நினைத்தால் நிமிடத்தில்
நிலவையும் இத்தரைக்கு
நல்விளக்காய் மாற்றுவேனென
நமத்து மரத்துப்போன
நமட்டுப் பேச்சை
எப்போது நிறுத்தப் போகிறாய்!!
எட்டெடுத்து வைத்து
நடக்கத் தெரியும் வரை
உன் கால்கள் உனக்குத் தெரியாது!!
சிதறுண்ட கண்ணாடி துகளாய்
பேசத் தெரியும் வரை
வாயிருப்பதே தெரியாது!!
பாலுணர்வு உணர்ந்த பின்தான்
பாலினம் அறிந்து கொண்டாய்!!
நட்புகள் இணைகையில் தான்
இனமறிந்து இணைந்துகொண்டாய்!!
சாதி என்ற ஒன்றை
தானே கண்டது போல
சாத்திரங்கள் பலசொல்லி
தான் சேர்ந்த குழுமத்தில்
ஆள் சேர்க்க அலைகின்றாய்!!
இளமை இளைத்து
இடுப்பெலும்பு வளையும் வரை
துள்ளலாட்டம் போடுகிறாய்!
முதுமை வந்துசேர்ந்த பின்னே
இளமையின் மேல் வெறுப்பாகி
தத்துவங்கள் பேசுகிறாய்!!
எல்லையில்லா இவ்வுலகில்
எல்லாம் பயின்ற நீ
ஒன்றை மட்டும்
மறந்துவிட்டாய் மானிடா!
அளப்பரிய ஆற்றல்கொண்ட
அன்பை என்று
கற்றுக் கொள்வாய்??!!
சின்னஞ்சிறு புழுவெனினும்
அதுவும் ஓர் உயிரென
மனதில் நிறுத்திக்கொள்!
அடிவயிற்றில் அதைவைத்து
அடைகாக்கப் பழகிக்கொள்!!
அன்பன்
மகேந்திரன்
28 comments:
அன்பான வாழ்த்துக்கள் அண்ணா. பண்பிருக்கு பாருங்கோ முன்னுக்கு.....
அருமையான கருத்து
சொல்லிச் சென்ற விதமும் அழகு
வெகு நாட்கள் பதிவிடாமல் இருப்பதொன்றுதான் குறை
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மனிதன் மனதில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்
கடைசி வரிகள் அற்புதம்.
அழகான வரிகள்
நீண்ட நாளைக்கப்புறம் உங்கள் வருகை கண்டதில் களிப்பு
முன்னதான
இனிய தீபவளி வாழ்த்துக்கள்
அய் அண்ணா வாங்க வாங்க நலமா ?
என்ன தான் கற்று தேர்ந்தாலும் அன்பில்லா வாழ்வில் அர்த்தமில்லை என்பதை உணர்த்திய வரிகள் சிறப்பு அண்ணா.
எல்லா உயிர்களையும் அன்போடு காத்து வாழ்வோம்.
அண்ணா அண்ணி குழந்தைகளுக்கு தீபாளி வாழ்த்து சொல்லுங்க.
எங்க அண்ணா எனக்கு தீபாளி சீதனம்.
அன்பின் மகிமையை தெள்ளென உணர்த்திய கவிதை அருமை மகேன். நீண்ட நாள் கழித்து வசந்த மண்டபத்தில் உங்களின் அழகுத் தமிழில் இளைப்பாறியதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கும் உங்களின் சரிபாதிக்கும குழந்தைகளுக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் அருமையான கருத்தோடு தொடங்கி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... tm7
மிக மிக அருமையான கவிதை.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அன்பை வலியுறுத்தி மிக அழகான கவிதை. அருமையாக இருக்கு மகேந்திரன்.
அன்பை என்று
கற்றுக் கொள்வாய்??!!
>>
அன்பை குடுத்து.., பெறுவதில் உள்ள சுகத்தை ருசிக்க தொடங்கிவிட்டால்.., வாழ்வு ரசிக்க தக்கதாகிவிடும் அண்ணா!
நலமா சகோதரரே...
FACEBOOK இல் உங்களை தவறவிட்டுவிட்டேன்....அவ்வளவாய்அங்கே இருப்பதில்லை..
நீண்ட நாட்கள் கழித்து...
உங்களையும் என்னையும் ஆள்வதே அன்புதானே மகி !
இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்,
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் ரமணி ஐயா,
இனி சற்றும் இடைவெளி விடாமல்
பார்த்துக்கொள்கிறேன் ...
தங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் நண்பர் மூஸா,
நலமா?
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் தங்கை சசிகலா,
நலமா?
சற்று ஓய்வுடன் அடுத்த வளையத் துவக்கம்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
அன்பு நண்பர் கணேஷ்,
வாருங்கள் இனி தினமும்
வசந்தம் வீசும் மண்டபத்திற்கு...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன் ...
தங்களின் மென்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..
வணக்கம் சகோதரி ராம்வி,
நலமா?
தங்களின் அழகான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி ராஜி
நலமா?
உண்மை உண்மை...
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரர் ரெவெரி ...
நலமா?
வந்துவிட்டேன் மண்டபத்திற்கு..
அடுத்த வளையத் துவக்கம்....
தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி ஹேமா...
மிகச்சரி
நம்மில் நம்மை ஆள்வது அன்பு மட்டுமே.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்...
nalla kavithai...
இனிய வணக்கம் நண்பர் சீனி,
நலமா?
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
கள்ளம் கபடமற்ற அன்பு என்பது சாதி,மதம் ,இனம் மற்றும் நாடு கடந்தது என்பதை விளக்கும் உங்கள் கவிதையும் அதனை 6 அறிவு கொண்ட மனிதன் 5 அறிவுடைய விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டி உள்ளது என்பதை விளக்கும் படமும் அருமை.வாழ்த்துக்கள்.
அழகான கவிதைகள் அண்ணா...
அன்பு ஒன்றே வாழ்வில் போதுமானவை...
நினைத்தால் நிமிடத்தில்
நிலவையும் இத்தரைக்கு
நல்விளக்காய் மாற்றுவேனென
நமத்து மரத்துப்போன
நமட்டுப் பேச்சை
எப்போது நிறுத்தப் போகிறாய்!!
மிகவும் பிடித்துள்ளது...
எல்லையில்லா இவ்வுலகில்
எல்லாம் பயின்ற நீ
ஒன்றை மட்டும்
மறந்துவிட்டாய் மானிடா!
அளப்பரிய ஆற்றல்கொண்ட
அன்பை என்று
கற்றுக் கொள்வாய்??!! = அருமை. வாழ்த்துகள்.
Post a Comment