Powered By Blogger

Thursday 17 October 2013

மருளும் மான்விழி!!!







ருண்ட விழிப் பார்வையாலே 
சுருட்டி எனை வைத்தாயே!
பருவமிங்கு மாறினாலும் - உன் 
உருவம் காண மகிழ்ச்சியே!


துள்ளல் நடைபோட்டு 
கொள்ளைகொண்டு போகிறாய்!
அள்ளிக் கொஞ்சிடவே - என் 
உள்ளம் துடிக்கிறதே!!
 
 
வியமாம் உன்னழகுக்கு 
காவியம் பல உண்டு!
மேவிவிட்டாய் நெஞ்சத்துள் - என் 
ஆவியும் உனைத் தேடுதே!!


றிபோல் அருகமர்ந்து 
கூறிவிடு செவிமடுப்பேன்!
பிறிதோர் பெயருண்டா - என 
அறியத் தந்திடுக!!
 
 
பிஞ்சுமொழிச் சொற்களால் 
கொஞ்சிப்பேசும் பாவலனே!
அஞ்சுகத் தமிழாளை - நீவீர் 
கெஞ்சிக் கேட்டிடுக!!


த்தித் தாவிவரும் 
சித்தம் மலரச்செய்யும்!
பித்தன் விரலேகிய - உன்னை 
முத்தமிழ் மான் என்றேன்!!
 
 
ண்மறை இமைசுற்றி 
வெண்ணிறம் பாவிய! 
திண்ணிய கொம்பு கொண்ட - உன்னை 
தண்மையாய் கலை என்றேன்!!
 
 
ளிங்குத் தோல்போர்த்தி 
நளின நடைபோட்டு! எமை 
களிகொள்ளச் செய்த - உன்னை 
தெளிவாய் பிணை என்றேன்!!
 
 
ரும்பழுப்பு நிறம்பூண்டு 
நெருங்கிய மரநிழல் வாழும்!
இரும்புக் கொம்பேற்ற - உன்னை 
விருப்பாய் கடமா என்றேன்!!
 
 
டுக்கான பாறைகளில் 
மிடுக்காக நடைபோட்டு!
துடுக்காக விளையாடும் - உன்னை 
எடுப்பாய் வருடை என்றேன்!!
 
 
வெம்பாலை நிலங்களில்
செம்மாந்த திருகு கொம்பொடு!
தெம்மாங்கு பாடிவரும் - உன்னை 
செம்பாலை இரலி என்றேன்!!
 
 
ழகாய் வெண்ணிறத்தால்
கழனிநிறை நெற்கதிராய்!
குழவியாய் நெஞ்சம்பதிந்த - உன்னை
சோழக உழை என்றேன்!!
 
 
யக்கிடும் ஒயிலால்
தயங்கித் தயங்கியோடும்!
கயல்விழி அழகாமே - உன்னை
நயமுடன் நவ்வி என்றேன்!!
 

 


மாலவன் கையடக்க
இலச்சினை வில்போல!
கோலமிகு விழிகொண்ட - உன்னை
சிலம்பினேன் சாரங்கம் என்றே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன் 

41 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை எத்தனை அருமையான வர்ணிப்பு சொற்கள்... வாழ்த்துக்கள்...

sury siva said...

மான் என்னை மயக்கிதா ?

இல்லை...இல்லை...

மானை வர்ணித்த உமது
மனதில் எழுந்த வர்ணனைகள் தான் எமை
மயக்கின.

அப்பப்ப ...எவ்வளவு சொற்கள் ?

அத்தனையும் அழகு.

சுப்பு தாத்தா.

ராஜி said...

இத்தனை பெயர்களா!?

Anonymous said...

எத்தனை எத்தனை பெயர்கள் எத்தனை எத்தனை விதங்கள்
அத்துணையும் உம் வாய் மொழியில் கேட்கவே என் மனமும்
நவ்வி போலத் தாவியோடுதே அண்ணா !

வெற்றிவேல் said...

மானுக்கு இத்தனை பெயர்களா? வியக்க வைக்கிறது உங்கள் சொல் வண்ணம் அண்ணா...

சிறப்பான வரிகள்...

இது மானுக்கு தான் எழுதுனதா??? டவுட்டு அண்ணா...

வெற்றிவேல் said...

மான், கலை, பிணை, கடமா, இரளி, வருடை, உழை, நவ்வி, சாராங்கம்..... இது எல்லாம் மானுக்கான பெயர்களா அண்ணா...?

வெற்றிவேல் said...

அண்ணா, எல்லா பாடல்களிலும் எதுகையை சிறப்பா கொண்டு வந்துருக்கீங்களே? எப்படி அண்ணா... சொல்லிக் கொடுங்கள்... நானும் கத்துக்கறேன்...

உ.ம்:
மயக்கிடும்
தயங்கித்
கயல்விழி
நயமுடன்

அம்பாளடியாள் said...

இத்தனை பெயர்களையும் இன்று தான் நான் அறிந்தேன் என்
புலவர் சகோதரா எத்தனை அழகாய் புனைந்தாய் இடைவெளியின்றி மடை திரண்டு பாய்ந்த உன்றன் கவிதை வெள்ளம் கொள்ளை கொண்டது எமதுள்ளமதை !!...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வற்றாத புலமை இங்கே
வாழ்வாங்கு வாழ வேண்டும் .

கும்மாச்சி said...

மானிற்கு இவ்வளவு அழகான தமிழ் பெயர்கள் உண்டு என்பதை உங்கள் கவிதையில் தெரிந்துகொண்டேன்.

Unknown said...

இத்தனை பெயரா மானுக்கு! படமும் பாடலும் அசத்தல்!

Seeni said...

படங்களையும்-
புது வார்தைகளைபோட்டும்..

மனம் மகிழ செய்திடீங்க..

நன்றி சகோ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மான்களைப்போல மனதை மயக்கிடும் கவிதை வரிகளும் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.

http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html இந்தப்பதிவின் வரிசை எண் 31ல் தங்கள் பெயரும் உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான படங்களுடன்
அருமையான கவிதையுடன்
இதுவரை அறியாத சொற்களை
அறியத தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 7

இளமதி said...

எத்துனை சிறப்பு உங்களினது...
அத்தனை பெயர்களா மடமானுக்கு...
கற்பனைக்கெட்டாக் காளமேகம்தான் நீர்
விற்பனரே! வாழ்க வளமுடன்!

அழகிய படமும் அருமைக் கவியும்!
வாழ்த்துக்கள் சகோ!

தனிமரம் said...

மான் பல பெயர் பெறும்
மான்மியம் கண்டேன்
மகியின் கவிதையில் !வாழ்த்துக்கள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

அம்மம்மா!!!. ஒரு வகுப்பறைக்கு வந்த உணர்வு. எதைச் சொல்ல, எதை விட.. இத்தனை பெயர்களா மானுக்கு, அத்துணையும் சந்த நயத்தோடு சேர்ந்து சிந்து பாடி வரும் அற்புதக் கவிதை வரிகளுக்கு என்ன பரிசு ஈடு? படங்கள் அழகுக்கு அழகு..நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.. அற்புதமான பகிர்வு.. டன் டன்னாக நன்றிகள்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை அருமை மகேந்திரன். மானினத்தை பெருமைபடுத்தும் கவிதை.ஆஹா படங்கள் மிக அழகு

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சுப்பு ஐயா..
இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்..
மனம் திறந்த அன்பும் பாராட்டும் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு ஐயா..
சிரம் தாழ்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராஜி...
இன்னும் இருக்கின்றன..
ஏணம்.. ஏணி...சூனம்..குருளை..
பெரிதாக ஆகிவிடுமே என்று குறைத்துவிட்டேன்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...
தாவி ஓடும் மனம் என்னை பாராட்டியும் செல்கிறது..
மிக்க மகிழ்ச்சி சகோதரி உங்கள் அன்பிற்கும் இனிய கருத்திற்கும் நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புத் தம்பி வெற்றிவேல்...
நிச்சயமாக இவையெல்லாம் மானுக்கான பெயர்களே...
இன்னும் இருக்கின்றன சில பெயர்கள்..
நிச்சயமாக இது மானுக்காக மட்டுமே எழுதியது தம்பி...
என் மீதான உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள் ...
என் மீதான அன்பிற்கும் மேனமையான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் கும்மச்சி...
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் புலவர் பெருந்தகையே..
உங்கள் ஆசியுடன் தொடர்கிறேன்..
சிரம் தாழ்ந்த நன்றிகள் கருத்துக்கு.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் சீனி...
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வைகோ ஐயா..
உங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா..
வந்தேன் உங்கள் தளம்.. மனம் மகிழ்ந்தேன் ஐயா..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா...
தங்களின் மனம்திறந்த பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி...
பெரும்புலவர் காளமேகருடன் எனை ஒப்பிடுவதா??!!
உங்களின் அன்பிற்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
மகிழ்ந்தேன் உங்களின் இனிய கவி கண்டு.
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்...
உங்களின் இந்தக் கருத்தை விடவா
எனக்கு பெரிய பரிசு வேண்டும்...
மனம் மகிழ்ந்தேன் சகோதரி...
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

வருனணை செய்ய இத்தனை வார்த்தைகள் உண்டா.
படமும்
கவிதையும்
இனிமை
நன்றி ஐயா

அ.பாண்டியன் said...

அழகான படங்களோடு அசத்தலாக கவிதை தந்து மான் இனத்தின் பெருமையயும் வகைகளையும் உலகறியச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே. தமிழ்மணம் வாக்கும் பகிர்ந்தேன் உங்கள் செந்தமிழ் மொழி கண்டு. நட்பு தொடர்வோம். பகிர்வுக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

மானுக்கு இத்தனை ஒத்த சொற்களா? நான் அறியவே இல்லை.. மலைத்து விட்டேன்ன்.. கவிதையில் உண்மையில் மானைத்தான் வர்ணித்தீங்களோ:) என எண்ணுமளவுக்கு சூப்பரா இருக்குது வர்ணனை.

இராஜ முகுந்தன் said...

அஹா அண்ணா
மானுக்கு மகத்தான் விளக்கம் சொன்ன
மாம்புகழ் கவி மன்னா
மகிழ்ந்தது இதயம்
மரபுவழி கவிகண்டு
மருவில்லா சொல்லாற்றல்
மாட்சிமைக் கவியாற்றல்
மன்னவரே மகே(கா) (இ)ந்திரரே
மலைக்க வைத்து விட்டீர்கள்.

kupps said...

ஆஹா!மானுக்கு இவ்வளவு பெயர்களா ? மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே !நன்று! நன்று!
தலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்!

kupps said...

ஆஹா!மானுக்கு இவ்வளவு பெயர்களா ? மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே !நன்று! நன்று!
தலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்!

kupps said...

ஆஹா!மானுக்கு இவ்வளவு பெயர்களா ? மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே !நன்று! நன்று!
தலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Post a Comment