Powered By Blogger

Tuesday 12 March 2013

நிழற்படக் கவிதைகள் - 1

நீர்ப்பந்தல்:!!

மெல்லத் திறக்கிறேன்
என்னையே பிடுங்கித் தின்னும்
உள்ளார்ந்த உணர்வுகளை!
உள்ளங்கை தீரம்விட்டு
நீர்ப்பந்தல் போடுகிறேன்
உணர்வுகளின் வெப்பம் தணிக்க!!

வளிவழி பயணிப்போம்!!

விதியின் வழியினில்
விழுதுகள் விட்டு
பிரபஞ்சம் செல்லும்
எனக்கான பயணத்தில்
துணையாய் வருவேனென
தோள்மீது தொற்றிக்கொண்டாய்
வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!

அன்பன்
மகேந்திரன்

50 comments:

RAMA RAVI (RAMVI) said...

//வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!//

சிறப்பான கவிதை வரிகள்.

இரண்டு படங்களுக்கான கவிதைகளுமே மிக அருமை.

சசிகலா said...

அண்ணா படங்களும் வரிகளும் அழகு.

jgmlanka said...

குட்டிக் குட்டிக் கவிதைத் தேன் துளிகள்...
சுவைத்தேன்..அத்தனை வரிகளும் அருமை அண்ணா..

அம்பாளடியாள் said...

அருமையாக சொன்னீர்கள் சகோ வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதி எனினும் வழிவழி பயணிப்போம் !!!!.......

Anonymous said...

'வளி வழி ' - மனத்தைக் கவர்ந்தது .

Unknown said...

புதிய பாணி!படமோடு பாடலும் நன்று!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களோடு வரிகள் அருமை...

இளமதி said...

மகி! அருமையான சிந்தனை, அழகிய படங்கள்.
படங்கண்டு கவி படைத்தீரா இல்லை கவிக்காக படம் எடுத்தீரா என்றிருக்கிறது. அற்புதம்! இரண்டுமே மனதைக்கவருகிறது. வாழ்த்துக்கள் சகோதரா!

நீர்ப்பந்தல்:!!

உள்ளத்தின் உணர்வுகளை
ஊதிவிட்டால் தொலைந்திடுமோ
உணர்வுகளின் அனலணைக்க
உபாயமிதென கொண்டீரோ...
-----------------------------------

வளிவழி பயணிப்போம்!!

வளியின் வழியினிலே வாழும் வகையறிந்து
விழிநீர் விளிம்பில்வர வரைந்திட்ட கவிகண்டு- உம்
மொழிபார்த்து மனம்விறைத்து பதில்கூறும்
வழிதொலைத்து வாழ்த்துகிறேன் மௌனமாய்...

வாழ்க வளமுடன்!!!

Anonymous said...

''..வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!...''
Arumai.
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.

அன்புடன் மலிக்கா said...

வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!//

மிக அருமை சகோ..

Unknown said...

இரண்டாம் கவிதை..மிகவும் மனம் கவர்ந்தது..அருமை..அருமை !

சென்னை பித்தன் said...

//வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!//
அருமை

இராஜ முகுந்தன் said...

சுப்பரா இருக்கு இரண்டாம் கவி அண்ணா

அருணா செல்வம் said...

அருமை... அருமை...

இரண்டும் சூப்பர்ங்க.

பால கணேஷ் said...

படங்களுட்ன படிப்பது கூடுதல் சுவையாக இருக்கிறது மகேன்! மிக ரசித்தேன்!

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே அருமை.

kowsy said...

காண்பவை யாவும் கவிஜன் பாடுபொருள்களே . படங்களும் அவைக்கேற்ற பொருள் பொதிந்த கவிதைகளும் சிறப்பு

முற்றும் அறிந்த அதிரா said...

இரு கவிதைகளும் அழகு. அதிலும் இரண்டாவது சூப்பர்.. அதுக்கு போட்டிருக்கும் லேடிபக் படமும் அழகு.

முற்றும் அறிந்த அதிரா said...

மேலே அழகான டஃபடில்ஸ் பூக்கள் போட்டிருக்கிறீங்க.. இங்கு இப்போ டஃபடில்ஸ் மொட்டுக்கள் விரிய ஆரம்பிக்கின்றன.. பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் ஆரம்பமாவதை இந்த டஃபடில்ஸ் பூக்கள்தான் ஆரம்பித்து வைப்பினம்..

Anonymous said...

உங்கள் வரிகளோடு படங்களும் போட்டி போடுகின்றன சகோதரரே...

Madhavan Elango said...

அன்பு நண்பர் மகி, அவர்களுக்கு வணக்கம்.

இன்றுதான் முதன்முதலாக வசந்த மண்டபத்தில் காலடி எடுத்து வைத்தேன். வெளியேற மனமில்லை. உண்மை. அதிகாலை ஒரு மணி இங்கே! வார ஈறுமல்ல - எனினும் உங்கள் கவிதை வரிகளில் சிக்குண்டு கிடக்கிறேன்.

ஒரு நான்கு வரிகளுக்குள் உங்கள் படைப்புகளைப் பற்றிக் கூறவியலாது. விரைவில் உங்கள் வசந்த மண்டபத்தைப் பற்றி ஒரு கட்டுரை வரைகிறேன்.

வாழ்த்துகள்!

அன்பன்,
மாதவன் இளங்கோ

sury siva said...

//உள்ளார்ந்த உணர்வுகளை!
உள்ளங்கை தீரம்விட்டு
நீர்ப்பந்தல் போடுகிறேன்
உணர்வுகளின் வெப்பம் தணிக்க!!//

இப்பொழுது தான் திரு அப்பாதுரை அவர்கள் பதிவிலே இமேஜரி எனும் உருவகத்தை எவ்வாறு ஆங்கில கவிஞன்
கீட்ஸ் கையாண்டு இருக்கிறார் என்று சொல்லிவிட்டு இங்கே வந்து உங்கள் கவிதையைப் பார்த்து அசந்து போய் நிற்கிறேன்.
இல்லை. என்ன சொல்வது என புரியாமல், விக்கித்துப்போய் உட்கார்ந்து விட்டேன்.

கடந்த கால உணர்வுகளைப் பந்தலாக அதுவும் நீர்ப்பந்தலாகப்போட்டு, அதில் உள்ளங்கை வழியே நீர் தெளித்து வெப்பத்தை
தணித்தீரா !!

அபாரம் மகேந்திரன் .. அசத்துகிறீர்கள்.

சுப்பு தாத்தா.

Rathnavel Natarajan said...

அருமை. வாழ்த்துகள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

படங்களுக்கு ஏற்ற கவிதை படைத்தீா்
சுடரும் தமிழைச் சுரந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Seeni said...

manathai alliyathu...!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராம்வி...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை சசிகலா.....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை கோதை........
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள் ....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி ....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் தனபாலன்......
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி...
உங்களின் கருத்துகள் என்னை இன்னுமின்னும்
வளர்த்துக்கொள்ள உதவுகிறது...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வேதாம்மா.....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி மலிக்கா.....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் ரமேஷ் வெங்கடபதி ...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சென்னைபித்தன் ஐயா
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்.....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் பாலகணேஷ்
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அதிரா....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....
இங்கே வேனிற்காலம் கோவில்கொடை எடுத்து ஆடுகிறது...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் ரெவெரி
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் மாதவன் இளங்கோ....
உங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது...
உங்களின் கூற்று என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தி பின்னர்
மகிழ்வைக் கூட்டியது...
அத்துடன் நான் இன்னும் கவனமாக செயல்படவேண்டும்
என்றும் அறிவுறுத்தி நிற்கிறது....
உங்களின் கட்டுரைக்காக காத்திருக்கிறேன் .
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சிவா ஐயா
உங்களின் கருத்தால் உள்ளம் குளிர்ந்தேன்...
உங்களைப்போன்றோர் ஆசிடைகள் எனக்கு என்றும் வேண்டும்......
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரத்னவேல் ஐயா ..
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கவிவேந்தர் பாரதிதாசன் ஐயா ...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சீனி....
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....

மோ.சி. பாலன் said...

அருமை மகேந்திரன்.

"அலையில் ஆடும் காகிதம் - அதிலும் இந்த ஓவியம்" என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன

Post a Comment