Powered By Blogger

Monday 23 July 2012

நந்தவனங்கள் நாங்கள்!!


முகப்பரு தொலைக்க 
பூசிவந்த சாயமல்ல 
அகப்பசி தீர்க்க 
ஏற்றுக்கொண்ட சாயமிது!!
 
ள்ளிமுடித்த கூந்தலில் 
அலங்கரிக்க வந்த 
பூக்களல்ல நாங்கள் 
சொல்லத் துணியுமுன் 
கிள்ளி எறியப்பட்ட  
நந்தவனங்கள் நாங்கள்!!
 
சீருடை அணிந்து
சீரான நடைகொண்டு
புத்தகப் பையோடு
பள்ளிசெல்ல ஆசையொன்று
நெஞ்சினிலே இருந்தாலும்
விதியிங்கு எம்மை
வீதியில் தள்ளி
பிஞ்சில் கனியவிட்டது!!
 
நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று 
விவாதிக்க பொழுதில்லை 
தலைக்குமேல் பணியிருக்கு 
தலைவார நேரமில்லை!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

46 comments:

கோவை நேரம் said...

ஏழ்மையின் உண்மை...

Unknown said...

சமுதாயத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் நிலை மேம்பட நம்மால்முடிந்த வரை செயல்படுவோம்!

நல்ல விழிப்புணர்வுக் கவிதை! வாழ்த்துக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

// நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று
விவாதிக்க பொழுதில்லை
தலைக்குமேல் பணியிருக்கு
தலைவார நேரமில்லை!!//

கவர்ந்த வரிகள்...

MARI The Great said...

நல்ல கவிதை (TM 4)

MANO நாஞ்சில் மனோ said...

// நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று
விவாதிக்க பொழுதில்லை
தலைக்குமேல் பணியிருக்கு
தலைவார நேரமில்லை!!//

பிரணாப் முகர்ஜி அம்பாசிடர் காரில் இருந்து இப்போது குண்டு துளைக்காத ஜெர்மன் காரான பென்ஸ் காரில் வலம் வரப்போகிறார்....!!!

நாடும் நாட்டு மக்களுக்கும் என்று விமோசனமோ தெரியவில்லை புலவரே.....

நெஞ்சை கனக்க வைத்த கவிதை....!

கடம்பவன குயில் said...

இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமை...

தனிமரம் said...

வணக்கம் மகி அண்ணா!
மழலைகளாக வாழ வேண்டியவர்கள் அவலத்தைச் சுமந்து வாழும் நிலைச்சொல்லிச் செல்லும் ஆதங்கமான கவிதை!

தனிமரம் said...

தலைக்குமேல் வேலையிருக்கு புரிந்து கொண்டால் சரி புதிய தலைவர் !ம்ம்

Unknown said...

கவியில் வலி தெரிகிறது.... அருமையான கவி அங்கிள்.....

பால கணேஷ் said...

Thalaikku mela velai irukku. Super Mahen! Heart touching poetry! Excellent! (sorry, Tamil not working in my PC)

அருணா செல்வம் said...

காய்ந்து போன
நந்தவன பூக்கள்!!
கவிதை நீர்
இலைகளுக்கு
மட்டும் தான்...

Anonymous said...

// நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று
விவாதிக்க பொழுதில்லை
தலைக்குமேல் பணியிருக்கு
தலைவார நேரமில்லை!!//


ஆதங்க கவிதை சகோதரரே...

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் உண்மை வரிகள்...
நன்றி. (த.ம. 8)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

குறையொன்றுமில்லை. said...

இளமையில் வறுமை கொடுமை.

வெங்கட் நாகராஜ் said...

கொடுமையிலும் கொடுமை - இளமையிலே வறுமை.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கல்வி கற்க சட்டம் இருக்கிறது. பசி தீர அல்லவா சட்டம் இருக்கவேண்டும்.

Anonymous said...

வறுமையின் வலியிது...என்ன செய்வது! இரண்டும் இவுவுலகில் தானே!
வேதா. இலங்காதிலகம்.

காட்டான் said...

கொடிது கொடிது இளமையில் வறுமை;-((

ஆத்மா said...

தொட்டு விட்டது நெஞ்சத்தை.....
இன்னும் இப்படிபட்டவர்கள் வாழ்கிறார்கள் என நினைக்கும் போது தான் கணக்கிறது மனது

ஹேமா said...

வறுமை குழந்தைப் பருவத்தையே தொலைய வைக்கிறது.மனசை வருடும் வரிகள் மகி !

அம்பாளடியாள் said...

இளமையில் வறுமை கொடியதிலும் கொடியது!!!....
நெஞ்சை நெகிழ வைத்த கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ .

செய்தாலி said...

இளமையில்
வறுமை கொடியது
கொடியதை துரத்த மெனக்கடுவதில்லை
வறுமையில்
இருப்பவர்களும் இல்லாதவர்களும்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கொவைநேரம்,
தங்களின் நெகிழ்ச்சியான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சங்கவி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
உச்சத்தில் இருந்துகொண்டு குமிழ் விளக்கைப்
பார்ப்பவர்கள்.. ஏழ்மையைப் பற்றி எழுத்தினில் படிப்பவர்கள்
அவர்கள்...
கல்வியறிவு ஒன்றினால் மட்டுமே இத்தகைய
நிகழ்வுகளை மாற்றமுடியும்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கடம்பவனக் குயில்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
நலம் நலமே,
தங்களிடம் என் நாடுதலும் அதுவே,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை எஸ்தர் சபி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
ஆங்கிலமென்ன தமிழென்ன
வாழ்த்தும் மனது தான் முக்கியம்...
தங்களின் அந்த மனதுக்கும் அருமையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
சரியாகச் சொன்னீர்கள்..
நாம் உணரும் உணர்வுகளெல்லாம் அவர்களின் வாழ்நிலையை
உந்தவேண்டுமே என்ற எண்ணத்தினால் தான்...
அதற்கான ஒரு சிறு துரும்பாகவாவது இருப்போம்..
அழகிய கவிக்கருத்துக்கு என்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் இராஜசேகர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் முரளிதரன்,

இங்கே நிரந்தர நிலை தேடி அலையும்

கல்வி ஒன்றுதான் நிறைந்தார முடிவு என்பது என் கருத்து நண்பரே..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

இரவும் பகலும் போல..இவ்வுலகில் எல்லாமுமே

இரண்டிரண்டாய் இருப்பது நிர்ணயம் தான்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்

உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
இன்னும் அதிக அளவில் இதுபோன்றவர்கள் வாழ்கிறார்கள்
என்பது கசக்கும் உண்மை...
அடுத்த படிநிலைக்கு இவர்களை கொண்டுசெல்ல
கல்வி ஒன்றால் தான் முடியும்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
சரியாகச் சொன்னீர்கள்,
இத்தகைய திரைகள் சிரித்து மகிழும்
குழந்தைப் பருவத்தை
சிதறடித்து விடுகிறது என்பது உண்மையே..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
உண்மை உண்மை..
இருக்கும் நிலை போதுமென
இருந்துவிட்டால்
நிலைமாற்ற வழியேயில்லை தான்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

M.R said...

சீருடை அணிந்து
சீரான நடைகொண்டு
புத்தகப் பையோடு
பள்ளிசெல்ல ஆசையொன்று
நெஞ்சினிலே இருந்தாலும்
விதியிங்கு எம்மை
வீதியில் தள்ளி
பிஞ்சில் கனியவிட்டது!!

நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று
விவாதிக்க பொழுதில்லை
தலைக்குமேல் பணியிருக்கு
தலைவார நேரமில்லை!!

நெஞ்சைத் தொடும் வேதனை வரிகள் கொண்ட கவிதை .வாசிக்கும் பொழுதே மனதை தொட்டு கனமாக்கும் வரிகள் .ஏற்றத்தாழ்வுகள் .சிலர் கோபுரத்தின் உச்சியில் ,பலர் அந்த உச்சிதனை அண்ணாந்து பார்க்கும் நிலையில் மட்டுமே .

நன்றி.

Seeni said...

vetkapada koodiyathu!

manitha samookam...

Post a Comment