Powered By Blogger

Saturday 15 September 2012

விடைதேடும் சலனங்கள்!!!


டைபாதைத் தடங்களில்
சுவடுகள் பதித்திட
எண்ணிடும் வேளையில்!
உள்ளங்கால் தீரம்விட்டு
ஆணிவேர் ஒன்று
புவனம் ஊடுருவி - என்னை
நடையிழக்கச் செய்ததுவே!!

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்!
ஒற்றைக் காட்சியில்
நிலைப்பு ஏற்படாது
கவரத் துடிக்கையில்!
கண்ட காட்சியும்
பிழையாய்ப் போனதுவே!!


றவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!!


னந்தக் குளியலிட
அருவிக்குச் சென்றாலும்
விழும் அழகினில்
விக்கித்து நின்றாலும்!
நதிமூலம் அறிந்திடவும்
வீறிட்டு விழும்
காரணம் அறிந்திடவும்
மனமது விழைந்ததுவே!!


க்கள் பணிசெய்ய
மாண்பாக வந்தவரோ
மாண்புமிகு ஆனபின்னே!
பண்புகளை இழந்து
பணமொன்றே குறியாய்
மணமிழந்த மலராய்
பிணமாய் ஆகிடுகையில்
மனம் வெறுத்ததுவே!!


நான்குவழிச் சாலையின்
நாற்கர அமைப்பில்
வெகுவேகப் பயணத்தை
இலகுவாய் கடக்கையில்!
சாலைகளின் ஓரங்களில்
அரணாய் உயர்ந்துநின்ற
பசுமரங்கள் எங்கேயென
தேடித் பார்க்கையில் - மனம்
திக்கித்துப் போனதுவே!!


ரளமாய் வாழ்க்கையது
சாகசம் பலகாட்டி - தன்
சாளர முகங்களில்
சிறுகதைகள் பலகூறி
விடுகதைகள் போட்டபடி
வினாக்களை தொடுக்கிறது - நானோ
விடுத்திட விழைகையில்
விளைச்சலாய் மலர்ந்தது
விடைதேடும் சலனங்கள்!!!


அன்பன்
மகேந்திரன்

54 comments:

நிரூபன் said...

வணக்கம் அண்ணர்,
நலமா?
இருங்க படிச்சிட்டு வாரேன்.

மகேந்திரன் said...

வணக்கம் நிரூபன்,
நல்ல சுகம்..
தங்களிடம் நாடுவதும் அதுவே...
படிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

தன்னைப் பாதித்தை
படிப்பவர்களும் பாதிக்கும்படி
சொல்லிச் செல்வதுதான் சிறந்தபடைப்பு
தங்கள் படைப்பும் பாதிப்பை ஏற்படுத்திப்போகிறது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

மகேந்திரன் said...

வணக்கம் ரமணி சார்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

நிரூபன் said...

நிலையான மனித வாழ்வில் நிலைமாறலாய் நிகழும் நிஜங்களை,
அவ் நிஜங்களால் துடிக்கும் மன உணர்வின் மாறுதல்களை
சலனங்களைப் படம் பிடித்துக் காட்டும் கவியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ரசித்தேன்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,
நிஜங்களை சந்திக்கும் பொழுது
அதனை பனிமூட்டமாய் மறைத்து நிற்கும்
சில பொய்மைகளையே இங்கே காட்ட
நினைத்தேன் ...
தங்களின் ரசிப்புக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மாறுதல்கள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.அதில் நிஜங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நம் அமைதியை இழக்கச் செய்கிறது.ஆதங்கள் ஏற்படுகிறது. அதை அருமையான வார்த்திகளிட்டு அழகன் கவிதியாக்கி விட்டீர்கள். நன்று மகேந்திரன்.

இராஜ முகுந்தன் said...

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னாலும் எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லைத்தான். மாண்புமிகு....அருமையான வரி

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் முரளிதரன்,
மாற்றங்கள் ஆயிரமேனும் அதில்
நிஜங்களின் முகங்கள் தொலைந்துபோயே
இருக்கின்றன...
நிஜமுகத்தை வெளிக்கொணர சிரத்தையுடன்
போராட வேண்டியிருக்கிறது...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

Unknown said...

சலனம் - நடைமுறையாகிப்போனதே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் முகுந்தன் ராஜதுரை...
வருக வருக..
வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது...
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல்
அதன் பலவேறான திரிபுகளில் சிக்கி சிதறுண்டு
பின்னர் தெளிவு பெறுகையில்
மனம் போதும் போதும் என்றாகி விடுகிறது...
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்...
நடைமுறையாகிப் போனது என்பது
சரியான வார்த்தைப் பிரயோகம் மாம்ஸ்....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்..

Anonymous said...

ம்ம்ம் அழகான கவிதை றொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கன்.

எப்படி நலம் அங்கிள்??????

திண்டுக்கல் தனபாலன் said...

சார்... நலமா..?

சிந்திக்க வைக்கும் வரிகள்... இன்றைய நிலை இன்னும் மோசமாகாமல் இருந்தால் சரி...

இராஜராஜேஸ்வரி said...

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்

கவின் மிகு
காட்சிப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

பால கணேஷ் said...

உறவுகள் இருந்தால் | சிறகொடிந்து போனாலும்| உறுதுணை உண்டென | எண்ணிய வேளையில்! | சிறுசிறு காரணத்தால் | மறுமுகம் காட்டி | உருமாறிப் போகையில் | உள்ளம் குறுகிப் போனதுவே!!

-அருமையான வரிகள். நான் அனுபவத்தில் கண்டவையும். சற்றே இடைவெளிக்குப் பின் வசந்த மண்டபம் வந்தாலும் நிறைவு தந்த யதார்த்தக் கவிதை படித்த நிறைவு என்னுள்.

Tamilthotil said...

உறவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!!

எனக்கு முன்னே நண்பர் அவர்கள் இந்த வரிகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இது பலப் பேருடைய அனுபவமாகத் தான் இருக்கிறது. அதை சொற்களில் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

அம்பாளடியாள் said...

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்!
ஒற்றைக் காட்சியில்
நிலைப்பு ஏற்படாது
கவரத் துடிக்கையில்!
கண்ட காட்சியும்
பிழையாய்ப் போனதுவே!!

கண்ணால் காண்பதுவும் பொய் !..
காதால் கேட்பதுவும் பொய் !...
தீர விசாரிப்பதே மெய் என
மனதை உருக்கி வார்த்து எடுக்கிறது
இந்தக் காட்சிப் பிழைகளை உணர்த்தும் அருமையான கவிதை வரிகள் :( தொடர வாழ்த்துக்கள் சகோ .

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு ஏன் நீண்ட இடை வெளி. அடிக்கடி கவிதை கொடுங்க

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை....

தொடரட்டும் கவிதைகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

”விடை தேடும் சலனங்கள்”

எங்களையும் சலனப்படுத்திய
வரிகள் தான்.

கவின் மிகு காட்சிப்பகிர்வுகளே

பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய கவிதையுடன்...

தங்களை வரவேற்கிறேன்..

MARI The Great said...

>>>உறவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே>>>

நல்ல வரிகள், மிகவும் பிடித்துப்போனது!

முனைவர் இரா.குணசீலன் said...

மக்கள் பணிசெய்ய
மாண்பாக வந்தவரோ
மாண்புமிகு ஆனபின்னே!
பண்புகளை இழந்து
பணமொன்றே குறியாய்
மணமிழந்த மலராய்
பிணமாய் ஆகிடுகையில்
மனம் வெறுத்ததுவே!!

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

தென்கோடித் தீந்தமிழன்! தமிழின் தொண்டன்!
திறன்கோடி மகேந்திரன்தன் வலையைக் கண்டேன்!
பொன்கோடி கொண்டதுபோல் சொற்கள் யுாவும்
பொருள்கோடி தந்தனவே! வாழ்த்து கின்றேன்!
தன்கோடி தேடாமல் பணிகள் ஆற்றி
தமிழ்கோடி நலங்காணச் செய்யும் நண்பா!
இன்கோடி சீருடைய நம்மின் அன்னை
எழிற்கோடி வழங்கட்டும்! இனிதே வாழ்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

vetha (kovaikkavi) said...

விடை தேடும் சலனங்கள்
கடை போட்டது மிக நன்று.
நல்வாழ்த்து சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://kpvaikkavi.wordpress.com

vetha (kovaikkavi) said...

http://kovaikkavi.wordpress.com

சுதா SJ said...

வணக்கம் அண்ணா
எப்புடி இருக்கீங்க?????

//உறவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!! ///

ரெம்ப நல்லா இருக்கு அண்ணா ...

சுதா SJ said...

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்///

அண்ணா எப்படித்தான் இப்படியான ஆசாகான வரிகளை தேடி பிடிக்கிறீர்களோ.... ரெம்ப அசத்தல் அண்ணா....

மகேந்திரன் said...

அன்புத் தங்கை எஸ்தர் சபி,
நலம் நலமே
என் நாடலும் அதுவே...
தங்களின் கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
நல்ல சுகம்..
தங்களின் நலம் நாடுதலுடன்
இனிய கருத்திட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி...
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்கள் கருத்தால் என் மனதும் நிறைவு பெற்றது...
இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தமிழ்ராஜா..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த அருமையான
கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

வணக்கம் லக்ஷ்மி அம்மா..
விடுமுறையில் இருந்ததால் வலைப்பக்கம் வரவில்லை...
இனிமேல் தொடர்ந்து எழுதுகிறேன்.
தங்களின் அன்புக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் வரவேற்பிற்கும் அழகிய கருத்துக்கும்
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் இராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குட்டன்....
வருக வருக..
வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது...
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவர் இரா.குணசீலன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை கவிஞா கி.பாரதிதாசன்,
இருகரம்கூப்பி தங்களை வசந்த மண்டபம்
வருக வருக என வரவேற்கிறது...
அழகிய கவியால் எம்மைப் பாராட்டி
கருத்திட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் உளமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புத் தம்பி துஷி,
நான் நல்ல சுகமாக இருக்கிறேன்..
நீங்கள் நலம் தானே...
அழகிய கருத்துக்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்..

ஹேமா said...

உரு மாறும் உலகமும் அதற்குள் வாழும் மனிதனும் மனிதம் தொலைத்து நாளுக்கொரு உருவமாய் உலவிட வலித்துப்போகிறது உண்மையான சில மனங்கள் !

செய்தாலி said...

வாங்க கவிஞரே நலமா

கவிதை
வாழ்வின் உயிர் வாசனை

கீதமஞ்சரி said...

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நின்று நிதானித்து கவனிக்கவும் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் எந்திர யுகத்தில் இப்படி மனம் உறுத்தும் காட்சிப் பிழைகளைக் கனத்த வரிகளோடு பதிவுசெய்ததோடு வினாக்கள் எழுப்பி எம்மையும் யோசிக்கவைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் மகேந்திரன்.

vaduganathan said...

உறவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!!

அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு சிலருக்கு கேட்ட அனுபவம். சிலருக்கு பார்த்த அனுபவம். இதை என் குடும்பமே அணு அணுவாய் அனுபவிச்சேன் அண்ணா வாழ்க்கையில் பட்டதெல்லாம் மாறிபோச்சி என்றிருக்க வசந்த மண்டபம் நாலுவரியில் நினைவுட்டியது . பின்னோக்கி ஒரு பயணம் போல்
பாபு வடுகநாதன்


தனிமரம் said...

வணக்கம் மகி அண்ணா! நலமா கொஞ்சம் அதிகம் வேலை தாமதம் இனி தொடரும் என்றாலும் வசந்த மண்டபத்தை துறந்து போக மாட்டேன் தொடர்வேன் கவிதை ரசிக்க!

தனிமரம் said...

நான்குவழிச் சாலையின்
நாற்கர அமைப்பில்
வெகுவேகப் பயணத்தை
இலகுவாய் கடக்கையில்!
சாலைகளின் ஓரங்களில்
அரணாய் உயர்ந்துநின்ற
பசுமரங்கள் எங்கேயென
தேடித் பார்க்கையில் - மனம்
திக்கித்துப் போனதுவே!!// அருமை சாலையில் பார்க்கையில் வரும் சில சலணம் அதிகம் நெஞ்சைப்பிழியும்!

தனிமரம் said...

வாழ்க்கையது
சாகசம் பலகாட்டி - தன்
சாளர முகங்களில்
சிறுகதைகள் பலகூறி
விடுகதைகள் போட்டபடி!/// ம்ம் வாழ்க்கையின் தேடல் இப்படித்தானோ? சிந்திக்க வைக்கும் வரிகள்!

Post a Comment