விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின்
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
உலகினுக்கு வெளிச்சத்தை
உதயனின் தயவால்
உவப்புடன் கொடுக்கும்
உன் வெற்றிக்குப் பின்னால்
உள்ளதென்ன அறிவாயோ?!!
இயைபாய்க் களைத்த
இரவியின் கவிழ்வால்
இருண்ட திசையென
இயல்பாய் ஏற்றிட்ட
இன்திசை மேற்கினை அறிவாயோ?!!
மண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
தன்னுடல் நெக்குருக
தனைச்சுற்றிய திசையெல்லாம்
தீச்சுடர் ஒளிதரும்
தண்மையான மெழுகினைப்போல்!
தகைவாய்க் கிழக்கது
தண்டலை எனும் பெயரேற்க
துகளேற்ற திசை மேற்கே!!
இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
அன்பன்
மகேந்திரன்
கையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:
மருவரல் – சூழ்ச்சி
மழுக – இருள்பரவ
துகள் – குற்றம்
தண்டலை – சோலை
மண்டிலம் - ஞாயிறு
இரவி - கதிரவன்
விசும்பு - ஆகாயம்
39 comments:
அருமை அருமை
கிழக்கை படிமமாக வைத்துச் சொன்னதை
மிகவும் ரசித்தேன்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்ம்ம் ....ம் (:
அருமை அருமை கவிஞரே
மண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
மண்டிலம்
மருவரல் புதுப்புது வார்த்தைகள் பொருளோடு தந்த விதம் அருமை அண்ணா.
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
இறுமாப்பு அகற்றும் இனிய கவிதை !
பாராட்டுக்கள் !
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியல்லியேன்னு நினச்சேன் தனியாக விளக்கிய விதம் ஈசியா புரிஞ்சுக்க முடிஞ்சுது நன்றி
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியல்லியேன்னு நினச்சேன் தனியாக விளக்கிய விதம் ஈசியா புரிஞ்சுக்க முடிஞ்சுது நன்றி
மிகவும் அருமையான கவிதை....
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கடைசி இரு வரிகளை உணர வேண்டும்... அருமை...
சொற்களுக்கான பொருள்களையும் குறிப்பிட்டதை தெரிந்து கொண்டேன்... நன்றி சார்...
இது ஒரு புது மாதிரியான பதிவாக இருக்கிறது.
கவிதையில் சில வரிகளுக்கான பொருளை கீழே தந்து பதிவிட்டு படிப்பதற்கு எளிமை ஆக்கிவிட்டீர்கள்
இரண்டாவது முறை பொருளோடு படிக்கையில் வேறூ அனுபவம் கிடைத்தது.
அருமையான பதிவு. இதைத் தொடர்ந்தால் நிறைய தமிழ் வார்த்தைகளை நாங்கள் தெரிந்துக் கொள்வோம்
அருமை மாப்ள..!
சொல் விளக்கம் தேவைதான்.
ஒன்றன் இறக்கத்தில் ஒன்றன் ஏற்றம் மிளிர்கிறது. அறியாத பல அழகுத் தமிழ்ச் சொற்களால் அற்புதமாய்ப் படைத்துள்ள குறியீட்டுக் கவிதைக்குப் பாராட்டுகள் மகேந்திரன். பல புதிய சொற்களின் பொருளை அறிந்துகொண்டேன்.நன்றி.
இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!
>>
ரொம்ப சரியா சொன்னீங்க சகோ. நம்மை விட உய்ர்ந்தவங்க இந்த புவியில் நிறைய பேர் இருக்காங்க என்று உணர்ந்தால் நமக்கு தலைக்கணம் சிறிதும் வராது.
பொருள் புரிந்த கவிதையைப் படித்து ரசித்ததுடன் அழகுத் தமிழ் வார்த்தைகளின் பொருளையும் அறிந்து கொள்ள முடிந்தது. அருமை மகேன்.
விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின்
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
நண்பரே... கிழக்கு இறுமாப்பு கொண்டுள்ளது ...என்ற கருத்தில் தொடங்கி... மேற்கின் பெருமை பேசி...
இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!
அழகாக முடித்துள்ளீர்கள். ஆழ்ந்த கருத்து! ரசித்துப் படித்து மகிழ்ந்தேன்.
நன்றி நண்பரே.
கவிதைகளின் திருப்பம் வேறு திசைகளில் உங்களால்தான் மகி.சொல்விளக்கம் தந்ததுக்கும் நன்றி !
//இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!//
சிந்தனையைத் தூண்டும் அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள்!
இச்சகத்தில் ஆயிரமே!// இறுதி வரியில் ஒரு படிமத்தையே பார்க்க வைத்துவிட்டீர்கள் அருமை அண்ணா!
கவிதை அருமை கற்பனை அபாரம் . தொடர வாழ்த்துகள்
அழகான கிராமத்து கவிதை அண்ணா
>>>>என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே<<<<
கர்வத்தை தகர்த்தெறியும் சிந்தனை மிகு வரிகள்! தொடருங்கள் நண்பரே!
மிக மிக அருமை மகேந்திரன். படித்துக் கொண்டிருக்கும்போதே சில வார்த்தைகள் அர்த்தம் புரியவில்லையே என வருந்தியபடியே வந்தேன் - கடைசியில் நீங்களே அர்த்தம் வெளியிட்டது நன்றி.
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள் மகேந்திரன்.
வார்த்தைக்கு பொருள்தந்து
விளக்கிய விதமும் கவிதை நயமும் மிக அருமை சகோ..
//இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!//
எதுவும் இனி
இறுமாப்பு கொண்டிருமோ..
வாழ்த்துக்கள்!
வணக்கம் அண்ணே ..
உங்கள் பதிவில் தான் அதிக சொற்களுக்கு நான் விளக்கம் கற்று கொள்கிறேன் ...
மிகச்சிறப்பு என் நன்றிகளும் வணக்கங்களும்
அட்டகாசமான ஆரம்பம் மகி..... எப்போதும் வெளிச்சத்தையும் பகலையும் விரும்பும் மக்களின் சந்தோஷமும் சௌக்கியமும் என்னால் தான் என்று இறுமாந்திருக்கும் கிழக்கை சாடும் கவிதை வரிகளின் தொடக்கம்.... மக்களில் சிலர் அப்படி தான் இருக்கிறார்கள்.. யாரோ ஒருவரின் நல்லெண்ணத்தாலும் தியாகத்தாலும் விட்டுக்கொடுத்தலாலும் நல்லவை நடந்துக்கொண்டிருக்க அந்த நல்லவை முழுவதும் நானே கொடுத்தேன் என்று மார் தட்டுவோருக்கு சரியான குட்டு இந்த வரிகள்.... ஓப்புமையாக கிழக்கை குறிப்பிட்டிருப்பது சிறப்பு மகி. இயற்கை என்றும் தான் செய்வதை தான் கொடுப்பதை தவறுவதே இல்லை. ஆனால் அந்த இயற்கையும் மனிதனைப்போல பொல்லாப்பும், பொறாமை குணமும் எல்லாம் என்னால் தான் என்ற வீண் ஜம்பமும் தற்பெருமையும் படைத்தால் என்னாகும் என்று விளக்கி உங்களுக்கே உரிய சொல்லாடல் வார்த்தை ஜாலத்துடன் அழகிய மாலையாக தொடுத்து வழங்கி இருப்பது மிக சிறப்பு.... எல்லாம் என்னால் தான் என்று நெஞ்சு நிமிர்த்தாதே.. நீயும் அதில் ஒரு பங்கு அவ்வளவு தான் என்று சொல்லி முடித்திருப்பது மிக அருமை...
வெளிச்சம் தரும் சூரியனின் வெற்றிக்கு பின்னால் அதன் தியாகமும் உழைப்பும் அவப்பெயர் தாங்கும் தன்மையும் இருக்கிறது என்பதை கிழக்கு அறிய மிக அருமையான வரிகள் அமைத்த விதம் சிறப்பு மகி..
தான் என்ற அகம்பாவம், கர்வம் மனிதனை அடியோடு அழித்துவிடும். அடக்கமும் பண்புமே அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கும் என்பதை உணர்த்திய வரிகள்.
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற பழமொழிக்கேற்ப... உலகம் விழிப்பது என்னால் தான் உலகத்திற்கு வெளிச்சம் ஏற்படுவது என்னால் தான் என்ற வீண் ஜம்ப வார்த்தைகளை புறம் ஒதுக்கி எதனால் என்ற காரணம் அறிந்து அதன்படி நடக்கச்சொல்லும் கருத்துள்ள கவிதை.. மனம் கவர்ந்த பதிவு.... அன்பு வாழ்த்துகள் மகி. ரொம்ப நாட்கள் கழித்து சந்திக்கிறோம்பா.. சௌக்கியமா தாங்களும் தங்கள் குடும்பமும்?
பாராட்டக்கூடிய விஷயம் என்னன்னா நிறைய சொற்களுக்கு அர்த்தம் விளங்காது விழித்த எனக்கு கீழே பொருள் கொடுத்திருந்தது... இதற்கு தனியாக அன்புநன்றிகள் மகி...
நல்லதொரு கவிதையுடன் மீண்டும் விடுமுறைகளின் பின்...
நீண்ட நாளின் பின் உங்கள் பதிவு கண்டதில் சந்தோஷம்
''...தான் என்ற அகம்பாவம், கர்வம் மனிதனை அடியோடு அழித்துவிடும். அடக்கமும் பண்புமே அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கும் என்பதை உணர்த்திய வரிகள்...''
மஞ்சுவை வழி மொழிகிறேன்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
எதையோ யாரையோ இடிக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ
கிழக்கின் இறுமாப்பும் அதன் பெருமைக்கு மேற்கின் வருத்தமும் ஆழமாய் நோக்கியுள்ளீர்கள். கதிரவன் செய்கைக்கு கிழக்குப் புகழ் தேடுகின்றது . உலக மக்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவத்தை கிழக்கின் மேல் ஏற்றி தங்கள் குறிப்பாய் தந்துள்ளீர்கள் . உள் குறிப்பு உணர்த்திய விதம் அருமை. சிந்தியுங்கள் . சிறப்புக்கள் வெளிப்படும் . வாழ்த்துகள்
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
good words.....
vetha.Elangathilakam.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
அன்பின் மகி,
இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா..சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..
http://blogintamil.blogspot.com/
மெல்லிய இசை அமைத்து பாடலாக பாடும்படி கவிதைகள்
படிக்கனும்னா யோசிக்காம நேரா நம்ம வசந்தமண்டபத்துக்கு வந்து
இளைப்பாறினால் போறும்பா.... நாட்டுப்புற பாடல் வரிகள் தந்தானே
தந்தானே தந்தாந்த்தனே அப்டின்னு தானாவே நமக்கு
பாடத்தோன்றிவிடும் மகியின் எழுத்துகளை படிக்கும்போதே.
கருத்தும் இருக்கும், பாடலும் இருக்கும், மெல்லிய சோகமும்
இருக்கும், சந்தோஷக்கூச்சலும் இருக்கும். மணம் நிறைந்த
மலர்களின் தோட்டமும் இருக்கும். காற்றாட தென்னம்பிள்ளையின்
வளர்த்தியும் இருக்கும்... சொல்லிக்கிட்டே போகாம உடனே
பகிர்வுகள் கொஞ்சம் பார்ப்போமா?
தொங்கு படிகள்
”ங” ப்போல் வாழ்ந்திடு
ஏற்பது யாது?
ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க
மிகவும் அருமையான கவிதை....
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி
மண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
மனம் நிறைய ரசிக்கவைத்த வரிகள்..
நல்லதொரு கவிதை...மனதுக்கு நிறைவாக இருந்தது மகேந்திரன்
அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html
நன்றி.
கிழக்கு மேற்கு என்ற தலைப்பில் அழகான பொருளில் எழுதியுள்ளீர்கள் அண்ணா...
வாழ்த்துகள், வலைச்சரத்தில் வந்தமைக்கும் பாராட்டுகள்...
Post a Comment