சிதறிக் கிடப்பதை
சீராக கூட்டிவைத்து
சீர்மிகு தெருக்களை
செம்மையாய் மாற்றிவரும்
செம்மையாளர் என் தந்தை!!
துப்புரவுத் தொழிலது
தூரோடு வேரறுத்து
என்னோடு நிற்கட்டும்
பள்ளிசென்று படித்து
பார்போற்ற வளர்ந்திடென
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்!!
வாடியபயிரை இனம்காண்பதுபோல்
வாடிநிற்கும் எம்மின்
வறுமையை அறிந்திட்ட
வாஞ்சைமிகு அரசாங்கம்
வழங்கியது கல்வி உதவித்தொகை!!
அரசுகொடுத்த பணமதை
ஆசிரியர் எனும் போர்வையில்
நடமாடும் பிணங்களோ
அகல வாய்திறந்து
ஏப்பமிட்டு போனாரே!!
முதுகெலும்பு வளையாது
காசுபார்க்க உனக்கு
ஆயிரம் வழியிருக்க
கல்விக்காய் எமக்களித்த
உதவித்தொகைதானா கிடைத்தது!!
சிறுகுழந்தையாம் எம்மின்
வாழ்வாதாரத்தில் கைவைக்கும்
வக்கிரபுத்திக்காரன் நீயோ
பணப்பசி எடுத்தால்
பெற்றபிள்ளையையும் விற்பாயோ?!!
பணம்தான் உனது
பிரதானப் பிரச்சனை என்றால்
உன் உடற்கூறு அறுத்து
விற்றுப் பிழைத்துவிடு
கல்விக்காய் ஏங்கும்
எம் உயிரில் அடிக்காதே!!
அன்பன்
மகேந்திரன்
56 comments:
உணர்வுபூர்வமான உணர்ச்சி மிகுந்த வரிகள்...
மனதை வெறுப்படைய வைத்து செய்தியின் தாக்கம் அப்படியே உங்களின் கவி வரிகளில்...!
புகைப்படத்தில் அச்சிறுமியின் பார்வை, ஒரு அற்புத கவிதை !!
வைத்த என்பது வைத்து என்று வந்துவிட்டது...
மன்னிக்கவும் மகேந்திரன்.
கல்விக்காய் ஏங்கும்
எம் உயிரில் அடிக்காதே!!//
சாட்டையடி வரிகள்..
அந்த ஏக்கம் நிறைந்த சிறுமியின் படமே போதும்.கண்ணே கவிதை வடிக்கிறதே சோகமாய் தன் ஏக்கங்களோடு.மனதைத் தொட்ட கவிதை மகி !
ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் இருக்கிறது வாழ்த்துக்கள்..!
மனதை வலிக்க செய்யும் கவிதை....நெகிழ்ச்சி...!
அரசுகொடுத்த பணமதை
ஆசிரியர் எனும் போர்வையில்
நடமாடும் பிணங்களோ
அகல வாய்திறந்து
ஏப்பமிட்டு போனாரே!!
வணக்கம் சகோ.இப்படிப்பட்ட ஆசிரியர்களை பிணம் என்றழைக்காமல் வேறென்ன சொல்ல....
மனது கனக்கும் வரிகள்.அருமை சொநதமே.வாழ்த்துக்கள்.
ஒரு காலத்தில் எழுத்தறிவித்தவனை கடவுள் என்றோம்
காலமாற்றம் அவர்களும் பணத்துக்காய் .........
வலிகள் சுமந்த கவிதை .அருமை
எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கூட்டுக் கொள்ளையினைக்
கண்டு கூட்டுப்புழுவாய்த் தவிக்கும் நெஞ்சத்தின் தவிப்பினை
அழகாக உணர்த்தும் பாடல்.
நல்ல சாட்டையடிக் கவிதை.
கல்வி உதவித் தொகை திருடிப்பிழைத்த....(ஆ)சிரியோரை செருப்பால் அடித்தது போல் உள்ளது!கடைசி வரி!
என்ன சொல்வது இந்த கொடூரத்தை, கவிதை மூலம் இதை எமக்கு உணர்த்திய கவிஞருக்கு நன்றி.இதை பெரும் பான்மையான மக்கள் அறிய செய்வதே எமது கடமை
உங்களின் உணர்வுகவிக்கு நான் தலை வணங்குகிறேன்.. அந்த தறுதலைகளை ....பால் அடிக்க வேண்டும் அண்ணா
சாட்டை அடி வரிகளில் நச் கவிதை
மனித உருவில் மிருகங்கள்... (TM.8)
இந்த வெட்ககேட்டை நினைத்து வேதனைப்பட்டு எழுதிய சிறப்பான கவிதை
அழகான ஆழமான வரிகளைக் கொண்டுள்ள கவிதை சார்........
சிலருக்கு நெத்தியடியாகவும் இருக்கும்
சாட்டையடி!
sako!
seruppaala
adichideenga....
உணர்வு பூர்வமான உண்மை வரிகள்
பணம்தான் உனது
பிரதானப் பிரச்சனை என்றால்
உன் உடற்கூறு அறுத்து
விற்றுப் பிழைத்துவிடு
கல்விக்காய் ஏங்கும்
எம் உயிரில் அடிக்காதே!!//சிலருக்கு நெத்தியடி
எவர் மனத்தையும் வலிக்கச் செய்யும்
அற்புத வரிகள் நண்பரே.
கல்வி, கல்வியின்மை, ஊழல் எத்தனை குப்பைகள்! என்று தீரும்? ஏக்கமும், கோபமுமே மிச்சம்! நன்றாய்க் கூறினீர்கள் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஆசிரியர்கள் என்ற போர்வையில் வரும் தரகர்களின் வேசத்தை தோல் உரிக்கும் கவிதை அருமை!
வசூலிக்கும் முறையிலேயே மும்முரமாக இருக்கும் கல்வித்தரகர்களுக்கு சரியான சவுக்கடி அண்ணா.
நல்லாசிரியரின் இலக்கணங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலில் இரக்கமற்று, கல்வியையும் சூறையாடும் மனிதர்களை என்னவென்று சொல்ல? மனம் வேதனைப்படுகிறது. கவிதைமொழியில் கல்லாமை குறித்த மாணவியின் ஏக்கத்தை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். அருமை மகேந்திரன்.
தவறு செய்பவர்களை குறி வைக்கும் கூர்மையான வரிகள்!
அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கௌசல்யா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கருண்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நிரோஷ்,
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் நெகிழ்ச்சியான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை அதிசயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நெற்கொழுவான்,
தங்களின் மேலான ஆழ்ந்த கருத்துக்கு என்
உளமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,
தங்களின் ஆழந்துனர்ந்த அழகிய கருத்துக்கு என்
உளமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் தமிழ்ராஜா,
வருக வருக
வசந்தமண்டபம் தங்களை சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் அரசன்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த ஆழமான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கரந்தை ஜெயக்குமார்,
வருக வருக
வசந்தமண்டபம் தங்களை சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சசிகலா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
அன்புடன்
vgk
Post a Comment