மணல்மேட்டில் நின்றிருந்து
மலைமுகட்டைப் பார்த்திருந்தேன்!
தலைதூக்கி நான்பார்த்து
கழுத்து சுளுக்கிப் போயிருந்தேன்!!
அங்கங்கே சிதறிப்போன
சின்னஞ்சிறு துகள்களை
முதுகிலே சுமந்த நான்
சிறுமரக்கட்டை ஏந்தியங்கே
மலையேற துணிவுடன்!!
சிகரத்தில் ஏறத்துணிந்த
சிற்றெறும்பு எனைப்பார்த்து
சிறுமதி கொண்டாயோ - என
ஏளனமாய் பார்த்தனர்
சுற்றத்துப் பெருமக்கள்!!
முடியும் என்பது - எனக்கு
விடியாமலா போய்விடும்!
முயற்சி என்பதை
முதுகெலும்பு வேர்த்திட
முகிலிறக்கி கொண்டுவந்தேன்!!
நம்பிக்கை எனும்
நயமான கருப்பொருளை
நடுநெஞ்சில் உருவேற்றி
நானூறு முறை சறுக்கி
நானும் முயன்றுவந்தேன்!!
உதயத்தில் ஆரம்பித்தேன்
உச்சிப்பொழுதிலும் இயலவில்லை
உதயனன் நீயோ
அரூபமாகும் வேளையிலே
வடிவான முகடேறி
வாகைமாலை சூடிவிட்டேன்!!
அன்பன்
மகேந்திரன்
மகேந்திரன்
16 comments:
நம்பிக்கை தரும் கவிதை நனி நன்று.
அழகான கவிதை வரிகளுக்கு நன்றி நம்பிக்கை இருந்தால் வானத்தை கூடத் தொட்டுவிடலாம்
நம்பிக்கை வழங்கும் இனிய படைப்பு ..
நம்பிக்கை வரிகள்... அருமை...
எறும்புகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன... வாழ்த்துக்கள்...
நன்றி...
tm2
சோர்விலாது உழைக்கும் எறும்பினக் கவிதை வரிகள் சிறப்பு அண்ணா.
எறும்பு சொல்லும் நம்பிக்கை பாடம் அருமை
//நம்பிக்கை எனும்
நயமான கருப்பொருளை
நடுநெஞ்சில் உருவேற்றி
நானூறு முறை சறுக்கி
நானும் முயன்றுவந்தேன்!!
//
அருமையான வரிகள் ..
யம்மடியோ! என்னங்க இப்படி கலக்குறிங்க!
சும்மா தூள் பண்ணிட்டிங்க, என்னை மிகவும் கவர்ந்தது. உங்களின் 200 வது Follower ஆகா பின்தொடர்கிறேன். என்கிற பெருமையும் எனக்கே!
அழகான வரிகள் சார்
ரசித்தேன்
முடியாமலா போய்விடும்.
இன்னும் அடகு வைக்கவில்லை மூளையை....முடியும் முடியும் !
நம்பிக்கையூட்டும் கவிதை. சிறப்பான படம்... பாராட்டுகள் நண்பரே.
படத்தை பார்த்தாலே போதும். கவிதையின் பொருள் புரிந்து விடும். அப்படத்திற்கு மேலும் பொருள் சேர்த்தது உங்க கவிதை. பகிர்வுக்கு நன்றிண்ணா!
விடியாமலா போய்விடும்...
தலைப்பும், படமும், கவிதையும் சூப்பர் நண்பரே.
மிக சிறப்பான வரிகள்.இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http;//kovaikkavi.wordpress.com
Arumaiyaana kavidhai. Thalaththirku mudhal varugai. Kaalaiyileye ungal kavi varigal urchagam tharugindrana.
நம்பிக்கைக் கவிதை - அருமையான வரிகள்.
Post a Comment