குண்டுமல்லி தோட்டத்திலே
குவிந்திருக்கும் மல்லிகையே - உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு!!
கைகொட்டி சிரித்திருக்கும்
பட்டுமேனி பெட்டகமே
யார் கண்ணும் படுவதற்குள்
காந்தள்மலரே கண்ணுறங்கு!!
ஈசானி மூலையிலே
உலையங்கே கொதிக்குதம்மா
போயி நானும் பார்த்துவரேன்
பூந்தளிரே கண்ணுறங்கு!!
பசும்பால் வாங்கிடவே
பணமிங்கே போதலியே
உலைத்தண்ணி ஊத்திவாறேன்
மாந்தளிரே கண்ணுறங்கு!!
கட்டுமரக் கப்பலோட்டி
கடலுக்கு போன அப்பா
பொழுதடைய வந்திடுவார்
பூச்சரமே கண்ணுறங்கு!!
அயரை மீனும் ஆரமீனும்
அள்ளிக்கொண்டு வருவாரடி
அதுவரைக்கும் பொறுத்திருக்க
ஆரவல்லி கண்ணுறங்கு!!
வாளைமீனும் வழலை மீனும்
வலைபோட்டு பிடித்தமீனும்
வட்டியிலே போட்டுத்தாறேன்
வாடாமலரே கண்ணுறங்கு!!
விடியலிலே போனவரு
பொழுதடைஞ்சி போனபின்னும்
வராதது ஏனடியோ
வண்ணக்கிளியே கண்ணுறங்கு!!
எல்லைதாண்டிப் போனாரோ
ஏதுமங்கே ஆனதுவோ
எம்மனசு தவிக்குதடி
கனிமொழியே கண்ணுறங்கு!!
அகல்விளக்கு ஏற்றிவச்சேன்
ஆளவந்தோன் உயிர்காக்க
அல்லும்பகலும் விழித்திருந்தேன்
அல்லிமலரே கண்ணுறங்கு!!
அண்டைநாட்டு கப்பற்படை
ஆட்டம்தான் போட்டதுவோ
அவியுது மனமெனக்கு
காவியமே கண்ணுறங்கு!!
அந்த உயிர் வந்தால்தான்
நம்ம உயிர் நிலைக்குமிங்கே
அதுவரைக்கும் பொறுத்திருக்க
புதுமலரே கண்ணுறங்கு!!
நித்தம்நித்தம் நெஞ்சுக்குள்ளே
வேதனைய சுமந்திருக்கும்
நம் பிழைப்பு மாறுமோடி
மலர்விழியே கண்ணுறங்கு!!
அன்பன்
மகேந்திரன்
63 comments:
வணக்ம் சொந்தமே!!!இத்துணை அன்பாய் கோர்த்த வார்த்தைகள் போதுமே..பிள்ளை உள்ளம் கொள்ளை போக....மிக நேர்த்தியாகவும் அழகாகவும் தாய்மையுடன் விரிகிறது வரிகள்.அருமை அருமை.
ஐஐஐஐஐஐஐ!!!!!!முதல் கருத்தா???!!!!!இப்பொழுது இரட்டிப்பு சந்தோஷம்.
அலையே ஓர் பெரும் தொல்லை
இதில் எல்லை வேறு என்றால் ...
பாவம் மீனவநண்பன் என்ன செய்வான் ?
அவர்கள் உயிருக்கு விலையை ஆண்டவன்
ஓர் தங்க மீன் தினமும்
பரிசளித்தால் தான் என்ன ?
பசி அவர்களின் வயிற்றைப் பிசைகிறது ..
கவிதை எங்கள் நெஞ்சைப் பிழிகிறது.
அருமை மகி சகோ !
படகேறிப்போன மீனவன் திரும்ப வராத வேதனையைச் சொல்லும் அவன் மனைவியின் மன வலியை உங்கள் கவிதையில் மிக அருமையாய் பதிவு செய்திருக்கிறீர்கள்! அலைகளினூடே பயணம் செய்யும் அந்த புகைப்படம் அபாரம்!
வேதனையோடு பாடினாலும் நம்பிக்கையோடு பாடும் தாலாட்டுப் பாட்டு...
படங்களும், வரிகளும் அருமை...
நன்றி...(TM 2 )
அருமை.
இதைப்படிப்பவர்கள் சற்றும் கண்ணுறங்க முடியாதபடி அசத்தலாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நல்லா இருக்குங்க....
ஒரு கடலோரத் தாலாட்டு....எங்களையும் தூங்க வைக்கிறது மகி !
சார் எங்க கைகள கொஞ்சம் காட்டுங்க சார்.........
சும்மா கல கல கல என்னு கலக்கிட்டீங்க
எனக்கு சின்ன வயசில ஒரு கிராமத்துப் பாடல் ஸ்கூல்ல படிச்ச ஞாபகம் இத படிச்சவுடன் வந்தது சார்...
அருமையிலும் அருமை
தாலாட்டுப்பாடலில் தறிகெட்டு ஆடும் அண்டைநாட்டு இராணுவத்தின் ஆடாவடியைச்சொல்லி முடித்த கவிதை கண்டு உறக்கம் கொள்ள முடியாது எத்தனை நாள் தொடரும் இந்த எல்லை மீறல்!ம்ம்
படங்கள் சேர்க்கும் விதம் அழுகு மகி அண்ணா!
தாலாட்டுப் பாட்டின்
ஒயிலாட்டம் அருமை.
அத்தனை வரிகளும் சிறப்பு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பசும்பால் வாங்கிடவே
பணமிங்கே போதலியே
உலைத்தண்ணி ஊத்திவாறேன்
மாந்தளிரே கண்ணுறங்கு!!//
கவிதை முழுவதும் படித்து கண்ணில் கண்ணீர் முட்டிவிட்டது புலவரே....!
மீன்பிடித் தொழிலுக்கு செண்டற கணவரை நினைத்து காத்திரக்கும் மனைவி தன் தவிப்பை அழகிய தாலாட்டாக பாடி குழந்தையை தூங்க வைப்பதாக மிகச் சிறப்பான
கற்பனை வளம் கொண்டு வடித்துள்ளீர்கள் சகோ அருமை!...
தொடர வாழ்த்துக்கள் .
நல்ல கற்பனை திறன் சகோ உங்களுக்கு வாழ்துக்கள்! நல்ல கவிதை!
மீனவர் படும் துன்பத்தை தாலாட்டாக அமைத்திருப்பது மிக நன்று.சிந்திக்கக் வைக்கும் தாலாட்டு,
Thunkidamella vacichathum
vaarthai korvai azhaku!
vethanaiyaana kavi!
மீனவன் திரும்பி வருவானா மாட்டானா எனற் வேதனையை மழலைக்குத் தாலாட்டாக வடித்துக் கொடுத்திருப்பது அருமை மகேன். படித்ததும் மானசீகமாக உங்கள கைகள் பற்றி முத்தமிட்டேன்.
தாலாட்டு பாட்டு நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
இனிக்கும் தமிழாள் இப்படி பாடல் வரிகள் கேட்டாள் உறக்கம் கலைந்து உற்சாகமாக எழுந்து பாடல் கேட்பேன் அண்ணா.
மனம் வலிக்கிறது மகேந்திரன் சார். கடல் தொழில் புரியும் தமிழர்களின் வீட்டிலுள்ள பெண்களின் நிலை இதுதானோ? என்று மாறும் இந்நிலை? அழகான சொற்கள். நேரம் கடந்த பின்னும் மனதில் ஊஞ்சலாடுகின்றன கவிதை வரிகள். வாழ்த்துக்கள்...!
காவியத்தைக் கண்முன் கொண்டுவந்து
தாலாட்டி கண்ணுறங்க வைத்துள்ளீர்கள் நண்பரே.
அருமைங்க.
நித்தம்நித்தம் நெஞ்சுக்குள்ளே
வேதனைய சுமந்திருக்கும்
நம் பிழைப்பு மாறுமோடி
மலர்விழியே கண்ணுறங்கு!!//
இயல்பான வார்த்தைகளில்
யதார்த்த வாழ்வின் நிலையைச் சொல்லிப் போகும்
தாலாட்டுப் பாடல் அருமை
மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்
tha.ma 12
சொல்லி அழவும் சொந்தமற்றுப் போனவளோ? தொட்டில் குழந்தையிடம் தாலாட்டின் வடிவிலே தன் மனம்படும் பாட்டைச் சொல்லாமல் சொல்லும் அவள் வேதனை தீரும் வழிதான் என்ன? வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பவளின் நம்பிக்கையையும் பதைப்பையும் ஒருசேரக் காட்டும் இயலாமையின், ஏக்கத்தின் வரிகளின் பொருளறியாக் குழந்தையாகிலும் நிம்மதியாய் உறங்கட்டும்.
மனதை நெகிழ்த்திய படைப்பு மகேந்திரன்.
அந்த உயிர் வந்தால்தான்
நம்ம உயிர் நிலைக்குமிங்கே
அதுவரைக்கும் பொறுத்திருக்க
புதுமலரே கண்ணுறங்கு!!
கனமான தாலாட்டு !
அன்புத் தங்கை அதிசயா,
தங்களின் மேலான கருத்துக்கும்
உடன் வருகைக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் இராஜசேகரன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கலாநேசன்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்தஅழகான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் அழகான விரிவான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கவி அழகன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
தங்களின் அழகான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான
கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
அருமையான தாலாட்டும் வரிகள். நித்தம் நித்தம் போராடும் ஒரு மீனவமகளின் மனப்போராட்டங்களை தாலாட்டாக வடிவமைத்தமைக்கு நன்றி. அழகான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்
என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை
Congratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
வாழ்த்துக்கள் சகோ தாங்கள் பெற்றுக்கொண்ட விருதுகளுக்கு !...
இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வலைச்சரத்திற்கு -
வருகை தாருங்கள்!
தலைப்பு;
கவிதை......
http://blogintamil.blogspot.sg/
நேற்று உங்களை விழாவில் சந்தித்தேன்.
இன்று உங்கள் கவிதையை வலையிலே சந்தித்தேன்.
தொன்றுதொட்டு பாடும் தாலாட்டு ஒன்று
தெள்ளமுதமாய் மின்னுகிறதே !!
சின்னஞ்சிறு மலரொன்று
சிரித்தாலது செவ்வானம்.
இக்கவிதையை, தாலாட்டை நான் கிராமீய பண் ஒன்றில்
பாட முயற்சித்திருக்கிறேன். நான் பாடகன் அல்ல. ஓரளவு இசை இலக்கணம் அறிவேன்.
தமிழ் வலையில் என் மனம் கவரும் பாடல்களுக்கு இசை அமைப்பவன் அதில் இத்யம் மகிழ்பவன்.
கடந்த 7 ஆண்டுகளில் ஏறக்குறைய 700 கவிதைகளுக்கு மெட்டு அமைத்திருக்கிறேன்.
என்னுடைய படைப்புகள் யூ ட்யூபில் பிச்சுபேரன் என்ற பெயரில் வெளியாகின்றன.
இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. காபி ரைட், டீ ரைட் எதுவும் இல்லை.
சற்று நேரத்தில் யூ ட்யூபில் போட்டு உங்களுக்கு
அதன் தொடர்பினை, ஈ மெயிலில் அனுப்புகிறேன்.
உங்கள் அனுமதி இல்லையெனில் டெலிட் செய்துவிடுகிறேன்
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நெஞ்சை உருக்கும் இந்த தாலாட்டு பாட்டினை இயற்றிய திரு மகேந்திரன் அவர்களை
எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
சுப்பு ரத்தினத் தாத்தா தன் சொந்தக்குரலில் இங்கே பாடுகிறார்.
கேளுங்கள்.
You may listen to this song
here also.
தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தோழரே..
விரைவில் உங்கள் அறிமுக புகைப்படத்தை அனுப்பி வைக்கிறோம்.. மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,
இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.
என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,
தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.
ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.
visit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html
அடடா! எத்தனை அருமை அருமையாய் தாலாட்டு பாடியிருக்கிறீர்கள்! பூ போன்ற குழந்தைக்கு அத்தனை பூக்களையும் சொல்லி தாலாட்டு சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
இளம் தாய்மார்கள் இதனை அப்படியே இசையமைத்து தங்கள் செல்வங்களுக்குப் பாடலாமே!
வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
Post a Comment