Powered By Blogger

Sunday 24 March 2013

அகவுறை ஆற்றுப்படுகை!!!






பிறந்த இடமதை

துறந்து பாய்ந்தேன்!
திறந்த மடையாய் 
கறந்த பால்போல் 
குறவஞ்சி பாடிவந்தேன்!!

'ஆ'வென்று
அரற்றினேன் 
'ஓ'வென்று 
ஓலமிட்டேன்
'கோ'வினின்று 
தாவியபின்!!




ச்சிதனை விட்டு 
கூச்சல் தணித்து
நீச்சம் வியாபித்து 
சிச்சிலிகள் சுற்றிநிற்க 
மச்சம் சுமந்தேன்!!


ன்மம் ஈடேற்ற
மண்மிசை தவழ்ந்து
குன்னம் உறையும் முன்
காண்டிகை உரைத்திட
எண்ணம் செய்வித்தேன்!!



சுனையாக பொங்கிய நான்
அணைக்கட்டில் சிக்குண்டேன்!
திணைவழி ஏகிட
ஏனைய செயலுக்காய்
சுனைத்தெழுந்தேன் மதகுவழி!!


ழகு நடைபயின்று
கூழாங்கல் உருட்டி
கழனி வழி பாய்ந்து
உழவின் உயிரேற்றி
சோழகம் ஏந்திவந்தேன்!!




சிதறாது கரையடங்கி
சதங்கை ஒலியெழுப்பி
மிதமான வேகத்தில்
இதமாக ஓடிய நான்!
மேதகு தாகம் தணித்தேன்!!


ற்றே அகம் களைத்து
முற்றாய் உரகடல் இணையுமுன்
வற்றாத நினைவுகளுடன்
ஆற்றுப் படுகையாகி
நோற்புடை ஆழி கண்டேன்!!




கச்சுவை அரங்கேற்றிய
உகப்புறை சமவெளியானேன்!
சேகரமாய் எனக்குள்ளே
சாகரமாய் வழித்தடத்தை
போகணியில் போட்டுவைத்தேன்!!


லையகம் அவதரித்து
விலையில்லா பயனளித்து
இலையமுதம் புறம்கொண்டு
கலைக்கதிர் தொட்டிலென
தலைச்சங்கம் தாங்கி நின்றேன்!!




செங்குவளை மணமெடுத்து
பாங்குடனே முடிதரித்த
அங்குச மன்னவனாய்
எங்கனம் பிறப்பெனினும்
இங்கனம்தான் முடிவதுவோ?!!


நெஞ்சின் கனமது
பஞ்சுக்குவியல் ஆனது
எஞ்சிய உணர்வது
சிஞ்சிதமாய் ஒலிக்கிறது
துஞ்சாது என்னுள்ளே!!






சொல்லுக்கான பொருள்::

கோ               ------------------- மலை
சிச்சிலி         -------------- மீன்கொத்திப் பறவை
குன்னம்        ------------ கடல்
காண்டிகை    -------சூத்திரப் பொருளை சுருங்க உரைப்பது
சோழகம்       ---------- தென்றல்
நோற்புடை    ------ தவப்பயன் கொண்ட
போகணி        ---------- அகன்ற வாயுடைய குவளை
உகப்புறை     ----------- மகிழ்ச்சி தங்கிய
சிஞ்சிதம்       ----------- அணிகல ஒலி





அன்பன்
மகேந்திரன் 

31 comments:

அம்பாளடியாள் said...

கோ ------------------- மலை
சிச்சிலி -------------- மீன்கொத்திப் பறவை
குன்னம் ------------ கடல்
காண்டிகை -------சூத்திரப் பொருளை சுருங்க உரைப்பது
சோழகம் ---------- தென்றல்
நோற்புடை ------ தவப்பயன் கொண்ட
போகணி ---------- அகன்ற வாயுடைய குவளை
உகப்புறை ----------- மகிழ்ச்சி தங்கிய
சிஞ்சிதம் ----------- அணிகல ஒலி

ஆகா சொல்லும் பொருளும் அருமை !...
எப்படித்தான் இவைகளைக் கவிதையில் சேர்க்கின்றீர்களோ சகோதரா ?..!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் இத் திறன் பெருக வேண்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Madhavan Elango said...

அருமை நண்பா! என்ன சொல்வளம்!!!

//அழகு நடைபயின்று
கூழாங்கல் உருட்டி
கழனி வழி பாய்ந்து
உழவின் உயிரேற்றி
சோழகம் ஏந்திவந்தேன்!!//

சோழகம் - எங்கிருந்து தான் பிடிக்கிறீரோ பொருத்தமான சொற்களை?

தனிமரம் said...

அருமையான கவிதை அதுவும் மலையில் தொடங்கி முடியும் ஆற்றினை!! அருமை அருமை மனம் கனிந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

Seeni said...

அண்ணே..!
வார்த்தைகளை எப்படித்தான் தேர்ந்தேடுக்குறீங்க ...!?

படம் கூட கவிதையாக...

அருமை அண்ணே...!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

ஆற்றின் நடையை அழகுத் தமிழ்நடையில்
போற்றிப் படைத்தீா் புகழ்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கவியாழி said...

சுனையாக பொங்கிய நான்
அணைக்கட்டில் சிக்குண்டேன்!///அதனால்தானே எல்லா பிரச்னையும் .அதன் இயல்பை சரியாக சொல்லியுலீர்கள் அருமை

இளமதி said...

அன்புச் சகோதரரே மகி!
அருமையான கவி படைத்தீர்! என் வாழ்த்துக்கள்!

பெண்ணவளின் பிறப்பதனை
பேராறுக்கொப்பிட்டு
பிறழ்ந்திடாமல் அழகுடனே
பெருமையுடன் புகன்றிட்டீர்
ஆழமான சொல்லெடுத்து
அழகிய கவிதான் புனைந்தீர்
விழிகள் மூடமறுக்குதையா
விக்கித்து வார்த்தை மருகுதையா
வியத்தகு கவிசொன்ன விற்பனரே!
விளம்பினேன் என் வாழ்துகளை...

பால கணேஷ் said...

எங்கோ ஓரிடத்தில் பிறந்து, சில இடங்களில் பொங்கிப் பிரவகித்தும், சில பகுதிகளில் மென்னடை பயின்றும் மனித குலத்திற்குப் பயன்தரும் நதியின் வரலாறை அழகுத் தமிழில் படிக்க ஆனந்தம். தன் தேவைக்காக அணைக் கட்டுகள் கட்டிய மனிதன் இன்று சுயநலத்திற்காக மேன்மேலும் கட்டி, சகமனிதனை வருந்த வைக்கும் அவலமும் கூடவே மனதில் நிழலாடியது.

MANO நாஞ்சில் மனோ said...

படங்களும் கவிதை போல மிக அழகு புலவரே...

நெற்கொழுதாசன் said...

அழகு நதியாய் எழுந்தோடி நகர்கிறது கவிதையாறு.தேர்ந்த வார்த்தைபிரயோகம். தொடருங்கள் காத்திருக்கிறோம்.

jgmlanka said...

அருமையான ஆற்றுப்படுக்கையில் பயணித்த வரிகள்... அழகு.. அழகு..

இராஜ முகுந்தன் said...

அருமை அண்ணா. கவியும் தமிழ் தேடலும். வாழ்த்துக்கள் அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

படங்கள் அதை விட அருமை...

சொல்லுக்கான பொருள்களுக்கு மிக்க நன்றி...

Unknown said...

சங்கத்தில் பாடாத
கவிதை..
தமிழ் இணையத்தில் நீர் சொன்னது!

அருமை..இனிமை !

வாழ்த்துக்கள் !

உணவு உலகம் said...

நீரோட்டம் போன்றே நெகிழ்வான கவிதையாக்கம்.

பூ விழி said...

மனதை நிறைத்த கவிதை சொல்லுகான பொருளையும் வழங்கி கவிதை அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்த கவிஞ்சரே உங்களுக்கு வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களும் கவிதைதான்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்களும் கவிதையும் மனதைக் கவர்ந்தன. வாழ்த்துகள் மகேந்திரன்.

அருணா செல்வம் said...

படங்களும் அதற்குரிய பாடல்களும் அருமை அருமை.
மெய் மறந்து படித்தேன்.
வாழ்த்துக்கள் மகி அண்ணா.

மாலதி said...

அப்பப்பா காட்டாற்று வெள்ளமாய் பாயும் உங்களின் கவிதை வரிகள் இனிமையான சுவையோடு இருந்தது ....

Unknown said...

ந்தியின் போக்கை நவின்ற விதம் அருமை சொலலாடல் அருமை!

reverienreality said...

நிறைய புரியாத சொற்கள்...உங்கள் மொழிபெயர்ப்பின்(?) உதவியோடு ரசித்தேன் சகோதரரே...

kowsy said...

நீரே என்றாலும் அது பாயும் பண்பில் பலவித அழகு. அதை தொகுத்துத் தந்த உங்கள் கவிதை அழகு. கோத்துத் தந்த சொற்கூட்டம் அழகு. கண்டெடுத்த கவிதைக் கரு அழகு . மொத்தத்தில் வசந்த மண்டபம் வாரித்தரும் அனைத்துக் கவிதைகளும் அழகோ அழகு

kupps said...

கவிஞரின் தமிழ்ச் சொல்லாடல் ஆறு போலவே பாய்ந்து செல்கிறது கவிதையின் ஊடாக.என்னே தமிழ் புலமை! வாழ்த்துக்கள் பல.படங்களும் அருமை.நன்றி.

மனோ சாமிநாதன் said...

//செங்குவளை மணமெடுத்து
பாங்குடனே முடிதரித்த
அங்குச மன்னவனாய்
எங்கனம் பிறப்பெனினும்
இங்கனம்தான் முடிவதுவோ?!!//

மிக அருமையான வரிகள்!

இராஜராஜேஸ்வரி said...

அழகு நடைபயின்று
கூழாங்கல் உருட்டி
கழனி வழி பாய்ந்து
உழவின் உயிரேற்றி
சோழகம் ஏந்திவந்தேன்!!

தென்றலாய் தவழும் அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

அப்பப்பா என்ன ஓரு தமிழ் நடை...
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஷைலஜா said...

அழகானது தமிழா தமிழானதில் அழகா?
கவிதையது நதியா
தமிழதுதான் நடையா?
பேரழகுக்கவிதை!

மாலதி said...

. அப்பப்பா கடுங்கோடையில் கண்ணைக் கவரும் நீரூற்று நெஞ்சைக் கவரும் பா வரிகள். நல்ல சிந்தனை பாராட்டுகள் .

Yaathoramani.blogspot.com said...

நானும் உடன் நீந்தி மகிழ்தேன் தொடர வாழத்துக்கள்

sabeenvaleri said...

head titanium tennis racket
› product › titanium engagement rings head-titanium-arts › product › head-titanium-arts The profile of a pair of a pair of black and white tennis racket titanium vs steel designed for professional microtouch titanium trim walmart men. The pattern on titanium uses this racket has a solid trekz titanium pairing brass handle  Rating: 5 5 votes $14.99 In stock

Post a Comment