Powered By Blogger

Monday, 19 November 2012

சில்லறை தான் என் வாழ்க்கை!!







சித்தாரக் கள்ளி போல 
சிரிச்சிருக்கும் வெங்காயத்த 
சந்தையில வாங்கிவந்தேன் 
சீமைத்துரை வாங்கிடத்தான்!!
 
 
சுங்குடிச் சீலைகட்டி
செவத்த தோல மேல்பரப்பி
சிவந்திருக்கும் தக்காளிய
உமக்காக வாங்கிவந்தேன்!!
 
 
தொண்டைத்தண்ணி வத்திப்போக
தொரதொரன்னு கூவினாத்தான்
எனக்குத் தொழில் ஆகுமின்னு
எண்ணத்தில வைச்சுக்கோய்யா!!
 

 


விற்றபின்னே வந்துவிழும்
சிலுசிலுன்னு சிரிச்சிருக்கும்
சில்லறை மட்டும்தானே
எனக்கு இங்கே வருமானம்!!
 
 
சில்லறை வியாபாரத்த
வந்தவனுக்கு தாரைவார்த்து
என் வயித்தில் அடிப்பதுதான்
உனக்கு இங்கே வேலையாய்யா!!
 
 
வியாபார நோக்கத்தில
வந்தவன் தான் ஆங்கிலேயன்!
வந்தவனோ குந்திகிட்டு
வக்கனையா இருந்த கதை
உனக்கு இங்கே தெரியாதாய்யா?!!



 
அன்பன்
மகேந்திரன்

 

32 comments:

கோவை நேரம் said...

சில்லறை விற்பனை தான்...ஆனா பெரிய தத்துவம்...
///வியாபார நோக்கத்தில
வந்தவன் தான் ஆங்கிலேயன்!///

Yaathoramani.blogspot.com said...

வியாபார நோக்கத்தில
வந்தவன் தான் ஆங்கிலேயன்!
வந்தவனோ குந்திகிட்டு
வக்கனையா இருந்த கதை
உனக்கு இங்கே தெரியாதாய்யா?!!//அருமையாகச் சொன்னீர்கள்

தூங்குபவர்களை எழுப்பலாம்
தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை
என்ன செய்வது ?
சிந்திக்கச் செய்யும் சீரிய பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

பலரின் உண்மை நிலைமைகள்... எப்போது இவை மாறுமோ...?
tm3

தினேஷ்குமார் said...

இன்றும் அடிமைத்தனம் நீள்கிறது எங்குப் போயமுடியுமோ ....

Admin said...

உங்களிடம் என்னைக் கவர்ந்ததே அந்த கிராமத்துவம்தான் தோழரே..

Admin said...

உங்களிடம் என்னைக் கவர்ந்ததே அந்த கிராமத்துவம்தான் தோழரே..

சசிகலா said...

அன்றும் இன்றும் விழித்தெழுவது என்றோ ,?

சிந்திக்க வைத்த வரிகள் அண்ணா.

kowsy said...

என்ன இன்று அனைத்துப் பதிவுகளும் காய்கறி சபந்தமாக என் பக்கம் வந்திருக்கிறது என்று சிந்தித்தபடி உங்கள் பதிவு தொடர்கின்றேன். அந்தவன் குந்தியது போக இப்போது வழங்கலையும் அல்லவா அவர்களுக்குத் தாரை வார்க்கின்றீர்கள் . கறி மஞ்சள் வேப்பமரம் இப்படிப்பல . யார் இதுபற்றிப் பேசப்போகின்றார்கள் இப்படியே இருக்க யோகா கலைகூட வெள்ளையருக்கு சொந்தமாகப் போகின்றது

ராஜி said...

வியாபார நோக்கத்தில
வந்தவன் தான் ஆங்கிலேயன்!
வந்தவனோ குந்திகிட்டு
வக்கனையா இருந்த கதை
உனக்கு இங்கே தெரியாதாய்யா?
>>
இதை உணர்ந்தால் நல்லதுதான் அண்ணா! நல்லது, கெட்டது ஆரயும் அளவுக்கு நம்ம அரசியல் வாதிகளுக்கு பொறுமை இல்லீங்கண்ணா!

மனோ சாமிநாதன் said...

காய்கறிகளை அழகாக வர்ணித்து, காய்கறி விற்பவனின் ஆதங்கத்தையும் அழகிய கவிதையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!! பாராட்டுக்கள்!!

முனைவர் இரா.குணசீலன் said...

சில்லறை வியாபாரத்த
வந்தவனுக்கு தாரைவார்த்து
என் வயித்தில் அடிப்பதுதான்
உனக்கு இங்கே வேலையாய்யா!!

நறுக்கென்று கேட்டீர்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

வியாபாரம் செய்யவந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் அன்று..

இன்று அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் நடத்துகிறார்கள்.

அவ்வளவுதான்.

அருணா செல்வம் said...

பணமுள்ளவர் எல்லாம்
முதலாளிகள் என்று
படித்தவர்களும் நினைப்பதால் தான் இந்நிலை....!!!

கவிதை அருமை.

ஹேமா said...

காய்கறிகளை வர்ணித்திருப்பதே மிக அழகு !

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் கோவை நேரம் ஜீவா...
தங்களின் முதல் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா,
சரியான கருத்துரைத்தீர்கள் ..
என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
விடையற்ற வினாதான் நண்பரே...
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் தினேஷ் குமார்...
கானல் நீராகிவிடுமோ என்பதுதான்
என் ஆதங்கமும்...
மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தோழர் மதுமதி...
தங்களின் அன்புக்கு என்
மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை சசிகலா
விழிக்காமல் வீழ்ந்து விடக்கூடாதே...
கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திர கெளரி,
கொஞ்சம் கொஞ்சமாக
நம்முடைய வளங்களையும் கலைகளையும்
சுரண்டிக் கொண்டு போனார்கள்..
மீண்டும் வருகிறார்கள்..
எதைக் கொண்டு போகவோ?!!!
தங்களின் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை ராஜி...
பொறுமை இல்லையென்றால் கூட
பொறுக்கலாம்...
தகுதி இல்லாது போய்விடக் கூடாது...
கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் மனோ அம்மா,
மனம் நிறைந்த பாராட்டுக்கும்
கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் முனைவரே...
சரியாகச் சொன்னீர்கள்...
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் அருணா செல்வம்
சரியாகச் சொன்னீர்கள்...
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஹேமா...
இனிய கருத்துக்கு அன் மனமார்ந்த நன்றிகள்..

Unknown said...

அரசியல் வெடி அடிக்குது நெடி!சுயநல அரசுக்கு அடி! கிராமியக் கலக்கல்! அருமை

கதம்ப உணர்வுகள் said...

நம் மக்களிடம் இருக்கும் பொறுமை தான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வைக்கிறது போல....

இயற்கையும் வளங்களும் நம் நாட்டில் பசுமையாய் நிறைந்திருந்தபோது மொத்தமாய் வந்து நம்மை அடக்கி எல்லாவற்றையும் அபகரித்துச்சென்றார்கள் ஒரு முறை...

கற்பிழந்த காரிகையாய் கிடந்ததை சீர்செய்து முன்னேறி திரும்ப நாம் நிலைத்து உட்காரும் வேளையில் மீண்டும் இவர்களின் தொல்லை....

பொறுக்கும் வரை தான் பொறுப்பார்....
பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்தால் மீண்டும் யுத்தம் தான்...

அழகிய வர்ணனையுடன் ஆரம்பித்த வெங்காயத்தின் அழகையும் தக்காளியின் தளதளப்பையும் வைத்து தீட்சண்ய வரிகளுடன் முடித்த கவிதை மிக அட்டகாசம் மகி....

உங்க கவிதையில் எப்போதும் நான் காணும் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால்...

கிராமிய மணம் மாறாத அதே ருசியுடன் சுவையுடம் சமைக்கும் வரிகள் தான்....

ரசித்து ரசித்து மகிழ்ந்து உண்ணும்போது சுவை இன்னும் கூடுகிறது...

கருத்தும், அழகும், கவித்துவமும், கிராமியமணமும் எள்ளளவும் குறையாத அற்புதமான விஷயங்கள் என் தம்பி மகியின் கவிதையில் நான் எப்போதும் காண்பது....

நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்தாலும் மகியின் கவிதையில் ரசனையும் தேனும் குறையாது நிறைவாய் கிடைத்த திருப்தி வாசிக்கும் எங்களுக்கும்பா....

அன்பு வாழ்த்துகள் மகி அழகிய கவிதை வரிகளுக்கு...

சென்னை பித்தன் said...

சில்லறை வியாபாரிகளின் கவலையை ’நச்’ சுன்னு சொல்லும் கவிதை

Seeni said...

சொந்தமே!
சில்லறை வணிகத்தை-
பற்றிய அழகான-
பகிர்வு!
எதார்த்தமாக சொல்லிடீக!

நன்றி!

Rathnavel Natarajan said...

நண்பர் மகேந்திரனின் அருமையான கவிதை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள்.

Post a Comment