Powered By Blogger

Thursday, 29 March 2012

குதிரையின் குறிச்சொற்கள்!!







பிடரிமயிர்கள் சிலிர்த்து
ஓடும் குதிரையை
விழிபிதுங்கப் பார்த்தேன்!
கம்பீரம் என்பதன்
பொன்னான பொருளதனை
அன்றுதான் அறிந்துகொண்டேன்!!
 
தைகள் புடைத்து
முதுகை உலுப்பி
புவியின் மேற்பரப்பில்
பூகம்பம் வந்தது போல்
குளம்புகள் உரசி
விரைந்திடும் அழகை
கண்டு ரசித்திருந்தேன்!!
 

 


நாசியின் வழியே
புயலின் மறுவுருவாய்
சுவாசத்தை வெளியேற்றி
வாலின் கோணத்தை
செங்குத்தாய் நிலைப்படுத்தி
காற்றுக்கு இணையாய்
ஓடும் அழகை
கண்டு வியப்புற்றேன்!!
 
 
லிமையின் பொருளுக்கு
வாய்மொழி உதாரணமே!
உன்பெயர் குதிரை தானா??!!
இதற்கு மேலும் பெயருண்டா?
வியப்பில் ஆழ்த்தும் உன்னை
குதிரை எனும் ஒரு பெயரால்
அடக்கிவிட முடியுமா??!!
 
 
ன்றனுக்கு பலபெயர் சொல்லும்
தேன் மதுரத் தமிழே!!
பாமரன் என் அறிவுக்கு
மறுபெயர் விளங்கவில்லை
வினா தொடுக்கிறேன்
விடையளிக்க ஓடிவா!!
 
பாமரப் பாவலனே!
என்னுயிர்க் காவலனே!
விளம்பிடுவேன் செவியேற்க
பார்வென்ற மன்னவரின்
படைதனுக்கு வலுவமைத்த
குதிரையின் பெயர்களை!!
 
 


முன்னங்கால் உயர்த்தி
முன் நிற்கும் பகைவனை
முழங்கால் போடவைத்து
தாவிச் சென்று
தன் வெற்றி அறிவித்தமையால்
குதிரை என ஆயிற்றே!!
 
 


ன்கொள்கை சரியல்ல
மாற்றிக்கொள்க என
தூது செல்லவேண்டி
கண்காணா நாட்டினுக்கு
பின்னங்கால் பிடரிபட
வாயுவின் மகவைப்போல்
விரைந்து ஓடியதால்
பரி என பெயரிட்டேன்!!
 
 


ண்டைய காலம்தொட்டு
புனிதத்தின் அடையாளத்தை
தன்னுள் பொதிந்துவைத்து
மின்னொளி வீசும் கண்களுடன்
வெண்ணிறம் கொண்டமையால்
வன்னி என அழைத்திட்டேன்!!
 
 


டைந்தெடுத்த தேக்கும்
முறுக்கிவைத்த இரும்பும்
தன் வலிமை நினைத்து
தலையைக் குனியும் வண்ணம்
வலிவுடை கால்களை
பொலிவுடன் கொண்டமையால்
கந்துகம் என விளம்பினேன்!!
 
 


திர்நிற்கும் மன்னவனின்
படைபலம் இன்னவென
பகுத்தறிந்து பார்த்திட
இயலவில்லை எனினும்
பின்னோக்கிப் போகாது
மார்நிமிர்த்திப் களத்திலினிலே
புரிசமர் புரிந்ததால்
இவுளி என பெயரிட்டேன்!!
 
 
மரோன் அழிந்தபின்னும்
சமர்புரி களம் அங்கே  
சாக்காடு ஆனபின்னும்
சினம் தணியாது
சாகசம் புரிவதுபோல்
மதில் தாண்டி செல்வதால்
புரவி என ஆயிற்றே!!!
 
 


ர் உழுதமையால்
கலிமா எனவும்
தூதுவனை தன்மேல்
தாங்கிச் சென்றமையால்
துரகம் எனவும்
பெயரிட்டு வைத்தேன்
செவிமடுத்த என்மகவே!!


அன்பன்
மகேந்திரன் 

76 comments:

Anonymous said...

குதிரையின் பல பெயர்கள் அறிந்தேன். கவிதை நடை அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

ஹேமா said...

கம்பீரமான படங்கள்.இவுளி,துரகம் போன்ற பெயர்கள் குதிரைக்கான பெயர்கள் என்று இன்றுதான் அறிகிறேன்.அழகாகத் தொகுத்தெடுத்துக் கவிதையாக்குகிறீர்கள் மகி.பாராட்டுக்கள் !

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா குதிரைக்கு கவிதையா...!!! அதுக்கு இத்தனை பெயர்களா...!!!

மிகவும் ஆச்சர்யமான கவிதை மக்கா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

Unknown said...

புரவி பரி என சில பெயர்கள்தான் தெரியும்...இத்தனை பெயர்களா? கவிதையும் இலக்கியத் தரம்!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணா, நல்லா இருக்கிறீங்களா?

நான் நலமே!

தமிழ் உலகில் இதுவரை யாருமே செய்திராத அரிய முயற்சியினை இக் கவிதையில் செய்திருக்கிறீங்க.

சிறுவர்களுக்கும், பெரியோர்களுக்கும் இலகு நடையில் குதிரையின் பாகங்களை, குணங்காளை நினைவில் வைத்திருக்க வேண்டுமானல் இப்படி ஓர் கவி அவசியம் என்பதற்குச் சான்றாக உங்கள் கவி உள்ளது!

வாழ்த்துக்கள் அண்ணா.

Unknown said...

மாப்ள எம்புட்டு பெயர்கள் அடக்கிய குதிரைகவிதைய்யா!

கூடல் பாலா said...

குதிரையின் வெவ்வேறு பெயர்களும் அதற்கு விளக்கங்களும் அருமை!

குறையொன்றுமில்லை. said...

குதிரையின் பல பெயர்கள் அறிந்தேன். கவிதை நடை அருமை. வாழ்த்துகள்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
குதிரைக்கு இவ்வளவு பெயர்களா? ஆச்சரியம்தான்!!!

Unknown said...

சாண்டில்யனின் கதைகளைப் படிக்கும் போது எழும் புரவிகளைப் பற்றிய எதிர்பார்ப்பு,அவற்றை நேரில் பர்க்கும்போது ஏற்படும்பிரமிப்பு வார்த்தைகளால் விளக்க முடியாது!

குதிரை ஒரு அதிசயமான மிருகம்தான்!
அதை வார்த்தைகளில் வடித்தமையும் அருமைதான்!

வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

வாகனங்களின் சக்தியைக் ’குதிரைச் சக்தி’
என்று குறிப்பிடுவதிலேயே,எல்லாம் அடங்கி விட்டது!மிக அருமையான கவிதை!

arasan said...

வணக்கம் அண்ணே ..
தங்களின் இந்த கவிதையின் ஊடாக நான் நிறைய செய்தி அறிந்து கொள்ள முடிந்தது ,,
என் நன்றிகள்

Ahila said...

ஆஹா...அருமை மகேந்திரன்.....

மும்தாஜ் said...

குதிரைக்கு இவ்வளவு பெயர்களா???தங்களின் இந்த கவிதையால் அறிந்து கொள்ள முடிந்தது ...
நன்றிகள்....

ஆத்மா said...

மிக அருமையான கவிதை குதிரைக்கு இவ்வளவு பெயரா..... மிக்க நன்றி சகோ

Unknown said...

பரியின் பெருமை அதை
விரிவாய் விளக்கியே - கவி
புரவி ஏறி விரவி வந்தத் திறம் -மனம்
நிரவி நிற்கின்றது நினது
அழகு கவியே...

அருமை அருமை அருமை
நன்றிகள் கவிஞரே!

சசிகலா said...

இன்று தான் இந்த பெயர்களை அறிந்து கொண்டேன் . படங்கள் மிகவும் அருமை அண்ணா.

கீதமஞ்சரி said...

குதிரையின் பல்வேறு பெயர்களையும் குறிப்பிட்டதோடு, அழைத்தேன், விளம்பினேன், பெயரிட்டேன் என்று சொல்லிலும் ஜாலம் காட்டுகிறீர்கள். தமிழிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கிய அழகு கவிதை நடை. தமிழ்ச் சொற்களின் சிறப்பை எடுத்தியம்பும் தங்களது கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.

Yaathoramani.blogspot.com said...

குதிரைக்கு இத்தனைப் பெயர்களா/அரிய தகவல்/
சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
உங்கள் மூலம் பல தமிழ் சொற்கள் அறிய முடிகிறது
பகிர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்

Seeni said...

குதிரை பற்றி இத்தனை
விட்டேன்-!

அருமை!

Unknown said...

குதிரை கவிதை அருமை

தனிமரம் said...

குதிரையின் பலபெயர்களை இனிய தமிழில் பாங்காய் கவிவடிவில் படங்களுடன் பகிர்ந்த விதம் கண்டு மனம்களித்தேன்! வாழ்த்துக்கள் அண்ணா!

Anonymous said...

அண்ணா இப்போது தான் இம்புட்டு பெயர்களையும் அறிந்தினனேன் ...சுப்பர் அண்ணா ...

கவிதை எப்புடி அண்ணா இப்புடிலாம் எழுதுறிங்கள்

இராஜராஜேஸ்வரி said...

கம்பீரம் என்பதன்
பொன்னான பொருளதனை
அன்றுதான் அறிந்துகொண்டேன்!!

கம்பீரமான கவிதை..

Prem S said...

குதிரைக்கு இத்தனை பெயர்களா நான் அறியாத பல பெயர் உள்ளது அருமை

துரைடேனியல் said...

அருமையான தகவல்களை கவிதை மாலையாக தொடுத்துள்ளீர்கள். குதிரைக்கு இவ்வளவு பெயர்களா? கவிதையில் தகவல் மழை. தொடருங்கள்!

துரைடேனியல் said...

தம 14.

கோகுல் said...

நலமாக இருக்கிறீர்களா?

வியக்க வைத்து விட்டீர்கள்.
கவியில் தகவல்கள்.
கருப்பொருளாக குதிரை.புதிய சிந்தனை.தொடருங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை வடிவில் அகராதியைப் படித்து மகிழ்ந்தேன் நன்று நண்பரே.

Anonymous said...

குதிரைக்கு இவ்வளவு பெயர்களா....புதிதாய் தெரிந்து கொண்டேன்...

சில கால ஓய்வுக்கு பின் பட்டை தீட்டிய வைரம் இந்த கவிதை...வாழ்த்துக்கள் சகோதரா...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,

இன்னும் சில பெயர்கள் உண்டு மக்களே..
இன்னும் பெரிதாக கவிதை நீண்டுவிடுமே என்று
விட்டுவிட்டேன்..
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நிரூபன்,
நலம் நலமே..
நலம் நாடும் எண்ணமே..

அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தமிழின் இனிமை எப்போதும் ஒரு ஆச்சர்யமே ..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
வரலாற்று நாவல் ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின்
குதிரை வர்ணனை படித்தால்... அப்படி ஒரு குதிரையை
பார்க்க மாட்டோமா என மனம் ஏங்கும்..

தங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
சரியாக கருத்துரைத்தமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் அரசன்,
தமிழில் சொல்வளம் ஏராளம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அகிலா,
தங்களின் அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
இன்னும் அத்திரி.. கோணம்.... என பல பெயர்கள்
இருக்கின்றன..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,
கவிக்கோர் கருத்துக்கவி தந்தமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தமிழின் சொல்வலத்துக்கு எல்லையே இல்லை.
அதன் ஒரு துளியை அறிந்து அதை
தெரிவிக்கவே இக்கவிதை.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வைறை சதீஷ்,
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
தேர்வுகள் நன்றாக முடிந்துவிட்டதா....
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை கலை,
எல்லாம் தானா வருது..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தமிழின் சொல்வலத்துக்கு எல்லை உண்டா நண்பரே...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
நலம் நலமே..
தங்கள் நலம் அறிய ஆவலும்..
தங்களின் அழகான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தமிழ் வந்து நேரில் வாழ்த்தியது போல்
அழகிய கருத்து கொடுத்தமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

ராஜி said...

குதிரைக்கு இத்தனை அழகான தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

Unknown said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

அம்பலத்தார் said...

அருமையான கவி வரிகளும் அதற்கேற்ற அழகான படங்களுமென உங்கள் பதிவுகளிற்கு நான் அடிமை

அம்பலத்தார் said...

குதிரையின் வலுவில் மயங்கிய மனிதன் சக்தியை அளவிட Horse power குதிரை வலு எனும் குறிச்சொல்லையே பயன் படுத்துகிறான்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சதீஷ்,
இதோ வந்துவிட்டேன் உங்கள் தளம் தேடி....

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,

ஆம் ஐயா,
இயந்திரங்களின் வேகத்தை கணக்கிட குதிரைவலு என்ற
சொல்லை உபயோகப் படுத்துவதில் இருந்து குதிரையின்
வலுவை தெரிந்து கொள்ளலாம்.

தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசிகள்
எனக்கு இருக்கும் வரை ..
என் எழுத்துக்களின் வேகம் நிற்காது..
என் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கும்
அழகான கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான, ஆச்சரியப்படுத்தும் கவிதை ! நன்றி !

vimalanperali said...

படங்களே கவிதையாகவும்,கவிதையே படங்களாகவும் நன்றாக உள்ளது.நன்றி வணக்கம்.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
குதிரைக்கு எத்தனை பெயர்க?
வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

kuthiraikku iththanai peyarkal enbathai alakaaka therivu paduththiya kavithaikku vaalththukkal

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
உளம்கனிந்த நன்றிகள்.

Carrollzivu said...

குதிரைக்கு இத்தனை அழகான தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

வெற்றிவேல் said...

குதிரையின் இத்தனைப் பெயர்களையும் சிறப்பொடு அழகா சொல்லியிருக்கீங்க அண்ணா...

சூப்பர்...

Post a Comment