Powered By Blogger

Monday, 3 December 2012

கல்வெட்டுக் காவியம்!!


ள்பாதி ஆடைபாதி
என்றார்கள்!
புரியாமல் விழித்தேன்!
அரையாடை மனிதன்
என்றார்கள்!
பொருள் விளங்காது தவித்தேன்!
என்னிரு விழிகளிலே
உன்பிம்பம் விழும் வரை!!



றுமைக்கோடு என்பதற்கு
உன் குறுக்கெலும்புக் கோடுகளை
விழியேற்ற பின்தான்
அருஞ்சொற்பொருள் விளங்கிற்று!!



ங்கிய சுத்தியலால்
ஓராயிரம் கற்கள் பிளந்தும்
உன் வாழ்நிலை மாறிட - அதன்
வெம்மை தாழ்ந்திட
காலம் கனியவில்லையோ?!!
னியுமென்று காத்திருந்து
கவளமுனக்கு இறங்கவில்லையோ?!
பணிகொடுத்த பண்பாளரும்
உன்னிலை ஏற்றிடுவேன் - என
பொய்யை மட்டுமே உரைத்த
வெள்ளை வேட்டி மைந்தர்களும்
நட்டாற்றில் விட்டனரோ??!!

றம் தவறியும்
அரசியல் பிழைத்தும்
கையூட்டுக் காசில்
கடைவாய் தெரிய
சிரித்தும் பிழைப்போர்கள்
உன் காலடியில் கிடக்கும்
கற்களின் தூசிக்கு
இணையாம் போ!!


ன் வாழ்நாள் மாறும்
ரு நாள்!
உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த  உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!


அன்பன்
மகேந்திரன்

38 comments:

Admin said...

தோழரே..கவிதை சிறப்பு.ஏற்கனவே முகநூலில் வாசித்ததாய் ஞாபகம்..

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

//அறம் தவறியும்
அரசியல் பிழைத்தும்
கையூட்டுக் காசில்
கடைவாய் தெரிய
சிரித்தும் பிழைப்போர்கள்
உன் காலடியில் கிடக்கும்
கற்களின் தூசிக்கு
இணையாம் போ!!
//
நெத்தியடி

Seeni said...

urukkam sako..

Anonymous said...

செமத்தியான கவி, உழைப்பவர் இல்லை என்றால் உலகில் ஒன்றும் இல்லை. உழைப்பே மனித ஆதாரம், ஆனால் அவ் வுழைப்புக்கு போதிய மதிப்புக் கொடுக்கபடவில்லை. / ஓர் நாள் என்பது ஒரு நாள் என வந்திருக்கவேண்டும் / நன்றிகள்

Anonymous said...

செமத்தியான கவி, உழைப்பவர் இல்லை என்றால் உலகில் ஒன்றும் இல்லை. உழைப்பே மனித ஆதாரம், ஆனால் அவ் வுழைப்புக்கு போதிய மதிப்புக் கொடுக்கபடவில்லை. / ஓர் நாள் என்பது ஒரு நாள் என வந்திருக்கவேண்டும் / நன்றிகள்

ஆத்மா said...

புகைப்படமும் வரிகளும் 100 வீதம் பொருந்துகிறது
அழகான வரிகள்

முக நூலில் படித்த ஞாபகம் வருகிறது சார்... பகிர்ந்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்

தனிமரம் said...

நிச்சயம் கல்வெட்டாக மாறும் அடுத்த சந்ததி அருமையான கவிதை மகி அண்ணா!

ஹேமா said...

கல்வெட்டுக்கள் வெட்டிக்கொண்டுதானிருக்கிறோம்.மிக மிக ஆழமான கவிதை.எந்தக் கருவுக்கும் உயிர் கொடுக்க முடிகிறது மகி உங்களுக்கு.வாழ்த்துகள் !

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துக்கள்.

சசிகலா said...

உழைப்பே உன்னதம் அண்ணா....

வெங்கட் நாகராஜ் said...

நற்கவிதை நண்பரே. பாராட்டுகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தோழர் மதுமதி...
ஆம் தோழரே முகநூலில் இக்கவிதையை பதிவாக்கி இருந்தேன்...
தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்......

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் என் ராஜபாட்டை ராஜா...

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சீனி

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் இக்பால் செல்வன்
திருத்தி விட்டேன் நண்பரே...
சுட்டிக்காட்டியமைக்கும்

தங்களின் இனிய கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சிட்டுக்குருவி மூஸா..
ஆம் தோழரே முகநூலில் இக்கவிதையை பதிவாக்கி இருந்தேன்...
தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் அருணா செல்வம்,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஹேமா,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் லக்ஷ்மி அம்மா,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை சசிகலா,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்,

தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

kowsy said...

ஆசிக்கும் போது மெல்லியதாக மனதுக்குள் ஒரு வேதனை ஏற்படுகின்றது . உழைப்பவர்கள் உழைக்க உழைப்பை உறிஞ்சுபவர்கள் உயரத்தில் இருக்கின்றார்கள் . சிறப்பான கவிதை

kupps said...

"வறுமைக்கோடு என்பதற்கு
உன் குறுக்கெலும்புக் கோடுகளை
விழியேற்ற பின்தான்
அருஞ்சொற்பொருள் விளங்கிற்று!! " நிதர்சனமான வரிகள்.நாம் உழைப்பைப் போற்றத் தவறியதன் விளைவுகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் /அனுபவிக்க இருக்கிறோம்.வேறு என்ன சொல்ல! கவிதை அருமை.

மாதேவி said...

படிக்கும்போது வலித்தாலும் "ஒருநாள்மாறும் உன்நிலை..." என நம்பிக்கையைத் தருகின்றது.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கல்வெட்டுக் காவியத்தைப் படித்த போது
கவிஞன்என் இதயத்துள் கண்ணீா் ஓட்டம்!
முள்வெட்டு போல்குத்தும் வயிற்றின் சண்டை!
முடிவின்றித் தொடா்கின்ற வறுமைக் கோடு!
பல்வெட்டு தெரிகின்ற மெலிந்த தோற்றம்!
பஞ்சடைந்த தலைக்கோலம்! ஏந்நாள் தீரும்!
சொல்வெட்டு வைக்காமல் கவிதை தந்த
துாயகவி மகேந்திரனை வணங்கு கின்றேன்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


மீண்டும் வணக்கம்!

நண்பா் இக்பால் செல்வன் கருத்தைப் படித்தேன்!

ஒரு - ஓா் சொல்லின் விளக்கம்

உயிர் எழுத்துக்கு முன்வரும் ஒரு என்ற சொல் இலக்கண விதியின்படி ஓா் என மாற்றம் அடையும்.

ஓா் இரவு! ஓா் ஆடு! ஓா் ஏக்கம்!

மெய்யெழுத்தின் முன் ஒரு ஓா் என்ற இரண்டு சொல்களும் வரலாம்!

ஒரு நாள்! ஓா் நாள்!

திருக்குறளில் 24 ஆம் குறளில்

வைப்பிற்குஓா் வித்து
என வருவதைக் காண்க!

தமிழினம் ஆளும் said...

//உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!

பிரமாதம்.

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

ம.தி.சுதா said...

லஞ்சம் வாங்குவொரை நச்சென போட்டுவிட்டீர்கள்.. நன்றாயிருந்தது அண்ணா

இராஜராஜேஸ்வரி said...

உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!

கல்வெட்டாய் பதிந்த அருமையான கவிதை ..! பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

அம்பாளடியாள் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ..

Anonymous said...

''..உன் வாழ்நாள் மாறும்
ஓரு நாள்!
உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!..''
நல்லது நடக்கட்டும்.
இனிய 2013 புத்தாண்டு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கலாகுமரன் said...

உழைப்பின் பெருமை அருமை
அவர்க்கு புரியாதெனுனும் உமக்களிப்பர்
ஆயிரம் பொற்காசெனும்
கைதட்டலுடன் கூடிய புன்சிரிப்பை!

Seeni said...

arumai sako..

Post a Comment