விந்தையை இன்னும்
வியப்போடு பார்க்கிறேன்!
விதையிட்டு வந்தேனா?!
தான்தோன்றி சுயமாய்
நீண்டுகிடக்கும் நிலம்கீறி
தானாக வந்தேனா?!!
பிறக்கையிலே உச்சிமுகர்ந்து
பிள்ளையாய் நீ எனக்கு
வாய்த்ததெல்லாம் வரமென
வாய்பேசிய பெற்றோரே!
என்வயிற்றில் ஏன் பிறந்தாய்
என் குலப்பெருமை ஒழித்திடவா - என
வாய்குழறிப் பேசுவதேன்?!!
பிறக்கையிலே ஆண்மகனாய்
வித்திட்டு வந்தவன் தான்
வயசு ஏறிப்போக
நளினங்கள் எதேச்சையாய்
நர்த்தனம் ஆடிடவே
மரபணுக்கள் தன்னிச்சையாய்
மாற்றங்கள் செய்ததேன்?!!
பருவங்கள் மாறுமென
பாடங்கள் படித்ததுண்டு
பாலினம் மாறுவதோ
பார்த்திராத செயலிங்கு!
உணர்சிகளை உரசிப்பார்க்கும்
உடல்மாற்றம் நிகழ்ந்தபோது
தொண்டைக்குள் விக்கித்து
உதிரம் கறுத்து நின்றேன்!!
அரும்பு மீசை முளைக்கும் நேரம்
அவயங்கள் மிருதுவாய்
அசைபோட்டு நடிக்கையில்
பசைபோட்டு ஒட்டிக்கொண்ட
உணர்சிகளை கண்டே
அங்கமெல்லாம் உதறி
துணுக்குற்றுப் போனேன்!!
உடன் பிறந்தோரும்
உற்ற உறவினர்களும்
இயல்பாய் பிறந்திருக்க
இயற்கைக்கு மாறாய்
எனக்கு மட்டும்
ஏனிந்த மாற்றம்?!!
குற்றமென்ன செய்தேன் - நான்
குற்றமென்ன செய்தேன்?!
குற்றத்தின் காரணமென்ன?
குரோமோசோம்களின்
திருவிளையாடலோ?
மரபணுக்களின் மந்திரஜாலமோ?!!
அங்கம் பழுதுபெற
தங்கமே என கொண்டாடிய
உறவினர் கூட்டம்
பங்கம் விளைத்திடவே!
மங்கிப்போன கொள்கைகளால்
தங்கிப்போன அவர்களை
சொந்தம் என சொல்லிடேன் - இனி
எனக்கென இன்றே
சங்கம் தருவிக்க விழைந்தேன்!!
உயிரியல் மாற்றத்தால்
ஏற்பட்ட விளைவுதனை
நெகிழி சிகிச்சையால்
நிர்மலமாய் மாற்றி
நிமிர்ந்து பார்க்கையில்
கண்டு விழியேற்றேன்
எனக்கான உறவுகளை!!
முன்னூறு முயற்சிக்கு
முத்தாய்ப்பு பலனாய்
மூன்றாம் பாலென
முடிசூட்டிய பின்னர்
சமூகம் எனக்கிட்ட
சமாதானப் பெயர் - இங்கே
அரவாணி என்பதே!
எனக்கான கலாச்சாரம்
எனக்கான பண்பாடென
நாட்டார் வழக்கினின்று
சற்றே மாறுபட்டு
சமத்தாய் தருவித்தே!
எமக்கான சமூகத்தை
வரலாற்றின் பக்கங்களில்
சுவடாக பதித்திடவே
எழுத்தாணி எடுத்துவந்தேன்!!
பாரத அர்ச்சுனரின்
காதல் லீலையால்
வேடுவ கன்னிகைக்கு
வெளிர்நீல சிசு பிறக்க!
அங்கமெல்லாம் லட்சணமாய்
ஒருங்கே பெற்றவனை
அரவான் என்றழைக்க!!
பாரதப் போரின்
மனிதப் பலிக்காய்
சுடரொளி மன்னவனை
சூட்சுமமாய் கொன்றிடவே
சூது புனைந்தனரே!
ஓரிரவு ஒரு கன்னிகையுடன்
இல்லறம் ஈடுபட்டால்
கொலைக்களம் புகுவேன் என
அரவான் உரைத்திடவே!
மோகினிப் பெண்ணாய்
உருமாறி வந்த
மாயக் கண்ணனின்
உடலோடு பிணைந்தானே
அழகான அரவானவன்!!
அன்றே முடிவெடுத்தேன்
எமக்கான தெய்வமவன்
அன்று கூடி
அன்றே மறைந்த
அரவான் தானென்று!!
அரவான் கூடிய
மோகினிப் பெண்ணவள்
மாய கிருஷ்ணனை
அடிபோற்றி தொழுபவரே!
மாயக் கண்ணனின்
மோகினித் தோற்றம் கொண்ட
எம்மை ஏன் விலக்குகிறீர்?!!
உனக்கான அத்தனை
உரித்தான உணர்ச்சிகளும்
சற்றும் மாறாது
எமக்கும் உண்டென
சிந்தையில் பதிந்துகொள்!
சிரித்துப் புறக்கணித்து
சிவப்பு வார்த்தைகள் பேசி
எம்மை சிதறடித்து விடாதீர்!!
ஆணென ஒருபாலுண்டு
பெண்ணென மறுபாலுண்டு
அதற்கு ஈடாக
மூன்றாம் பாலும்
உண்டென உரைத்திடவே
அரசாணை பிறப்பித்து
அதனை அச்சேற்றி வைத்திடுங்கள்!
இப்புவியில் வாழ்வதற்காய்
எமக்கும் சம உரிமை உண்டென
அங்கீகாரம் கொடுத்திடுங்கள்!!
அன்பன்
மகேந்திரன்
76 comments:
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ திரட்டியில் பகிர மறக்காதீர்கள்..
சமுகம் இந்த அரவானிகளை நடத்தும் முறை அபத்தம் வலிகள் மிக்க கவிதை வரிகள் ஆதிகம் சொல்லமுடியாத உணர்வினை உங்கள் கவிதை சொல்லிவிட்டது
கருவின் குற்றம்!
தண்டனையோ உடலுக்கு!
பெற்றவரும் பால் தடுமாறியவரும்
ஆயுசுக்கும் அழும் தண்டனை!
மனித உரிமை பேணுவோரும் கண்டிலர்..
இவர்களை மானிடராய் சேர்த்திலர்!
எண்ணிக்கைக் குறைவு என
அம்பேத்கரும் கைவிட்டார்!
அரசியல் சட்டம் எழுதும்போது!
சமூக நீதியாளரும் மறந்திட்டார்!
இவர்களை மனித சமூகம் இல்லையென்று!
ஒதுக்கீடு முறையில்..சட்டமன்றம் முதல்
கடைனிலை பதவிவரை பெற்றிட
அவசர சட்டம் தேவை!
தூங்கியது போதும்!
இன்றைய சூழலில் மூன்றாம் பாலினத்தவருக்கு
நாம் கொடுக்க வேண்டிய வேண்டிய அங்கீகாரத்தைக் க்
கருவாகக் கொண்ட தங்க்கள் பதிவு மனம் தொட்டது
சொன்ன விஷயமும் சொல்லிச் சென்றவிதமும்
மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
மிகவும் மனம் தொட்டக் கவிதை. மரபணுவின் மாற்றங்களால் உருவான அவர்களை நம்மிலிருந்து ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர்களது மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட இக்கவிதைக்கு என் மனங்கனிந்த பாராட்டுகள் மகேந்திரன்.
குற்றமென்ன செய்தேன் - நான்
குற்றமென்ன செய்தேன்?!
குற்றத்தின் காரணமென்ன?
குரோமோசோம்களின்
திருவிளையாடலோ?
மரபணுக்களின் மந்திரஜாலமோ?!!
பாலினங்களின் பாகுபாட்டையும்
உணர்வுகளின் பரிணாம வளர்ச்சியையும்
அறிவியல் கலந்து
கவித்துவமாகச் சொன்னீர்கள் நண்பரே நன்று..
உயிர்களில் ஏற்றத்தாழ்வு ஏது?
நம் மனம் கற்பித்துக்கொண்ட தோற்றப்பிழையல்லவா இது என்பதை நயமாகச் சொன்னீர்கள் நண்பரே..
அருமை..
கை கால் இயலாதவர்களைவிடப் பரிதாபமானவர்கள்.அவர்களைக் கருவாயெடுத்த கவிதை மனதை நெகிழ வைக்கிறது மகி !
அவர்களும் இவ்வுலகில் ஓருயுர்தான் என உரைக்கும் கவிதை...மனதுக்கு துயரமாக இருக்கிறது! அவர்களில் நிலை பார்த்து!
அரவான் கூடிய மோகினிப் பெண்ணவள்
மாய கிருஷ்ணனை அடிபோற்றி தொழுபவரே! மாயக் கண்ணனின் மோகினித் தோற்றம் கொண்ட எம்மை ஏன் விலக்குகிறீர்?!!
அருமை ! மனதை நெகிழ வைக்கிறது கவிதை !
அருமையான கவிதை....
அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணம் நிறைய பேருக்கு இல்லையே.....
ஒரு வேளை கிருஷ்ணன் அரவாநியோ என்று யோசிக்க வைத்து விட்டீர்கள் தோழரே
கடவுளால் ஓர வஞ்சனை செய்யப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட ஓரினத்துக்காக ஓங்கி ஒரு கவிதை படித்ததும் நெகிழ்ந்தேன் சகோதரரே, மிக்க நன்றி
அரவாணிகள் பற்றிய அறிவியற் கவிதை சிறப்பு.தங்களிற்கு நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
உனக்கான அத்தனை
உரித்தான உணர்ச்சிகளும்
சற்றும் மாறாது
எமக்கும் உண்டென
சிந்தையில் பதிந்துகொள்!
சிரித்துப் புறக்கணித்து
சிவப்பு வார்த்தைகள் பேசி
எம்மை சிதறடித்து விடாதீர்!!
என்ன வலி நிறைந்த கவிதை
மிகவும் வித்தியாசமான கோணத்தில் அவசியம் சொல்லப்பட வேண்டிய கருத்துக்களை பா மழையாய் பொழிந்திருக்கிறீர் நண்பா. மூன்றாம் பாலினரின் இதயத்துக் குரலாய் ஒலித்த உங்கள் பா தந்தது நெகிழ்ச்சி.
அண்ணா ரொம்ப டச்சிங்ஆ இருக்கு அண்ணா ....மனம் கனத்துப் போச்சி ...
ஆணும் இல்லாதும்
பெண்ணும் இல்லாதும்
காணும் அலிக்கிங்கே
கவிவடித்துத் தந்தீரே
வீணல் சமுதாயம்
வேதனைகள் செய்வதனை
நாணும் படியிங்கே
நற்புத்தி உரைத்தீராம்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
யாழ் மஞ்சுவிற்கு நன்றிகள் பல
நிச்சயம் பதிவிடுகிறேன்...
அன்புநிறை சகோ நேசன்,
இவர்களும் ஒரு வகையில் உளவியல் ரீதியில்
ஊனமுற்றவர்களே என்ற எண்ணம்
நமக்கு தழைத்தோங்க வேண்டும்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் அன்பான நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
அருமையாக ஒரு கவிதை படைத்து
கருத்து அளித்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சி.
சட்டமொன்று வரவேண்டும் அதும்
சடுதியில் வரவேண்டும்...
அன்புநிறை நண்பர் ரமணி,
தொட்டுத் தொடர்ந்து வந்து எனை
கருத்தளித்து ஊக்குவிக்கும் தங்களின்
வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
ஆம் சகோதரி இங்கே அநியாயங்கள் தான்
நியாயங்களாக தித்தித்து நிற்கின்றன ...
தங்களின் பாராட்டுக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..
திருநங்கைகளின் நிலை பற்றிய அருமையான கவிதை
ஒவ்வொரு பந்தியும் ஒரு கதை பேசுகின்றது
பகிர்வுக்கு நன்றியண்ணா!
விமர்சனங்களை தாண்டிய அற்புத பதிவு வாழ்த்துகள்.
இயற்கை செய்த தவறுக்கு காலம் பூராவும் தண்டிக்கப்படும் ஒரு பிரிவினரான இவர்கள் துயரை துடைக்க அனைவரும் மனதுவைத்தால்தான் முடியும்
நம் சமூகத்தைப் பொறுத்தவரை அரவாணிகளின் நிலைமை மிகவும் மோசமானது. அவர்களின் வலியையும் வேதனையையும் எடுத்தியம்பும் கவிதையைப் படித்தவுடன் மனதை என்னவோ செய்கிறது.
பாராட்டுக்கள் மகேந்திரன் சார்!
அழகான, நெஞ்சை வருடும் கவிதை நண்பா! ம்....... அவர்களும் மனிதர்கள் தானே?
விந்தையை இன்னும்
வியப்போடு பார்க்கிறேன்!
விதையிட்டு வந்தேனா?!
தான்தோன்றி சுயமாய்
நீண்டுகிடக்கும் நிலம்கீறி
தானாக வந்தேனா?!!
வியப்பின் உச்சிக்கே எனை கொண்டு சென்ற வரிகள் . மிக மிக அருமை அண்ணா.
அரவாணிகள் பற்றிய கவிதை அருமை...அருமை சகோதரா...
அருமையான கவிதை.. அவர்களின் உணர்வை அப்படியே படம் பிடிச்சுக் காட்டுது.
வரலாறு, ஆதங்கம் , வலி, அனைத்தையும் ஒரு கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள், அருமை
அருமை.
மனசு நெகிழ்கிறது.
ஆண்டவன் படைப்பில் பேதமுண்டு என்று சொல்வதைபோல் இவர்கள் படைப்பும் . நாம் இவர்களைப்போல இல்லை என்று சொல்லி உதாரணமாக இவர்களை காட்டி விடுகின்ற மனித மனங்கள் யாரிடம் அழுவது சமூகம் மாறவேண்டும் , இல்லை நாம் மாற்ற வேண்டும் .உங்கள் எண்ணம் இவர்கள் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றட்டும்.
எழுத்துக்களில் உள்ள ஈரம் நெஞ்சை நனைக்கின்றது அண்ணா ...
உயரிய படைப்பு .. என் வாழ்த்துக்கள்
//உனக்கான அத்தனை
உரித்தான உணர்ச்சிகளும்
சற்றும் மாறாது
எமக்கும் உண்டென
சிந்தையில் பதிந்துகொள்!
சிரித்துப் புறக்கணித்து
சிவப்பு வார்த்தைகள் பேசி
எம்மை சிதறடித்து விடாதீர்!!//
மகேந்திரன்,
திருநங்கையின் குரலாகவே ஒலிக்கிறது ஒவ்வொரு வரிகளும். மேற்குறிப்பிட்ட வரிகள் என்னவோ செய்கிறது வாசகனின் மனதை.
திருநங்கைகளின் உள்ள உணர்வை உரித்து சொல்லி விட்டீர்கள் அருமை
அன்புநிறை முனைவரே,
சரியாகச் சொன்னீர்கள்.
இவர்கள் மீதான இடமாறு தோற்றப் பிழையை
சரி செய்தாலே போதும்...
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
ஊனமுற்றவர்கள் கூட ஒருவகையில் தன் நிலையை சரி செய்து
கொள்ள வாய்ப்பு இருக்கிறது...
ஆனால் இவர்களுக்கு????
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,
துயரம் தாங்க முடியவில்லை தான் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
மனித உணர்வுகளை மதித்து, மனிதனை மனிதனாக பார்க்காத எந்த ஒரு மனிதனையும், எதிர்கால சமூகம் மன்னிக்காது.
மனுஷன மனுஷனா பாக்குற பழக்கம் எப்போ நமக்கு வருமோ
மனம் கனக்கும் வரிகள்.. கவிதையாக..
மனிதர்கள் தவறு இழைப்பவர்கள் என்ற கூற்று மாறி படைத்த இறைவனே தவறு இழைத்து விட்டான் இவர்களுக்கு ...
அவர்களுடைய நிலையை கருவாக எடுத்து கவிதை படைத்த நண்பருக்கு அவர்களின் சார்பாக நன்றிகள்...
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
கண்ணன் மோகினி அவதாரம் எடுத்ததாலும், சிவன் அர்த்தநாரீஸ்வரன் ஆனதாலும் உலகில் இப்படியும் ஒரு படைப்பு உள்ளது என்பதை பறைசாற்றி உள்ளார்கள்...
இப்படியும் எடுத்துக்கொள்ளலாமே..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் கருத்து மனதுக்கு இனிதாய் உள்ளது.
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே.
அன்புநிறை தங்கை கலை,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் பெருந்தகையே,
கவிக் கருத்தால் எம் உள்ளம் நிறைத்தமைக்கு
கோடானுகோடி நன்றிகள்.
அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரோதயன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
சரியாகச் சொன்னீர்கள்.
எல்லோரும் மனது வைக்க வேண்டும்.
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கலையரசி,
தங்களின் பாராட்டுக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புநிறை நண்பர் மணி,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சசிகலா,
இயற்கையின் சதியால்..
இயபை பறிகொடுத்தவர்கள் இவர்கள்..
எல்லோரும் மனது வைத்து
வார்த்தைகளால் துவம்சம் செய்யாது
இவர்களை பாதுகாக்க வேண்டும்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் அமைதிச்சாரல்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சத்ரியன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் தொடர் ஆதரவுக்கும்,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும்.
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வே.சுப்ரமணியன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ஆனந்த,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நெஞ்சம் தொட்ட படைப்பு.
அன்புநிறை நண்பர் மோ.சி.பாலன்,
வருக வருக வசந்தமண்டபத்திற்கு
வணக்கங்கள் ஆயிரம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment