அன்றொரு நாள்
அதிகாலை வேளையில்!
அகண்ட வீதியின்
அக்கறை காட்சிகளின்
அழகினை இரசித்தபடி
அகக்கண் விரித்திருந்தேன்!!
விழித்து எழுந்ததும்
வியாபித்த சோம்பலை
விரல்சொடுக்கி நீக்கியபின்!
விடியலின் அழகினில்
வீதியின் காட்சிகாண
உப்பரிகை நின்றிருந்தேன்!!
சாலையின் நீட்சியில்
சாதுவான ஞமலி ஒன்று!
சாதிக்க துடிப்பதுபோல்
சீராக மூச்சிறைக்க
சமதூர இடைவெளியில்
சாகசம் காட்டியது!!
ஏனிந்த சாகசம்
ஏதேனும் அவசரமோ?
ஏந்திவந்த பொருளொன்றை
எங்கேயும் வைத்ததுவோ?
ஏதோ தொலைத்ததுபோல்
ஏக்கமாய் அலைவது ஏன்??!!
கடந்தது மணித்துளி
கதிரவன் கண்விழித்தான்!
களைத்தது ஞமலி
கருங்கல் மேடொன்றில்
கனிவாய் அமர்ந்தது
காரணம் ஏதுமின்றி!!
திகைத்துப் போனேன்
திரைவிரித்த காட்சியில்!
நகைத்து மீண்டேன்
நரனென்ற ஆணவத்தில்
உவகை கொண்டேன்
உப்பரிகை மிதப்பினில்!!
சொல்லுக்கு பொருள்:
ஞமலி: நாய்
அன்பன்
மகேந்திரன்
45 comments:
ஆஹா... உப்பரிக்கை பார்வை அருமை! இப்படி நல்ல கவிதை கிட்டுமெனில் அடிக்கடி உப்பரிகை சென்று பார்க்க வேண்டுகிறேன் உங்களை. ஞமலியின் படமே அந்த வார்த்தையின் பொருளை விளக்கிடுமே மகேன். நீங்க வேற தனியாத் தரணுமா? ரொம்ப ரசிச்சேன் உங்களோட நானும் உப்பரிகையில நின்னு!
கவிதை அழகு வித்தியாசமான கவிதை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.அருமை.
புதுச்சொல் அறிந்தேன். கவியில் மகிழ்ந்தேன்.
அருமை... பாராட்டுக்கள்...
படங்கள் வரிகளுக்கேற்ற மாதிரி எங்கே தேடி எடுக்கிறீர்கள்...?
வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் சில சொற்களை அழகிய கவியினூடே மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்கள் உப்பரிகை இன்னும் பொலிவு பெறுக..
மிக்க மகிழ்ச்சி..
அண்ணா வெகுவாக கவர்ந்த வரிகள். உப்பரிகை வாசம் அருமை.
vaarththaikalai kaikkullaa vaiththulleerkal.....
sirappu sako...!
உங்கள் கவி சிறப்பாக இருக்கு என்று சொல்லத் தேவையில்லை பொதுவாக நான் கவிதைகளை விரும்பி படிப்பது குறைவு அந்த எண்ணத்தை மாற்றியது நீங்களும் நம்ம ஹேமா அக்காவும் தான்
நான் கமண்ட் போடாவிட்டாலும் உங்கள் கவிதைகளை படித்துவிடுவேன்
அழகு கவிதை!
நல்ல அருந்தமிழ்ச் சொற்களை வைத்து அழகிய பாமாலை படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மகி!
அருகிவிடாமல் நறுந்தமிழ்ச் சொல்லெடுத்து
பெருகிவரும் அருவிபோல் வடித்திட்ட கவிதன்னில்
அருமையாய் உவமை பொதிந்திட்ட உம்திறமை
பெருமைமிக்கதையா பெருங்கவிஞன் நீரன்றோ!
உங்க கவிதையெல்லாம் காட்டித்தான் இன்றைய கான்வென்ட் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித்தரனும்
கவிதையும் உங்களின் நாய்க்குட்டியும் அழகோ அழகு.வாழ்த்துக்கள்
நாயைப் பற்றி வித்யாசமான கவிதை. மிக அருமை.
நலமா சகோதரரே...
புது வார்த்தை கற்றுக்கொண்டேன் உங்கள் உபயத்தில்...
அழகிய பாமாலை வழக்கம் போல...
தொடர்ந்து கலக்குங்கள் சகோதரரே...
நரனென்ற ஆணவத்தில்
உவகை கொண்டேன் .....
ஹா..ஹா.. ஹா...
ஞமலிக்கு ஞாலத்தில்
வேரென்ன வேலையுண்டு...
உப்பரிகை மிதப்பிலும்
உயர்வான உவமானம்!!
வாழ்த்துக்கள் மகி அண்ணா.
நம் மனமும் அந்த ஞமலி மாதிரிதான்.வெட்டியாய் அலையும்.சோர்ந்து அமரும்!மிண்டும் மீண்டும்....!
உங்க வழமையான பாணியிலிருந்து மாறுபட்டு நல்லதொரு படைப்பு தந்திருக்கிறீர்கள் மகேந்திரன். அத்துடன் அழகிய தலைவாசலுடன்கூடிய இரண்டாவது படமும் என் மனம் கவர்ந்தது.
நல்ல கவிதை. உப்பரிகை பார்வை நன்று. படம் போட்டதினால் ஞமலி யாரென புரிந்துவிட்டது! :)
வித்தியாசமான கவிதை! உங்களின் இனிய தமிழில் சிறப்பாக அமைந்து விட்டது!
காட்சியும் வாசல் காவலன் ஞமலியும் அதுவின் பார்வையில் செல்லும் கவிதையும் மிக அழகு மகி அண்ணா!
ஞமலி என்பது நாய் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி புலவரே, கவிதை வழக்கம் போல அசத்தல்...வித்தியாசமாக...!
வித்தியாசமான கவிதை
இனிய வணக்கம் நண்பர் கணேஷ்...
வாங்க நண்பரே..
அடிக்கடி உப்பரிகை ஏறுவோம்...
இனிய கருத்துக்கு நன்றிகள் பல...
இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்..
இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...
இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் தனபாலன்...
படங்கள் கூகுள் தேடலில் தான் தேடுகிறேன் நண்பரே..
பாராட்டுக்கும்..
இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் தங்கை கோதை..
படித்து மகிழ்ந்தமைக்கும்
இனிய கருத்துக்கும் என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் தங்கை சசிகலா...
அழகிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் சீனி...
அழகிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் ராஜ்...
உங்களின் கருத்து என்னை இன்னுமின்னும்
பொலிவு பெறவேண்டும் என்பதை
சுட்டிக்காட்டுகிறது...
என் மீதான உங்களின் நம்பிக்கைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி இளமதி...
அழகிய பாமாலை என்று புகழ்ந்து
என்னை நெகிழ வைக்கும் இன்னுமொரு
கவிச்சரத்தையும் அளித்தமைக்கு
நன்றிகள் பல ...
இனிய வணக்கம் நண்பர் கோகுல்...
உங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் கவியாழி ஐயா...
உங்களின் வாழ்த்துக்கும்
கருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி ராம்வி...
அழகிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..
இனிய வணக்கம் சகோதரர் ரெவெரி ..
நலம் நலமே..
உங்களிடம் நாடுவதும் அதுவே....
அழகிய பாமாலையை இனிதாய்ப் படித்து
இனிய கருத்து கொடுத்தமைக்கு
நன்றிகள் பல..
இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்...
இனிமைபட கருத்துரைத்தமைக்கு
நன்றிகள் பல...
இனிய வணக்கம் சென்னைப்பித்தன் ஐயா...
அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் அம்பலத்தார் ஐயா...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்.....
உங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் மனோ அம்மா.....
உங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
உங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் மனோ...
உங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா...
உங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...
அங்காடி நாய் போல அலைந்து திரிந்தேனே பாடல் நினைவிற்கு வந்தது!
நாய் அலைவதை பார்த்து நானும் நினைப்பேன் . ஒரு வேலையும் இல்லாது அதிகம் வேலை இருப்பதுபோல் அலைந்து திரியும் ஒரு இடத்தில் இருக்க மாட்டாது .ஆனால் அவர் அலைச்சல் இருக்கிறதே . பெரிய வேலைக்காரன் போல். உங்கள் கவிதையை பார்த்தபோது அந்த எண்ணம் வந்தது. உப்பரிகைப் பார்வை சிறப்பு
அழகு கவிதை.
வாழ்த்துகள்.
Post a Comment