Saturday, 15 November 2014

கவிழாய் செம்பிழம்பே!!!
ங்கிருந்து வந்தாய் 
ஏகலைவன் எய்த கணையாய்!
எட்டுத்திக்கும் வியாபித்தாய் 
எரிகனலாய் என்னுள்ளே!!


சிறுகற்களின் உராய்வினில் 
சிரித்து வெளிவந்த 
சிறுகாந்தத் துகளோ - நீ 
சிந்தையிலே உறைந்திட்டாய்!!


ருண்டுவரும் ஆதவனின் 
உட்கரு நீயன்றோ!
உட்புறம் நீயிருந்தால் 
உள்ளமது கருகாதோ?!!


சூட்சுமச் சிறுகுஞ்சாய் 
சூது புரிந்தனையோ? 
சூழ்ந்த உன் ஆக்கிரமிப்பால் 
சூட்டிகை எய்தினேனே!!ஞ்சினேன் அஞ்சினேன் 
அந்திமப் பொழுதென்று!
அங்ஙனம் இல்லையென்று -எனை 
ஆலிங்கனம் செய்வித்தாய்!!


நேற்றுப் பெய்த மழைதனில் 
நீற்றுப் போகவிருந்தேன்!
நொந்துபோன என் மனதை 
நொடிப்பொழுதில் ஊக்குவித்தாய்!!


ப்படியே இருந்துவிடு 
அணைந்துவிடாதே சட்டென்று!
அங்கமெல்லாம் உனைப்பரப்பி 
அடைகாத்துக் கொள்கிறேன்!!


னதூரம் என் பயணம் 
கடந்து போகும் வழிதனிலே 
கடும்போர் வந்திடினும் 
கவிழாய் செம்பிழம்பே!!!அன்பன் 
மகேந்திரன் 

34 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிப் பிழம்பு ஜொலித்தது .அனைத்தும் அருமை

R.Umayal Gayathri said...

செம்பிழம்பின் ஜீவாலை பரப்பியசூடு சுகமாய்
செம்மைதந்ததே ஓர் இதம்.

தம.3

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

உணர்வுக்குள் உட்கார்ந்து உள்ளம் புகுந்து
முணங்காது என்றும் முழித்திருக்கும்! - பாணரின்
பாட்டினில் ஏட்டில் படரும் பொறிபுகழ்ந்து
சூட்டினீ ரேமகுடம் தொட்டு!

மிக அருமை உங்கள் கவிதை!
ஆழ்ந்த பொருள்! சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோ!

athira said...

ஆஹா மகேந்திரன் அண்ணன் மிக அருமை.. உங்கள் செங்கரும்பு என்றைக்கும் உங்களோடுதான் இருக்கும் கவிழாது..

வாழ்த்துக்கள்.

கீத மஞ்சரி said...

சிறுசொற்களின் உராய்வினில்
சிறப்புற வெளிவந்த
செம்மாந்த கவியே - நீ
சிந்தையினைக் கவர்ந்திட்டாய்!!

வசீகரிக்கும் வரிகள். பாராட்டுகள் மகேந்திரன்.

‘தளிர்’ சுரேஷ் said...

பிழம்பைப்பற்றிய கவிதை நற்கரும்பு! வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

ஏகலைவன் எய்த கணையாய்!

செம்பிழம்பு .. ! ஆற்றக் மிக்க கவிதை..!

திண்டுக்கல் தனபாலன் said...

// நொடிப்பொழுதில் ஊக்குவித்தாய்!! //

ஆஹா..! வாழ்த்துக்கள்...

Bagawanjee KA said...

என்றும் கவிழாது இந்த கவிதை செம்பிழம்பு !
த ம 8

தனிமரம் said...

அழகான கவிதை இன்னும் அதே நெருப்பு கவிழாது இருக்கட்டும்.

பார்வதி இராமச்சந்திரன். said...

உள்ளிருந்து ஊக்குவிக்கும் ஒளிப்பிழம்பே உயிர்ப்பிழம்பு!.. அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!.

KILLERGEE Devakottai said...

தாமதமான வருகைக்கு, மன்னிக்க....
இணைத்துக் கொண்டேன், சந்தோஷிக்க....

தீயாய்...
தீபமாய்...
நெருப்பாய்...
குழம்பாய்....
தீப்பிழம்பாய்...
ஒளித்தீயாய்....
கொளுத்தீய கவித்தீ அருந்தீனேன் நண்பா...

புகைப்படமும் அருமை வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அண்ணா...

தங்களை ஒரு தொடர்பதிவில் மாட்டி விட்டிருக்கேன்... கோபப்பட மாட்டீங்கதானே..
நேரம் இருக்கும் போது எழுதுங்க....
விவரம் அறிய...

http://vayalaan.blogspot.com/2014/11/blog-post_17.html

அ. பாண்டியன் said...

அன்பின் சகோதரருக்கு வணக்கம்
கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

ஊமைக்கனவுகள். said...

அருமை அய்யா!“
இன்னும் உள் பற்றி எரிகிறது
உங்கள் கவிதை!

Dr B Jambulingam said...

கவிதையை ரசித்தேன். வாழ்த்துக்கள். புகைப்படங்கள் பொருத்தமாக உள்ளன.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

புலவர் இராமாநுசம் said...

தம்பி மகிநீரே தந்திட்ட நற்கவிதை
கம்பி மத்தாப்பாய் !களிப்பென்னும் பூவிரிய
தும்பி போல்சுற்றி தோன்றிடுமே வலைதன்னில்
தூய தமிழன்னை தொடருவாளே வாழ்கயென

Anonymous said...

''..கனதூரம் என் பயணம் கடந்து போகும் வழிதனிலே கடும்போர் வந்திடினும் கவிழாய் செம்பிழம்பே!!!..''
mika nanlla vatikal.....
Vetha.Langathilakam.

kupps said...

இந்த சமுதாய சீர்கேடுகளுக்கு எதிரான தங்களின் கவிப் பயணம் கவிழா செம்பிழம்பாய் தொடர வாழ்த்துக்கள்.கவிதை அருமை.

Sri chandra said...

ஆஹா காட்சியும் கவிதையும் அழகு

இராஜராஜேஸ்வரி said...

ஏகலைவன் எய்த கணையாய்!

அருமையான வரிகள்.

KILLERGEE Devakottai said...

கவிஞரே தங்களை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன் வருகை தந்து சூடிக்கொள்ளவும்.

குடும்பத்துடன் நலம்தானே....

http://blogintamil.blogspot.ae/2014/12/mr-1983.html

Mathu S said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Mathu S said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

yathavan nambi said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Kalayarassy G said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_31.html


Anonymous said...

https://kovaikkavi.wordpress.com/2015/04/02/36-%E0%AE%93%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (09/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/9.html

‘தளிர்’ சுரேஷ் said...

உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

Mathu S said...

wonderful lines
but
what happened
come back

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி

Post a Comment