உறக்கம் என்பதில்தான்
எத்தனை உன்னதம்!
இரவுப்பொழுதின் அமைதியில்
இருகண்மூடி அயர்ந்து
இயக்கமற்று கிடப்பதில்தான்
எத்தனை ஆனந்தம்!!
தன்னிச்சையாய் தானாக
தன்னுடல் தளர்த்தி
தகுந்த இடத்தில்
தஞ்சம் புகுவதில்தான்
எத்தனை இன்பம்!!
உண்ட களைப்பில்
உட்கார்ந்த இடத்தில்
சிறுபொழுது நேரம்
சிட்டுக்குருவி போல
சில வினாடிகள்
கண்மூடுவதில் தான்
எத்தனை ஆனந்தம்!!
எதிர்கால ஏற்றுமைக்காய்
ஏறுபகல் வெளியேறி
பணத்தின் பின்னாலே
பாய்ந்து ஓடியோடி
அந்தி சாய்ந்தபின்னே
விழிமூடி விழுந்துவிட்டால்
வியாபிக்கும் உறக்கமது
வரமன்றி வேறென்ன!!!
மூன்று சக்கர வண்டியை
மூச்சிரைக்க ஓட்டிவந்து
முப்பது ரூபாய
முழுசா பார்த்தபின்னே
சட்டைப்பையில் வைத்துவிட்டு
முட்டி வலியிலே
கொண்ட களைப்பாலே
கொளுத்தும் வெயிலிலும்
கண்மூடி தூங்கினேன்
தெரிந்தது சொர்க்கமே!!
சுறுசுறுப்பு பானமான
தேநீரை விற்றிடவே
மிதிவண்டி பின்னாலே
கொள்கலனில் ஊற்றிவைத்து
காததூரம் ஓட்டிவந்தேன்!
சுட்டெரிக்கும் சூரியனோ
உச்சிக்கு போகையிலே
தேநீரும் விற்றிடவே
பட்டுபோன்ற மணலிலே
படர்ந்து படுத்துவிட்டேன்
புறமெரிக்கும் சுடர்கதிரோ
பனித்துளியாய் ஆனதென்ன!!
முதுகில் சுமந்துவந்த
எத்தனை உன்னதம்!
இரவுப்பொழுதின் அமைதியில்
இருகண்மூடி அயர்ந்து
இயக்கமற்று கிடப்பதில்தான்
எத்தனை ஆனந்தம்!!
தன்னிச்சையாய் தானாக
தன்னுடல் தளர்த்தி
தகுந்த இடத்தில்
தஞ்சம் புகுவதில்தான்
எத்தனை இன்பம்!!
உண்ட களைப்பில்
உட்கார்ந்த இடத்தில்
சிறுபொழுது நேரம்
சிட்டுக்குருவி போல
சில வினாடிகள்
கண்மூடுவதில் தான்
எத்தனை ஆனந்தம்!!
எதிர்கால ஏற்றுமைக்காய்
ஏறுபகல் வெளியேறி
பணத்தின் பின்னாலே
பாய்ந்து ஓடியோடி
அந்தி சாய்ந்தபின்னே
விழிமூடி விழுந்துவிட்டால்
வியாபிக்கும் உறக்கமது
வரமன்றி வேறென்ன!!!
மூன்று சக்கர வண்டியை
மூச்சிரைக்க ஓட்டிவந்து
முப்பது ரூபாய
முழுசா பார்த்தபின்னே
சட்டைப்பையில் வைத்துவிட்டு
முட்டி வலியிலே
கொண்ட களைப்பாலே
கொளுத்தும் வெயிலிலும்
கண்மூடி தூங்கினேன்
தெரிந்தது சொர்க்கமே!!
சுறுசுறுப்பு பானமான
தேநீரை விற்றிடவே
மிதிவண்டி பின்னாலே
கொள்கலனில் ஊற்றிவைத்து
காததூரம் ஓட்டிவந்தேன்!
சுட்டெரிக்கும் சூரியனோ
உச்சிக்கு போகையிலே
தேநீரும் விற்றிடவே
பட்டுபோன்ற மணலிலே
படர்ந்து படுத்துவிட்டேன்
புறமெரிக்கும் சுடர்கதிரோ
பனித்துளியாய் ஆனதென்ன!!
முதுகில் சுமந்துவந்த
நெல்மூட்டை ஏற்றிவைத்து
சந்தைக்கு கொண்டுசெல்ல
கைவண்டி இழுத்திங்கே
கால்நடையா வந்திருந்தேன்
கடைகள் திறக்கவில்லை
கொஞ்சநேரம் கண்ணயர்ந்தேன்!
வந்தது உறக்கமது
வந்தது உறக்கமது
பன்னீரின் வாசனையாய்!!
புகார் வந்ததென்று
அதிகாரி அனுப்பிவைத்தார்
பாதாள சாக்கடை
அடைத்து போனதென்று!
சாயங்காலம் வந்ததுமே
வேலையை ஆரம்பித்தேன்
அடைப்பை எடுத்திடவே
ஊரும் அடங்கியது!
கைகால் வலியெடுக்க
அருகிலிருந்த கல்லிலே
ஓய்வெடுக்க சாய்ந்திருந்தேன்!
கண்கள் செருகிப்போய்
உறக்கம் வந்ததுவே
என்னவிலை கொடுத்தாலும்
கிடைக்காத உறக்கமதை
கண்ணிலே பூட்டிவைத்தே
உறங்கிப் போனேன்!
விடிந்தது தெரியாது
கனவுலகில் வாழ்ந்திருந்தேன்!!
உண்டு கொளுத்து
ஓய்வு எடுத்திட
வந்த உறக்கமல்ல!
வெம்பி வெதும்பி
உடலின் நீரற்று
அசதியால் வந்ததால்
அதில் தான்
எத்தனை சுகம்!
அனுபவிக்கிறேன் நான்
எல்லோருக்கும் கிடைக்காத
அரிய திரவியத்தை!!
அன்பன்
மகேந்திரன்
74 comments:
நல்ல கவிதை.... வாழ்த்துகள்....
உறக்கம் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்
உழைக்கும் உடலுக்கு தேவைப்படும் ஒன்று உறக்கம் ,அதனைப் பற்றிய கவிதை அருமை நண்பா
வெம்பி வெதும்பி
உடலின் நீரற்று
அசதியால் வந்ததால்
அதில் தான்
எத்தனை சுகம்!//
உழைப்பு அது தரும் உன்னதம் ,மீண்டும்
உழைக்க உடலுக்கு ரீஜார்ஜ் உறக்கம்
த.ம 2
//எத்தனை சுகம்!
அனுபவிக்கிறேன் நான்
எல்லோருக்கும் கிடைக்காத
அரிய திரவியத்தை!!//
உழைப்பின் வரும் உறக்கம் அதுதான் சுகம்.
அருமையான கவிதை மகேந்திரன்.
படங்கள் மிக அற்புதம்.
உறக்கம் என்பது ஒரு வரம்
அது எல்லோருக்கும் கிட்டுவது இல்லை
உழைத்து களைத்த பின் வரும்
உறக்கமே நிம்மதியான உறக்கமாக
இருக்க முடியும்
தங்களுடைய படைப்பு அருமை
வாழ்த்துக்கள் தோழரே
இது வரை ஒரே முறை தான் அது போல ஒரு உறக்கத்தை உறங்கி இருக்கிறேன்...
அருமையான படைப்பு.
உழைப்பாளிகளுக்கு முதல் சொர்க்கமே தூக்கம்தான் என்று அடித்துச் சொல்லி செல்கின்றது கவிதைவரிகள் .
அருமை!...வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .
தூக்கமும் கண்களைத்தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே என்கிறார் கவிஞர்.மன அமைதிக்கு தூக்கம் தேவை..உறக்கம் பற்றிய கவிதை தட்டி எழுப்புகிறது சிந்தனையை மகேந்திரன்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மேன்மையான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி,,
தங்களின் மேன்மையான
அழகிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சரியாகச் சொன்னீர்கள் தோழி சகுந்தலா,
உறக்கம் ஓர் வரமே,
இன்னைக்கு முழுக்க தூங்கலைன்னு எத்தனை பேர்
அங்கலாய்க்க நாம் கேட்டிருக்கிறோம்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான வார்த்தை 'வியாப்பித்தேன்' என்பது. உறக்கத்தின் ஆழமான எல்லைவரை கொண்டு செல்கிறது கவிதை. மிக நன்று
முற்றிலும் வித்தியாசமான கவிதை முயற்ச்சி மக்கா, படிச்சிட்டு அசந்து போனேன் அசந்து, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
ஒருமுறையேனும் இந்த தூக்கத்தை
காணாதவர்களும் இருக்கிறார்கள்.
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
உறக்கம் பற்றிய அழகிய கவிதையை உறக்கம் வராமல் படித்து ரசித்தேன்.
கடுமையான உழைத்து அருமையாகத் தூங்குவோர் அதிர்ஷ்டசாலிகளே.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஷைலஜா
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ....
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை வை.கோபாலகிருஷ்ணன் ஐயா,
இந்த கருத்தை விட எனக்கு வேறு என்ன விருது வேண்டும்...
கவிஎழுதிய பேறு பெற்றேன்...
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உறக்கம் பற்றிய அழகான விவரமான கவிதை.எத்தனை விதமான உடம்பு அயற்சி.தூக்கம் இல்லையேல் நோயாளிகள் போலத்தானே நாம் !
உழைப்பால் வரும் உறக்கம் சுகம் தான்...
அதற்க்கு ஈடில்லை...
அருமையான கவிதை சகோதரா...
''..வியாபிக்கும் உறக்கமது
வரமன்றி வேறென்ன!!!''
வரமே தான் என்ன சுகம்! என்ன இன்பம்! ஆழ்ந்த தூக்கம் நன்கு அலசியுள்ளீர்கள் அருமை வாழ்த்துகள் மகேந்திரன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
என்னவிலை கொடுத்தாலும்
கிடைக்காத உறக்கமதை
கண்ணிலே பூட்டிவைத்தே
உறங்கிப் போனேன்!
விடிந்தது தெரியாது
கனவுலகில் வாழ்ந்திருந்தேன்!!
இந்த வரிகள் மிக அருமை
உழைத்த களைப்பில் உறங்குபவர்களுக்கு
புறமெரிக்கும் சுடர்கதிரோ
பனித்துளியாய் ஆவதில் ஆச்சர்யம் இல்லை தான்... மிக அழகாக உறக்கத்தைப்பற்றிய கவிதையை அழகாக தொகுத்தமைக்கு நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்.
வறுமையின்(உழைப்பின்) உச்சம் சில வரிகளில்..
உடல் உழைப்பாளிகள் இவ்வுலகில் கஷ்டப்பட்டாலும் ஒருவகையில் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை நன்கு எடுத்துரைக்கிறது உங்கள் இனிய கவிதை.வாழ்த்துக்கள் தோழரே.கலக்குங்க.
இனிய காலை வணக்கம் அண்ணா,
எம் மனதை ஒரு நிலைப்படுத்தி எம் கவலைகளை மறந்து மூளைக்கு ஓய்வு கொடுத்து விரும்பிய நேரம், விரும்பிய இடத்தில் உறங்கி மகிழும் உணர்வு தனை கவிதையில் சொல்லியிருக்கிறீங்க.
ரசித்தேன்,
எத்தனை சுகம்!
அனுபவிக்கிறேன் நான்
எல்லோருக்கும் கிடைக்காத
அரிய திரவியத்தை
>>
ரசித்த வரிகள்
ரசனையாய் ஒரு கவிதை உழைப்பைப்பற்றி அருமை..
உறக்கம் என்பதில்தான்
எத்தனை உன்னதம்!
இரவுப்பொழுதின் அமைதியில்
இருகண்மூடி அயர்ந்து
இயக்கமற்று கிடப்பதில்தான்
எத்தனை ஆனந்தம்!!
எனக்குப்பிடித்தவரிகள்,
உடலை புத்துணர்வூட்டு வேளையில் தூக்கமும் ஒர் அங்கம் வகிக்கிறது...
கவிதையை ரசித்தேன்... நண்பரே
வாழ்த்துகள்........
படங்கள் மிக அற்புதம்.
உழைத்தவர் உறங்கிட பஞ்சனை தேவையில்லை...
தங்களிடமிருந்து மீண்டும் ஒரு அறிய படைப்பு...
உழைத்தவர் உறங்கிட பஞ்சனை தேவையில்லை...
தங்களிடமிருந்து மீண்டும் ஒரு அறிய படைப்பு...
தமிழ்மணம் 10
அருமையான படங்களுடன் நல்ல வரிகள் நண்பரே! வாழ்த்துக்கள்.
கவிதைகளுக்காக படங்களா?
படங்களுக்காக கவிதையா?
அருமை.
உங்களது உழைப்பை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோதரி ஹேமா ,
சரியாகச் சொன்னீர்கள்...
தூக்கம் இல்லையேல் நோய்வைப்பட்டது போலத்தான்.
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜேஷ் ,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நிரூபன்,
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சி.பி.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜா MVS ,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சௌந்தர் ,
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல் ,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா ,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
உறக்கமற்றவர்கள் ஏங்க வைக்கும் தொகுப்பு அருமை
அருமையான கவிதை நமக்கும் தூத்துக்குடி தான் அன்பரே
என்னவிலை கொடுத்தாலும்
கிடைக்காத உறக்கமதை/
ப்சித்துப் புசித்தலும்
உழைப்பிற்குப்பின் உறங்கலும் சுகம்.
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
அன்பு சகோதரி ருபினா ராஜ்குமார்,
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் சி.பிரேம் குமார்,
வாங்க நண்பரே, தங்களுக்கும் தூத்துக்குடியா??
மிகுந்த மகிழ்ச்சி.
தொடர்ந்து வாருங்கள்.
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் அசோக்
நிச்சயம் பதிவு செய்கிறேன்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
பாராட்டுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
உழைத்தவன் உறக்கத்தை
உழைக்காதவன் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கமுடியாது!
பசித்தவன் ருசியை
பணக்காரன் நட்சத்திர விடுதிகளிலும் வாங்கமுடியாது.
நல்லதொரு பதிவு நண்பரே..
உறக்கம் இல்லன உலகம் இல்ல நன்றி சகோ
அன்புநிறை முனைவரே,
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் மோகன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
// உண்ட களைப்பில்
உட்கார்ந்த இடத்தில்
சிறுபொழுது நேரம்
சிட்டுக்குருவி போல
சில வினாடிகள்
கண்மூடுவதில் தான்
எத்தனை ஆனந்தம்//
உறக்க மின்றி நானிருந்தேன்-நல்
உறக்க மதைத் தந்தீரே
சிறக்கக் கவி படைத்தீரே-இனிக்க
சிந்தனைத் தேன் வடித்தீரே
பறக்க சிறகு இருந்தாலே-நேரில்
பறந் தோடி வந்திருப்பேன்
மறக்க மனம் இயலாதே-என்
மகி உங்கள் கவிதையினை
புலவர் சா இராமாநுசம்
விழிப்புடன் இரு என்கிற அர்த்தத்தில் பட்டுக்கோட்டையார்
தூங்காதே தம்பி தூங்காதே என எழுதி இருப்பார்
நீங்கள் உழைப்பவனே எங்கேயும் எப்போதும்
நிம்மதியாக தூங்க முடியும் என்கிற
விஷயத்தை மிக அழகாக
படங்களுன் பதிவு செய்துள்ளீர்கள்
தங்கள் பதிவுக்கான உழைப்பு பிரமிக்கவைக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அன்புநிறைப் புலவரே,
தங்களின் கவிக்கருத்தை
காண்கையில் என் பதிவின் மதிப்பு
பலமடங்கு உயர்ந்ததென்று
பெருமிதம் கொண்டேன்.
மேன்மையான கருத்துரைத்த தங்களுக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
எவ்வளவு பெரிய காவிய நாயகனுடன் என்னை
ஒப்புமைப் படுத்திவிட்டீர்கள்!!!!
மனம் பூரிக்கிறது ஐயா...
கவி இயற்றிய இன்பம் பெற்றேன்...
தங்களின் மேன்மையான கருத்து
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான கவிதை, அதிலும் அருமையாய் பொறுத்தமாய் படங்கள் கலக்கிட்டீங்க அண்ணா...
நாள் முழுதும் ஓடி ஓடி வேலை செய்த பின் தலை அந்த தலையணையில் விழும் போது ஏற்படும் நிம்மதியை சொல்லில் கொண்டு வந்து விட்டீர்கள்... சொகுசாக வேலை பார்க்கும் எனக்கே இந்தக் களைப்பென்றால் உச்சி வெய்யிலில் பலத்த வேலை செய்யும் இவர்களுக்கு என்ன இன்பமாய் இருக்கும்?
அன்பு சகோதரி ஷர்மி,
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment