Powered By Blogger

Thursday, 2 August 2012

துயிலெனும் தவம்!!






துயரங்கள் ஆயிரமேனும்
தும்பைமலர் கண்ணயர்ந்தால்
துயரின் வலிமைதனை
துண்டுதுண்டாய் ஆக்கிவிடும்
துயிலதுவும் ஒரு தவமே!!

சாத்திரம் பலகற்று

சூத்திரம் அறிந்தபின்னே
பாத்திர திறன்கொண்டு
முத்திரை பதித்துவிட்டால்
நித்திரை ஒரு தவமே!!
 

 


ருப்பு நிலையில்
இறுக்கம் இருப்பினும்
கருவிழியை இமைதழுவும்
இறப்பு நிலையாம் 
உறக்கம் ஒரு தவமே!!
 
நெக்குறுக்கும் நோய்களை
நெற்குளிகை தவிர்த்திட்டு
நெடுந்தூரம் விலக்கிட
நாழிகைகள் சிலவேனும்
நல்லுறக்கம் கொண்டிடுக!!
 
 


வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும் 
சுவர் அவசியமென்றால் 
தூக்கம் எனும் 
தூரிகை அவசியமே!!

திங்கள்கடந்து உறங்கும்
கும்பகர்ண உறக்கம் தேவையில்லை
சிறுயிதழ் இமைகளை
சிறுகச்சிறுக மூடித்திறக்கம்
சிற்றிறகு கோழியின்
சிறு உறக்கமேனும்
சித்தமாய்க் கொண்டிடுக!!



அன்பன்
மகேந்திரன்
 

48 comments:

ஆத்மா said...

இப்ப புத்திமதிய இப்படிச் சொன்னாத்தான் கேப்பாங்க போல....

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.

ஆத்மா said...

திங்கள்கடந்து உறங்கும்
கும்பகர்ண உறக்கம் தேவையில்லை
சிறுயிதழ் இமைகளை
சிறுகச்சிறுக மூடித்திறக்கம்
சிற்றிறகு கோழியின்
சிறு உறக்கமேனும்
சித்தமாய்க் கொண்டிடுக!! ////////

அருமை அருமை அருமை.....

vetha (kovaikkavi) said...

உறக்கத்தின் அவசியம்
கிறக்கமின்றிச் சொன்னீர்!
திறமான தவம்!...தவம்!
துறக்கின்ற தூக்கத்தால்
துறக்கும் நிம்மதி பலருக்கு.
வரமான தூக்கம் தந்த இறைவனுக்கு
நன்றி...நன்றி....
நிறைவான கவி வரிக்கும்
நல்வாழ்த்து .அருமை!!!
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

தனிமரம் said...

நித்திரையின் தத்துவம் சொல்லும் நிறைவான கவிதை தூக்கம் என்னும் தூரிகை ரசித்த வரிகள் அண்ணா!

ஹேமா said...

எனக்கு விளங்கிப்போச்சு.....யாருக்கெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறீங்களெண்டு...சரி ராக்கோழிகள் எல்லாரும் கேட்டுக்கோங்க.ஒழுங்கா இனி 8 மணிக்கெல்லாம் படுக்கைக்குப் போங்கன்னு மகியண்ணா சொல்லிட்டார்.சொல்லுக் கேட்டுப் பழகுங்கோ !

MARI The Great said...

////
வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும்
சுவர் அவசியமென்றால்
தூக்கம் எனும்
தூரிகை அவசியமே!!
////

என்னை கவர்ந்த அருமையான வரிகள் (TM 5)

Seeni said...

aahaaaa!

azhakiya kavi!

திண்டுக்கல் தனபாலன் said...

தூக்கத்தின் அவசியத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

படுத்தவுடன், எந்த கவலையின்றி நிம்மதியாக தூங்குபவன் எவரோ, அவர் தான் இந்த உலகத்தில் உண்மையான செல்வந்தர்...

வாழ்த்துக்கள்... நன்றி...
(த.ம. 7)

வெங்கட் நாகராஜ் said...

//வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும்
சுவர் அவசியமென்றால்
தூக்கம் எனும்
தூரிகை அவசியமே!!//

அருமையான வார்த்தைகள். ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேரமாவது தூக்கமிருந்தால் தான் நல்லது!

நெற்கொழுதாசன் said...

தூக்கத்தை தூரிகையாக்கிய
கவியே,
வழமை கவிதாண்டி உம்
புலமையால் உறக்கம் பாடியமை கண்டு
கிறங்கி போயிருக்கிறேன்
வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

தூக்கத்தின் அவசியத்தை அழகா சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு

ராஜி said...

ஐயோ அண்ணா, நான் சும்மாவே பல மணி நேரம் தூங்கும் தூக்கப்பிரியை. இன்னும், தூக்கத்தோட நன்மைகள்ன்னு பட்டியல் போட்டு கவிதை வேற எழுதிட்டீங்களா? இதையே சாக்கா வெச்சு இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவேன்.

பால கணேஷ் said...

ஹி... ஹி... தங்கை ராஜியோட டைப்தான் நானும். இரவில அதிகம் கண் விழிக்காம, நெட்ல அலையாம உறங்கப் போன்னு நீங்க சொன்னதா எடுத்துக்கறேன். அழகான வார்த்தைக் கோர்வை அருமை மகேன்.

sathishsangkavi.blogspot.com said...

// சூத்திரம் அறிந்தபின்னே
பாத்திர திறன்கொண்டு
முத்திரை பதித்துவிட்டால்
நித்திரை ஒரு தவமே!!//

உண்மையான வரிகள்...

கீதமஞ்சரி said...

தூங்காதே, தூங்காதே என்று சொல்பவர்களுக்கு மத்தியில் தூக்கத்தின் மகிமை சொல்லி, தூக்கத்தின் துதி பாடும் கவிதை. பாராட்டுகள் மகேந்திரன். படங்கள் கொள்ளை அழகு. குழந்தைத் தூக்கமும் கோழித்தூக்கமும் அசத்துது.

Anonymous said...

கோழித் தூக்கம் , நெடுந் தூக்கம் என அனைத்துமே இங்கு உண்டு.
காலத்திற்கேட்ற கவிதை அருமை மகி அண்ணா . !

அருணா செல்வம் said...

துயரங்கள் ஆயிரமேனும்
தும்பைமலர் கண்ணயர்ந்தால்
துயரின் வலிமைதனை
துண்டுதுண்டாய் ஆக்கிவிடும்
துயிலதுவும் ஒரு தவமே!!

துயரங்கள் துாங்கவிடாமல்
தடுத்தாலும்...
கோழி துாக்கமாவது கிடைக்காதா
என்று நாளும் மனம் ஏங்குதே நண்பரே...
துாக்கம் துளைத்திருந்தாலும்
உங்கள் பாடல் தாலாட்டுகிறது நண்பரே.

கவி அழகன் said...

Anna nenka enkirunthalum nalla iruppinka. Intha kavithaiyai muthal amma ku vasichu kaddanum

அம்பாளடியாள் said...

தூக்கத்தின் அவசியம் உணர்த்தி நிற்கும் கவிதை அருமை!..தொடர வாழ்த்துக்கள் சகோ .

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

சசிகலா said...

உறக்கத்தின் உண்மை உணர்த்தி ஆரோக்கித்தின் மகத்துவம் விளக்கி சொல்லும் வரிகள் அருமை அண்ணா.

Anonymous said...

சிறுயிதழ் இமைகளை
சிறுகச்சிறுக மூடித்திறக்கம்
சிற்றிறகு கோழியின்
சிறு உறக்கமேனும்
சித்தமாய்க் கொண்டிடுக!!

இந்த ஐந்த வரிகளில் வாழ்வியலையும் அறிவியலையும் இணைத்துவிட்டீர்கள் .. அருமையான கவிதை சகோ. உங்களையும் இத்தளத்தையும் கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமையான தலைப்பு! த‌லைப்பிலேயே க‌விதை இருக்கிற‌து! ந‌ல்ல‌ தூக்க‌த்திற்கும் த‌வ‌ம் செய்திருக்க‌ வேன்டும்! நீங்க‌ள் சொல்லியிருக்கிற‌ மாதிரி கும்ப‌க‌ர்ண‌த்தூக்க‌ம் தேவையில்லை, மென்னுற‌க்க‌த்திற்கும் நிச்ச‌ய‌ம் த‌வ‌ம் செய்திருக்க‌ வேண்டும்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் அருமையான கவிக்கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
சரியாப் போச்சு..
நான் தங்கை கலைவிழிக்கு இதை சொல்லவேயில்லை...
ஆமா ஆமா

தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
சரியாக கருத்துரைத்தீர்கள்...
மெத்தைய வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல
அப்படின்னு சொல்வது போல...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நெற்கொழுவான்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் அழகிய கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புத் தங்கை ராஜி,
உங்களுக்காகத்தான் கடைசியில்
கும்பகர்ணத் தூக்கம் வேண்டாமென்று சொல்லியிருக்கேன்..
ஆயினும் தூக்கம் நல்ல விஷயம்..
நல்லா தூங்குங்க..
மனம் புத்துணர்வாய் இருக்கும்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்கை எவ்வழியோ அண்ணனும் அவ்வழியா...
நல்லது..
தங்களின் அருமையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சங்கவி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தூங்காதே தூங்காதே
விழித்துக்கொள் என நம்பிக்கை ஊட்டும்
அந்த வார்த்தைகள் பெரியோர்கள் பாடியிருக்கிறார்கள்...
ஆனாலும் அதை செய்யாது இருந்தால் விளையும் கெடுதல்களையும்
சொல்ல வேண்டும் இல்லையா..
அதன் விளைவுதான் இது...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது உங்களைக் கண்டு..
நலம்தானே..
தங்களின் அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
வாருங்கள் நண்பரே..
வசந்தமண்டப தாலாட்டு உங்களுக்கு எப்போதும்
உண்டு..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கவி அழகன்,
வாசித்து காண்பியுங்கள் நண்பரே..
அதற்காக கும்பகர்ணத் தூக்கம் கொள்ளாதீர்கள்....
தேவையான தூக்கம் உடலுக்கு நல்லது...
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,

தங்களின் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் இக்பால் செல்வன்,
வருக வருக .. வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது..
இனிய கருத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

ம.தி.சுதா said...

ஆரயைான வரிகள் அண்ணா

ஃஃஃஃதிங்கள்கடந்து உறங்கும்ஃஃஃ

இந்த அடியிடல் காலைப் புலர்வையா சுட்டுகிறது?

Athisaya said...

குட்டித்தூக்கமும் குட்டி சுவர்கமே!அழகாக வகைப்படுத்திக்கொண்டீர்கள்.அருமை அருமை சொந்தமே!!!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும்
சுவர் அவசியமென்றால்
தூக்கம் எனும்
தூரிகை அவசியமே!!

தூரிகையின் தூக்கம் !1

Post a Comment