையெல்லாம்
வாளிப்பாய் மின்னிடவே!
வரிசையாய் எறும்புபோல்
வாகனங்கள் சென்றிடவே!
விபத்துக்கள் ஏதுமில்லா
வண்ணமிகு கனவு கண்டேன்!!<<<<<<<<<<<<<<<<<<<<<

என் நீண்ட நாள் கனவு பாஸ் இது. இந்த விபத்துக்கள் இந்தியாவில் தான் ரெம்ப அதிகம்... இந்தியா செய்திகளை பார்த்தாலே மனசு பகீர் என்று இருக்கும்.... எத்தனை எத்தனை விபத்துக்கள்!!!!! விபத்தை ஏற்ப்படுத்துவோருக்கு அதிக உச்சக்கட்ட தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் கொண்டு வர வேணும்.

சுதா SJ said...

இந்தியா விபத்துக்கள் அதிகம் லாரிகளால்தான் நடக்குது...
இங்கே ... பிரான்சில்
லாரிகள் ஓட என்றே ஒரு நேரம் இருக்கு....
மக்கள் நடமாட்டம் உள்ள நேரங்களில் லாரிகளுக்கு தடை...
இந்த முறையை இந்தியாவும் பின் பற்ற வேண்டும்

சுதா SJ said...

மாநிலங்கள் ஒன்றாக
மாண்பாக கூட்டமைத்து!
பெருகிவரும் நதிநீரை
பொதுவென ஆக்கிவைத்து
பாரினிலே சிறந்ததெங்கள்
பாரதம் என்றுரைக்க
பவளக் கனவு கண்டேனே!!<<<<<<<<<<<<<<<<<

மிக சிறந்த கனவு.... இது பலிக்கோணும் :(

Mahan.Thamesh said...

மிக அருமை

இராஜராஜேஸ்வரி said...

விதைத்து வைத்த உழவனவன்
ஊறிவந்த களிப்பதுவால்
தலைநிமிர்ந்து நின்றிட
தேன்கனவு கண்டேனே!!

தேன் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்..

Admin said...

சாயம்போன ஆசைகளை
சாக்காடு போட்டுவிட்டு!
செழுமையாம் வெண்மனதால்
சாணக்கிய மந்திரிகள்
சீர்மேவ கனவு கண்டேன்!!

அருமை..வாழ்த்துகள்..


அன்போடு அழைக்கிறேன்..

அழுகை அழ ஆரம்பிக்கிறது

Unknown said...

இவை கனவுகளில் மட்டுமே சாத்தியம்.. நல்ல (க)விதை

பால கணேஷ் said...

ஆஹா.... இந்தக் கனவுகள் எல்லாம் மெய்ப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அருமையான கனவுக‌ள்தான் உங்களின் கவிப் பார்வையில் தோன்றியிருக்கிறது மகேன். நன்று!

Yaathoramani.blogspot.com said...

எழுதத் துவங்கியதும் உங்களுக்கு வார்த்தைகள்
சரசர வென வந்து விழுமென நினைக்கிறேன்
திரு நெல்வேலி அல்வா வாயில் போட்டவுடன்
தடங்களின்றி குடல் ஓடுதல் போல
படிக்கத் துவங்கியதும் சர சர சந்தத்தோடு ஒருமுறை
அடிவரை படித்துவிடுகிறேன்
பொருள் புரிந்து கொள்ள அடுத்த முறை படிக்கிறேன்
அருமையாக எழுதிப் போகிறீர்கள்
வாழ்த்துக்கள்
த.ம 10

Unknown said...

கனவு நினைவாகி நடக்குமானால்
இன்றைய கற்கால ஆட்சி மாறி
பொற்கால ஆட்சி பொலிவு பெறும்!
அந்நாள் வருமா...?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

கனவு ஒரு நாள் பளிக்கும் என்ற நம்பிக்கயுடன்...நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

மூப்பெய்திப் போனாலும்
முக்காலில் நடக்காது!
மெத்தப்படித்த பெற்றபிள்ளை
மென்தோள் பற்றியங்கே!

குட்

arasan said...

உங்களின் எண்ணக்கனவுகள் வண்ணக்கனவுகளாக நனவானால் வலிமையான பாரதம் உருவாகிடுமே ./..
முயற்சிக்கு வழிவகுக்க உறுதுணையாக இருப்போம்...

நற்கவிதைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணே

சக்தி கல்வி மையம் said...

சாயம்போன ஆசைகளை
சாக்காடு போட்டுவிட்டு!
செழுமையாம் வெண்மனதால்
சாணக்கிய மந்திரிகள்
சீர்மேவ கனவு கண்டேன்!!// இது சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை..

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா?

இன்று வரை எம் கைகளை எட்டாத விடயங்கள் நிறை வேற வேண்டும் என்பதனை கனவாக கண்டிருக்கிறீங்க.
பொறுத்திருந்து பார்ப்போம்!

கீதமஞ்சரி said...

வயோதிகக் காலத்தில் பெற்றபிள்ளையின் தோள் பற்றி நடப்பது கூட கனவாகிப் போனதே... மற்றக் காரியங்கள் பற்றி மருகிப் பயன் என்ன? வீட்டிலிருந்தே விதைக்கப் படவேண்டும் நாட்டுக்கான நல்வழிமுறைகள். அப்போதுதான் கனவு மெய்ப்படும் காலம் கைகூடக் கூடும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ துஷி,
எனக்கும் அந்த எண்ணம் நெடுநாளாய் இருக்குது.
விபத்துக்கள் இல்லாது சாலையை பார்க்க எவ்வளவு அழகாய்
இருக்கும். கனவுகள் பலிக்கவேண்டும்.
தங்களின் விரிவான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மகான்.தமேஷ்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சாய் பிரசாத்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் கருத்து என்னை மேலும் பட்டை தீட்டுகிறது நண்பரே.
மேன்மையான அழகான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ அரசன்,
கனவுகள் நனவாக காலம் கடந்தாலும் பரவாயில்லை.
நிறைவேற வேண்டும் என்பதே ஆதங்கம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
நடக்கவேண்டும் என்பதே கனவு.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
சரியாகக் கருத்துரைத்தீர்கள்.
இரத்தத்தில் ஊர வேண்டும் இந்த நற்குணங்கள்.
வளர்ப்பினில் மூளை ஏற்றவேண்டும்.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

ராஜி said...

மூப்பெய்திப் போனாலும்
முக்காலில் நடக்காது!
மெத்தப்படித்த பெற்றபிள்ளை
மென்தோள் பற்றியங்கே!
மார்நிமிர்த்தி நடந்திடவே
மந்தகாச கனவு கண்டேன்!!

>>>
அவசியமான கனவு சகோ

கோகுல் said...

கண்ட கனவெல்லாம் நனவாகவே நானும் கனவு காண்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக உள்ளது! த.ம. 17
தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Subramanian said...

//கண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!// தங்களின் கனவுலகை ரசித்துக்கொண்டிருந்த எனக்கு இந்த வரிகள், மிகப்பெரிய இழப்பை உணர்த்தியது. நன்று!

குறையொன்றுமில்லை. said...

கனவு மெய்ப்பட்டால் நன்னா இருக்கும் நல்ல கவிதை வாழ்த்துகள்.

மாலதி said...

மிகவும் சிறந்த கனவுகளை விதைத்து இருக்கிறீர்கள் உண்மையில் பட வேண்டிய உட் கட்டமைப்பை மிகவும் சிறப்பாக பாவடிவில் பதிவு செய்தமைக்கு உல பூர்வ பாராட்டுகள்

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஆஹா! ரொம்ப அழகா தமிழ் விளையாடுதே...உங்க கவிதையில....சிறப்பு....

Shakthiprabha (Prabha Sridhar) said...

//கண்ணாடிக் குமிழியது
காற்றிழந்து போகாது
காலமெல்லாம் நிலைத்திடுமோ??!!
//

:) ... எல்லா கனவும் கண்ணாடி குமிழியா? .... அற்புத படைப்பு. என்ன தமிழ்!! அம்மாடி. !

ஹேமா said...

உண்மைதான்.எத்தனை விதமான கனவுகளோடு.எதுவும் முழுமையாக கையில் கிடைப்பதில்லை.கோர்த்தெடுக்கும் உங்கள் தமிழுக்குப் பாராட்டுக்கள் !

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
கனவுகள் ஒன்றுதான் நம்
வாழ்வின் நினைவுகளை சுமந்து செல்லும்,
என்றேனும் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்ரமணியன்,
ஏதோ ஒரு தருணத்தில் எல்லா விஷயங்களுமே
கண்ணாடிக் குமிழியாய் போய்க் கொண்டுதான் இருக்கின்றன..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

மாநிலங்கள் ஒன்றாக
மாண்பாக கூட்டமைத்து!
பெருகிவரும் நதிநீரை
பொதுவென ஆக்கிவைத்து
பாரினிலே சிறந்ததெங்கள்
பாரதம் என்றுரைக்க
பவளக் கனவு கண்டேனே!!

தங்கள் தேசப்பற்று நிறைந்த கனவு
மிக அழகான கவிதை ஊற்றாக
இங்கு தவழ்கின்றவிதம் அருமை!...
உங்கள் கனவும் நினைவாக வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

மனோ சாமிநாதன் said...

பொன்னும் பவள‌முமாய் எத்தனை எத்தனை அழகான கனவுகள்! கனவுகள் என்னும்போதே தெரிகிறது, நினைவுக்கு வரும்போது எதிர்ப்படுவதெல்லாம் வேறு நிலைக‌ள் என்பது! இருந்தாலும் அழகிய அர்த்தமுள்ள‌ கனவுகள் நிச்சயம் மெய்ப்படும் என்று காத்திருப்போம்!!

அருமையான கவிதை!!

vetha (kovaikkavi) said...

அத்தனை கனவுகளும் நிறைவேறட்டும். அருமை.வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said...

கனவுகள் கண்ட என் தோழா!
நினைவாகும் நாளும் ரொம்ப நாளா?
துயரங்கள் எத்தனை சொல்லிமாளா!
இதோ துடைத்தொழிக்கும் நேரம்
வந்தது தான் போலே!..

அருமையான கவிதை...
நன்றிகள் நண்பரே!

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
உபரியாக கடலில் கலந்தாலும் சகோதரனுக்கு தண்ணி தரமாட்டாங்க.. இப்படி இருந்தா உணவு தேவைக்கு மற்ற நாடுகளிடம் கையேந்தும் காலம் வெகுவிரைவில் வரும் அப்போது இந்தியாவால் சமாளிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்...!!

மணி ஐயா சொல்வதை போல் வார்த்தைகள் உங்களுக்கு வரபிரசாதம்...!!

வாழ்த்துக்கள்!!

சசிகலா said...

கண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!
கண்ணெதிரே தவழ்கிறதே
கனவிங்கே மெய்ப்படுமோ?!!
கானல்நீராய் போய்விடுமோ?!!
கண்ணாடிக் குமிழியது
காற்றிழந்து போகாது
காலமெல்லாம் நிலைத்திடுமோ??!!
மிகவும் அருமை அண்ணா

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் கனவு மெய்ப்படட்டும் நண்பரே.

Rathnavel Natarajan said...

கனவுகள் நனவாகட்டும்.
வாழ்த்துகள்.

kowsy said...

பிறக்கின்ற புது வருடத்தில் இந்தக் கனவெல்லாம் நனவாக வேண்டும். பாரதி கண்ட கனவைவிட உலகு உய்வடைய நீங்கள் கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் என எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,
நான் கண்ட கனவுகளை விட
நீங்கள் கொடுத்த கருத்துரை
என்னை நெகிழ்விக்கிறது.
காலம் பதில் சொல்லும் என்ற
தாளாத தாகத்துடன்...

மேன்மையான அழகான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ்விரும்பி ஐயா,
கண்ட கனவுகள்
பலித்துவரும் நாள்நோக்கும்
நம்மிடம் இருக்கும் நம்பிக்கையை
அழகாக சொன்னீர்கள்.

தங்களின் கவித்துவமான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
பண்டமாற்றும், பகுத்துண்ணுதலும்
காணாமல் போன இக்காலத்தில் ....
பெற்றவருக்கே பசியாற்றாத பிள்ளைகள்
உள்ள இக்காலத்தில்......
பக்கத்து வீட்டுக்காரனை பகைவனை
பார்க்கும் இக்காலத்தில்

நல்லவைகள் எல்லாம் கனவோடு
முடிந்துவிடுமோ என்ற ஆதங்கம்
நம் எல்லோரிடமும் இருப்பது
காலக் கண்ணாடி.

நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
வரிகளை வாசித்து இனிமையான கருத்துரைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

M.R said...

ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

கதம்ப உணர்வுகள் said...

பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா..

மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

Post a Comment