Powered By Blogger

Wednesday 28 November 2012

காதலால் கசிந்துருகி....!!!







விழிகள் இரண்டும்
வியர்த்துப் போகின்றன
வயங்கு நகைபூக்கும்
விழுநிதியாம் உன்னழகை 
வியந்து நோக்கையிலே!!
 
 
யக்கமற்றுப் போன 
இதயத்தின் செல்கள் கூட 
இயல்பு நிலைமாறியதே - உன்
இறும்பூது வடிவினை
இவணம் காண்கையிலே!!
 

 


செயல் பூர்த்தி செய்யும் 
சுரைக் கரங்கள் இங்கே - உன்
சிலம்பும் அழகு கண்டு
சித்தம் தழுவிட
சிந்தையில் துடிக்கின்றதே!!
 
 
லந்த வெப்பக்காற்றினை 
விருப்பமின்றி சுவாசிக்கும் 
விரிந்த நாசியிங்கே - உன் 
வீறுசால்  சித்திரம் கண்டு 
வெண்குளிரென  நினைத்ததுவே!!
 
 
குளிர்காற்றின் வேகத்தில்
கொள்ளியின் இதம் தேடும்  
குருதியின் தன்மை கூட - உன்
கிளர்மிளிர் வடிவம் கண்டு
கொதிநிலை ஏகியதே!!
 
 
ஞர் என்னைத் தீண்டிடினும்
ஆரணங்கே உனைக்கண்டால்
அரந்தை கைவிடுத்து - என்றும்  
அளவிலாத ஆனந்தமதை
அவயமெங்கும் உணர்கின்றேன்!!
 
 
றுப்புகள் சோர்ந்திருக்கும்
உலர்ந்த பொழுதினிலே - உன் 
உருவகம் கண்டாலோ 
உக்க நிலையெனக்கு 
உச்சியில் நிலைகொள்ளும்!! 
 
 
ணம் தோறும் கணம் தோறும்
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால்  கசிந்துருகுகிறேன்!!
 
 
முகிழ்ந்த மலராய்
மகிழ்ந்து விரிகின்றேன் 
மங்காத புகழ்கொண்ட
மதுரத்தேன் சுவைகொண்ட
மாதவமே உனைக்கண்டு!!

னத்த  வில்லினின்று - இன்பக்
கணையொன்று பாய்ந்ததுபோல்
களிநகை புரிகின்றேன்
கன்னித்தழிழே உனைக்கண்டு
கணமொன்று மீதமின்றி - உன்மேல்
காதலால் கசிந்துருகுகிறேன்!!!

 
 
 
சொல்லுக்கான பொருள் விளக்கம்:
==============================
 
விழுநிதி -------------------- சிறந்த செல்வம் 
வயங்கு --------------------- ஒளியுடைய  
இறும்பூது ------------------  வியப்பு (அல்லது) அதிசயம்
இவணம் -------------------   இங்கே
சுரை ------------------------   வலிவுடைய
சிலம்பும் ------------------   ஆரவாரிக்கும்
கடுங்கண் -----------------  கொடூரமான
வலந்த --------------------    பரவிய 
வீறுசால் -------------------  மதிப்பிற்கு உரிய
கிளர்மிளிர் ---------------    மிகுந்த ஒளியுடைய
அஞர் ------------------------  மனவருத்தம்
அரந்தை -------------------   வருந்துதல்
உக்க ------------------------  தெளிவு   
 
 
 
அன்பன்
மகேந்திரன் 

18 comments:

vetha (kovaikkavi) said...

Aaha!....I am the first!!!!
ஓ! வரவரப் புலமைத்துவம் அதிகரிக்கும் மாயமென்ன? எனக்கும் கொஞ்சம் சொன்னால் நானும் அப்படியாவேனே! இலக்கிய வகுப்புகளிற்குச் செல்வதுண்டா?..அருமை...மேலும் சொல்லத் தெரியவில்லை. இனிய வாழ்த்து!.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

கவி அழகன் said...

என்னடா அண்ணன் ஒண்ணும் புரியாம தண்ட விதத்துவத்த காட்டுறாரே எண்டு பார்த்தேன் . அப்படா கீழ கருது போட்டு
காப்பாற்றிடார்.

காலம் முழுக்க காத்திருந்து
கண்களிரண்டும் வேற்குதடி
எண்டு சிம்பிலா ஒரு வரி எழுதினணன் எண்ட கவிதா ஒண்டில. ஆனா உங்க கவிதா இலக்கிய தரம் மிக்கதா இருக்குது


கணம் தோறும் கணம் தோறும்
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால் கசிந்துருகுகிறேன்!!

ரொம்ப பிடிசிபோட்டு இந்த வரிகள்

மீண்டும் வருவேன் தொடருங்கள்

குறையொன்றுமில்லை. said...

சொல்லுக்கான பொருள் விளக்கம் கவிதையை நன்கு புரிந்து கொள்ள உபயோகமாக இருந்தது. நன்றி

Admin said...

நல்ல தமிழ் சொற்களை கையாண்டு கவிதை செய்தது பாராட்டுக்குரியது..

அன்புடன் மலிக்கா said...

சொல்லித்தாருங்க சகோ
சொற்கள் வடிக்கும் விதமதை
சொல்லெடுத்து தொடுத்த விதம்
சொல்லில்லடங்கா சுவைநயம்..

காதலால் கசிந்துருகி
கல்நெஞ்சையும் கரைத்துருக்கும்
கவிதை இல்லையில்லை காவியம்..

Ahila said...

நல்ல வேளை சொல் விளக்கம் கொடுத்திங்க மகேந்திரன்...உங்கள் தமிழ் புலமை அபாரம்....அருமை....

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம், முடிவில் விளக்கிய விதம் அருமை... (நல்ல வேளை சில சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை)

வாழ்த்துக்கள்... நன்றி...

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி அன்பரே.

கவிதை
படம்
சொற்பொருள் விளக்கம்

அனைத்தும் அருமை.

ஹேமா said...

ஆழ வாசிச்சுப் புரிஞ்சுகொள்ளவேண்டியிருக்கு மகி.ஆனாலும் காதல் இதயங்கள் கொண்ட படத்தோடு வித்தியாசமான பதிவு !

அருணா செல்வம் said...

சொல் நயம்
சொக்க வைக்கிறது கவிஞரே. (நண்பரே)

வெங்கட் நாகராஜ் said...

படித்துக் கொண்டே வரும்போது பல சொற்களின் அர்த்தம் புரியவில்லையே என யோசித்துக்கொண்டே படித்தேன். நல்ல வேளை கடைசியில் பொருள் கிடைத்தது. ரசிக்கவும் முடிந்தது.

நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.

kupps said...

கவிஞரின் தமிழ் பற்றுக்கும் தமிழ் மேல் உள்ள காதலுக்கும் அவரது இக்கவிதையில் உள்ள வார்த்தை சொல்லாடல்களே சான்று பகர்கின்றன.வாழ்த்துக்கள் நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

இராஜ முகுந்தன் said...

அண்ணா வணக்கம். முதல்ல பயப்படுத்தீட்டீன்கள். பிறகு காப்பாத்தீட்டீன்கள்.

Anonymous said...

அருஞ்சொற்பொருள் விளக்கத்தின்
உதவி கொண்டு படித்து மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள் !

கரந்தை ஜெயக்குமார் said...

தூய தமிழ்ச் சொற்களால் கவிதை. அருமை அய்யா

மாலதி said...

கனத்த வில்லினின்று - இன்பக்
கணையொன்று பாய்ந்ததுபோல்
களிநகை புரிகின்றேன்
கன்னித்தழிழே உனைக்கண்டு
கணமொன்று மீதமின்றி - உன்மேல்
காதலால் கசிந்துருகுகிறேன்!!!//அருமை

Muruganandan M.K. said...

மறந்த சொற்களில்
மறக்க முடியாத கவிதை
நன்றுஇ

Post a Comment