Powered By Blogger

Tuesday, 15 October 2013

நிழற்படக் கவிதைகள் - 3



சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் வெளியிட்ட
படக்கவிதைகள் இங்கே தளத்தில் இப்போது.....







அமிலக் கரைசல்!!!


னடா அழுகிறாய்?!
வடிநீர் துடைத்திடடா
ஏகலைவன் என
பிரகடனப்படுத்தியும் - உனை
ஏய்த்துப் பிழைக்கின்றாரோ
எசமான பிண்டங்கள்! - உன்
விழிநீர் வீழ்ந்துவிட்டால்
அமிலக் கரைசலடா - அவரை
அமிழ்த்தும் கரைசலடா!!!







சாதகத் தேடல்!!


னக்கான தேடல்கள்
தொலைதூர முடிவிலியாய்!
துணையொன்று தேவையென
எண்ணித் திளைக்கையில்
மென்தோல் வருடினாய்
திண்தோள் கரம் இணைத்தாய்!
பாதத்தில் பாதம் பிணைத்து
உனைச் சுமந்துகொண்டே
தேடலில் மூழ்குகிறேன்!!!


அன்பன்
மகேந்திரன்

33 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டும் அருமை... முதல் கவிதை மனதை கலங்க வைத்தது...

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கவிதை இப்போது படித்தாலும் மனம் வலிக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

விழிநீர் வீழ்ந்துவிட்டால்
அமிலக் கரைசலடா - அவரை
அமிழ்த்தும் கரைசலடா!!!
அமில வரிகள்...!

தோட்டி said...

அருமை நண்பரே ! அற்புதமான பரிமாணம் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டுமே அருமையான ஆக்கம். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

ராஜி said...

இரண்டு கவிதைகளும் முத்துக்கள். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி அண்ணா!

சசிகலா said...

ஏனடா அழுகிறாய் ? கேள்வியும் பதிலும் சிந்திக்க வைத்தன. அண்ணா. அருமை அருமை.

தனிமரம் said...

எனக்கான தேடல்கள்
தொலைதூர முடிவிலியாய்!//வீரியம்மிக்க கவிதை வரிகள் !

Yaathoramani.blogspot.com said...

ஆழமான பொருள் கொண்ட
அற்புதக் கவிதைகள்
மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

பார்வதி இராமச்சந்திரன். said...

இரண்டு கவிதைகளும் படித்து ரசித்தேன். முதல் கவிதை மனதை உருக்கியது. இரண்டாவது கவிதை மோனத்தில் ஆழ்த்தியது. தேடலில் மூழ்குதல் மோனத் தவமன்றோ!!! அருமை!!.

arasan said...

அமிலக்கரைசல் நெஞ்சுக்குள்ளே சற்று ஆழமாய் பதிகிறது அண்ணே

இளமதி said...

அமிலக் கரைசலும் சாதகத்தேடலும்
மிக மிக அற்புதமான கவிதைகள்!

உண்மையில் அமிலக் கரைசல்
என் உள்ளத்துக்குள்ளும் சிதறிவிட்டது சகோ!...

மனம் கனக்கும் கவிதைகள்!
வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

மனத்தை கனக்கச் செய்யும் கவிதை ஐயா வாழ்த்துக்கள் நன்றி

ஷைலஜா said...

கவிதை வரிகளின் கனம் அதன் வெற்றி. வாழ்த்துகள் சகோதரரே!

கவியாழி said...

படமும் கவிதையும் நன்று

Typed with Panini Keypad

Unknown said...

இரண்டும் அருமை! அதிகம் காணவில்லையே ! ஏன்?

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் நாஞ்சில் மனோ
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் மணிவண்ணன்
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வைகோ ஐயா..
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராஜி...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சசிகலா...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா..
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்..
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தம்பி அரசன்...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஷைலஜா...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கவியாழி ஐயா...
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புடைய புலவர் பெருந்தகையே...
காலம் சற்று நாட்கள் கட்டிப்போட்டுவிட்டன...
இனி தொடர்ந்து வருவேன் ஐயா..

Post a Comment