Monday, 26 August 2013

பொய்கள் மெய்த்த பொழுது!!!னிப்பாறை மேல் பதிந்த  
வெற்று உள்ளங்கை போல 
சில்லிட்டு உதிரம் 
உறைந்தே போன தருணமது!!


ங்கியடித்த சுத்தியல் 
சிற்றங்குலம் இடம் மாறி 
பெருவிரலை பதம்பார்த்தது போல் 
சுருண்டுபோன தருணமது!!
பெருந்திரள் மக்கள் கூடும்
சபையின் நடுவினிலே
உடையற்றுப் போன
நிர்வாணத் தருணமது!!


நிகழ்நிலை தவறி 
சுயம் மறந்துபோனவன் 
மீள்நிலை திரும்பி - மீண்டும் 
மனம் கருகிப்போன தருணமது!!குப்பையில் தவழ்ந்து 
விண்ணேற்றம் கண்டபின் 
கோபுர நிலை தடுமாறி - பாழும் 
கிணற்றில் வீழ்ந்த தருணமது!!


பொய்ச்சிறகை விரித்து 
பெருவானம் வியாபித்து 
சிறகொடிந்து போனதும் 
விறகொடித்த மரமானதேன்?!!
ம்பிக்கை எனும் தேனில் 
நஞ்சூற்றி குடித்துக் களித்து 
நீலம் பரவிடுகையில் 
நீச்சம் வீழ்ந்தது ஏன்?!!


நிதர்சனம் எனும் அழகு 
நித்திலமாய் இருக்கையில் 
பொய்யரிதாரம் பூண்டதேனோ 
செய்யாப் புகழுக்காக!!
மாற்றான் ஒருவன் 
இவனுக்கில்லை ஈடென 
வேற்றோன் மெச்சுவதற்காய் 
பொய்வேடம் தரித்ததேனோ !!


பொய்யன் இவனென
பொய்கள் சாயமிழந்த பொழுது
முன்னிலை நிற்போரை
நோக்குதல் கூச்சமன்றோ?!!
ன்னிலை தவறி
உண்மைகளை மறைத்து
பொய் பூக்களுக்கு நீரூற்றுவதால்
வீசும் மணத்திற்கு வாசமுண்டோ?!!

ற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!அன்பன்
மகேந்திரன் 42 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நிதர்சனம் எனும் அழகு
நித்திலமாய் இருக்கையில்
பொயயரிதாரம் பூண்டதேனோ
செய்யாப் புகழுக்காக!!//

சாட்டையடி வரிகள் புலவரே....!

Ramani S said...

நிச்சயமாக தற்கொலைக்குச் சமம்தான்
சொல்லிச் சென்ற உவமைகள் அத்தனையும்
இரத்தினங்கள்.மனம் தொட்ட அருமையான கவிதைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

ராஜி said...

உவமைகள் அருமை

Anonymous said...

உவமைகள் வெகுவாகக் கவர்கின்றன.
மெய்யே உரைத்திருக்கிறேன் சகோ !

பார்வதி இராமச்சந்திரன். said...

///உற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!////

பொட்டில் அறைந்த மாதிரியான வரிகள். தங்கள் உணர்வுகளை அற்புதமாய் எங்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். பகிர்விற்கு மிக்க நன்றி!!

சந்திரகௌரி said...

தன்னிலை பெரிதென இனம் காட்ட விழையும் பொய்யர்கள் கூட்டம் பல. செய்யாத செயலுக்கு புகழை நோக்கி நிற்கும் ஆசையும்தான் ஏனோ . அவர்களுக்கு தற்கொலைதான் முடிவு. அற்புதமான உவமைகள் இக்கவிதைக்கு அழகு சேர்க்கின்றன . ஆழமாக யோசித்து அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றது
தனிமரம் said...

தற்பெருமையும் புகழும் வேண்டி பொய் உரைப்பின் எதுவும் இறுதியில் நிலைக்காது என்பதை !மிகஅருமையான சொல்லாடல் மூலம் செதுக்கிய கவிதை அருமை வாழ்த்துக்கள் மகி அண்ணாச்சி!

Seeni said...

padangalum...
uvamaikalum....

arputham...

கீத மஞ்சரி said...

\\நிகழ்நிலை தவறி
சுயம் மறந்துபோனவன்
மீள்நிலை திரும்பி - மீண்டும்
மனம் கருகிப்போன தருணமது!!\\
மனந்தொட்ட உவமையிது. மெய்முகம் மறைத்து பொய்யாய் வாழும் வேடதாரிகளுக்கு மெய்யை ஏற்கும் துணிவுமில்லை. பொய்யை விலக்கும் பண்புமில்லை. வாழத்துணிவின்றி தற்கொலை செய்துகொள்ளும் கோழை மனங்களுக்கு சமமே மெய்யை எதிர்கொள்ளத் துணிவின்றி பொய்யுரைக்கும் கோழை மனங்களும். மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்ட கருத்தாழமிக்க வரிகள். பாராட்டுகள் மகேந்திரன்.

Ambal adiyal said...

பொய்யைப் பேசியே மனிதன் புகளின் உச்சியில் வாழ நினைப்பது உண்மையான வாழ்வுமல்ல .அருமையான விளக்கத்துடன் அழகாய் மலர்ந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரா .

மாதேவி said...

அற்புதமான உவமைகளுடன் பொய்யுரைக்கும் பொழுதுகளை வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

குட்டன் said...

அருமையான உவமைகள்

இராஜராஜேஸ்வரி said...

நிதர்சனம் எனும் அழகு
நித்திலமாய் இருக்கையில்
பொய்யரிதாரம் பூண்டதேனோ
செய்யாப் புகழுக்காக!!
பொய்யுரைக்க வேண்டாமே..!

MaaththiYosi Jeevan said...

அருமையான அழகிய கவிதை. அந்த உவமைகள் எல்லாமே கலக்கல்!! புதிய புதிய சொல்லாட்சிகளை அறிந்திட்டேன் அண்ணா!!!!

MaaththiYosi Jeevan said...

நிகழ்நிலை தவறி 
சுயம் மறந்துபோனவன் ///

அருமையான சொல்லாட்சி! இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை !!!

athira said...

//பொய்யன் இவனென
பொய்கள் சாயமிழந்த பொழுது
முன்னிலை நிற்போரை
நோக்குதல் கூச்சமன்றோ?!!//

பொய் கூறி, பின்னர் அது தெரியவரும்போது ஏற்படும் அவமானத்தை, அழகாக ஒவ்வொரு பந்தியிலும் சொல்லிட்டீங்க...

athira said...

//உற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!//

உண்மையேதான்ன்ன்.

சீராளன் said...

உன்னிலை தவறி
உண்மைகளை மறைத்து
பொய் பூக்களுக்கு நீரூற்றுவதால்
வீசும் மணத்திற்கு வாசமுண்டோ?!!...

அழகிய கவிதைகள்
இதயம் தொட்டு செல்லும் ஏக்கங்கள்
அருமை அருமை வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் நாஞ்சில் மனோ...
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா..
தங்களின் மென்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் தனபாலன்...
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராஜி...
அன்பான கருத்துக்கு அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி..
தங்களின் மேலான கருத்துக்கு அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்..
அழகிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி...
ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
அழகான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சீனி ..
தங்களின் இனிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி...
தங்களின் அற்புதமான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும்
பாராட்டுக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்...
அன்பார்ந்த கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி மாதேவி...
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் குட்டன்...
தங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி...
அன்பார்ந்த கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தம்பி ராஜீவன்/மணி...
தங்களின் அழகிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அதிரா...
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சீராளன்..
தங்களின் அழகிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இதயம் தொட்ட
அருமையான
கவிதை ஐயா
நன்றி

மகேந்திரன் said...

இனிய வணக்கம் பாவலர் கரந்தை ஜெயக்குமார்...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

Seeni said...

arumaiyaana kavithai sako...!

அன்புடன் மலிக்கா said...

உற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!

உண்மைதான் சகோ
பொய்யுரைக்கும் சமயமும், பொய்யுரைப்பதை கேட்க்கும்
சமயமும்,நெருப்புக்குள் நிற்பதுபோன்றொதொரு உணர்வுகள் ஏற்படும்..

அருமையான வரிகள் சகோ.

சின்ன பிழை திருத்தம் செய்யவும் சகோ..உண்மை என்று மாற்றவும் //உற்ற உணமைகளை//

kuppusamy said...

படித்தேன் உங்கள் கவிதைகளை. அற்புதம். பாராட்டுக்கள். மிக்க நன்றி.

Post a Comment