தமிழகத் தலைநகரில் ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் (26/08/2012) நடந்தேறிய
தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இன்னும் மனதில்
நிழலாடிக் கொண்டிருக்கிறது. விழாவிற்கு முந்தைய நாள்
ஊரிலிருந்து கிளம்பி விழா முடிந்து திரும்பும் வரை ஏதோ
கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வே இருந்தது.
வலையுலகில் கால்பதித்த நாள்முதல் இதுபோன்ற விழாக்களில்
கலந்துகொண்டு சக எழுத்தாளர்களை சந்திக்கவேண்டும் என்ற
எண்ணம் தலைதூக்கி இருந்தது. அதற்கு முதல் வித்திட்டது
இந்த தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு.
தலைநகரில் உள்ள அனைத்து பதிவாளர்களும் மிகமிக அருமையாக
ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவினை. விழா ஏற்பாட்டாளர்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
விழாவினில் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையின்
காணொளி வடிவத்தை இங்கே இந்தப் பதிவினில் உங்களுடன்
பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
காணொளிகளின் இணைப்பு இதோ......
உள்ளத்தின் ஊற்றில்
ஊறிவந்த உணர்வுகளை
ஊசிமுனை எழுத்தாணியால்
உலகம் அறிந்திட
உவகையுடன் துவங்கிய
வலைப்பூவின் பக்கங்களில்
வடிக்கத் துவங்கிய
விடியற்பொழுது முதல்
விழிவிரித்திருந்தேன்!!
வந்த நாள்முதல்
வாகை சூடிய வான்புகழ்
வண்ணமிகு பதிவர்களை
கண்டு களித்திட
வடிகால் தேடிய - என்
விரிந்த விழிகளுக்கு
விருந்தளித்த சந்திப்பை
விழிகள் என்றும் மறவாது!!
இன்னுமொரு சந்திப்பினை
இன்றே கண்டிடவே
இருவிழிகள் துடிக்கின்றன!!
அன்பன்
மகேந்திரன்
6 comments:
அருமையாக இருக்கிறது. மகேந்திரன். லின்க் கொடுத்தற்கு மிகவும் நன்றி.
உங்களை சந்தித்ததும் உரையாடி மகிழ்ந்ததும் நினைவில் இன்னும் சித்திரங்களாய் சுவைக்கிறது மகேன். மீண்டும் சந்தித்துப் பேச ஆவல் பீரிடுகிறது. விரைவில் காணலாம். அருமையான பகிர்விற்கு நன்றி.
வணக்கம் அண்ணே ...
உங்களை சந்தித்து பேசியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் ..
அதை போல் அறிமுகமும் , கவியரங்கமும் கலை கட்டியது ...
அருமையான கவிதை.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
இப்பத்தான் பார்த்தேன் மகி.வாழ்த்துகள் !
nalla varikal...
Post a Comment