தோல் குடத்துக்குள்
சூல் கொண்டு
கருவறையினின்று
உருவாகி வந்தவனே!!
இதுதான் மாட்சி
இவைதான் மாண்பு - என
பெற்றோர் உரைக்க
செவிமடுத்து வளர்ந்தவனே!!
தான்கொண்ட துன்பமது
தனயனுக்கு வேண்டாமென
தகப்பனின் செல்லத்தில்
தழும்பித் தவழ்ந்தவனே!!
நடந்தால் அய்யகோ
நடுப்பாதம் வலிக்குமென
நடுமுதுகில் சுமந்ததால்
சுகவாசி ஆனாயோ?!!
நாளை என்றொரு நாளில்
நானிலம் பெருமையாய் - உனை
முகம் நிமிர்த்து பார்க்குமென
நயமாக நினைத்திருந்தேன்!!
அறிவார்ந்த நூல் சுமக்கும்
செறிவான கரங்களில்
கொலைப்பழி செய்யும்
அரிவாள் சுமந்ததேனோ??!!
நாளை உனை இவ்வுலகில்
அரியணை ஏற்றுவிக்க
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்
இறைவனுக்குச் சமமன்றோ!!
ஆட்டிரை அகத்திக் குலைபோல்
சிரம்வெட்டிச் சாய்க்கும்
அறிவற்றோருக்கும் உனக்கும்
வித்தியாசம் இல்லையா??!!
கல்வியிலும் செயலாற்றலிலும்
சமூக சிந்தனைகளிலும் - சிறந்த
மாணவர் மத்தியில் உனைப்போல் சிலர்
களைந்தெறியப்பட வேண்டிய களைகளே!!
என்று வந்ததடா உனக்குள்
கொலைச்செயல் மனோபாவம்
யாரிங்கு காரணம்
உனக்கான இந்நிலைக்கு??!!
வளர்த்த எம் குற்றமோ?
செதுக்கிய சமூகத்தின் குற்றமோ?
உய்வித்த கல்விநிலையக் குற்றமோ?
நானிங்கு அறியேனய்யா!!!
நற்கல்வி பயின்று வா
நல்லொழுக்கம் கற்று வா - என
யாரிங்கு உரைத்தாலும்
நஞ்சென தோன்றுகிறதோ?!!
அடிமேல் அடிபட்டாலும்
பொதிசுமக்க வேண்டுமென
கழுதைக்கும் தெரியுமடா
உனக்கேன் தெரியாது போயிற்று?!!
சீரிய நின் சிந்தனைகளால்
நாளைய சமூக மாற்றம்
நாளைய சமூக மாற்றம்
உன் கையில் தானென - யாம்
எண்ணியிருந்த வேளையில்!!
நெஞ்சம் குறுகிப் போனதய்யா
உள்ளம் கருகிப் போனதய்யா
நான் காணும் இவ்வுலகில்
நீயும் இப்படித்தானா??!!
அன்பன்
39 comments:
அந்த மாணவர்களின் வாழ்க்கை இப்படி தடம் மாறிருச்சே புலவரே....ஆசிரியர் பாவம் அவர்தம் குடும்பமும்.
நெஞ்சம் குறுகிப் போனதய்யா
உள்ளம் கருகிப் போனதய்யா
நான் காணும் இவ்வுலகில்
நீயும் இப்படித்தானா??!!//
செய்தியை கேட்டது முதல்
சம நிலையில் இருக்கமுடியவில்லை
எம் நிலையை மிகச் சரியாகப்
பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 2
ஒருவரல்ல.
பலர் இன்று இந்நிலையில்.
வேதனை நிலை தான்.
ஊர்தோறும் கோயில் போல மனநலகாப்பகமும் தேலைப்படுகிறது.
இனிய வாழ்த்து மகி.
வேதா. இலங்காதிலகம்.
வரிகள் சரியான விளாசல்...
வழிக்காட்ட சரியான நபர்கள் இல்லாமற் போனதுதான் இந்நிலைக்கு காரணம்.
ஆயிரம் தடவை கேட்டாலும் தீராது...
ஆற்றாமையின் வெளிப்பாடாய் அருமையான கவிதை சகோ!
தயை செய்து இவர்கள் படத்தை நீக்கி விடுங்கள்.
கல்லூரி வளாகம் கசாப்பு கடை ஆனது போதும்.
வசந்த மண்டபம் தன் புனிதத்தை
இழக்கலாகாது.
சுப்பு
கஷ்டம்....
// நெஞ்சம் குறுகிப் போனதய்யா
உள்ளம் கருகிப் போனதய்யா
நான் காணும் இவ்வுலகில்
நீயும் இப்படித்தானா??!!//
மனம் பதறிப் போனது....
ஆஹா.. ஒரு குட்டிக் கதை கேட்பதுபோல இருக்கு... அழகாக சொல்லிட்டீங்க ஒரு காவியத்தை. மனம் கனக்கிறது.... உண்மைதானே... எப்படியெல்லாம் பிள்ளை வளரவேண்டும் எனப் பெற்றோர் நினைத்து வளர்க்கினம்... ஆனால் பிற்காலத்தில். சந்தர்ப்பம் சூழ்நிலையால் எனச் சொன்னாலும், அவர்கள் மாறிவிட்டால்ல்.. அதை ஆராலுமே ஏற்றுக் கொள்ள முடியாதே...
//அடிமேல் அடிபட்டாலும்
பொதிசுமக்க வேண்டுமென
கழுதைக்கும் தெரியுமடா
உனக்கேன் தெரியாது போயிற்று?!!/// அழகிய உவமை.. சூப்பர்.
நாம் எந்த நிலை நோக்கி போகின்றோம் என்று சிந்திக்க வேணடியதருணம் இது !கொலையும் அதன் செய்திகளும்!ம்ம் கவிதை சிந்திக்கத்தூண்டுகின்றது மகி அண்ணா!
இனிய வணக்கம் நண்பர் மனோ...
மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தான் தண்டிப்பார்கள்...
தண்டித்தால் அவர்களை கொல்லும் அளவுக்கு மாணவர்களின் மனோபாவம்
வளர்ந்திருப்பது வேதனைக்குரியது...
இனிய வணக்கம் ரமணி ஐயா...
செய்தி அறிந்தவுடன் மனம் பதைத்துப் போனேனய்யா...
பிஞ்சு நெஞ்சங்களுக்குள் இவ்வளவு கோபமும் ஆவேசமும்
எங்கிருந்து வந்தது..
அப்படியே கோபமும் ஆவேசமும் இருந்தாலும் அதனை
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உருவெடுத்துள்ளது...
மிகவும் வேதனைக்குரிய செய்தி ஐயா..
இனிய வணக்கம் வேதாம்மா...
உங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன்...
மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு
சரியான ஆற்றுப்படுத்தல் வேண்டும்..
இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
பொறுக்கவில்லை மனம்..
பொங்கிவிட்டது...
இனிய வணக்கம் சகோதரி ராஜி...
உங்கள் கருத்தில் உடன்படுகிறேன் நான்...
இல்லத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்...
சரியான வழிப்படுத்தலை...
இனிய வணக்கம் சகோதரி இளமதி...
இன்றைய இந்த செய்தி போனால் போகட்டும் ஓர் உயிர் தானே
என்று ஆகிவிடும்...
உயிர் இழந்த குடும்பத்தின் நிலை என்ன...??
வெட்டிப்போட இதென்ன காயா பழமா...
உயிரின் விலையறிய வேண்டும்...
மாணவர்களுக்கு சரியான ஆற்றுப்படுத்தல் வேண்டும்...
இனிய வணக்கம் சுப்பு ஐயா..
உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்..
இதோ இப்போதே படங்களை நீங்கி விடுகிறேன்...
இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்,
பொறுக்கவில்லை மனம்...
இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..
ஆமாம் நண்பரே.. பதறித் துடித்துப்போனது நெஞ்சம்..
இனிய வணக்கம் தங்கை அதிரா...
வளர்ந்து வா செல்லமே
என் வாழ்வின் கட்டி வெல்லமே..
என சீராட்டி பாராட்டி வளர்த்த பிள்ளை..
கொலைகாரனாகி திரும்புகையில்
மனம் பதைப்புக்கு அளவே இல்லை...
நாளைய உலக சாம்ராஜ்யங்களை
உருவாக்கப் போகிறவர்களை
நல்வழிப்படுத்த வேண்டும்...
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
இதுவே நாம் மனதில் கொள்ள வேண்டிய செய்தி..
நாளைய நாட்டின் தூண்கள் அடிப்படை
செல்லரித்துப் போகக்கூடாது..
தமிழ் மனம் வோட்டு + 1
very nice......
Naan appadi illai...
Nalla kavithai annaa... Neenda naal kazhiththu vanthaalum, azhagaana padaipu...
பெற்றவர்களின் மனக் குமுறலைப் பிள்ளைகள் உணராது
தவறிப் போவதும் பெருந் துயரே எந்நாளும் என்று மனம்
வருந்தும் அளவிற்கு மிக அழகாகக் கவி வடித்துள்ளீர்கள்
சகோதரா .வாழ்த்துக்கள் .
செய்தியினைக் கேட்ட நொடி முதல் உள்ளம் அழுகிறது ஐயா.ஏனிந்த நிலை..
வணக்கம்,மகி!நலமா?இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!///என்னவோ,அந்தப் பயல்களின் நெஞ்சில் இப்படி ஒரு நஞ்சு கலந்திருந்திருக்கக் கூடாது தான்.இந்த அளவுக்கு அந்தப் பிஞ்சுகள் சென்றிருக்கிறார்கள் என்றால்.......................எங்கோ ஒரு பெருந்தவறு நிகழ்ந்தேயிருக்கிறது.ஆராயப்பட வேண்டும்.ஆராய்வார்களா?பார்க்கலாம்!
நல் வழிப் படுத்துதல் அனைத்து நிலைகளிலும் தேவை.
அழகாகப் பதிந்தீர்கள் அண்ணா .
இனிய வணக்கம் நம்பள்கி..
உங்கள் வரவுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும்.. நன்றிகள்..
இனிய வணக்கம் நண்பர் தமிழ்மாறன்
தங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புத் தம்பி வெற்றிவேல்..
உங்களைப் பற்றித் தெரியாதா??
சரித்திரம் படைக்கத் துடிக்கும் மாணவர்கள் மத்தியில்
இப்படியும் சிலர் என்றே குறிப்பிட்டேன்..
தங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்...
பெற்றவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்...
நல்வழிக்கு ஆற்றுப்படுத்தல் வீட்டில் இருந்து
தொடங்கப்பட வேண்டும்..
தங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்..
அன்பிற்கினிய ஐயா.. கரந்தை ஜெயக்குமார்...
மனம் குமுறுகிறது... காரணங்கள் புரியவில்லை..
இளைய தலைமுறை நல்வழிக்கு ஏக வேண்டும்
என்ற ஆற்றாமை...
நம்மால் இயன்ற நல்வழிகளை காண்பிப்போம்..
ஆற்றுப்படுத்துவோம்..
இனிய வணக்கம் யோகா ஐயா..
உண்மை ஐயா.. எங்கோ தவறு நடந்திருக்கிறது..
வளர்ப்பிலா...?? சமூக சீர்கேட்டிலா?? வளாகத்திலா??
புரியவில்லை..
சரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள்..
தங்களின் மேன்மையான.. கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...
சரியாகச் சொன்னீர்கள்...
நல்வழிப்படுத்தல் எல்லா நிலைகளிலும் வேண்டும்.
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
வளர்த்த எம் குற்றமோ?
செதுக்கிய சமூகத்தின் குற்றமோ?
உய்வித்த கல்விநிலையக் குற்றமோ?
நானிங்கு அறியேனய்யா!!!
அனைவருக்கும் பங்கு இருக்கிறது.ஆம்!இந்த சமூகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு இருக்கிறது.இன்று எத்தனை பள்ளிகளில் நீதி நெறி வகுப்புகள் நடைபெறுகிறது?
அனைவரையும் சிந்திக்க வைக்கும் அற்புதமான கவிதை.வாழ்த்துக்கள் தோழரே.
Post a Comment