மணிமகுடம் தரித்து
செங்கோல் கைகொண்ட
மன்னராட்சி கவிழ்ந்ததுவே!
எமக்கென எம்மை
அரசாள நீவேண்டுமென
குடிமக்கள் தருவித்த
மக்களாட்சி மலர்ந்ததுவே!!
எம்குலத் தலைவனென
ஏழை பங்காளனென
ஏற்றமிகு பண்புகளை
ஏகமாய் கொண்டவரை
எம்மவனே! ஏந்தலே!
எமை ஆளவா மன்னவனே என
ஏற்றிவைத்து பார்த்திருந்தோம்!!
குறைகளை கூறிடவோர்
கொற்றவன் கிடைத்தானென!
கடவுளைப் போல் வந்தவனை
கண்ணாடிக் கோட்டையில்
கோமகனாய் அமர்த்திவிட்டு!
கிட்டியது சுதந்திரமென
கொட்டி முழங்கினோம்!!
மாண்புகளை தன்னுள்ளே
மாபெரும் சூத்திரமாய்!
மூட்டி வைத்தாண்டார்
முன்னொரு காலத்தில்!
மிகையாய் சொல்லவில்லை
மெத்தப் படிக்காது போனாலும்
மேன்மையாய் அரசாண்டார்!!
தலைமுறை தாகங்கள்
தவித்து நிற்கையிலே!
சிதறுண்டு போனது
கண்ணாடிக் கோட்டையது!
மாண்புகள் தொலைத்திருந்த
மனித பிண்டங்களோ
மக்களாட்சி போர்வையிலே!!
சேறுண்ட கொள்கைகளை
சீரிய நோக்கமென
சூளுரைத்துச் சொன்னாயே!
சாதீய போதனையை
சாகசமாய் உரைத்தாயே!
சமத்துவம் என்பதெல்லாம்
சாக்காடு போனதுவோ?!!
சொல்வன்மை மாறிப்போய்
வன்சொல்லாய் ஆனதுவே!
நேர்மையின் தரமெல்லாம்
கூறுபோட்டு விற்றுவிட்டு!
சுயத்துடன் உறவாடி
சுயமரியாதை என்பதனை
இடுகாட்டில் புதைத்தாயே!!
மக்களவை போவதெல்லாம்
முக்காடுபோட்டு தூங்கிடவா?!
கடமை உணர்வெல்லாம்
கட்டவிழ்த்து போட்டுவிட்டு!
பணப்பேராசை பிடித்து
உல்லாச வாழ்வுதனில்
தலைமூழ்கிப் போனாயே!!
தொலைநோக்கு பார்வையதை
தொலைதூக்கி போட்டுவிட்டாய்!
நேற்றென்ன உரைத்தோமென
இன்றுனக்கு நினைவில்லை!
உன்னிலை நீ அறியாதபோது
கர்வத்துடன் கூட்டுவைத்து
ஆணவம் பேசுவது ஏன்?!!
தன்னிறை வாழ்விதனை
தரணியில் மனிதனாய்!
தகுதியாய் வாழ்ந்து
தளர்ந்து போனபின்னே!
துவண்ட உடலதை
தகனம் செய்யலாம்!!
தன்னுயிர் இருக்கையிலே
மாண்புகளைச் செய்யலாமா??!!
மாண்புமிகு எனச்சொல்லி
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!
மாண்புகள் இன்னதென்று
மனப்பாடம் செய்துகொள்வீர்!
மனதில் நிலைநிறுத்தி
மனிதனாக வாழ்ந்திடுவீர்!!!
அன்பன்
மகேந்திரன்
67 comments:
மக்களவை போவதெல்லாம்
முக்காடுபோட்டு தூங்கிடவா?!
கடமை உணர்வெல்லாம்
கட்டவிழ்த்து போட்டுவிட்டு!
பணப்பேராசை பிடித்து
உல்லாச வாழ்வுதனில்
தலைமூழ்கிப் போனாயே!!
>>>
கேள்விலாம் நல்லாதான் இருக்கு ஆனால் அவங்களுக்கு உரைக்கவா போகுது..
மாண்புகள் என்னவென்றே தெரியாதோரே இங்கு மாண்புகளாக மின்னிக்கொண்டிருக்கிறார்கள்...
அர்த்தமுள்ள அழகிய படைப்பு...
மக்களவை போவதெல்லாம்
முக்காடுபோட்டு தூங்கிடவா?!
நல்லா கேட்டீங்க.நண்பரே.,
இப்பல்லாம் மாண்புமிகு ங்கற வார்த்தைக்கு அர்த்தம மாறிடுச்சு.
//மாண்புமிகு எனச்சொல்லி
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!//
சரியா கேட்டிங்க...
நல்ல கவி
அரசியல்னா என்னனே தெரியாத ஆளா இருக்கீரே நீர் ஹைய்யோ ஹைய்யோ
வணக்கம் அண்ணே,
சௌக்கியமா?
காலந் தோறும் தம் இயல்புகளைத் தவற விட்டு, மான்பற்றோராக மாறும் அரசியல்வாதிகளின் நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் கவிதை.
மாண்புகள் தொலைத்திருந்த
மனித பிண்டங்களோ
மக்களாட்சி போர்வையிலே!!
தோலுரிப்பு..
//தொலைநோக்கு பார்வையதை
தொலைதூக்கி போட்டுவிட்டாய்!
நேற்றென்ன உரைத்தோமென
இன்றுனக்கு நினைவில்லை!
உன்னிலை நீ அறியாதபோது
கர்வத்துடன் கூட்டுவைத்து
ஆணவம் பேசுவது ஏன்?!! //
அருமை.
சில நல்லவங்க கூட பதவி கிடைத்ததும் எப்படியெல்லாம் மாறிவிடராங்க?
வார்த்தைச் சவுக்கு!
த.ம.10
ஓட்டுப் பொற்று கிட்டு -நம்
ஊராள வந்தார்க்கு
வேட்டு வைத்து விட்டீர்-மகி
வேட்டு வைத்து விட்டீர்
நாட்டு நடப் பதனை-மிக
நல்லோர்கள் நினைப் பதனை
பாட்டில் கொடுத்து விட்டீர்-மகி
பாராட்டை எடுத்து விட்டீர்
புலவர் சா இராமாநுசம்
அருமை!
உலகின் மிகக் கடினமான தோலினால் ஆனவை அரசியல்வாதிகளின் உடல்களும் உணர்வுகளும். தங்கை ராஜி சொன்ன மாதிரி நீங்க எவ்வளவு பெரிய சவுக்கால அடிச்சாலும் உரைக்கப் போறதில்ல. ஆனா எங்க மனசுல கவிதை உட்கார்ந்துடுச்சு. அருமை!
அரசியலை உம் மனத்தராசில் வைத்தீர். நல்லவை நடக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
அருமை.
வாழ்த்துக்கள்.
அருமையாக அரசியல்வாதிகளை அலசிய கவிதை கலக்கல் அன்பரே! வாழ்த்துக்கள்.
தன்னிறை வாழ்விதனை
தரணியில் மனிதனாய்!
தகுதியாய் வாழ்ந்து
தளர்ந்து போனபின்னே!
துவண்ட உடலதை
தகனம் செய்யலாம்!!
தன்னுயிர் இருக்கையிலே
மாண்புகளைச் செய்யலாமா??!!
அதான் செய்து விட்டார்களே
என்ன சொல்ல ?
சரியான சாட்டையடி கவிதை
வாழ்த்துக்கள்
அரசியல்வியாதிகளுக்கு சரியான சாவு மணி அடிக்கும் கவிதை, அருமையா இருக்கு மக்கா...!!!
மாண்புமிகு எனச்சொல்லி
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!// சவுக்கடி கேள்விகள்..
தவறான அரசியலுக்கு தந்த ஒரு சாட்டையடி. எம் மனிதரைத்தான் இவ்வுலகில் நம்பமுடிகிறது. எதிலுமே சுயநலவாதம் தலைவிரித்தாடுகின்ற இவ்வுலகில் நமக்கு நாமே தலைவர்கள். ஆழ்ந்த எண்ணஅலசலிலே வந்து பிறந்த கவிதை என்பது வரிக்கு வரி தெரிகின்றது. உள்ளக் கண்ணாடி வெளிக் கொண்டுவந்த கவிதை வாழ்த்துகள்
அரசியல் = வியாபாரம்,ஊழல்,சுயநலம்...இன்னும் சொல்லலாம்.ஆதங்கம் ஆவேசம் கலந்த வரிகள் !
மாண்புகள் மிகுதியாய் வேண்டும்
உங்களிடம் முழுமையாக இல்லை என்பதை உணர்த்தத்தான்
மாண்புமிகு எனச் சொல்கிறோமா ?
சிந்தனையை தூண்டிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை.
//மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!//
சிந்தித்தால் மனித மாண்பை பெறலாம்.சாட்டையடி வார்த்தைகளில் நல்ல கவிதைமகேந்திரன்.
//மாண்புமிகு எனச்சொல்லி
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!
மாண்புகள் இன்னதென்று
மனப்பாடம் செய்துகொள்வீர்!
மனதில் நிலைநிறுத்தி
மனிதனாக வாழ்ந்திடுவீர்!!//
சாட்டையடி.....
நல்ல கவிதை நண்பரே....
ஆவேஷமான கவிதை அண்ணா, கோபங்கள் நிறைந்து கிடக்கின்றது
மாண்புகள் தொலைத்திருந்த
மனித பிண்டங்களோ
மக்களாட்சி போர்வையிலே!!>>>
சிலாகித்த இடம் அண்ணே... சிந்திக்கவும் வைத்தது :
அன்புநிறை சகோதரி ராஜி,
உறைக்க வேண்டும்
அதுவரை உரைத்துக் கொண்டே இருப்போம்......
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
உங்க கவிதைகள் எனக்கு ரெம்ப புடிக்கும் அண்ணா.
அன்புநிறை சௌந்தர்,
மாண்புகளின் சாரம் இருந்தால்.
அரசியல் மணம் வீசி விடுமே.
மணமிக்க அரசியல் பூத்திடும் நாள் பார்த்து......
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கோகுல்,
அர்த்தங்களை மாற்றி உணர்வோரின்
நிமித்தங்களை மாற்றுவோம்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை மதுரன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சி.பி,
ஆம் நண்பரே அப்படித்தான் இருந்துவிட்டேன்.
கொஞ்சம் மாற்றி இருந்து பார்ப்போமென்றால்
முடியாது போல...
தங்களின் அழகான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நிரூபன்,
அழகாகச் சொன்னீர்கள்,
மாண்பற்றுப் போனார்கள்..
மானுடம் பேசியோர் எல்லாம். .
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி,
நாரோடு சேர்ந்த பூவும் இங்கே பாழாய்ப் போகின்றது.
தங்களின் அழகான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவரே,
இடிப்பாரை இலாத ஏமரா மன்னன் போல
ஆகிப்போனார் நம் தலைவர்கள்.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
உணர்வுகளை தட்டி எழுப்புவோம்.
நமக்கிட்ட பணியைச் செய்வோம்.
தங்களின் அருமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
ஆம் சகோதரி, மனத் தராசில் வைக்கையில் என்
இதயத்தின் பாரம் தாங்காமல் போனது.
சரிந்துபோன இதயத்தை நிமிர்த்திவிடவே இக்கவி.
தங்களின் அருமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
நேசத் தோழி சகுந்தலா,
தகனம் செய்வித்ததை தட்டி
உயிர்த்தெழ வைக்க வேண்டும்.
நெஞ்சில் காய்ந்து போன ஈரங்களை
மீள்வித்து பரப்பவே இக்கவி.
தங்களின் அருமையான கருத்துக்கு என்
இதயம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,
சாப்பறை அடித்து உயிர்த்தெழ வைக்கவேண்டும்.
இடுகாட்டில் இட்டிட்ட இனிய மாண்புகளை
தோண்டி எடுக்க வேண்டும்.
தங்களின் அருமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
நம்பகத்தன்மையை நாள்தோறும் இழந்துவருகிறோம்.
பேராசை,பெரு நுகர்வு, சோம்பேறித்தனம் கொண்ட
நம்மை ஆள்வோர்கள் விழித்தெழ வேண்டும்.
தங்களின் அருமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
மாற்றமடைந்து பாழ்பட்டுப் போன
அரசியல் மீண்டெழ வேண்டும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
மாண்புமிகு நண்பர்கள் மாண்புகளை
மாண்டுபோக வைத்துவிட்டார்கள்.
மாண்ட மாண்புகள் மறு வுருவாய்..
மனதில் தருவிக்க வேண்டும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
சிந்தனை என்பதை நித்திரையில் மட்டும்
சித்திரமாய் வைத்திருப்போரை,
நித்தமும் தட்டி எழுப்ப வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் துஷி,
என் மீது கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும்.
என் மனமார்ந்த நன்றிகள்.
அருமை.
வாழ்த்துகள் மஹேந்திரன்.
கடலில் முத்துக் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன்..
கவிதையில் முத்துக் குளிக்கும் கவிஞர் நீவீர்!
முத்தாய் குவித்து; முத்து முத்தாய் கோர்த்து
முட்டி மோதும் உள்ளக் குமுறலை
கொட்டி சமைத்தக் கவிதையை -நான்
கைதட்டியே வாழ்த்துகிறேன்...
அருமை, அருமை கவிஞரே!
அமைதியான வார்த்தைகளில் ஆர்ப்பரிப்புக்களை அடக்கிவைத்து வார்த்தைகளை அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்,மன்னராட்சி தொடங்கி மக்காளாட்சி மாறி இன்று மண்ணாசை பிடித்து திரியும் மாந்தர்களையும் மன்னர்களையும் நாக்கை பிடிங்கிக்கொள்ளுமளவுக்கு கேட்டிருக்கிறீர்கள். வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கேள்விக்கணைகளாகவே.. அருமை அண்ணா
அனல் பறக்கும் வரிகள்...
படித்ததும் போர்க்கொடி தூக்க மனது நினைக்கிறது...
வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!
\\மாண்புமிகு எனச்சொல்லி
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!\\
நாப்பிடுங்கும் கேள்வி! மானமுள்ள மனிதரெனில் மரித்துப் போதல் நிச்சயம்.. இவரோ....
அழுத்தமான வரிகளில் தெரிகிறது ஆழ்மன அழுத்தம்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தமிழ் விரும்பி ஐயா,
தங்களை வசந்தமண்டம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது..
இன்மொழிக் கவியால் என் கவிதையை வாழ்த்திய தங்கள் உள்ளத்துக்கும்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..
அன்புநிறை சகோதரர் மன்மதகுஞ்சு,
தங்களை வசந்தமண்டம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை தோழி மும்தாஜ்,
ஆம் தோழி, போர்க்கொடி தூக்கத்தான் வேண்டும்.
மனதினுள் தகாத எண்ணங்களை குடிகொண்டு வைத்து
மாண்புகளை இழந்த மாண்புமிகுக்கள் மீது
போர்க்கொடி தூக்கத்தான் வேண்டும்.
தங்களின் அருமையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
ஆம் சகோதரி, மனதினுள் புழுதியடைந்த
எண்ணங்களை புகுத்தி வைத்திருக்கும்
மாண்புமிகுக்கள் மனம் திருந்த வேண்டும்.
பண்புகள் வளர்க்க வேண்டும்.
தங்களின் அருமையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம் மாப்பிள...!
மண்புமிகுக்களுக்கு அருமையான சாட்டை அடி கொடுத்திருக்கீங்க உங்க கவிதைகளில்.. இவர்களை பார்க்கும்போது மன்னர் ஆட்சியே பரவாயில்லை போலும்...
வாழ்த்துக்கள் மாப்பிள!!!!
அருமை....
மாண்புமிகுக்களை பற்றி சாட்டையை சுழற்றும் வரிகள் அருமை நண்பரே
r.v.saravanan
please visit kudanthaiyur
நாட்டை சீரழித்த பின் இவர்கள் எப்படி மாண்புமிகுவாக வாழ முடியும் ! கவிஞரின் ஆதங்கம் அழகிய கவிதை வரிகளில் அருமை.
Post a Comment