Powered By Blogger

Friday, 6 April 2012

இலையே ....நீ....இலை தானா??!!







ங்கம் வளர்த்த தங்கத்தமிழின்
நுங்குச் சுவையை!
எண்ணித் திளைக்கையிலே
இன்னுயிரும் ஆங்கே
தன்னிலை மறந்துபோகும்!! 
 
ன்னுயிர் தீந்தமிழே
உன்னில் நானோ
சொற்சுவை வியந்திடவா?!
பொருட்சுவை வியந்திடவா?!
சொல்லும் பொருளும் கலந்த
மொழிச்சுவை வியந்திடவா?!!
 

 


பொருளுக்கும் உறவுக்கும்
ஏனைய மொழிகள்
ஒற்றைச் சொல்லால் அடக்குகையில்!
அங்கனம் அல்ல தமிழா!
ஒன்றனுக்கு பலசொல் உண்டென
நீ கூற நான் வியந்தேன்!!
 
தாவர உடற்கூற்றில்
பச்சையத்தை மேனியில்
தாங்கிநிற்கும் இலைகளுக்கும்
பலசொல் உண்டா என ?
பாங்காக வினா தொடுத்தேன்!
உண்டென இயம்பி
என்னறிவு புகுத்தினாய்!!
 
 
வாழையடி வாழை என
உவமை பெற்ற வாழையும்!
அகலக் கிளைபரப்பி
மண்ணையும் வளமேற்றி
தன்னையும் வளமேற்றும்!
மரங்கள் கொண்டதெல்லாம்
இலைகள் என அறிந்திடுக!!
 
 
புவியின் மேற்பரப்பை
கொழுகொம்பாய்க் கொண்டு!
வளர்ச்சியில் எல்லையற்று 
புவி ஈன்றதோ?! தான் ஈன்றதா?! என 
அறிந்திட இயலா  
கைகளை ஈன்றுவக்கும்
கொடிகள் கொண்டதெல்லாம்
பூண்டு என அறிந்திடுக!!
 
 
டையற்று நிர்மலமாய்
உவர்நீர் வடித்தவளை!
பச்சை பட்டு போர்த்தி
மானம் காக்கும் நன்மகவாய்!
இடைவெளி சிறிதின்றி
புவிப்பரப்பில் வளர்ந்திடும்
கோரை அருகு கொண்டதெல்லாம்
புல் என விளங்கிடுக!!
 
 


டினத்தின் உவமைக்கு
இயற்கைப் பொருளாய் அமைந்த!
நிலமகளின் மேனியிலே
வீக்கம் கொண்டது போலவாம்!
மலைகளின் வாசத்தில்
வேர்களை ஊடுருவி
வானுயர வளர்ந்து நிற்கும்!
பெரும் விருட்சங்கள் கொண்டதெல்லாம்
தழை என இயம்பிடுக!!
 
 


மானுடப் பிறப்பின்
வாழ்வின் நிலைப்பாட்டிற்கு
அடிப்படைத் தேவையாம்!
பசிக்கையில் புசித்திட
உழவனெனும் இறைவன் படைத்த!
நெல் கேழ்வரகு எனும்
தானியங்கள் கொண்டதெல்லாம்
தாள் என அறிந்திடுக!!
 
 
வானுயர்ந்து வளர்ந்து
உச்சிக்கு மேலே  
உயரக் குடை பிடித்தாற்போல்!
தான்கொண்ட பாகங்கள் 
சிறிதேனும் மீதின்றி 
தனைவளர்த்த மனிதனுக்காய் 
ஈந்து இன்பம் பெரும்!
தென்னை பனை கொண்டதெல்லாம் 
ஓலை என விளங்கிடுக!!
 
 
சாலை ஓரங்களில் 
கேட்பதற்கு ஆளின்றி 
இங்கு நான் கண்டதெல்லாம் 
எனது தேசமென!
பரந்து விரிந்து வியாபித்து
வளர்ந்து குவிந்திருக்கும் 
சப்பாத்தி தாழை கொண்டதெல்லாம் 
மடல் என இயம்பிடுக!! 


யர உயர வளர்ந்தும் 
உடல்பருமன் சிறுத்தும்!
வாழ்வினில் சிலநிலை கடக்க
இதைப்போல் வளைந்துகொடென
பெயர்பெற்ற நாணலும்!
தோலின் வண்ணம் கருத்திருப்பினும்
கொண்ட உடல்முழுதும்
வளர்த்தவனுக்கு இன்முகத்தோடு!
இனிக்க இனிக்க உணவை மாறும்
கரும்பினம் கொண்டதெல்லாம்
தோகை என விளங்கிடுக!!
 
 


சிறிய மரமெனினும்
சின்னஞ்சிறு செடியெனினும்
விதைத்திட்ட சிலநாளில்
விதைகீறி துளிர்த்து
பச்சையத்தை தன்னுள்ளே
இச்சையாய் பூண்டிருக்கும்
அகத்தி பசலை மணல்தக்காளி
ஆகியவை கொண்டதெல்லாம்
கீரை என இயம்பிடுக!!


 
அன்பன்
மகேந்திரன்  

79 comments:

கவி அழகன் said...

Wow supper, thamil padame kavithaiyai keep it up

நம்பிக்கைபாண்டியன் said...

தமிழின் சிறப்பு பசுமையான வரிகளாய் மிளிர்கிறது!

இராஜராஜேஸ்வரி said...

வசந்தம் வீசும்
வளமையான தமிழ்
அமுத மொழியில்
எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்!

லதாராணி(Latharani) said...

இலை, தழை, மடல், கீரை , தொகை, தாள், ஓலை, புள், பூண்டு என அஹ்சகிய இலக்கண விளக்கம் கண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி...! வாழ்த்துக்கள்

My blog: http://latharaniyinsorchithirangal.blogspot.in

தனிமரம் said...

இலையில் இத்தனை வகையா தெளிவு பெற்றேன் கவிதை படித்து வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக அழகான கவிதை. படித்தேன். ரஸித்தேன். மிகவும் பிடித்த வரிகள்:

//உடையற்று நிர்மலமாய்
உவர்நீர் வடித்தவளை!
பச்சை பட்டு போர்த்தி
மானம் காக்கும் நன்மகவாய்!
இடைவெளி சிறிதின்றி
புவிப்பரப்பில் வளர்ந்திடும்
கோரை அருகு கொண்டதெல்லாம்
புல் என விளங்கிடுக!!//

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மகிழ்ச்சி ஏற்படுத்திய பகிர்வுக்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

ஐயா கவிஞரே உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் வெறும் கவி இலக்கியமன்று. தமிழின் சிறப்புக்கூறும் ஆவணப்படுத்தப்பட்வேண்டிய இலக்கணங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நாளும் நாளும் உங்கள் எழுத்துக்களால் உங்கள் மீது நான் கொண்ட மதிப்பு வளர்ந்துகொண்டே செல்கிறது நண்பரே..

தேவையான பதிவு.
அழகாகச் சொன்னீ்ர்கள் நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக அழகான கவிதை ! எத்தனை அற்புதமான வார்த்தைகள் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Anonymous said...

ஒவ்வொரு சொல்லிற்கும் பற்பல அருத்தங்கள் உண்டு. ஓய்வான நேரத்தில் அகராதி புரட்டினால் ஆச்சரியங்கள் விரியும். இதை கவிதையாய் எழுதிய முறை சிறப்பு வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

ஒவ்வொரு சொல்லிற்கும் பற்பல அருத்தங்கள் உண்டு. ஓய்வான நேரத்தில் அகராதி புரட்டினால் ஆச்சரியங்கள் விரியும். இதை கவிதையாய் எழுதிய முறை சிறப்பு வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

வெங்கட் நாகராஜ் said...

அப்பப்பா.... நம் தமிழில் தான் எத்தனை எத்தனை வார்த்தைகள். இலைக்கு எத்தனை எத்தனை பெயர்கள். அத்தனையும் கவிதை மூலம் எங்களுக்கு எடுத்து இயம்பிட்ட நீவிர் வாழ்க!

கூடல் பாலா said...

அடேங்கப்பா ...இலைகளுக்குத்தான் எத்தனை பெயர்....தமிழ் மொழியை என்னவென்று புகழ்வது...பாராட்டுக்கள்!

kowsy said...

மண் மேல் மலர்ந்திருக்கும் பசுமைக் கோலங்கள் உங்கள் மனமேட்டில் பூத்ததனால் கணனித் திரையில் எங்கள் கண்களுக்கு விருந்தாகியதோ . செப்பனிட்ட சொல் ஓவியங்கள் சிந்தனைக்கு விருந்தாகியது. எம்மொழியில் பார்த்தாலும் இச் சிறப்பு நாம் காணக் கூடியதாக உள்ளது. தொடரட்டும் சொல் வடிவங்கள் சொக்கிப்போக நாம் இருப்போம்

kowsy said...

மண் மேல் மலர்ந்திருக்கும் பசுமைக் கோலங்கள் உங்கள் மனமேட்டில் பூத்ததனால் கணனித் திரையில் எங்கள் கண்களுக்கு விருந்தாகியதோ . செப்பனிட்ட சொல் ஓவியங்கள் சிந்தனைக்கு விருந்தாகியது. எம்மொழியில் பார்த்தாலும் இச் சிறப்பு நாம் காணக் கூடியதாக உள்ளது. தொடரட்டும் சொல் வடிவங்கள் சொக்கிப்போக நாம் இருப்போம்

Admin said...

அருமை அருமை தோழர்..அழகாக சொன்னீர்கள்..ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தது..சிறப்பு..

முத்தரசு said...

இலை கவிதை அடேங்கப்பா.....தெரிந்துகொண்டேன்...நன்றி

ஆத்மா said...

மிக அருமையான பதிவு....
இந்த வசந்தகாலத்திற்குப் பொருத்தமான பதிவு//
பச்சை படங்கள் அனைத்தும் சூப்பர்

Seeni said...

பிரமாதம்!
படங்களும்-
அறிந்திடாத -
தமிழ் பேர்களை அறிய -
செய்தமைக்கு !
நன்றி-
உங்களுக்கு!

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Prem S said...

இலைக்கு இத்தனை பெயரா உங்கள் பதிவுகள் அனைத்தும் குறித்து வைத்து கொள்ள வேண்டியவை குதிரை க்கு அடுத்து இதுவென நினைக்கிறேன்

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
இலையில் இத்தனை வகையா? உங்கள் பதிவுகள் எல்லாமே பொக்கிஷம்தான்..!!!!

குறையொன்றுமில்லை. said...

மிக அழகான கவிதை ! எத்தனை அற்புதமான வார்த்தைகள் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Anonymous said...

ambuttukum paeyar ilaithanooooooooooooo ..supper annaa ...supperaa irukku ...kalakkunga

அருணா செல்வம் said...

“என்னுயிர் தீந்தமிழே
உன்னில் நானோ
சொற்சுவை வியந்திடவா?!
பொருட்சுவை வியந்திடவா?!
சொல்லும் பொருளும் கலந்த
மொழிச்சுவை வியந்திடவா?!!“

நானும் வியக்கின்றேன்!!!

Unknown said...

இலைநிகர் கவிதை-என்றே
இலைகளைப் பற்றி
வலைதனில் வடித்தீர்-நான்
வாழ்த்திட நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் யாதன் ராஜ்,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
எண்ணி எண்ணி வியக்கும் அளவுக்கு
சொல் வளம் குவிந்து கிடக்கிறது
சகோதரி நம்மொழியில்...
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி லதாராணி,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது..
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நேசன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வை.கோ ஐயா,
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது போல்
ஆனது எனக்கு...
கவிதை உங்களை மகிழ்வுபடுத்தியதற்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
இதைவிட வேறு என்ன எனக்கு பட்டம் வேண்டும்..
நிச்சயம் ஆவணப் படுத்துகிறேன் ஐயா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
இந்தக் கருத்துக்குத்தான் நான் என்ன தவம் செய்தேன்..
என் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு என்
சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல்தனபாலன்,
வியக்கவைக்கும் மொழி தான் தமிழ்..
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தமிழின் சொல்வளமும் பொருள்வளமும்
நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பது
உண்மை நண்பரே.
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் கவித்துவமான கருத்து வரிகள்
என்னை மேலும் பட்டை தீட்டுகிறது...
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
வியந்து ரசித்து அழகிய கருத்திட்டமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனசாட்சி,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
வியந்து ரசித்து அழகிய கருத்திட்டமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
தொடர்ந்து வந்து என் மனம் நிறைத்தமைக்கும்
அழகிய கருத்திட்டமைக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்கள் என் மீது வைத்திருக்கும் தொடர் நம்பிக்கைக்கும்
அழகிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
வியந்து ரசித்து அழகிய கருத்திட்டமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தமிழே நேரில் வந்து வாழ்த்தியது போல்
இன்பம் கொண்டேன் ஐயா..
தங்களின் கவிக் கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Unknown said...

நன்றாக அறிந்தேன்

அனைத்தும் அருமை

இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

vimalanperali said...

பச்சைகள் எப்போதும் பலன் தருபவையாகவே/இன்னும் சொல்லப்போனால் பச்சையில் பாதி நமது உடலை பராமரிப்பு செய்பவையாக/நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

போதிவர்மா said...

தமிழ் வளர்க்கும் தங்கள் பணி தொடரட்டும் நண்பரே.
போதிக்க வருவான் போதிவர்மா

ஹேமா said...

மகி....உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள்.சாதாரணமாக இலை,குழை மட்டுமே தெரியும்.அதற்குள் இத்தனையா !

arasan said...

வணக்கம் அண்ணே ..
நான் ஊரில் அறிந்து வைத்து இருந்தேன். இருந்தும் இவ்வளவு அழகியலாய் கூறி படிப்போரை
வசப்படுத்தி விட்டிர்கள் ...
படங்களும் கண்ணை பறிக்கின்றது .. வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
அழகான கருத்துரைத்தீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் போதிவர்மா,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
இதைவிட எனக்கு என்ன பாராட்டு வேண்டும்.
தாங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் அழகிய
கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் அரசன்,
அழகான கருத்துரைத்தீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலதி said...

மிகவும் சரியாய் சொன்னீர்கள் தமிழில் வணக்கம் என எல்லா நேரங்களிலும் கூறலாம் ஆனால் ஆங்கிலத்தில் நேரத்திக்கு ஏற்ப நடிக்க வேண்டும் மாமாவை , சிறிய தந்தையை எப்படி அழைப்பது இப்படி குழப்பும் மொழி நீக்கி வளம் கொழிக்கும் தமிழை வளர்ப்போம் காப்போம் மீட்ப்போம் .

Anonymous said...

ரசிக்கும் படி பாடம் எடுத்து கவிதை நினைவில் நிற்கிறது சகோதரா...

இப்போதெல்லாம் நிறைய கற்றுக்கொள்கிறேன் உங்களிடம் இருந்து...


வாழ்த்துகள் சகோதரா...

கீதமஞ்சரி said...

மனிதர் என்ற பொதுப்பெயருள்ளும் வேறுபட்டு நிற்கும் மனங்களைப்போல் இலை என்னும் பொதுப்பெயருள் வேறுபட்டு நிற்கும் இயல் தன்மைகளை ஒத்திசைத்துப் பார்க்கிறேன். வியப்புதான் மிஞ்சுகிறது. தமிழ்ச் சொற்களைப் பலரும் அறிந்துகொள்ளும் வண்ணம் சுவைபடத் தரும் தங்கள் முயற்சிக்குத் தலைவணங்குகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.

ராஜி said...

இலைக்கு இத்தனை பெயர்கள் தமிழில் உள்ளாதென இன்றுதான் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ

Unknown said...

ஆகா இத்தனையும் இலையின் மகிமைதானா அண்ணா. சங்கம் தொட்டு இப்போ வரைக்கும் புகழ் பெற்றது நம் வெற்றிலையன்றோ கிரா மணம் கமழும் மருத்துவ அலையும் இதுவன்றோ.... அருமையான பதிவு அண்ணா

சசிகலா said...

அண்ணா படமும் பதிவும் அருமை . எனக்குத் தெரிந்ததெல்லாம் வாழை இலை மட்டுமே இப்போதே தெரிந்து கொண்டேன் இலைகளின் மகிமையை .

Yaathoramani.blogspot.com said...

சிந்திக்கச் செய்து போகும் பதிவு
நீங்கள் குறிப்பிடும் மூவருமே காரணம் என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 18

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
அழகான கருத்துரைத்தீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
மொழிகளில் பல வளமைக்காக திண்டாடுகையில்
நம் மொழி அதற்காக பல சொற்சுவைகளை காட்டி
நிற்பது நமக்கெல்லாம் பெருமிதமே..
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தமிழின் சுவைய எவ்வளவு
புகழ்ந்து எழுதினாலும் தகும்.
தங்களின் அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி எஸ்தர்,
வெற்றிலைக்கு நிகர் உண்டா....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

arul said...

valaicharam moolam intha blog arimugam superb kavithaigal

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இலை,தழை,தோகை,புல்......எல்லாம் அழகாய் விளக்கிவிட்டீர்கள்..அதுவும் இனிய கவிதையில். ..நன்றி சகோ

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html?showComment=1394170736456&m=1#c2285551787432289175
நன்றி
அன்புடன்
ரூபன்

Post a Comment